Followers

Friday, May 13, 2011

ஜெயலலிதாவுக்கு இன்னும் ஒரு முறை வாய்ப்பு!

தமிழக மக்கள் தொங்கு சட்டசபையை கொண்டு வந்து குதிரை பேரத்துக்கு வழி வகுக்காமல் அமோக ஆதரவை ஜெயலலிதாவுக்கு தந்திருக்கிறார்கள். மிகவும் அமைதியாகவே ஜெயலலிதாவின் அறிக்கை தற்போது இருக்கிறது. ஆனால் இவருக்கு தனிப் பெரும்பானமை கொடுதத்தை தவறாக விளங்கிக் கொள்ளாமல் மீண்டும் பழைய ஆடம்பரம், எவரையும் மதிக்காதது, உடனபிறவா சகோதரியின் தலையிடு,ஊழல் போன்ற தவறுகளை களைவதற்கு முன்னுரிமை அளித்து சிறந்த ஆட்சியை அளிக்க வேண்டும். சாமான்ய தமிழனின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து நல்லது செய்ய ஆரம்பித்தால் தொடர்ந்த முதல்வராக வலம் வரலாம். பழைய கதையே தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டில் உங்களை தூக்கி எறிய தமிழக மக்கள் தயங்க மாட்டார்கள்.

அடுத்து இலங்கை பிரச்னையில் காங்கிரஸ் காட்டிய கடினம்: கருணாநிதியின் குடும்பத்தவர் அளவுக்கதிகமாக அரசியல் அதிகாரத்தில் நுழைந்தது: ஸ்பெக்ட்ரம ஊழல்: தேவையற்ற இலவசங்கள்: அதில் அதிகம் கட்சியினர் பலன் அடைந்தது: போன்ற காரணங்களால் கருணாநிதியை நீக்க உங்களை தமிழக மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெற்றிக்கான காரணமாக இதையேதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். இதை உணர்ந்து அனைத்து மக்களையும் அன்போடு அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மறந்து விட வேண்டாம்.

அடுத்து மம்தா பானர்ஜியை ஸ்டார் டிவி 'இனி நீங்கள்தான் முதல் அமைச்சர்' என்றவுடன் உடன் மறுத்து 'என்னை முதல் அமைச்சர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். சாதாரணமாக மம்தா பானர்ஜி என்றே அழையுங்கள். மக்கள் மனதில் இடம் பிடிப்பதில் முதல்வராக நான் வர வேண்டும்' என்றார். அவரை முன்மாதிரியாக கொண்டு எளிமையுடன் உறுதியுடனும் செயல்படுவீர்களாக!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்

கருமமே கட்டளைக் கல்.

-குறள் 505

வாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கும் பிறர் காரணம் அல்லர். அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பவர் பொன்னை உரசிப் பார்த்துதான் அறிவர். ஒருவர் செய்யும் செயலே நல்லவரா? கெட்டவரா? என காட்டிவிடும்.

'நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகை தாழ்த்துவீராக!'

-குர்ஆன் 15:88

சிறகை விரிக்கும் போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும் போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பது ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பது பணிவுக்காகவும் அரபு மொழியில் பயன்படுத்துவர். ஆட்சியாளர் தன் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர வைத்திருக்கும் மக்களிடம் ஆணவம் கொள்ளாது பணிவாக நடந்து கொள்ள குர்ஆன் கட்டளையிடுகிறது.

இலவச திட்டங்களை குறைத்து, ஆடம்பர செலவுகளையும் குறைத்து சிறந்த ஆட்சி அமைய வாழ்த்துவோம்.

8 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பாசிடிவ் எண்ணங்களுடன் கூடிய அவசியமான ஆக்கம் சகோ.சுவனப்பிரியன்.

ஜெ.பற்றி எவ்வளவுதான் கெட்ட அபிப்பிரயாங்கள் மக்களிடம் இருந்தாலும்...

லாட்டரி & பான்பராக்--இவற்றுக்கு ஒரேயடியாய் தடை போட்டது,
பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ50 அபராதம் விதித்தது,
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்தது என...
(10 வருஷத்தில் நினைவில் நின்ற)
4 நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை மெய்யாலுமே ஜெ.வின் பெரிய புரட்சிகள்தான்..!

எனவே, அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்றை இவை மக்களுக்கு அளிக்கின்றன.

//இலவச திட்டங்களை குறைத்து, ஆடம்பர செலவுகளையும் குறைத்து சிறந்த ஆட்சி அமைய வாழ்த்துவோம்.//--அஃதே.. அஃதே..!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நடுநிலை பார்வையோடு எழுதப்பட்ட சரியான பதிவு ஜெயலலிதா கடந்த காலங்களில் நிறைய பாடம் கற்றுயிருப்பார் கற்ற அடிப்படையில் ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும்

நம்முடைய எதிர்பார்ப்பும் அதுதான்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//லாட்டரி & பான்பராக்--இவற்றுக்கு ஒரேயடியாய் தடை போட்டது,
பொது இடங்களில் சிகரெட் பிடித்தால் ரூ50 அபராதம் விதித்தது,
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்தது என...
(10 வருஷத்தில் நினைவில் நின்ற)
4 நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை மெய்யாலுமே ஜெ.வின் பெரிய புரட்சிகள்தான்..!//

உண்மைதான். மனதில் பட்டதை சட்டென்று கூறும் மனோபாவம், எவருக்கும் அடிபணியாதது என்று இவரது பலமும் பலவீனமும் ஒன்றே!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//நடுநிலை பார்வையோடு எழுதப்பட்ட சரியான பதிவு ஜெயலலிதா கடந்த காலங்களில் நிறைய பாடம் கற்றுயிருப்பார் கற்ற அடிப்படையில் ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும்//

இந்த முறை சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் மலிக்கா said...

இந்த முறை சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். சிறந்த ஆட்சி அமைய வாழ்த்துவோம்..

suvanappiriyan said...

Malicca!

//இந்த முறை சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். சிறந்த ஆட்சி அமைய வாழ்த்துவோம்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தால்வரவேற்போம் வாழ்த்துவோம்--anvar

suvanappiriyan said...

//யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தால்வரவேற்போம் வாழ்த்துவோம்--anvar//

இந்த முறை சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!