Followers

Wednesday, May 04, 2011

'தலித் முஸ்லிம்' என்ற வார்த்தை சரியானதுதானா?


முஸ்லிம்களில் இப்படி ஒரு பிரிவு இருப்பது போல் நிரூபிக்க பலர் மிகுந்த சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவன் தனக்கு இந்து மதத்தில் இனி விமோசனமே இல்லை என்று முடிவெடுத்து பல கதவுகளையும் தட்டுகிறான். எங்கும் அதே தீண்டாமைப் பேய் அவனை விரட்ட முடிவில் இஸ்லாத்தில் வந்து ஐக்கியமாகிறான். சில வருடங்களிலேயே பரம்பரை முஸ்லிம்களைப் போல் நடை உடை பாவனைகள் வந்து இஸ்லாத்தில் ஐக்கியமாகி விடுகிறான். பல குடும்பங்களில் இதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் எங்கே நமது ஆதிக்கம் கைகழுவி போய்விடுமோ என்ற பயத்தில் சிலர் 'தலித் முஸ்லிம்' என்ற பதத்தை அடிக்கடி உபயோகப்படுத்திக் கொண்டு இணையத்திலும் பதிந்து வருகிறார்கள்.

இவர்கள் வைக்கும் வாதம் முஸ்லிமாக மாறியும் அவர்கள் நிலை அப்படியேதான் இருக்கிறது. எனவே அவர்களை மதம் மாறினாலும் 'தலித் முஸ்லிம்' என்று பிரித்து இட ஒதுக்கீடு போன்றவற்றை மற்ற தலித்களுக்கு கொடுப்பது போல் கொடுக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கிறார்கள். இந்த வாதம் எடுத்தவுடன் ஏதோ தலித் மக்களின் தீராத பாசத்தில் சொல்லப்பட்ட வார்த்தையைப் போல் தெரியும். இதன் உள்ளே மறைந்திருக்கும் வர்ணாசிரம தந்திரத்தை புரிந்து கொண்டால் வீறு கொண்டு முஸ்லிம்கள் இதனை எதிர்ப்பர்.

சச்சார் கமிட்டியின் அறிக்கை முழு இந்தியாவிலும் முஸ்லிம்களின் நிலை படிப்பிலும், வேலை வாய்ப்பிலும், வசதியிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலமே இதற்கு சரியான தீர்வு காண முடியும் என்ற அறிக்கையை அளித்துள்ளது. ஆக ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் பொதுவாக இட ஒதுக்கீட்டை அளிப்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

முஸ்லிம்கள் அனைவரும் மற்ற முன்னேறிய சாதிகளைப் போல் மிகுந்த தன்னிறைவு பெற்று புதிதாக இஸ்லாத்தை தழுவிய தாழ்த்தப்பட்டவர்கள் வறுமையில் இருந்தால் இவர்களின் வாதத்தில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும். மூன்றில் இரண்டு சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் போது தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பது இஸ்லாத்திலும் சாதியை கொண்டு வரும் மறைமுக உக்தியே தவிர வேறில்லை.

இஸ்லாத்தை தழுவிய எந்த தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களும் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம், கிறித்தவ மதம் என்று அனைததையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே ஆக்கியாகி விட்டது. இனி மிஞ்சி இருப்பது இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான். அதையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் வளைக்கப் பார்க்கிறது இந்துத்வா. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த முயற்ச்சியில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.

இவர்கள் வைக்கும் வாதங்களில் முக்கியமானது மத்ரஸாக்களில் கற்ப்பிக்கப்படும் பாடத் திட்டத்தில் சாதியை வலியுறுத்தும் கருத்துக்கள் உள்ளன என்பது. ஃபத்வா என்ற பெயரில் மார்க்க அறிஞர்கள் கொடுக்கும் எந்த செய்தியும், அல்லது மத்ரஸாக்களில் சில புத்தகங்களில் சொல்லப்பட்ட கருத்துகள் முதலானவை குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் மொகலாயர்க்ள் ஆட்சி காலத்தில் அரசர்களை மகிழ்விக்க இஸ்லாத்தை விளங்காத சிலரால் எழுதப்பட்டவை. இது போன்ற கற்பனை கதைகளை குர்ஆனை விளங்கி விபரம் தெரிந்த இஸ்லாமியர்கள் முற்றாக ஒதுக்கி விட்டனர். தமிழகத்தில் இருக்கும் ஒரு சில தவ்ஹீத் மதரஸாக்களை நீங்கள் சென்று பார்த்தால் குறிப்பிட்ட அந்த கற்பனை கதைகள் எல்லாம் அங்கு சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறியலாம்.

முகமது நபியின் வாழ்க்கையில் தீண்டாமைக்கு எதிராக பல உபதேசங்களை பார்க்க முடியும். கறுப்பு நிற அடிமையான பிலால் அவர்களை தனது மிக நெருக்கமான தோழர்களில் ஒருவராக்கிக் கொண்டார் முகமது நபி. ஆப்ரிக்க மக்களுக்கும் அரேபிய மக்களுக்கும் திருமண பந்தத்தை உண்டாக்கி சாதி வேற்றுமையையும் ஒழித்தார். அந்த முறைதான் இன்று வரை தமிழகம் வரை தொடர்கிறது. 'ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உங்களை உண்டாக்கினேன்' என்று குர்ஆன் உலக மக்களைப் பார்த்து கூறுவதிலிருந்து உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று கூறி இன வேற்றுமையை தகர்க்கிறது. இந்த கொள்கைகளுக்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் சொன்னாலும் அதை குப்பைக் கூடையில் தூக்கிப் போட வேண்டியதே! பின் பற்றுவதற்கு அல்ல.

என் பள்ளி நண்பன் செல்வராஜை போன முறை ஊரில் சந்தித்தேன். என்னைப் பார்த்தவுடன் 'அஸ்ஸலாமு அலைக்கும்! சௌகரியமா?' என்று கேட்டுக் கொண்டு வந்தான். 'என்ன செல்வராஜ்! நீ சௌக்கியமா?' என்று கேட்டதற்கு, 'ஹே! நான் இப்போ அப்துல் அஜீஸ். உங்கள் ஊரிலேயேதான்பா திருமணம் முடித்திருக்கிறேன்' என்று சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாகி விட்டது. பள்ளியில் அதிகம் பேசாமல் ஒடுக்கப்பட்ட சாதி என்பதால் தாழ்வு மனப்பான்மையில் ரிசர்வ்ட் டைப்பாக இருப்பான். இப்பொழுது நெஞசை நிமிர்த்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லி கலகலப்பாக பேசியது எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிறகு வீட்டுக்கு அழைத்து சென்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னிடம் இருந்த முக்கியமான சில புத்தகங்களையும் பரிசாகக் கொடுத்தேன். 'இறைவன் ஒருவனே! முகமது நபி அவனின் இறுதித் தூதர்' என்ற இந்த இரண்டு வரி ஒரு மனிதனின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று நினைத்து வியந்தேன். எங்கள் ஊரிலேயே பரம்பரை முஸ்லிம்கள் வீட்டிலேயே அவனுக்கு பெண்ணும் கொடுத்துள்ளார்கள். பி.காம் பட்டதாரி.

----------------------------------------------

அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்...

//வாழ்வாதாரங்கள் ஏதுமின்றி விளிம்புநிலையினராக இருக்கின்ற ஏழை முஸ்லிம்களாக பாவித்து அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கு தடையாக இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தின் காவலர்களேயாவர்.பட்டினியால் கிடந்து செத்தாலும் தலித் முத்திரை மட்டும் விழாமல் பாதுகாப்பதற்கு பெயர்தான் மதாபிமானம் போலும். //

அதாவது இஸ்லாமியரான இவர் சொல்ல வருவது வறுமையிலும் சமூகத்தில் பின் தங்கியும் இருப்பதால் தலித் முஸ்லிம் என்ற முத்திரையோடு அரசு வேலைகளை பெற் வெண்டும் என்கிறார். ஒரு மனிதனை செருப்பால் அடித்து விட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து 'வைத்துக் கொள்ளுங்கள். நான் அடித்ததற்கு பகரம்' என்று சொன்னால் அந்த மனிதன் ஒத்துக் கொள்வானா? ரசூல்தான் ஒத்துக் கொள்வாரா? அந்த மக்கள் வசதியற்று இருந்தால் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆக வேண்டிய பணிகளை செய்ய வேண்டுமே யொழிய கிறுக்குத் தனமாக 'தலித் முஸ்லிம்' என்ற வார்த்தையை பிரயோகித்து அந்த மக்களுக்கு இருக்கும் ஒரே வாசலையும் அடைத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

---------------------------------------------------------------------------

படித்தவர்கள் மத்தியிலும் சாதிப் பேய் வந்த அளவு ஊறிப் போயுள்ளது என்பதற்கு கேரளாவில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம். இது தின மலரில் வந்த செய்தி:

கல்வியறிவிலும், சமூக உரிமைகளிலும் முதன்மை மாநிலம் எனப் பெயர் வாங்கிய கேரளத்தில் ஒரு அரசு அதிகாரி ஓய்வுப் பெற்றப் பின் அவர் பயன்படுத்திய பொருட்களையும், காரினையும், அந்த அலுவலகம் முழுதையும் சாணம் தெளித்து சுத்தப்படுத்தி உள்ளனர். இச் செயலை அறிந்த 55 வயதான ஓய்வுப் பெற்ற அதிகாரி ஏ வி ராமகிருட்ணன் கேரள மனித உரிமை கமிசனிடம் புகார் செய்துள்ளார்.

இந்த சுத்தப்படுத்துதல் வழக்கமான ஒரு நடைமுறையோ, அரசாங்க நடைமுறையோ இல்லை. ஏ வி ராமகிருட்ணன் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பொதுவாக அவரது கண்டிப்பான நடைமுறைகளும், லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக மிகவும் கண்டிப்பாக நடந்து வந்துள்ள ஒரு நேர்மையான அதிகாரி ஆவார். இதனால் வெறுப்புற்ற பிற ஆதிக்கச் சாதி அலுவலகர்கள் இப்படியான ஒரு சுத்தப்படுத்தும் இந்து மத சடங்கை நடத்தி தமது சாதி வெறியினைக் காட்டியுள்ளனர்.

என்டிடிவி தொலைக்காட்சிக்குக் கொடுத்த செவ்வியில் இது என்னைப் போன்ற தனிமனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, இது நான் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையே அவமானப்படுத்தும் செயலாகும், இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை, ஒரு முடிவு எடுக்கும் வரை ஓயமாட்டேன் என்றுக் கூறினார் ராமகிருட்ணன்.

மனித உரிமை ஆணையம் முழு விவரத்தையும் மே – 7 க்குள் அந்த அலுவலகம் சமர்பிக்கும் படி உத்தரவு அனுப்பி உள்ளது.

மாட்டுச் சாணத்துக்கு கொடுக்கப்பட்ட மதிப்பை சக மனிதனுக்கு கொடுக்க முடியாத இந்த ஈனப் பிறவிகளை என்ன சொல்வது. மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பக்குவம் இந்நாட்டில் என்று தான் வருமோ. அன்று தான் இந்திய நாட்டுக்கு முழு சுதந்திர நாளாகும்.

------------------------------------------------------------

Ganapathypalayam Panchayat Primary School, 15 km from Erode, Tamil Nadu State, has taken the concept of "dignity of labour" too far: Barefoot students have been ordered to clean the school toilets by the authorities.

Two students, studying in III and IV standards, were found cleaning the toilets on Thursday by District Collector D. Karthikeyan.

Nobody knows how long the practice has been going on. But it came to light by chance on the day the Collector came on a visit to the school.

Mr. Karthikeyan was in the village to inaugurate a district-level intensive motivation campaign for school children. Even as classes were going on, the two students were busy cleaning the school toilets. They admitted to the Collector that their teacher had deputed them to do the task. In fact, students took turns to clean the toilets and the classrooms, the Collector was told.

In a district that is striving to eradicate child labour in any form, children were being forced to clean toilets.[10-06-2005]

http://www.hindu.com/2005/06/11/stories/2005061104030400.htm

Headmistress suspended for asking boys to clean toilet

ERODE: : The headmistress of the Ganapathypalayam Panchayat Primary School near here was suspended on Friday by Chief Educational Officer P. Kuppuswamy for deputing students to clean the school toilet.

இந்த நிலையில் ஒரு தலித்துக்கு இந்த சமூகம் என்ன பதிலை வைத்திருக்கிறது?

39 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.சுவனப்பிரியன்,

மிக அவசியமான உடனடி அதிரடி ஆக்கம்.

கரிய வெளிச்சம், முக்கோண வட்டம், அழகிய அசிங்கம்... இதுபோலத்தான் சேரவே சேராத இணையவே முடியாத ஒரு சொற்பிரயோகம்... 'தலித் முஸ்லிம்'. இப்படி சொல்வதே கூமுட்டைத்தனம். இஸ்லாம் பற்றி சுத்தமாய் ஓரறிவு கூட இல்லாதவராலேயே இப்படி ஒரு சொற்பிரயோகம் கொண்டுவர முடியும்.

///ஒரு மனிதனை செருப்பால் அடித்து விட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து 'வைத்துக் கொள்ளுங்கள். நான் அடித்ததற்கு பகரம்' என்று சொன்னால் அந்த மனிதன் ஒத்துக் கொள்வானா? ரசூல்தான் ஒத்துக் கொள்வாரா?///---இதை படித்தவுடன் எழுதிய அந்த ஆள் தன் கன்னத்தை தடவிக்கொள்ளட்டும்...!

kannan said...

//புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம், கிறித்தவ மதம் என்று அனைததையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே ஆக்கியாகி விட்டது//

this information new to my knowledge. i will be more satisfied if you can explain me.

(will you please change your contact number with international code. two days ago i phoned you from abu dhabi, but gone to wrong person.i thought that it is u.a.e contact number.)

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
தற்காலத்திற்கு தேவையான கருத்துக்களை ரத்தின சுருக்கமாக கொண்டிருக்கிற கட்டுரை. தலித் முஸ்லிம் என்றதொரு புதிய பதத்தை இன்றைக்கு சமூகத்தின் மீது வலிந்து திணித்துக் கொண்டிருக்கிற ரசூல் மாதிரியான நபர்கள் மேம்போக்காகவே தமது பார்வையை வைத்திருக்கின்றனரோ என்ற ஐயம் அடிக்கடி எனக்குள் எழும். ஏனெனில் இதே ரசூல் தான் இஸ்லாத்தில் சிறிய அளவு மது அருந்தலாம். அதற்கு அனுமதி இருக்கிறது என்று எழுதியவர். ஆனால் உணர்வு இதழ் அவர் பெயரை குறிப்பிடாமல் மறுப்பு தொடரை வெளியிட்ட போது எந்தவொரு வாதத்தையும் தம் சார்பாக வைக்காமல் அந்த விவாதத்திலிருந்து நைசாக கழன்று கொண்டவர். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டத்தகாதவன் என்ற களங்கத்தை துடைப்பதற்காக தான் இஸ்லாத்திற்கு வரும் தலித் சமுதாய சகோதர சகோதரிகளை அவமானப்படுத்தும் விதமாக ரசூல் போன்றவர்களின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. ரசூல் போன்றவர்கள் கட்டுரைகளை பாரா பாராவாக எழுதினால் மட்டும் போதாது. பகுத்தறிவோடு எழுத வேண்டும். அத்தகைய பகுத்தறிவை இறைவன் அவருக்கு வழங்குவானாக

suvanappiriyan said...

கண்ணன்!

//this information new to my knowledge. i will be more satisfied if you can explain me. //

இன்றைய மக்களவைத் தலைவர் மீரா குமார் அவர்களின் தந்தையும் அன்றைய இந்திய இராணுவத்துறை அமைச்சராகப் பதவி வகித்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பூர்ணானந்த் சிலையை திறக்கச் சென்ற பொழுது வாரணாசி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஜெகஜீவன்ராம் அவர்களுடைய ஜாதியைச் சொல்லி கோஷம் போட்டு, நீங்கள் எல்லாம் அமைச்சராகி விட்டால் எங்களுடைய செருப்புகளைத் தைப்பதற்கு யார் கிடைப்பார்கள்? என்று இழிவுப்படுத்தியது மட்டுமின்றி அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி கங்கையாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சிலையில் ஊற்றி கழுவிய பொழுது பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் உயர்ந்த பதவியில் தானே இருந்தார். ஆகையால் ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஒருக்காலும் சமத்துவத்தை கொண்டு வரவியலாது என்பதை இந்து மதமும் தெளிவாக விளக்கி விட்டது..

இனி கிறித்தவத்தைப் பார்ப்போம்.

கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த இறையூர் பங்கில் கிறித்தவ வன்னியர்களின் சாதிய அடாவடித்தனம், காஞ்சிபுரம் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் கிறித்தவ ரெட்டியார்கள் தாழ்த்தப்பட்ட சமூகக் கிறித்தவர்களை தேவாலயத்தின் நுழைவாயில் வழியே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத கொடுமை, திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் மேட்டுப்பட்டி வன்னிய கிறித்தவருக்கும் தலித் கிறித்தவருக்கும் இடையே நடந்த பயங்கரமான மோதல், திருச்சி மேலப்புதூர் பங்கிலுள்ள சாதிக்கல்லறைத் தடுப்புச்சுவர், பல பங்குகளில் சாதி வாரியாக திருவிழாக்கள், பாதங் கழுவுதல் சடங்கில் தாழ்த்தப்பட்டக் கிறித்தவர்கள் பங்கேற்கத் தடை, தேர் மற்றும் குருத்தோலைப் பவனிகள் தலித் கிறித்தவரின் பகுதிகளுக்கு செல்லாத நிலை போன்றவை பொதுநிலையினரிடம் அன்றாடம் காணக்கிடக்கும் சாதிய அவலங்கள்.

இவை எல்லாம் எப்படி வந்தது? பைபிளிலேயே இதற்கு ஆதாரம் இருக்கிறது.

'அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டத்துக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயசித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்தத் ஸ்தலங்களுக்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.' - லேவியாகமம் 16:32,33

இந்து மத மனுவின் கோட்பாடு கிறித்துவத்திலும் நுழைந்துள்ளதை பல வசனங்களில் பார்க்கிறோம். இதே ஆகமத்தில் 22:14, 23:20, 23:10,13, 21:16,23 வசனங்கள் அனைத்தும் தீண்டாமையை போதிக்கிறது.

suvanappiriyan said...

தொடர்ச்சி......

இனி இலங்கையில் பவுத்த மதத்தில் நிலவும் சாதி வேற்றுமைகளை பார்ப்போம்.

சிங்கள் சமூகத்திடம் 15 வகை சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. அதில் மிக உயர்ந்த சாதியினராக ‘றதல’ எனும் சாதி இருந்தது. இச்சாதியினரே அரச வம்சத்தினராக இருந்துவந்துள்ளனர். கண்டி இராச்சியத்தின்போது சிங்களச்சமூகத்தில் முன்னணியில் உள்ள அரச சமூகத்தவர்களாக இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இரண்டாவதாக ‘கொய்கம’ எனும் சாதிப்பிரிவினர் இவர்கள் சிங்களச் சமூகத்தில் 50 வீதமானவர்களாக இருந்து வருகின்றார்கள்
அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும் பிற்பாடு அதன் செல்வாக்கின் பயனாகவே விவசாய ஆதிக்கம் இவர்களிடமே இருந்துவந்துள்ளது. ‘கரவா’(கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வகும்புற’(சக்கரைத்தொழில்) எனும் சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூக அந்தஸ்துடையவர்களாக இருக்கும் சாதியினராகும்.
சிங்களச் சமூகத்தின் விளிம்பு நிலைச்சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னற’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’ (குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பவர்கள்) ‘றொடி’ (துப்பரவுப்பணி புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’ (சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ ( (கறுவாத்தொழில்) ‘பெறவா’ (மேளம் அடிப்பவர்கள்) இவ்வாறாக 15 வகை சாதியினர் இருந்து வருகின்றார்கள்.

வடக்கில் தீண்டாமைச் செயல்பாடுகளான சிரட்டையில் தேனீர் கொடுப்பது வீட்டுக்குள் குறைந்த சாதியினரை வரவேற்பது தவிர்க்கப்படுவது, கோவில் நுழைவு மறுப்பு போன்ற நடைமுறைகளும் இருந்துவருகின்றது. சமூக புறக்கணிப்பும் கௌரவமான தொழில் வாய்ப்பும் அற்ற காரணத்தாலேயே சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் அரபு நாடுகளுக்கு வீட்டுவேலைப் பணிகளுக்குச் செல்வதாகவும் அதன் காரணமாக அவர்களது சமூக அந்தஸ்து மேலோங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.வி.பி யின் தோற்றத்திற்கு ‘கறவா’ ‘வகும்புற’ ‘பத்கம’ போன்ற சாதிப் பிரிவினரே பிரதான பங்களிப்பாளர்களாக இருந்துள்ளனர்.
இலங்கையில் தோன்றிய பௌத்தம் என்பது இந்துத்துவப் பண்பாட்டு வேர்களிலிருந்து துளிர்த்ததே. இன்று கூட அதன் மரபுவழி தொடர்ச்சியாக சிங்கள மக்களின் பெயர்கள் அமைந்துள்ளதை நாம் காணலாம். ‘மித்திர ஆரியசிங்க’ எனும் பெயர் எப்படி சிங்களவர்களின் பெயராக இன்றும் நிலைத்து நிற்கிறது? மித்ர,புத்ர, இந்ர, அநுர போன்ற பெயர்கள் இருக்குவேதத்தில் வரும் பெயர்கள் ஆகும்.

//(will you please change your contact number with international code. two days ago i phoned you from abu dhabi, but gone to wrong person.i thought that it is u.a.e contact number.)//

00966559145986.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

//கரிய வெளிச்சம், முக்கோண வட்டம், அழகிய அசிங்கம்... இதுபோலத்தான் சேரவே சேராத இணையவே முடியாத ஒரு சொற்பிரயோகம்... 'தலித் முஸ்லிம்'.//

பதிவின் முழு கருத்தையும் இரு வரிகளில் அடக்கி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ. பி.ஏ.சேக்தாவுத்!

//ஏனெனில் இதே ரசூல் தான் இஸ்லாத்தில் சிறிய அளவு மது அருந்தலாம். அதற்கு அனுமதி இருக்கிறது என்று எழுதியவர். //

இவரே ஒரு பதிவில் தர்ஹாவில் அடங்கியிருக்கும் ஒரு மகானை சிறப்பித்து ஒரு கட்டுரை எழுதியதாகவும் அதை கிராமத்தில் உள்ளவர்கள் வெளியிட மறுத்ததாகவும் குறைட்டுக் கொண்டுள்ளார். குறைவாக மது அருந்துதல், சமாதிகளை கட்டிக் கொண்ட அழுவது, தலித் முஸ்லிம் என்ற இல்லாத ஒன்றை கொண்டு வர நினைப்பது போன்றவற்றைப் பார்க்ககும் போது இவரிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இந்துத்வ வாதிகளை நாம் சுலபமாக எதிர்த்து விடலாம். ரசூல் போன்ற மார்க்கத்துக்குள்ளேயே இருந்து கொண்டு குழப்புபவர்களை எதிர் கொள்வதுதான் சற்று சிரமம். சிறந்த பிரசாரத்தின் மூலமாகவே இது போன்ற பதர்களை இனம் காண முடியும். வெற்றியும் பெற முடியும்.

உங்கள் ஆக்கங்களையும் நிறைய படித்திருக்கிறேன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

Vikram was born to Vinod Raj and Rajeshwari in Chennai. His father was from Paramakudi, Ramanathapuram district. Vikram belong’s to Devendra kula vellalar caste[citation needed] . Vikram did his schooling at Montfort School, Yercaud. While in school, his love of drama and pursuit of his dream were nurtured. With his parents wanting him to finish college after high school, he graduated in English from Loyola College, Chennai, and followed it up with an M.B.A.
His father is also a film actor. Vikram and his father starred together for the first time in the movie Kanthaswamy. His mother is a retired sub-collector. Vikram married Shyla, from Kannur, Kerala, a psychology teacher in 1992. They have two children, a daughter named Akshita and a son named Dhruv.
-WIKIPEDIA

சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் ‘தெய்வத் திருமகன்’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள ‘தெய்வத் திருமகன்’ தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.

suvanappiriyan said...

) Bandi Anusha Dalit student, studying B.Com final year in Villa Mary College, committed suicide on 5th November by jumping from the 3rd floor of her college building. The college management/ administration removed all the blood stains from the spot and then called electronic media and reported that the girl was forced into the act as there was a scuffle with her mother on the same day. And the same version was telecasted in the news channels and published in the news papers. Incidentally, the authorities forgot to inform the police and parents before they could call the media persons.

But according to the parents and relatives, Anusha was facing harassment and caste discrimination in the college from her classmates and they made to sit her on the front bench alone from the time they came to know her scheduled caste status, and that has forced her to commit the act.

On 4th November, 2009, Anusha informed her father about the harassment by her classmates in the college. Also she told that she don’t want to continue her study in the same college as her classmates are teasing her because of her scheduled castes status. Her father seemed to have assured that he will come soon to the college to solve the problem by speaking with her classmate friends and requested Anusha to continue her studies in the same college, as in another three months she will finishing Degree Course (B. Com)

But on the next day, 5th November, 2009 Anusha faced same kind of harassment by her classmates and was unable to bare this. Apparently, she told everyone in the class that she is going to die by jumping from the building, but none of the classmates stopped her. She came out of the classroom and she again called her father and informed him that she is going to die, and also she sent a sms to her father’s mobile “Bye dad im gng to die”. Her father immediately informed his brother Rajendra and he called Anusha on her mobile and tried to convince her. But while talking over phone itself she jumped from the 3rd floor of the building. A case was registered in the Panjagutta police station as Crime number 1137/2009 under section 306 of IPC R/W 34 IPC but no accused was arrested yet.

A team constituted by the campaign for the elimination of caste discrimination in education institutions have visited villa Mary collage to know the details of the incident of suicide of .Anusha, but college management was not ready to reveal any information or reasons for the suicide and they have also instructed all the staff not to speak to visitors to the college regarding the suicide this was revealed by one of the ayah openly to the enquiry team, without revealing her own identity.

2) Amaravathi a national-level dalit woman boxer from Hyderabad committed suicide by consuming poison in her hostel room at the Centre of Excellence, a sports hostel of the Sports Authority of Andhra Pradesh, at Lal Bahadur Stadium on 4th November 2009, The 21-year-old boxer won the bronze medal at the boxing nationals in 2006-07

The victim’s shocked family members alleged that “undue pressure mounted on her by the coach and the coach blamed her status of Scheduled caste and threatened her to perform better or die”. “She used to tell her family that Omkar Yadav (the coach) was frequently scolding her to achieve results. He used to ask her to quit the hostel saying she was just enjoying free amenities in the hostel,” they said. That is the whole reason for the suicide of Amaravathi

The members of the campaign for the elimination of caste discrimination in education institutions have visited the residence of Amaravathi in Chinthalbasti – Hyderabad and interacted with her parents they says that she is the bread winner of them now they become orphans

A case was registered but there is no progress of investigation and the coach Omkar Yadav was t neither arrested nor even questioned by the police.

suvanappiriyan said...

3) Mr. Senthil Kumar, S/o Palaniswamy and Devani age 28, a research scholar in Physics in the University of Hyderabad committed suicide on 23-2-08 in his hostel room no.205 in the University’s new Research Scholar’s Hostel. This young hopeful scholar was a scheduled caste person from the village of Jalagandapuram in Selam district of Thamilanadu State. He completed his M. Phil. In Pondicherry Central University and thereafter he got admission into School of Physics as a PhD student during the academic year 2007-2008. He had never been allotted a guide to pursue his research programme until he committed suicide. He has to suffer lot of frustration and humiliation requesting the faculty members to accept him as a PhD student. Poor Senthil was the first generation in his family to get education. He came to this position with a lot of hardship. But he is a tragic victim of caste discrimination.

Our committee while interacting it is said that there exists a lot of discrimination among the faculty members in allotting the guides to the dalit scholars. There are many Scholars who do not have allotted any guide to them even after they got admission into the PhD Programme. The dalit students claim that they are the victims of the recently introduced semester system for the PhD Scholars. By this system the faculty can award less marks in the semester end examinations and thereby he would be retained in the same position again. Those persons who fail the examinations will not get scholarship. If the scholar ships are stopped the students, especially the dalit students who depends upon the scholarships for their studies, the consequences will force them to leave the studies. The same thing happened in the matter of Senthil Kumar as well. He failed in the recently held semester examinations and thereby he was struck with fear of stopping the scholarship and also non –allotment of guide doubled his agony.

On the day before he committing suicide he had spent time with his friends Arun Babu, and Armuga Nathan. They were together till late night and Senthil Kumar went to his room. The next day he was not seen by his friends. When they went to his room only the victim was lying on the floor, necked and with blood stains on the floor, immediately he was shifted to the campus where he was declared brought dead. Then the dead body of the victim was sent to Gandhi Hospital for the post mortem. Later the dead body was handed over to the parents of the deceased, who were called to Hyderabad. In a very causal manner the police of Chanda Nagar filed a case, till now the reasons for the suicide were not ascertained.


-Thanks Dalit (from Vinavu)

suvanappiriyan said...

4) Balaswamy a PhD student (Department of Telugu) of University of Hyderabad belongs to Backward Class (Kuruma – shepherd community) of Chinthulla village of Yacharam Mandal, Rangareddy district, committed suicide at home (In the agricultural fields) due to caste based comment made by his professor (will you put this PhD degree in the neck of your Sheep, why do you want to do PhD) and denial of Scholarship in 2009 due to non promotion to the next semester. Since it happened at home of the diseased no case was registered and no enquiry was commissioned.

5) Rajitha, German studies student in EFL University attempted to suicide in the seethaphalmandi railway station, as Prof, Meenakshi Reddy, the dean of the German studies in EFL University has not permitted any Dalit student to sit in the class, However she has permitted some OBC students though they have failed in some semester exams. The SC ST students repeatedly requested her to allow sitting in the class and approached vice chancellor also, but she told that she will not permit even if the home minister of India intervenes in the matter. She even threatened to resign from job but don’t want to permit dalit students to sit in the class. Due to this humiliation Rajitha attempted suicide but saved by the other students. Though all this was in public no action was initiated against Prof. Meenakshi Reddy by the university.

These are few examples of the type of incidents taking place in the educational institutions. It is a clearly evident that some of the faculty including and professors, other administration staff and fellow students are not able to accept the dalit students in higher education and educational institutions. Hence the dalit students have been humiliated so much and some of them are even resorting to suicides.

Several of such cases are reported in the country. This is a very unfortunate situation; it’s a shame on the constitution of India and violation of basic human rights to fellow students. Hence we request you to intervene at once and take preventive measures and restore respect to the constitution of our country and ensure rightful human dignity to the Dalit students thereby they can pursue their education he the discrimination on the dalit students in the universities and other educational institutions

-Thanks Dalit (from Vinavu)

Anonymous said...

Islam calls for uncompromising social equality of all humanity. Race, colour, caste and ethnic origin have no value in Islamic understanding of things — piety being the only determinant. This, however, has not stopped Muslims from adopting un-Islamic practices of social discrimination. Caste differences within the Muslim society are more apparent in the subcontinent than anywhere else. The book claims to “explore various dimensions of the caste question among Muslims in India. The book deals with considerable length on the all-important issue of inter-case marriages and the concept of kafa’a (suitability and compatibility in marriage). For this, he relies on the comprehensive tract written in Urdu on the topic by Maulana Abdul Hamid Nu’mani, a senior leader of the Jamiat Ulema-i-Hind. Nu’mani has forthrightly brought to light, in no unambiguous terms, the internal hypocrisy of the community, which claims to be belonging to a universal brotherhood while at the same time shunning marital relationships with fellow Muslims. He deconstructs the widely misunderstood concept of Kafa’a and decisively proves that it has no basis in Islam. He also does not hesitate to criticize the revered ulema, like Maulana Ashraf Ali Thanwi and Maulana Ahmed Raza Khan Barelwi whose views on kafa’a contradicted those of the Qur’an and Sunnah.

- ISLAM, CASTE AND DALIT-MUSLIM RELATIONS IN INDIA
Yoginder Sikand

Anonymous said...

இந்து, சீக்கியம், பௌத்தம், கிருத்தவம் மட்டுமில்லை தெற்காசிய இஸ்லாத்திலும் சாதியம் உண்டு. தெற்காசிய மக்களிடம் உள்ள சாதியத்துக்கு வேர் சனாதன தர்மத்தில் இருந்தாலும், சாதியம் என்பதை மாற்ற முடியாமல் இருக்கு. இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல....

இது தெற்காசிய மட்டுமின்றி -- ஒரு இந்திய முஸ்லிம் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் உள்ள முஸ்லிமோடு மணவுறவு வைத்துக் கொள்ள முடியுமா ??? சாதியம் அங்குமுள்ளது .... கடப்பாவைச் சேர்ந்த காதர் பாஷாவும், குவைத் பெண் தலால் ஃபலாக் அல் அஸ்மியின் கதை என்னவென்று தெரியும் தானே !!!

சாதியத்தை இஸ்லாம் ஏற்கவில்லை, இதே நிலையைத் தான் பௌத்தமும், சமணமும், கிருத்தவமும் கொண்டுள்ளன. ஆனால் மக்கள் சாதியத்தை விடத் தயாராக இல்லை. இதற்கு இஸ்லாமியரும் விதிவிலக்கில்லை..

suvanappiriyan said...

//ஒரு இந்திய முஸ்லிம் மத்தியக் கிழக்கு நாடு ஒன்றில் உள்ள முஸ்லிமோடு மணவுறவு வைத்துக் கொள்ள முடியுமா ??? சாதியம் அங்குமுள்ளது .... கடப்பாவைச் சேர்ந்த காதர் பாஷாவும், குவைத் பெண் தலால் ஃபலாக் அல் அஸ்மியின் கதை என்னவென்று தெரியும் தானே !!!//

ஒரே மதத்தில் ஒரு சாராரை தாழ்த்தப்பட்டவர் என்று கூறி பிறப்பு, படிப்பு, இறப்பு என்று அனைத்திலும் அந்த மக்களை ஓரங்கட்டி தற்கொலை வரை கொண்டு சென்றதை பத்திரிக்கைகளில் தினமும் பார்க்கிறோம். இதற்கு ஆதாரத்தைக் கொடுத்திருக்கிறேன். இதற்கு மூல காரணமாக இருப்பது சாதியை வளர்க்கும் இந்து, கிறித்தவ மத வேதங்கள். அதற்கு ஆதாரத்தையும் நான் கொடுத்துள்ளேன்.

ஒரு நாடு விட்டு நாடு திருமணம் புரிவதை எப்படி இதில் ஒன்றாக்குகிறீர்கள்? அரபுகளின் நடை, உடை, கலாசாரம் அனைத்தும் நமக்கு முற்றிலும் வேறுபடும். இருவரும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ள குர்ஆனில் எந்த தடையும் இல்லை. எத்தனையோ சவுதிகள் நமது இந்திய பெண்களை மணமுடித்து இருக்கிறார்கள். எமன் தேசத்தவர் பல ஹைதரபாத் பெண்களை மணமுடித்து குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருப்பதை என்னால் நேரிலேயே நிரூபிக்க முடியும். எனது சொந்தத்திலேயே எகிப்து நாட்டை சேர்ந்தவருக்கு பெண் கொடுத்துள்ளோம்.

நீங்கள் எவ்வளவு முயற்ச்சித்தாலும் தீண்டாமை கொள்கையை குர்ஆன், அல்லது நபி மொழியின் அடிப்படையில் ஆதாரம் காட்ட இயலாது. அந்த அறிஞர், சொன்னார் இந்த அறிஞர் சொன்னார் என்பது குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அந்த சட்டம் குப்பை கூடைக்குத்தான் போக வேண்டும் என்று நான் முன்பே விளக்கியிருக்கிறேன்.

20 வருடங்களுக்கு முன்பு மீனாட்சி புரம், ரஹ்மத் நகராக மாறியதல்லவா! அங்கு சென்று அந்த மக்களின் வாழ்வில் எந்த அளவு வசந்தம் வீசுகிறது என்று பார்த்து விட்டு பிறகு கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். என் பள்ளித் தோழன் செல்வராஜின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தொழுகைக்கான அழைப்பு சப்தம் கேட்டவுடன் 'தொழுகைக்கு செல்லலாமா?' என்று என்னை கூப்பிடுகிறான். பழைய தோற்றமும் மாறி புதுப் பொலிவுடன் காட்சி அளித்தான். இதுதான் இஸ்லாம்.

Anonymous said...

தங்கள் மதமாற்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள் .... !!! ஆனால் அனைவரின் மனங்களும் மாறிவிடாது என்பதே உண்மை .... அனைவரையும் சமமாக எண்ணும் எண்ணம் வளர்ந்தோங்க வேண்டும் ...

Anonymous said...

// நீங்கள் எவ்வளவு முயற்ச்சித்தாலும் தீண்டாமை கொள்கையை குர்ஆன், அல்லது நபி மொழியின் அடிப்படையில் ஆதாரம் காட்ட இயலாது. //

குர்-ஆனில் தீண்டாமை இல்லை என்பதை நானும் அறிவேன் .. அதே போல பௌத்த சமண நூல்களிலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆதாரம் காட்ட இயலாது .... !!! கிருத்தவ வேதங்களில் புதிய ஏற்பாட்டிலும் தீண்டாமை இல்லை ....

ஆனால் நடைமுறையில் தீண்டாமை அனைத்து சமூகங்களிலும் இருக்கின்றது .... தலித் முஸ்லிம்கள் என்பவரும் இருக்கின்றார்கள்... சென்னை நகரத்திலேயே ஒரு பெரிய இஸ்லாமியர் திருமண மண்டபத்துக்கு வெளியே தலித் முஸ்லிம்கள் எஞ்சிய உணவுக்காக காத்திருந்ததை கண்ணால் கண்டவன் .... இன்றளவும் லெப்பைகள் பலர் தலித் முஸ்லிம்களோடு மணவுறவு வைப்பதில்லை ... ஏன் ???

ஒரு இந்திய இஸ்லாமியர் அரபு நாட்டில் குடியுரிமை வாங்கிக் காட்ட இயலுமா? ம்ஹூம்.. முடியாது. மனிதர்களில் வேறுபாடு காணும் பித்து மனம் தான் காரணம் ...

இஸ்லாம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை.. ஆனால் முஸ்லிம்கள் ??? இது தான் கேள்வியே சகோ ...

Anonymous said...

லேவியாகமம் 16:32,33 - So the priest who is anointed and ordained to serve as priest in his father's place shall make atonement: he shall thus put on the linen garments, the holy garments.

இந்த விவிலிய வாசகம் தங்களால் தவறாக எடுத்தாளப்பட்டுள்ளது எனலாம். இந்த விவிலிய வாசகம் யூத மதக் குருமார் பற்றியது. அது மட்டுமின்றி தந்தையாக இருக்கும் மதக் குருவின் வழியில் மகன் ஏற்றுக் கொண்டு தொடர வேண்டிய வழிகளைக் கூறுவதாக இருக்கின்றது. இது அக்காலத்தில் இயல்பான ஒன்றாகும், அதாவது - ஒரு மன்னர் இருக்கின்றார், அவரதுக் காலத்தின் பின் அந்த இடத்தை அவரது மகன் பெறுகின்றார். இதே நிலை இன்றளவும் உண்டு , அதிலும் இஸ்லாமிய முடியரசு நாடுகளிலும் அதே நிலை தான். இதேப் போன்று தான் மதக் குருமார் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் அவரது மகனை வைப்பது பண்டைய யூத மரபு - இதற்கும் கிருத்தவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை சகோ.

போகிறப் போக்கில் எதோ வாசகங்களை அள்ளித் தெளித்துள்ளீர்கள் என்று தெரிகின்றது.

Anonymous said...

Leviticus 22:14 - If anyone eats a sacred offering by mistake, he must make restitution to the priest for the offering and add a fifth of the value to it.

Leviticus 23:20 - And these will be waved by the priest, with the bread of the first-fruits, for a wave offering to the Lord, with the two lambs: they will be holy to the Lord for the priest.

Leviticus 23 :10 - Speak unto the children of Israel, and say unto them, When ye are come into the land which I give unto you, and shall reap the harvest thereof, then ye shall bring the sheaf of the first-fruits of your harvest unto the priest.

Leviticus 23:13 - together with its grain offering of two-tenths of an ephah of fine flour mixed with oil--an offering made to the LORD by fire, a pleasing aroma--and its drink offering of a quarter of a hin of wine.

Leviticus 21:16 - And the LORD spoke to Moses, saying

Leviticus 21:23 - yet because of his defect, he must not go near the curtain or approach the altar, and so desecrate my sanctuary. I am the LORD, who makes them holy

இவற்றில் தீண்டாமை சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை சகோ. வேறு எதாவது வாசகம் இருந்தால் எடுத்துப் போடுங்கள் .. பழைய யூத மதக் கதைகள் பற்றித் தான் வருகின்றன. இதே மோசேக் கதைகள் குரானிலும் இருக்குதுங்க...

Anonymous said...

இந்தியாவில் மதங்கள் கடந்து சாதியம் புடைத்துக் கொண்டு இருக்குதுங்க.. இதனைத் தான் நாம் எதிர்க்கின்றோம், இந்தியா மட்டுமில்லை - தெற்காசிய நாடுகளிலும் கூட இருக்குதுங்க.. அதற்காக பத்தி பத்தியா செய்திகள் தர முடியும் ...

suvanappiriyan said...

//சென்னை நகரத்திலேயே ஒரு பெரிய இஸ்லாமியர் திருமண மண்டபத்துக்கு வெளியே தலித் முஸ்லிம்கள் எஞ்சிய உணவுக்காக காத்திருந்ததை கண்ணால் கண்டவன் ....//

ஐயா....!அவர்கள் வறியவர்கள். எல்லா மதத்தவரின் விருந்துகளிலும் மீதம் உள்ள சாப்பாட்டுக்காக காத்திருக்கும் ஏழைகளை தீண்டாமைக்கு உதாரணம் காட்டலாமா?

இதையும் கூட இஸ்லாம் கண்டிக்கிறது. 'விருந்துகளிலேயே கெட்ட விருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து' என்பது முகமது நபியின் அறிவுரை.

//தங்கள் மதமாற்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள் .... !!! ஆனால் அனைவரின் மனங்களும் மாறிவிடாது என்பதே உண்மை .... அனைவரையும் சமமாக எண்ணும் எண்ணம் வளர்ந்தோங்க வேண்டும் ...//

அவர்களாக விளங்கி ஒரு கொள்கையை பின்பற்றுவதுதான் நிலைத்து நிற்கும். இந்த பதிவு இன இழிவு நீங்க ஓடி வரும் அந்த சகோதரனை 'தலித் முஸ்லிம்' என்ற அடை மொழியில் பிரித்து திரும்பவும் அவர்களை தீண்டாமைக் குழியில் தள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்துவதே!

//ஒரு இந்திய இஸ்லாமியர் அரபு நாட்டில் குடியுரிமை வாங்கிக் காட்ட இயலுமா? ம்ஹூம்.. முடியாது. மனிதர்களில் வேறுபாடு காணும் பித்து மனம் தான் காரணம் ...//

இது அந்த நாட்டு மக்களும் அந்நாட்டு அரசாங்கமும் எடுக்க வேண்டிய முடிவு. இதற்கும் இங்கு நாம் பேசி வரும் தீண்டாமைக்கும் ஏதும் தொடர்பு உண்டா?

ஏழு வருடம் தொடர்ச்சியாக தங்கியவர்களுக்கு முன்பு குடியுரிமை கொடுக்கப்பட்டது. இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிய நாட்டவர் பலர் முன்பு குடியுரிமை பெற்று தற்போது பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

//இதேப் போன்று தான் மதக் குருமார் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் அவரது மகனை வைப்பது பண்டைய யூத மரபு//

அதாவது குலத் தொழில். இதைத்தானே இந்து மத தத்துவங்களும் சொல்கின்றன.

Anonymous said...

தங்கள் பொறுமையான பதிலுக்கு மிக்க நன்றிகள். என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் சாதியத்தைப் போதிக்கவில்லை. ஆனால் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களில் சாதியம் இன்னமும் இருக்கின்றது. வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இருக்கின்றன - அதனை நேரில் பார்த்தும் இருக்கின்றேன்.

இஸ்லாமும், கிருத்தவமும் ( யூத மத்ததினை விடவும் ) மனிதர்கள் சகோதர்கள் என போதிக்கின்றது. ஆனால் இஸ்லாமில், கிருத்தவர்களில் இருக்கும் அனைவரும் அப்படியான எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

பாகிஸ்தானில் நடக்கும் சாதிய வெறித்தனமும், தீண்டாமைக் கொடுமையுமே இதற்கு தக்க சான்று, இந்தியாவில் இருக்கும் கிருத்தவ, இஸ்லாமிய சமூகங்களிலும் சாதியம் இருக்கு. பாகிஸ்தானிய சாதியம் குறித்து ஒரு சிறுப் பதிவு எழுதியுள்ளேன் படித்துப் பாருங்கள் தோழரே. இந்து மதத்தைச் சொல்ல வேண்டாம் சாதியத்தின் சாகரம் அது.

// அதாவது குலத் தொழில். இதைத்தானே இந்து மத தத்துவங்களும் சொல்கின்றன. //

கிருத்தவத்தில் சாதியம் இருக்கு என்பதைக் காட்டுவதற்கு தவறுதலான வாசகங்களை எடுத்தாண்டுள்ளீர்கள். இவை சாதியத்தை விளக்குவதற்கான வாசகங்கள் இல்லை சகோ.

குலத் தொழில் பற்றி கூட அவ்வாசம் சொல்லவில்லை. மகனாக இருப்பவன் தந்தைப் போல குருக்களாக மாறினால் செய்யவேண்டிய கடமைகளை செய்தே ஆக வேண்டும் என்பதே. மகன் கண்டிப்பாக தந்தையின் குலத் தொழிலைத் தான் பின்பற்ற வேண்டும் என்றோ, வேறு தொழில் செய்பவர் குருக்கள் ஆகக் கூடாது என்றோ எதாவது வாசகம் இருந்தால் எடுத்துப் போடுங்கள் சகோ. அரைக் குறையாக எடுத்தாள வேண்டாம். கிருத்தவத்தில் சாதியம் இல்லை என்பதற்காக இதைச் சொல்லவில்லை, சாதியக் கோட்பாட்டை கிருத்தவம் போதிப்பதில்லை, நீங்கள் கூறிய வாசகங்களும் அதனை எடுத்துக் காட்டவில்லை. செய்வதைத் திருந்த செய்ய வேண்டாமா?

Anonymous said...

// ஐயா....!அவர்கள் வறியவர்கள். எல்லா மதத்தவரின் விருந்துகளிலும் மீதம் உள்ள சாப்பாட்டுக்காக காத்திருக்கும் ஏழைகளை தீண்டாமைக்கு உதாரணம் காட்டலாமா? //

வறியவர்களையும் அழைத்து சமபந்தி போட்டு இருக்கக் கூடாதா? அந்த வறியவர்கள் அனைவரும் ஏழை முஸ்லிம்கள். மவுண்ட் ரோட்டில் அன்றாடப் பிழைப்பு நடத்துபவர்கள். தீண்டாமை மனித மனங்களில் இருக்கு, மதங்கள் சில அவற்றுக்கு லைசன்ஸ் கொடுத்துள்ளன அவ்வளவே சகோ.

Anonymous said...

சாதியம் என்பதை குரான் போதிக்கவில்லை, இயேசுவோ, புத்தனோ போதிக்கவில்லை -- ஆனால் மனிதர்கள் கைக் கொள்ளுகின்றார்கள். அவை அனைத்து மதங்களிலும் உள்ளது. அனைத்து மதங்களிலும் உள்ளவரும் அவற்றை எதிர்க்கவும் செய்வோரும் உள்ளார்கள் என்பதையும் மறக்க கூடாது.

suvanappiriyan said...

//Leviticus 22:14 - If anyone eats a sacred offering by mistake, he must make restitution to the priest for the offering and add a fifth of the value to it.//

ஒருவன் அறியாமல் சாப்பிட்டு விட்டால் அதற்கு பகரமாக மதகுருமாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? ஏழைக்கு கொடுக்கச் சொன்னாலும் அதில் நியாயம் இருக்கும். இந்த வசனம் புரோகிதத்தை வளர்க்கவில்லையா?

//Leviticus 23:20 - And these will be waved by the priest, with the bread of the first-fruits, for a wave offering to the Lord, with the two lambs: they will be holy to the Lord for the priest.//

இந்த வசனமும் புரோகிதத்தை வளர்க்க துணை புரிகிறது.

//Leviticus 23 :10 - Speak unto the children of Israel, and say unto them, When ye are come into the land which I give unto you, and shall reap the harvest thereof, then ye shall bring the sheaf of the first-fruits of your harvest unto the priest.//

பாடுபட்டு உழைத்து அந்த உணவுதானியங்களை நான் எதற்கு மதகுருமாரிடம் கொடுக்க வேண்டும்? இங்கும் புரோகிதம் வளர்க்கப்படுகிறதா இல்லையா?

//Leviticus 21:23 - yet because of his defect, he must not go near the curtain or approach the altar, and so desecrate my sanctuary. I am the LORD, who makes them holy

இவற்றில் தீண்டாமை சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை சகோ.//

பின்னும் கர்த்தர் மோசேயினிடம் 'நீ ஆரோனோடு பேசி இதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்ககீன முள்ளவன் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டி வரலாகாது. குருடன், சப்பாணி, முக விகாரமுள்ளவன், அளவுக்கு மிஞ்சி நீண்ட அவயமுள்ளவன், கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசர் உள்ளவன், விதை நசுங்கினவன், ஆகிய இவர்கள் கிட்டி வரலாகாது' -லேவியராகமம் 21:16,23

இது போன்ற குறையுள்ள கிறித்தவர்கள் கடவுளை நெருங்கவோ, பூஜை, பலியிடவோ முடியாது. மனிதன் குறையாக பிறந்தது யார் குற்றம்? இவர்களை பூஜை செய்ய வரலாகாது என்று தடுப்பது தீண்டாமை இல்லையா?

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்ட ரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆச்சாரியனுக்கு அறிவிக்க வேண்டும்.........
-லேவியராகமம்: 14: 34 முதல் 52 வரை

மனிதனுக்கு குஷ்டம் வரும். வீட்டுக்கு குஷ்டம் வருமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியே வியாதி வந்தாலும் மருத்துவரிடம் போகாமல் மத குருமாரிடம் ஏன் போக வேண்டும்? இது புரோகிதத்தை வளர்க்க வில்லையா?

//பழைய யூத மதக் கதைகள் பற்றித் தான் வருகின்றன. இதே மோசேக் கதைகள் குரானிலும் இருக்குதுங்க...//

மோசே ஹாரூனுடைய வரலாறு குர்ஆனிலும் வருகிறது. ஆனால் பைபிளில் சொல்லப்பட்ட புரோகிதக் கருத்துக்கள் குர்ஆனில் இல்லை. மீண்டும் ஒரு முறை குர்ஆனை படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

சூரியன் said...

இந்த ஹஜ் பற்றிய விடியோவை 5.00 நிமிடத்துக்கு பின் பாருங்கள். மெக்காவிலேயே இனவெறி!

http://www.youtube.com/watch?v=smlIiNUgwxA&feature=related

suvanappiriyan said...

மதுரை வைத்தியநாதபுரம் கங்காணி லைனைச் சேர்ந்தவர் தனபால் (40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகள் பிரியங்கா மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் கூறியவை யாருக்கும் நிகழக்கூடாதவை.

”.. நீங்கள் அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால் நீங்கள் இப்போ வகுப்பறையை கூட்டி என் கண்முன்னால் அள்ளிச் சாப்பிட வேண்டும்” என்று எங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியை உத்தரவிட்டார். நாங்கள் எல்லோரும் எப்படி மிஸ் சாப்பிட முடியும் என்றும் வகுப்பறையை சுத்தம் செய்யாதது தப்புதான் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். அப்படி இருந்தும் மிஸ், கொஞ்சம் கூட இரக்கப்படவில்லை. நீங்க இந்த வகுப்பறையை சுத்தம் செய்து அதை தின்ன வேண்டும் என்றும் மீண்டும் கூறினார்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுத்தம் செய்து ஆசிரியர் சொன்னபடி, லீடர் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு கை அளவு குப்பையை அள்ளிக் கொடுத்தார். அப்போது நாங்கள் அந்த குப்பையைப் பார்த்த போது அதில் பழைய வெள்ளச்சோறு, அழுக்குப் பேப்பர், மண் எல்லாம் இருந்தது.மிஸ் அதட்டியவுடன் வேறு வழியின்றி இந்த குப்பையைச் சாப்பிட்டோம்”

என பிரியங்கா கூறினார். குப்பையைச் சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

- நன்றி: ”மாற்று”.

Anonymous said...

தலித் முஸ்லீம்களையும் தலித்கள் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கோருகிறார்கள்.தலித் முஸ்லீம்கள் இல்லாமலா அப்படி கோருகிறார்கள்.
பாகிஸ்தானில் சமத்துவம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் அங்கு அகமதியாக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.இறை நிந்தனை குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை தருவது அங்கு உள்ளது.
இஸ்லாமிய நாடுகளில் மதமாறும் உரிமை உள்ளதா. பாகிஸ்தானில், மத்திய கிழக்கில் சியா-சுன்னிக்களிடையே மோதலே இல்லையா.இஸ்லாத்தில் எல்லோரும் சமம் என்றால் ஏன் இத்தனை மோதல்கள். தெற்காசியா நாடுகளில்
சாதியம் என்பது இருக்கிறது. வங்க தேசம், பாகிஸ்தானிலும் அதுதான் நிலைமை.

ரசூலை ஊர்விலக்கம் செய்வது, ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடுப்பது, தஸ்லீமாவை தாக்குவது - இவையெல்லாம் செய்தது யார்.
கிறித்துவர்களா இல்லை இந்துக்களா.
அரபு கிழவர்களுக்கு இளம் பெண்களை த்ருமணம் செய்து வைப்பது யார், எந்த மதத்தினை சேர்ந்தவர்கள் அவர்கள்.

Anonymous said...

//ஒரு நாடு விட்டு நாடு திருமணம் புரிவதை எப்படி இதில் ஒன்றாக்குகிறீர்கள்? அரபுகளின் நடை, உடை, கலாசாரம் அனைத்தும் நமக்கு முற்றிலும் வேறுபடும். இருவரும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ள குர்ஆனில் எந்த தடையும் இல்லை. எத்தனையோ சவுதிகள் நமது இந்திய பெண்களை மணமுடித்து இருக்கிறார்கள். எமன் தேசத்தவர் பல ஹைதரபாத் பெண்களை மணமுடித்து குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருப்பதை என்னால் நேரிலேயே நிரூபிக்க முடியும். எனது சொந்தத்திலேயே எகிப்து நாட்டை சேர்ந்தவருக்கு பெண் கொடுத்துள்ளோம்.
//

உங்கள் கூற்றில் எவ்வளவு முரண்பாடுகள்?

அரபுப் பெண் இந்திய ஆணை மணக்க கலாச்சாரம் தடை என்கிறீர்கள். அதே சமயம் பல இந்தியப் பெண்களை அரபு, எகிப்திய ஆண்களுக்கு மணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் சொல்கிறீர்கள்.

இந்தியப் பெண்கள் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி மகிழ்ச்சியாக இருக்க முடியுமானால் அது அரபிப் பெண்களால் முடியாதா?

மாறாக அரபிப் பெண்களால் கலாச்சார மாற்றத்தை தாங்க முடியாது என்றால் இந்தியப் பெண்கள் என்ன ஆடா, மாடா, தங்களின் கலாச்சார மாற்றத்தை சகித்துக் கொண்டு அரபு நாட்டிலோ, எகிப்திலோ வாழ்வதற்கு?

ஏன் இந்தியப் பெண்களுக்கும், அரபிப் பெண்களுக்கும் இரட்டை ஸ்டாண்டர்ட் வைத்திருக்கிறீர்கள்?

Anonymous said...

சுவனப்பிரியன், இந்து மதத்தில் தீண்டாமைக் கொடுமை இருக்கு. தற்காலத்தில் யாரும் அதை மறுக்கவில்லை. அதை மாற்ற சட்ட ரீதியாகவும், சமுதாய நோக்கிலும், தனிப்பட்ட நோக்கிலும் முயற்சிகள் (எவ்வளவு சிறிதாயினும், கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலும்) நடந்து கொண்டிருக்கின்றன.

இப்போது 'நீ மட்டும் யோக்கியமா' என்ற ரீதியில் பதில் சொல்லாமல் இஸ்லாம், அதன் சாதி, இன வேறுபாடுகள் பற்றி மட்டும் பேசுவீர்களா?

Anonymous said...

முதலில் சுவனப்பிரியன் ஒன்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த பழைய ஆகமம் என்பது யூத மதப் புஸ்தகங்கள். சரி கிருத்தவர்கள் மறைமுகமாக இதனை ஏற்கின்றார்கள் தான். ஆனால் இவற்றில் தீண்டாமை சொல்லப்படவில்லையே சகோ.

ஒருவன் பாடுபட்ட விளைச்சலில் ஒருப் பிரிவினை மதக்குருமார்களுக்கு தானமாகக் கொடுக்கும் மரபு அனைத்து சமூகங்களிலும் இருக்கின்றது. ஒரு இஸ்லாமிய மதக்குருவான இமாம் எப்படி இயங்குகின்றார்கள் சிலர் முழுநேர ஊழியம் செய்வார்கள், அவர்களுக்கு அம்மசூதியைச் சார்ந்த சகோதரங்கள் பணம், உணவு போன்றவற்றை அளிப்பார்கள். காரணம் அவர் தமது நேரத்தை குர்-ஆன் கற்பித்தல், வழிப்பாட்டு உதவுதல், பள்ளியினை நிர்வாகித்தல் ஆகிய பணி செய்கின்றார்கள். அதனால் அவருக்குத் தேவையானதை உழைக்கும் பிற மக்கள் கொடுப்பார்கள்.

இதேப் போக்கு பௌத்த மதக் குருமார்கள், இந்து மதக் குருமார்கள், கிருத்தவ மதக் குருமார்களிடமும் உண்டு. இதில் சாதியமோ, தீண்டாமையோ கிடையாது.

Anonymous said...

லெவிடிக்கஸ் 21:23-யில் தீண்டாமை சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் மதக்குருமார்கள் ஊனமில்லாதவராய் இருக்க வேண்டும் என்றக் கருத்து இருந்தது.

ஏன் இன்றளவும் கூட எந்த மதக்குருமாரும் ஊனத்துடன் மதக் காரியங்கள் செய்வதில்லை. ஏன் உடல்குறைபாடுடன் தலைமை ஏற்கும் எந்த வித இமாம்களையும் கூட நான் பார்த்ததில்லை. காரணம் உடற்குறைப்பாடு உடையவர்களால் முழுவதுமாக தம்மை மதப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்றக் கருத்து அக்காலத்தில் இருந்தது. ஆனால் அப்படியான கருத்தாங்கள் தவறு எனப் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இன்று உடற்குறைப்பாடு உடைய மதக்குருமார்கள் கிருத்தவத்தில் பலர் பணியாற்றுகின்றனர். இந்நிலை அனைத்து மதங்களிலும் வர வேண்டும்.

http://articles.latimes.com/2000/jun/17/local/me-41872

கிருத்தவத்துக்கு வக்கலாத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம்.

ஒன்று இவையாவும் கிருத்தவ வேதங்கள் இல்லை, அவை யூத வேதங்கள். இவற்றைத் தான் இயேசு எதிர்த்தார் .... மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கவும் எனப் போரிட்டார்.

இரண்டு நீங்கள் தீண்டாமையை எடுத்துக் காட்ட தவறான வாசகங்களை எடுத்துப் போட்டுள்ளீர்கள்.

Anonymous said...

// மோசே ஹாரூனுடைய வரலாறு குர்ஆனிலும் வருகிறது. ஆனால் பைபிளில் சொல்லப்பட்ட புரோகிதக் கருத்துக்கள் குர்ஆனில் இல்லை. மீண்டும் ஒரு முறை குர்ஆனை படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும். //

நான் இரண்டையும் படித்துள்ளேன். விவிலிய பழைய ஆகமம் யூத தோராக்களில் இருப்பதை அப்படியே எடுத்துப் போட்டுள்ளார்கள். குர்-ஆனில் மாற்றம் செய்யப்பட்டுப் போடப்பட்டுள்ளது. இது தான் வித்தியாசம்.

யூதக் கோட்பாடுகளும், பழைய வேதக் கோட்பாடுகளும் ஒன்றே போல் உள்ளதையும் நான் அறிவேன். யூதக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டி கிருத்தவத்தில் தீண்டாமை அடிப்படையில் வருவதாகக் கூறுவது வரலாறு தெரியாத் தனமாகும்.

தீண்டாமை மனுவில் இருந்து பிறந்தது. இவை இந்தியாவிலேயே நிலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் வாழும் அனைத்து மத மக்களும் மனுவின் மாய வலையில் சிக்கி உள்ளார்கள். இதற்கு தெற்காசிய முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல..

suvanappiriyan said...

//இந்தியப் பெண்கள் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி மகிழ்ச்சியாக இருக்க முடியுமானால் அது அரபிப் பெண்களால் முடியாதா?

மாறாக அரபிப் பெண்களால் கலாச்சார மாற்றத்தை தாங்க முடியாது என்றால் இந்தியப் பெண்கள் என்ன ஆடா, மாடா, தங்களின் கலாச்சார மாற்றத்தை சகித்துக் கொண்டு அரபு நாட்டிலோ, எகிப்திலோ வாழ்வதற்கு?

ஏன் இந்தியப் பெண்களுக்கும், அரபிப் பெண்களுக்கும் இரட்டை ஸ்டாண்டர்ட் வைத்திருக்கிறீர்கள்?//

கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு பெண் தன் நாட்டை விட்டு வெளிநாடுகளில் எதற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்? இங்கு பெண்கள் திருமணம் முடிக்க பல லட்சங்களை வரதட்சணையாக தர வேண்டியிருக்கிறது. மாப்பிள்ளை கிடைப்பது அரிதாகவும் இருக்கிறது.

அரபு நாடுகளில் இந்த நிலைமை இல்லை. பெண்ணை திருமணம் முடிக்க பல லட்சங்களை ஆண்கள் மகராக தர வேண்டும். வீடும் பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். இத்தனை சுகங்களும் அந்த பெண்களுக்கு அரபு நாடுகளில் கிடைப்பது போல் நம் நாட்டில் கிடைக்குமா? திருமணத்துக்கு மஹர் பல லட்சங்கள் தர இந்திய ஆண்கள் தயாராக இருந்தால் சவுதி பெண்களும் மணம் முடிக்க ஆசைப்படுவார்கள். இவை எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்கள். குர்ஆன் வெளி நாட்டு ஆண்களை மணப்பதற்கு தடை செய்யவில்லை என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

மற்ற கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வந்து பதிலளிக்கிறேன்.

suvanappiriyan said...

//தீண்டத்தகாதோரும் பாகிஸ்தானில் இருக்கின்றார்கள். அவர்களை சம்மார், சுரா, பாங்கி என அழைக்கின்றார்கள். அவர்களுக்கு இரட்டைக் குவளை முறையும், இரட்டைத் தட்டு முறையும் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றது. அது மட்டுமின்றி பாகிஸ்தானிய தீண்டத்தகாதோர் பெரும்பாலும் கிருத்தவர்கள் சிலர் இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும் இருக்கின்றார்கள்.//

நாம் வாழும் தமிழ்நாட்டை ஆதாரம் காட்டாமல் பாகிஸ்தானுக்கு ஏன் ஓட வேண்டும்? அதிலும் அங்கு தீண்டாமை கடை பிடிப்பது பெரும்பாலும் கிறித்தவர்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். அதே மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் போது தீண்டாமை படிப்படியாக விலகி சில ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விடுகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது?

ஒரு முஸ்லிம் கட்டாயமாக ஐந்து வேளை பள்ளிவாசலுக்கு சென்று தொழ வேண்டும். எப்படி தொழ வேண்டும்?

'முகமது நபி அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் எங்களின் தோள்களைத் தடவி அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி பார்ப்பார்கள். மேலும் 'நேராக நில்லுங்கள். முன்பின் வேறுபட்டு நிற்காதீர்கள். அப்படி வேறுபட்டு நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும்' என்று சொன்னார்கள்'….

739-அறிவிப்பவர் அபூமஸ்ஊத் அன்சாரி.

முகமது நபி ஒவ்வொரு தொழுகை ஆரம்பத்திலும் 'உங்கள் வரிசைகளை நேராகவும் நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறுவார். இன்றும் தமிழகத்திலும் ஒவ்வொரு பள்ளியிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்த முறையில் புதிதாக இஸ்லாத்துக்கு வந்த தலித்தும், பிராமணரும் அருகருகே நிற்கும் சூழல் ஏற்படும். முதல்நாள் சங்கடப்படும் பிராமணர் வேறு வழியில்லாமல் தலித்தின் தோளோடு உரசி நிற்கும் கட்டாயத்துக்கு உள்ளாகிறார். மேலும் அவருக்கு முன் வரிசையில் ஒரு தலித் நின்றால் தலித் காலின் பாதத்துக்கு அருகில் பிராமணரின் தலை சிறிது இடைவெளியில் இருக்கும். இப்பொழுது அவர் மனதில் நான் நெற்றியில் பிறந்தேன் என்ற எண்ணம் வர வாய்ப்பிருக்கிறதா? ஒருநாளில் ஐந்து வேளை இந்த காரியம் தொடர்ந்து நடைபெறுவதால் அவர் மனதில் இருக்கும் தீண்டாமை அரக்கன் சில நாட்களிலேயே அவரை விட்டு ஓடி விடுகிறான்.

இங்கு சவுதியில் தெருக்களை கூட்டும் பணியில் பங்களாதேஷ் நாட்டவர் வேலை செய்கின்றனர். சில நேரங்களில் யூனிஃபார்மோடு தொழுகைக்கு வந்து விடுவார்கள். தொழுகைக்கு வரும் சவுதிகளுக்கு பக்கத்தில் நிற்க கூச்சப்பட்டுக் கொண்டு சற்று தள்ளி நிற்பார்கள். உடன் சவூதி நாட்டவர் அவரது தோளை பிடித்து இழுத்து தன் தோளோடு உரச வைத்து தொழுகையில் ஈடுபடுவதை தினமும் பார்க்கிறேன். அந்த சவுதி நாட்டவர் இப்படி செய்யவில்லை என்றால் அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்டாது. ஏனெனில் இடைவெளி விட்டு தொழுகையில் நிற்க்கக் கூடாது.

அதேபோல் மெக்காவில் இரண்டு நிமிடத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வரிசையாகவும், நேராகவும், நெருக்கமாகவும் உடன் எப்படி நிற்க முடிகிறது. அதிலும் உலகின் பல நாட்டு மக்கள். பல கலாச்சாரத்துக்கு சொந்தக்காரர்கள். இதை தினமும் நீங்கள் தொலைக்காட்சியில் நேரலையாகவே பார்க்கலாம்.

என் பள்ளி நண்பன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் இன்று அப்துல் அஜீஸாக மாறி எங்கள் ஊரிலேயே பழைய முஸ்லிம் குடும்பத்தில் பெண் எடுத்து இன்று ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறான். இதை முன்பும் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே இஸ்லாமிய வேதத்திலும் தீண்டாமை இல்லை. ஐந்து வேளை தொழுது இஸ்லாமிய கடமைகளை சரிவர கடைபிடிக்கும் இஸ்லாமியர்களிடத்திலும் தீண்டாமை இல்லை.

suvanappiriyan said...

//ஆனால் இன்று உடற்குறைப்பாடு உடைய மதக்குருமார்கள் கிருத்தவத்தில் பலர் பணியாற்றுகின்றனர். இந்நிலை அனைத்து மதங்களிலும் வர வேண்டும். //

நான் வேதத்தில் உள்ளதை எடுத்துக் காட்டினால் 'இப்பொழுது சிறிது சிறிதாக மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்று மழுப்புகிறீர்கள்.

//ஒருவன் பாடுபட்ட விளைச்சலில் ஒருப் பிரிவினை மதக்குருமார்களுக்கு தானமாகக் கொடுக்கும் மரபு அனைத்து சமூகங்களிலும் இருக்கின்றது.//

குர்ஆன் கற்று கொடுக்கும் ஒரு இமாமுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசுவார்கள். ஆனால் கிறித்தவ வேதம் சொல்வது குற்றப்பரிகாரத்துக்கு புரோகிதரிடம் சென்று பொருட்களை தர வேண்டும் என்பது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மெய்யாலுமே உங்களுக்கு விளங்கவில்லையா? :-)

seetha said...

இந்துமதத்தில் சாதீ என்ற தீ இல்லையென யாரும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இவ்வளவு மெனக்கெட்ட்டு எழுதுவானேந். ஆனால் இந்திய முஸ்லீம்களில் இஇல்லை என்ரு சொல்லி சரியான் சப்பஒவாதம் செய்வது பெரிய நகைச்சுவை.இந்துக்கள் அளவு இல்லாமல் இருக்கலாம்.கீழே உள்ள திண்ணை பத்திரிக்கையின் ஒரு பதிவை படிக்கவும்.

------------------------------------------


ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்

நட.சிவகுமார்


அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்...

உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் என்னும் இந் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கின்றன.

சமத்துவத்தை வலியுறுத்தியதில் உலகின் எந்த மதத்திற்கும் இணை சூற முடியாத இடத்தை இஸ்லாம் பெற்றது உண்மையே. ஆனால் இந்தியாவில் இஸ்லாமியரின் வாழ்வியல் நெருக்கடிகள் சச்சார் கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகுதான் பகிங்கரப்படுத்தப்ப்பட்டுள்ளன். இவற்றையெல்லாம் வசதியாக மூடி மறைத்துவிட்டு நாம் சிறுபான்மையினர் நலம் குறித்து விவாதிப்பதில் யாதொரு மேன்மையும் இருக்க முடியாது.

வடமாநிலங்களில் அஷ்ரப்கள், அரபுப் பூர்வீக அடையாளத்துடன் உயர்ஜாதி அந்தஸ்து பெறுகின்றனர்.அஜ்லப்கள் எனப்படுவோர் இந்துக்களிலிருந்து மதம் மாறிய காரணத்தால் கீழ்நிலையினர் என்று ஒதுக்கப்படுகின்றனர்.அர்சால்கள் இன்னும் பல படிநிலைக்கு கீழே பரிதவிக்கின்றனர்.காரணம் இவர்கள் தலித்துகளாயிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள். தமிழகத்தில் உருது மொழி பெசுகின்ற முஸ்லிம்கள் நீங்கலாக தமிழ்முஸ்லிம்களிடையே ராவுத்தர், லெப்பை,மரைக்காயர் ,ஒஸா என்று பல பிரிவினர் ஏற்றத்தாழ்வுகளில் உழல்கின்றனர்.

வாழ்வாதாரங்கள் ஏதுமின்றி விளிம்புநிலையினராக இருக்கின்ற ஏழை முஸ்லிம்களாக பாவித்து அரசின் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெற்றுத் தருவதற்கு தடையாக இருப்பவர்கள் முஸ்லிம் மதத்தின் காவலர்களேயாவர்.பட்டினியால் கிடந்து செத்தாலும் தலித் முத்திரை மட்டும் விழாமல் பாதுகாப்பதற்கு பெயர்தான் மதாபிமானம் போலும்.

தமிழின் தலைசிறந்த சீர்திருத்தவாதி தந்தை பெரியார் இஸ்லாத்தை நேசித்துத் தழுவுவதற்கு ஏற்றமதமென டக்டர் அம்பேத்கருக்கு சிபாரிசு செய்ததும் பிறகு பெரியாரின் சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டதும் அம்பேத்கர் இறுதியில் பெளத்தம் போய் சேர்ந்ததுமெஅதனால் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதும் நம் கடமையாகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரபுப் பாலைவனச் சூழலுக்கேற்ப இயற்றப்பட்ட சட்டங்களை இன்றளவும்நடைமுறைப்படுத்தத்துடிக்கிறது அடிப்படைவாதக் குழு.மெளனமாகத்தான் நாம் இதற்கான எதிர்வினைகளை புரிய வேண்டியிருக்கிறது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எண்ணற்ற ஆதாரங்களுடன் இந்நூலில் தலித் முஸ்லிம்கள் குறித்த உரையாடல்களை மனத்தடைகளின்றி நிகழ்த்துகிறார்.தெளிவும் மறுசிந்தனையும் தீர்வும் கோரி அவை நம்முன் நிற்கின்றன.எனினும் எல்லாவற்றையும் கடந்த சமத்துவத்திற்கான மக்கள் போராட்டமே இன்றைய தேவை.

suvanappiriyan said...

சீதா!

//இந்துக்கள் அளவு இல்லாமல் இருக்கலாம்.//

அதைத்தான் இந்த பதிவிலே நான் சொல்ல வந்தது. உண்மையிலேயே இஸ்லாத்தில் எங்காவது தீண்டாமை தென்படுவதை ஒருவர் பார்க்கிறார். உடன் அவர் என்ன செய்ய வேண்டும். 'இஸ்லாம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை. தீண்டாமை பாராட்டுவது இஸ்லாத்தில் பாவம்' என்று சொல்லி அந்த பாமர முஸ்லிமை திருத்த முயல வேண்டும். அதுதான் அறிவாளிகளின் செயல். எல்லா மதத்திலும் சாதி இருக்கிறது. இஸ்லாத்தில் மட்டும் இல்லையே என்ற வேகத்தில் இஸ்லாம் வெறுக்கும் வர்ணாசிரமத்தை இஸ்லாத்துக்குள் புகுத்த எவரும் திட்டமிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்போம்.

எந்த தலித்தாவது இஸ்லாத்துக்கு வந்து பின்னும் நான் தலித் முத்திரையோடுதான் இருப்பேன் என்று எவராவது கொடி பிடித்தால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு தாய் மதத்துக்கே திரும்பி விடட்டும். அவர்கள் செல்வதால் இஸ்லாத்துக்கு எந்த நட்டமும் இல்லை. ஏனெனில் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் ஒருவருக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

//சமத்துவத்தை வலியுறுத்தியதில் உலகின் எந்த மதத்திற்கும் இணை சூற முடியாத இடத்தை இஸ்லாம் பெற்றது உண்மையே. ஆனால் இந்தியாவில் இஸ்லாமியரின் வாழ்வியல் நெருக்கடிகள் சச்சார் கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகுதான் பகிங்கரப்படுத்தப்ப்பட்டுள்ளன். இவற்றையெல்லாம் வசதியாக மூடி மறைத்துவிட்டு நாம் சிறுபான்மையினர் நலம் குறித்து விவாதிப்பதில் யாதொரு மேன்மையும் இருக்க முடியாது. //

அதற்க்குத்தான் 3.5 சதவீத ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு பத்தாது. அதை அதிகப்படுத்தி 5 சதமாக மாற்ற வேண்டும் என்று கருணாநிதியிடமும், ஜெயலலிதாவிடமும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. சொன்னது படி செயல்பட்டால் இன்னும் 20 வருடத்தில் முழு எழுத்தறிவு பெற்ற சமூகமாக இஸ்லாமிய சமூகம் மாறும். மதம் மாறிய முஸ்லிம்களின் நிலையும் உயரும்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

இறைவனின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,
சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு தங்களுடைய பதிவு மிகவும் அருமை அல்ஹம்துலில்லாஹ்.எங்கள் ஊரிலும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது.எங்களுடைய ஊர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி.எங்கள் ஊரில் ரொம்ப நாட்களாக வாலிபர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்து தங்கி பிச்சை எடுப்பது பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குவது போன்றவற்றை செய்து கொண்டிருந்தார்.அவர் ஒரு மாற்று மதத்தை சார்ந்தவர்.அவரை நிறைய நாட்கள் நான் பார்த்திருக்கிறேன்.அவரை பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.குளிக்கவேமாட்டார் துணிகள் அதிகமாக அழுக்குற்று இருக்கும்.அவர் பக்கத்தில் சென்றாலே பயங்கர துர்நாற்றம் அடிக்கும்.அவரை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்.சில தினங்கள் கலித்து அவரை சந்தித்தேன்,அதிர்ச்சியுற்றேன்.அவர் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.அவரை நான் சந்தித்த இடம் பள்ளிவாசலில்.என்தோளோடு தோல் நின்று ஜூம்மா தொழுகை தொழுதார்.தொழுகை முடிந்ததும் நானும் எனது நண்பர்களும் அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தோம்.சுன்னத் தொழுகை தொழுதுவிட்டு சென்றார். இப்பொழுது அவர் எங்கள் ஊரிலேயே பண்டாரி வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து சந்தோசமாகவும், சுத்தமாகவும் வாழ்கிறார்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்!

//அவர் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.அவரை நான் சந்தித்த இடம் பள்ளிவாசலில்.என்தோளோடு தோல் நின்று ஜூம்மா தொழுகை தொழுதார்.தொழுகை முடிந்ததும் நானும் எனது நண்பர்களும் அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தோம்.//

இது தான் இஸ்லாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!