தம்மாம், அல்கோபாரில் சவுதி அராம்கோ கம்பெனியில் வேலை பார்த்து வருபவர் மனால் அல் செரீஃப். வயது 32. தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார். படித்த பெண் என்பதால் பல நாடுகளுக்கும் சென்றவர் துபாய் லைசென்ஸும் வைத்துள்ளார். இவர் செய்த குற்றம் பொது இடத்தில் காரை ஓட்டிச் சென்றது. சவுதி அரேபிய சட்டப்படி பெண்கள் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். இதை மீறியதால் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.
பின்னர் மன்னர் அப்துல்லாவுக்கு 'நான் நமது நாட்டு சட்டதிட்டத்தின் படி நடப்பேன்.' என்று கடிதம் எழுதியதாலும், மனால் அல் சரீஃபின் வக்கீல் தனது கட்சிகாரருக்காக வாதாடியதாலும் விடுவிக்கப்பட்டார்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண்களை கொடுமை படுத்துவதாக இந்த செய்தி தோன்றும். பெண்கள் தனிமையில் காரோட்டிச் செல்லும்போது உலகம் முழுவதும் பல தவறுகள் நடைபெறுகிறது. நம் நாட்டிலேயே தனியாக செல்லும் பெண்களை வம்புக்கிழுப்பவர்களை பத்திரிக்கைகளில் தினமும் பார்க்கிறோம். இங்கு சவுதியில் மற்ற நாடுகளைப் போல் விபசார விடுதிகள் கிடையாது. எனவே தனியே காரில் செல்லும் பெண்களை கடத்திச் செல்லும் வாய்ப்பு அதிகம் உண்டு. பெண்ணின் அனுமதி இல்லாமல் கற்பழிப்புகளும் நடக்கும். இதை எல்லாம் அனுசரித்தே அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். சவுதி வீடுகளில் 70 சதவீதமான பேர் வீட்டு டிரைவர்களை வைத்துள்ளனர். இந்திய டிரைவர்களுக்குத்தான் மவுசு அதிகம். பெண்கள் கார் ஓட்ட அனுமதித்து விட்டால் அனைத்து வீட்டு டிரைவர்களும் இந்தியா திரும்ப வேண்டியதுதான். ஏனெனில் அவர்களின் தேவை அப்போது இங்கு அவசியம் இல்லை. இது ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் திணரும் நமது நாட்டுக்கு மற்றொரு சுமையாக வந்து அமையும். லட்சக் கணக்கில் இங்கு சவுதி வீடுகளில் நமது நாட்டவர் டிரைவராக வேலை பார்க்கின்றனர். அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.
சவுதி அரசு பெண்களின் முன்னேற்றத்தில் எந்த தடையும் போடவில்லை. ஆண்களை விட பெண்களே கல்லூரிப் படிப்பை முடிப்பதில் முதலிடத்தில் உள்ளனர். அலுவலக வேலைகள் பார்ப்பதிலும், ஆசிரியை தொழிலை பார்ப்பதிலும் ஆர்வத்துடன் உள்ளனர். உலகிலேயே மிகப் பெரும் பெண்கள் பல்கலைக்கழகமும் சவுதி அரசுதான் உண்டாக்கியுள்ளது. அந்த பெண்களின் பாதுகாப்பும், இஸ்லாமிய சட்டத்துக்கு பாதகம் வராமல் இருப்பதும் இங்கு முக்கியத்துவப் படுத்தப் படுகிறது.
உள்துறை இணை மந்திரி அஹ்மத் 'பெண்கள் கார் ஓட்டுவது 1990 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் தடை செய்யப்பட்டது. இது தவறா சரியா என்று விவாதிப்பது நமது வேலையல்ல. அரசின் சட்டத்தை நாம் மீறுவது தவறாகும்' என்கிறார்.
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4:32
தகவல் உதவி: அரப் நியுஸ்
28 comments:
ஒரு சவூதி மதகுரு எளிய தீர்வு சொன்னாரே. அதைப் பின்பற்றலாமே?
சுவூதிப் பெண் ஒருவர் சேலஞ்சர் விண்கலத்தை இயக்கினாலும் அவர் ஏர்போர்ட்டுக்கு காரில் செல்ல முடியாது.
கருணாநிதிக்கு ஒரு சின்னக்குத்தூசி போல சவூதி/குரானிற்கு ஒரு சுவனப்பிரியன்.
லாஜிக் இன்னும் உதைக்கத்தான் செய்யுது.
kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/
பாஸ், மேற்குலகில் பெண்கள் கார் ஓட்டுகிறார்களே, ஏன் எமது இலங்கையிலும் பெண்கள் கார் ஓட்டுகிறார்களே.
பெண்கள் கார் ஓட்டுவதால் விபத்துக்கள் நேரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. மைனஸ் ஓட்டு நான் போடலை மாப்பு. பிளஸ் ஓட்டுத் தான் நான் போட்டேன்.
நிரூபன்!
//பாஸ், மேற்குலகில் பெண்கள் கார் ஓட்டுகிறார்களே, ஏன் எமது இலங்கையிலும் பெண்கள் கார் ஓட்டுகிறார்களே.
பெண்கள் கார் ஓட்டுவதால் விபத்துக்கள் நேரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. //
விபத்துகள் இங்கு முதன்மைப் படுத்தப் படவில்லை. பெண்களின் பாதுகாப்பைக் கருதியே சவுதி அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
//மைனஸ் ஓட்டு நான் போடலை மாப்பு. பிளஸ் ஓட்டுத் தான் நான் போட்டேன்.//
ஹா...ஹா...ஹா...
நன்றி!
கண்ணன்!
//லாஜிக் இன்னும் உதைக்கத்தான் செய்யுது.//
இந்த சட்டத்தில் எனக்கும் முழு உடன்பாடில்லை. இஸ்லாம் பெண்கள் கார் ஓட்டுவதை நேரிடையாக தடுக்கவும் இல்லை. பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்களின் பாதுகாப்பை முதன்மைபடுத்தி இருக்க வேண்டும். பெண்கள் தனியாக கார் ஓட்டுவதில் அவர்களின் பெண்மைக்கு எந்த பாதகமும் வராது என்ற நிலை வந்தால் எந்த ஆட்சேபனையும் இல்லை.
கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?
அனானி!
//கருணாநிதிக்கு ஒரு சின்னக்குத்தூசி போல சவூதி/குரானிற்கு ஒரு சுவனப்பிரியன்.//
ஒரு சம்பவத்தில் உள்ள சாதக பாதகங்களை அலசிப் பார்ப்பதில் என்ன தவறு நண்பரே!
பெண்கள் விஷயத்தில் நம்மை விட இந்த அரபுகள் கொஞ்சம் பலகீனமானவர்கள். அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அனுசரித்தே ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.
இது தான் இந்த பிரச்னைக்கே மூல காரணம்.
பெண்ணின் அனுமதி இல்லாமல் கற்பழிப்புகளும் நடக்கும்.
இதற்கு அனுமதி வேறு உண்டா? :-)
பெண் குறித்த எந்த விசயத்திலும் பச்சையாக சொன்னால் செக்ஸ் தான் முன்னிலை படுத்த படுகிறது., அதற்க்கு எந்த மத / சமூக விளக்கமும் சும்பிளிக்கி பிப்பாங்கிதான் ., இதற்குரிய உங்களால் புரிந்து கொள்ளமுடியாத விளக்கங்கள் அடங்கிய இடுக்கை இன்சா அல்லாஹ் நாளை தொடருகிறேன்., பார்க்கலாம் என்ன சொல்கிறார்கள் என்று
//பெண்ணின் அனுமதி இல்லாமல் கற்பழிப்புகளும் நடக்கும்.
இதற்கு அனுமதி வேறு உண்டா? :-)//
திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபடுவதை விபச்சாரம் என்கிறோம். ஒருவரின் விருப்பத்துக்காக மற்றவரின் விருப்பமில்லாமல் அதே செயலை செய்யும் போது கற்பழிப்பு என்கிறோம்.
ஷர்புதீன்!
//இதற்குரிய உங்களால் புரிந்து கொள்ளமுடியாத விளக்கங்கள் அடங்கிய இடுக்கை இன்சா அல்லாஹ் நாளை தொடருகிறேன்., //
எதையுமே வித்தியாசமாக சிந்திப்பவர். உங்களின் கருத்து சும்பிளிக்கி பிப்பாங்கியாக இல்லாமல் அறிவுபூர்வமாக இருக்கட்டுமாக!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நமது நாட்டைப்போல் சவூதியில் அடுத்தடுத்து ஊர்கள் கிடையாது. இரு ஊர்களுக்கிடையில் பல கிலோமீட்டர் தூரம் பாலைவனம் தான். பெண்கள் வாகனம் ஓட்டும்போது இடையில் வாகனம் பழுதாகி நின்று விட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காததற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இக்பால் செல்வன்!
//முதலில் இதனை என்னால் கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஒரு மதப் புத்தகத்தில் கூறிவிட்டதால் ஆண்கள் - பெண்களை விட உயர்வானவர்களாகி விடுவார்களா ?//
என்னதான் நாம் சமத்துவம் பேசினாலும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒரே அளவு கோலை பல இடங்களில் நாம் கடை பிடிப்பதில்லை. மேலாடை இல்லாமல் ஆண்களாகிய நாம் சுதந்திரமாக வர முடியும். அதே அளவு கோளோடு பெண்களும் வெளியில் வர முடியுமா? நாம் அனுமதிக்க மாட்டோம். மூட்டை தூக்குதல், பாரங்களை இழுத்தல் போன்ற உடல் சார்ந்த வேலைகளை நாம் பெண்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் உடல் மென்மையானது. ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும்.
//குர்-ஆனில் பெண்கள் கார் ஓட்டக் கூடாது என சொல்லி இருக்கா ? //
இல்லை. பெண்களின் பாதுகாப்பு கருதியே சவுதி அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாராளமாக அனுமதிக்கலாம்.
// கல்வி, நல்ல வேலை, கோயில் உரிமை என அனைத்தும் பிரமாணருக்கு இறைவன் கொடுத்துள்ளார் என இந்து தீவிரவாதிகள் சொன்னால் ஏற்க முடியுமா ? இல்லை சகோதரர் ஏற்றுக் கொள்வாரா ? அது எப்படி மனிதனுக்கு மனிதன் வேறுபாடு பார்க்கக் கூடாது, அனைவரும் சமம் என்கின்றீர்களா? //
ஐயா....ஆண் என்ற ஒரு இனத்திலேயே ஒரு மதத்திலேயே மனிதர்களை பிரிப்பதற்கும் உடல் ரீதியாக பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்துவதற்க்கும் உள்ள வேற்றுமையை விளங்கியும் மறுப்பது ஏன்?
சகோ மஸ்தூக்கா!
//நமது நாட்டைப்போல் சவூதியில் அடுத்தடுத்து ஊர்கள் கிடையாது. இரு ஊர்களுக்கிடையில் பல கிலோமீட்டர் தூரம் பாலைவனம் தான். பெண்கள் வாகனம் ஓட்டும்போது இடையில் வாகனம் பழுதாகி நின்று விட்டால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காததற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.//
நீங்கள் சொல்லும் காரணமும் ஏற்கக் கூடியதாகவே இருக்கிறது. 'பெண் உரிமை' 'பெண் உரிமை' என்று கோஷம் போட்டு பெண்களுக்கு அதிக சிரமத்தைத்தான் பெண் ஆர்வலர்கள் தருவித்துக் கொடுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் இதனால் பாதிப்படைந்தால் கழுவிய மீனில் நழுவிய மீனாக ஓடிவிடுவார்கள். 'பெண் விடுதலை' என்ற பெயரில் தலைநகர் டெல்லியிலும் சென்னை போன்ற நகரங்களிலும் நடக்கும் கூத்துகள் தினம் பத்திரிக்கையில் படிக்கிறோம்.
அனானி!
ஆபாசமான பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. எந்த ஒரு குற்றச்சாட்டை சொன்னாலும் 'யார் சொன்னது? எந்த புத்தகத்தில் படித்தீர்கள்?' என்ற விபரத்தோடு சொன்னால் குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இந்த இடுகைக்கு அரப் நியூஸில் வந்த சில பின்னூட்டங்கள்:
SALEH AL QAHTANI
May 31, 2011 12:02
This is rebellious nature. First, you rebel against your parent. Then your husband. Then government. This should not be allowed. Everyone must obey the rule of law. Or harsh punishment should be given.
This push of "women-driving" is coming strongly from the western power. I have worked in a automobile company in Saudi Arabia. And I can say here, with Allah being my witness, how the foreign auto manufacturers are keen about two things -
1) Getting the Saudi Women to drive a car
2)Spreading the insurance industry, just like its in the West.
they have already spread the finance and lease schemes where Saudis happily pay interest without really knowing it. But they all are committing War Against Allah. And Saudi scholars do not have guts to talk about the issue.
Similar is the issue about women driving. The West wants to increase their sales in the Gulf region. More than 70% of the population of Gulf are 18-35 yr old males and females. Since females are 50% of the population, the West has their eyes set on our females. Once they are given permission to drive, they will start buying cars and the sales will go up. Each household will have atleast 2 cars.
And then, the family structure will start to break too, just like West. No more family dinners and family get togethers. Daughters will go wherever they want.
If your elderly and wise have any wisdom left, stop this evil to enter into your society. Deal with it harshly, just like Sayyadna Abu Bakr dealt with the tribe that refused to pay Jizya to the Muslim Empire.
SUJEER
May 31, 2011 12:19
I really adhere to the words of Saleh. This agenta really propgated by westerners esapecially western media, many popular western new pepers purposefully reported the news in highlighted. We should realise the western hidden agenta.
ABDUL
May 31, 2011 12:20
That was an awesome explanation from Mr. Saleh. You are exactly right in a way. The west is always have some hidden agenda behind every of their moves against the middle east.
MMMMM
May 31, 2011 12:37
sisters plz keep atleast haramain free from bad evil doings ur country is an ideal for muslims all over the world and we love and respect ur country somuch . because of our sacred places . may allahtala reward king abdullah for keeping this country free from bad acts may allahtala gives u longlife with strong health . many thanks to u
SALMAAN
May 31, 2011 12:37
we shall must follow the rules & regulation of Muslim Country. in whole world there is lot of controvertial problem except KSA. iF YOU THINK ABOUT ISLAM THEN ALLAH WILL THINK ABUOT U.
KHAN
May 31, 2011 12:37
Manal Al-Sharif ! great people are those who spent their lives for constructive works. Do you think that women,s driving in the kingdom is the only and big issue ?
Allah Almighty awarded you many qualities. Please spent those qualities to get education and also invite the others. Get involve yourself to solve the social and economical problems of poor and needy peoples.
Thanks GOD.( Alhamdolillah ) Allah Almighty blessed you peaceful and prosperous country, GOD fearing ruler, plenty of chances to go forward in every field of life.
Peoples from all our the world are taking benefits from KINGDOM. This is your country. You should have to serve your country and take benefits.
If you have time. Please watch " EMPOWERED WOMEN " on Saudi Channel 2. English channel of Saudi Arabia. InshaAllah you will be benifitted.
AYAAN
Jun 1, 2011 09:35
Let women drive, basically like in west, In Saudi also rape, Abduction accident's & Adultery will increase rapid the first effect would be on Traffic congestion. To all My West Expats You better know apart from Basic needs what women do in your home country no need for me to explain about multiple affairs.
ABDULHAQQ
Jun 1, 2011 13:33
Why do women want to make their lives more complicated? dealing with mechanics, car insurance, the tremendous stress of driving in this country, subhanAllah, how it has changed so many people. The first day I got my car here I got my first white hair. Do you see any drivers smiling in their cars? No, most are frowning and angry looking. Why do you want that for yourselves? Why don't you like being escorted like queens and princesses!? Shaytaan beautifies for them what others have and makes them ungrateful to Allah for what He has provided them with. Allah says in chapter 4 (about Women's rights ironically) what means "And do not wish/desire what others have that Allah has favored them with to excel in over others; for men is the bounty they and earned, and for women is the bounty they have earned; and ask, all of you, from Allah's favor..." ayah 32. The disbelieving women in the West only DREAM they could be escorted everywhere like royalty, and their jealousy is to take that reality away that from a people whom they look down on as being inferior and hate and despise and wish to wipe out. Wake up Muslim ummah!
@ சுவனப் பிரியன் - தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள். தங்களின் கூற்றுப்படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல்கூறுகள் வேறுபட்டவைதான். ஆணோ, பெண்ணோ தமது பாலுற்றுப்புகளை மறைத்தே வாழ்வது தான் நாகரிக உலகம். பெண்ணின் முலைகள் பாலுறுப்பாக எண்ணப்படாத சற்றே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அவை மறைக்கப்படவில்லை.
ஆனால் அது பாலுறவின் பங்காக மாறியதால் அவை மறைக்கப்பட வேண்டியதாயிற்று.
ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்கள் செய்ய முடியாது. பெண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்ய முடியாது. முடியாது என்பதால் ஒருவர் மற்றவரை விட தாழ்ந்துவிடுவாரா?
அது நிற்க. ஒரு பெண்ணால் கார் செலுத்த முடியாதா ? இல்லை பெண் பலவீனமானவள் கார் செலுத்த முடியாது என்றால் ஏற்றுக் கொள்ளலாம் ...ஆனால் யதார்த்ததில் அப்படியான சூழல் இல்லை ... சப்பைக் கட்டுக் காரணங்களால் ஒரு பெண்ணின் தார்மீக உரிமை சவூதியில் பறிக்கப்பட்டுள்ளது இது தான் உண்மை. இதனை நீங்கள் நியாயப்படுத்தியது தான் மேலும் வேதனைக்குறியது சகோ.
பெண்ணால் உடல் ரீதியாக செய்ய முடியாது எனில் யாரும் அதனை செய்ய வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் முடியும் என்று தெரிந்து தடுப்பது எவ்வகை நியாயம். யோசியுங்கள் சகோதரரே ... புரிந்துக் கொள்வீர்கள் ...
குர்-ஆனில் சொன்னவற்றை கைக் கொள்வது ஒரு முஸலிமானின் கடமைதான். ஆனால் குரானில் சொன்னவற்றைத் தான் செய்வேன் எனக் கூறுவதும், அல்லது சொல்லாததை செய்யக் கூடாது எனக் கூறுவதும் - அறமாகப் படவில்லை ..
பதிவுலகில் இருப்போரே எந்த ஊரு நியாயம் இது ?
பாதுகாப்புகாக கார் ஓட்ட அனுமதிக்காவிடில் நகருக்குள் பஸ் ஓட்ட அனுமதிக்கலாமே. சிங்கப்பூரில் பெண்களெல்லாம் சூப்பராக பேருந்து ஓட்டுவார்கள்.
அனானி!
//this is stupid and an insult to ISLAM and muslim women.
That narration and condition from the prophet are only for BABIES....NOT ADULT MEN!!!!//
//I can't believe that there idiots that still do not understand islamic principles.//
இஸ்லாத்தை விளங்காத ஒரு சில அரை குறை அறிஞர்கள் கொடுக்கும் ஃபத்வாக்கள் குப்பைக் கூடைக்கே செல்லும். இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதாக இருந்தால் குர்ஆனிலிருந்து 'இந்த வசனம் இப்படி சொல்கிறது' என்றால்தான் அது இஸ்லாத்திற்குள் வரும். எனவே மூடத்தனமான அந்த அறிஞர்களின் அறிவிப்பு வழக்கம் போல் குப்பைக் கூடைக்கே செல்லும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
கோவிக் கண்ணன்!
//பாதுகாப்புகாக கார் ஓட்ட அனுமதிக்காவிடில் நகருக்குள் பஸ் ஓட்ட அனுமதிக்கலாமே. சிங்கப்பூரில் பெண்களெல்லாம் சூப்பராக பேருந்து ஓட்டுவார்கள்.//
சில நாட்களில் நீங்கள் சொல்வது போன்ற நிலை வந்தாலும் வரலாம். ஏனெனில் அனைத்து வேலைகளுக்கும் இன்று பெண்களும் போட்டிக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்களே படிப்பை முடிப்பதில் முன்னணியில் உள்ளார்கள். தடை பரிசீலனையில் உள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்ஷத்தில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப் படலாம்.
என்னை பொறுத்தவரை முட்டாள்தனமான அரசின் முட்டாள் நடவடிக்கை அதை ஆதரிக்கும் உங்களின் பதிவின் கருத்துக்களை நான் என்னவென்று சொல்வது?
நான் முன்பே பெண்கள் கார் ஓட்டுவதற்கு குர்ஆன் எந்த தடையும் போடவில்லை என்று தெளிவாக்கியிருக்கிறேன்.
முதலில் சவுதியின் சாலை அமைப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டை விட பரப்பளவில் கொஞ்சம் பெரியது சவுதி அரேபியா. அதன் மக்கள் தொகை தமிழகத்தையும் ஆந்திராவையும் சேர்த்தால் என்ன வருமோ அவ்வளவுதான். உதாரணத்திற்கு நீங்கள் ரியாத்திலிருந்து கஸீம் நகருக்கு பயணிக்கிறீர்கள். இரு ஊர்களுக்கிடையில் 350 கிலோ மீட்டர் தூரம். இடையில் மனித நடமாட்டம் உள்ளதாக நான்கு ஐந்து சிறிய ஊர்கள் வரும். இடைப்பட்ட சாலைகள் இரு புறமும் வெறும் மணல் திட்டுகள்தான். முன்பு தனியாக வரும் டிரெய்லர்களை மடக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் இருந்தது. சில நேரங்களில் ஓட்டுனர்களை கொலை செய்தும் விடுவார்கள் கொள்ளையர்கள்.
சவுதி அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது இந்த பிரச்னை. மப்ஃடியில் போலீஸார் பல நாள் காத்திருந்து அந்த ஆப்ரிக்க கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர். பல கொலைகள் செய்த அந்த கொள்ளையர்களை சிரச்சேதம் செய்து சாலையின் இரு மருங்கிலும் உடலை கட்டி தொங்க விட்டது சவுதி அரசு. அதன் பிறகு கொலையும் கொள்ளையும் நின்றது. ஆள் அரவம் இல்லாத இந்த பாலைவனப் பகுதிகள் சமூக விரோதிகளுக்கு மிக வசதியாக இருக்கிறது.
ஆண்களாகிய நாங்களே இரவு நேரங்களில் தனியே டிரைவ் செய்து வருவதற்கு பயப்படுவோம். இந்த நிலையில் பெண்களுக்கும் தனியே அனுமதி கொடுத்தால் பல தவறுகள் நடக்க அதுவே காரணமாகி விடும். வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கையாகவே பெண்கள் வாகனம் ஓட்டுவதை அரசு தடுக்கிறது. இதனால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
முகமது நபி வாழ்ந்து மறைந்த ஊர். கஃபா அமைந்துள்ள நாடு. மக்கா மதினா என்ற இரண்டு புனித இடங்களை தன்னகத்தே கொண்ட நாடு. வருடம் ஒரு முறை உலக முஸ்லிம்கள் 30 லட்சம் பேர் வருகை தரும் புனித மண். எனவே இந்த ஊருக்கென்று சில பிரத்யேக மரியாதை உண்டு. அதற்கு பங்கம் வராமல்தான் சட்டங்களை இயற்ற முடியும்.
பெண் கல்வி, பெண்களின் வேலை இதிலெல்லாம் சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. பெண்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சிறந்தே இங்கு விளங்குகிறார்கள்.
பெண் விடுதலை என்று ஓவராக நாம் போனதால்தான் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டதை பத்திரிக்கைகளில் படித்தோம். இன்பத்தை இருவருமே அனுபவித்தனர். பாவம் ஆனால் அந்த பெண் பாவத்தை சுமந்து பள்ளியில் பிரசவம் பார்த்து இன்று மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். சம்பந்தப்பட்ட அந்த ஆணோ ஹாய்யாக வெளியில் சுற்றித் திரிகிறான். இதுதான் பெண் விடுதலையா!
// எனவே தனியே காரில் செல்லும் பெண்களை கடத்திச் செல்லும் வாய்ப்பு அதிகம் உண்டு. பெண்ணின் அனுமதி இல்லாமல் கற்பழிப்புகளும் நடக்கும். இதை எல்லாம் அனுசரித்தே அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது//
எல்லோரும் ஏற்கனவே கேட்டதுதான்.
1. பெண்களுக்கு ஏன் கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்கக்கூடாது?
2. பெண்களை ஏன் நகரத்துக்குள் கார் ஓட்ட அனுமதிக்கக் கூடாது?
3. அமெரிக்கா போல ஏன் ஹைவே
பேட்ரல் அணியை உருவாக்கி பாதுகாப்புத் தரக் கூடாது?
4. 350 கி.மி தூரம் உள்ள இடங்களுக்கு ஏன் பேருந்துப் போக்குவரத்தை சவூதி அரசே நடத்தக்கூடாது?
5. சவூதியில் எல்லா ஆண்களும் காம வெறி பிடித்த மிருகங்களா? இது அங்குள்ள ஆண்களைக் கேவலப்படுத்தவில்லையா? இதை எல்லா ஆண்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?
6. சவூதியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கடும் தண்டனைகள் இருந்தும் (இருக்கிறதா?) ஆண்கள் ஏன் குற்றங்கள் செய்கிறார்கள் என யோசித்தீர்களா?
7. சவூதியில் ஆண்கள் அந்தக் காலத்திலிருந்தே இப்படிப் பெண்களுக்காக அலைவார்களா? ஏக இறைவன் ஒழுக்கத்தை போதித்தும் ஆண்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?
இன்னும் எவ்வளவோ கேட்கலாம்தான்....
பாவம் ஆனால் அந்த பெண் பாவத்தை சுமந்து பள்ளியில் பிரசவம் பார்த்து இன்று மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். சம்பந்தப்பட்ட அந்த ஆணோ ஹாய்யாக வெளியில் சுற்றித் திரிகிறான். இதுதான் பெண் விடுதலையா!
இதுக்கும் பெண் காரோட்டுவதற்கும் என்ன சம்பந்தமோ?
//பல ஆபிரிக்க tribal cultures இல் இன்னும் பெண்கள் மேலாடை இல்லாமலே எல்லா இடமும் போகிறார்கள். அவ்வாறான இடங்களில் பாலியல் வன்புணர்வுகள் குறிப்பிட்டளவு கூடுதலாக நடப்பதில்லை.//
அப்படியானால் பெண்ணாகிய அனலிஸ்ட் இந்த வழக்கத்தை நம் நாட்டிலும் கொண்டு வர போராடுவாரா?
//பெண் விடுதலை என்று ஓவராக நாம் போனதால்தான் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டதை பத்திரிக்கைகளில் படித்தோம்.//
//அதுக்கும் செளதி பெண்ணடிமைக்கும் ஏன் முடிச்சு ?..//
பெண்களை ஆண்களோடு சுதந்திரமாக பழக விட்டதன் பலனை அந்த பெண் அனுபவிக்கிறாள். பெண்கள் தனியே கார் ஓட்டி செல்லும் போது ஆணகளை தனியாக சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பல தவறுகள் நடக்கவும் ஏதுவாகும். முடிவில் பெண்ணே பாதிக்கப்படுவாள்.
//இந்திய பரப்பளவு= 3,287,263 km2 (7th in the world)
சவுதி பரப்பளவு= 2,149,690km2 (14th in the world)//
பல வேலைகளுக்கு மத்தியில் பதிவு எழுதுகிறோம். தோராயமாக நான் நினைத்திருந்த ஒரு அளவில் எழுதினேன். இதற்காக கூகுளில் சென்று தகவலை சரியாக தந்ததற்கு சார்வாகனுக்கு நன்றி!
//ரியாத்துக்கு உள்ளே, நகருக்கு உள்ளே பெண்கள் வாகனம் செலுத்த அனுமதிக்கலாமே.. மக்கள் நெருக்கமும், காவல்துறை கண்காணிப்பு இருக்கின்றது அல்லவா? அதே போல அனைத்து பெரிய நகரங்களுக்குள்ளும் வாகனம் செலுத்த அனுமதிக்கலாமே ?//
இந்த கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கிறது. கூடிய விரைவில் தகுந்த பாதுகாப்போடு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.
//இந்த விசயத்தை ஒரு நாட்டின் சட்டமாக பார்க்கவேண்டுமே தவிர இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இஸ்லாமியர்களும் சரி இஸ்லாம் அல்லாதவர்களும் (இஸ்லாமிய கண்ணோட்டத்தில்) பார்ப்பது தவறு.//
ராஜ வம்சம் இந்த பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்.
//3. அமெரிக்கா போல ஏன் ஹைவே
பேட்ரல் அணியை உருவாக்கி பாதுகாப்புத் தரக் கூடாது? //
இனி அரசு முயற்ச்சிக்கலாம்.
//4. 350 கி.மி தூரம் உள்ள இடங்களுக்கு ஏன் பேருந்துப் போக்குவரத்தை சவூதி அரசே நடத்தக்கூடாது?//
அரசு சொகுசு பேரூந்துகளை நடத்துகிறது.
//5. சவூதியில் எல்லா ஆண்களும் காம வெறி பிடித்த மிருகங்களா? இது அங்குள்ள ஆண்களைக் கேவலப்படுத்தவில்லையா? இதை எல்லா ஆண்களும் ஏற்றுக் கொள்கிறார்களா?//
சவுதி ஆண்கள் மட்டும் அல்ல. உலகில் உள்ள எல்லா ஆண்களுமே தனிமை கிடைத்தால் இந்த விஷயத்தில் சபலப்படுபவர்களே!
கோவிக் கண்ணன்!
//இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம்.//
அடடா... குர்ஆன் இறங்கியது தினந்தோறும் ஓதி பாராயணம் பண்ணுவதற்கல்ல கண்ணன்! அதன் சட்டங்களை நமது வாழ்வில் கூடிய வரை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ள பல சேனல்களையும் பார்க்கிறோம். இடையில் இது போன்ற ஒன்றிரண்டு சேனல்கள் பக்கமும் போவது உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவே!
//இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.//
குர்ஆனின் சட்டத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உங்களுக்கும் நித்திய கன்னிகைகள் கிடைக்கலாம். இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.
//மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.//
கோவிக் கண்ணன் என்னதான் வேதங்களை கரைத்து குடித்தாலும் மேன் மக்கள் ஆகமுடியாது என்பது சோவின்(இந்து மதத்தின்) வாதம். ஒரே இனமான ஆண் இனத்திலேயே நெற்றியில், காலில் பிறந்ததாக சோ கதையளப்பார்.
ஆனால் உடல் ரீதியாக பல மாறுபாடுகளை கொண்ட ஆண் இனமும் பெண் இனமும் சமமாக முடியாது என்று இஸ்லாம் கூறுவது அறிவியல் பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
இதனால் பெண்களை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை.
'அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187
'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.'
-குர்ஆன் 2:228
//கோவிக் கண்ணன் என்னதான் வேதங்களை கரைத்து குடித்தாலும் மேன் மக்கள் ஆகமுடியாது என்பது சோவின்(இந்து மதத்தின்) வாதம்.//
இததானுங்க அல்லா “குரைஷிகள்” மட்டுமே மேம்பட்டவர்கள் , அதிகாரத்தில் இருக்க வாய்ப்புள்ளவர்கள்னு சொல்றார் ?
//இததானுங்க அல்லா “குரைஷிகள்” மட்டுமே மேம்பட்டவர்கள் , அதிகாரத்தில் இருக்க வாய்ப்புள்ளவர்கள்னு சொல்றார் ?//
எங்கே சொல்கிறார்? எந்த குர்ஆன் வசனம்? கொஞ்சம் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்!
Post a Comment