Followers

Sunday, May 29, 2011

ஒரு மனிதனின் விலை ஒன்பது லட்சம் இலங்கை ரூபாய்!

இலங்கையைச் சேர்ந்த புஷ்பவல்லி செல்லதுரை என்ற பெண் வீட்டு வேலைக்காக சவுதி வந்துள்ளார். வீட்டில் முதலாளியின் மனைவியோடு வாய்த் தகராறு வந்து அது முற்றி போய் அந்த சவுதி பெண் அடிக்க புஷ்பவல்லி இறந்து விடுகிறார். இந்த வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. சவுதி பெண் புஷ்பவல்லி குடும்பத்துக்கு 40000 ரியால் (சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் இலங்கை மதிப்பு) கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்'(பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும், இரத்தப் பணம் தருவதிலிருந்தும் விலக்களிக்கப் படுவார்.

இறந்தவரின் சகோதரி சரோஜா 'என் தங்கைக்கு நேர்ந்த கதி வேறு எந்த பெண்ணுக்கும் நேர வேண்டாம். இந்த பணம் அவரது குடும்பத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கும். அவரது இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்' என்கிறார்.

வீட்டு வேலைக்கு வரும் பெண்களில் பலர் வறுமை காரணமாக சில தவறுகளையும் செய்து விடுகின்றனர். ஒரு வீட்டில் தொடர்ந்து நகை காணாமல் போய் வந்தது. வீட்டு வேலை செய்யும் பங்காளி பெண்ணின் அறையை சோதனையிட்டபோது அனைத்து நகைகளையும் மறைத்து வைத்தது தெரிய வந்தது. அந்த பெண்ணும் அதை ஒத்துக் கொண்டார். போலீஸில் புகார் செய்யாமல் வீட்டினர் கண்டித்து விட்டு விட்டனர்.

இன்னும் சில பெண்கள் மொழி, கலாசாரம், மதம் அனைத்தும் வேறுபட்ட சூழலில் சவுதி வருபவர்கள் மன உளைச்சலுக்கு ஏற்பட்டு வீட்டு பெண்களோடு தகராறு செய்வது. சில நேரம் தற்கொலைக்கு முயற்ச்சிப்பது போன்றவையும் நடக்கிறது.

இன்னும் சில வீடுகளில் ஆண்களால் பாலியல் வக்கிரத்துக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். சில வீடுகளில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை தொடர்ந்த வேலையும் இருக்கும். எனவே சவுதி வரும் சகோதரிகள் தங்களின் ஆண் சொந்தங்கள் குறிப்பிட்ட வீட்டில் டிரைவராகவோ வேறு வேலையிலோ இருந்தால் மட்டும் வீட்டு வேலைக்கு வரவும். உங்களுக்கு ஏதும் பிரச்னை என்றால் அவர்கள் மூலமாக போலீஸீக்கோ, கோர்ட்டுக்கோ போக ஏதுவாக இருக்கும். அப்படி ஒரு ஏற்பாடு இல்லாத பட்சத்தில் சொந்த நாட்டிலேயே ஏதாவது வேலை செய்து வருமானத்தைப் பார்க்க வேண்டும். இவர்களைப் போன்ற வறியவர்களுக்கு அரசு உதவிகளையும் செய்து வறுமையை நீக்க ஒத்துழைக்க வேண்டும்.

இன்னொரு வழக்கில் அபஹா என்ற ஊரில் தனது கணவனை கொலை செய்த மனைவிக்கும் தண்டனை அளிக்கப்பட்டது. இரத்த பணமாக 110000 (29300 டாலர்) இறந்தவரின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டது. இறந்தது சவுதி என்பதால் அவரது வருமானத்தை கணக்கிட்டு இந்த தொகையை நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்லமாட்டார்கள். விபசாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையை சந்திப்பான்'

-குர்ஆன்: 25:68

18. 'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
Volume :1 Book :2

3475. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(
மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். 'அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், 'அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), 'உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :60

3893. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன். நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப் படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்லமாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்; (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்தால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.
Volume :4 Book :63

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

-குர்ஆன் 5:32

தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

- குர்ஆன் 4:92

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

- குர்ஆன் 5:45

12 comments:

Anonymous said...

// இறந்தது சவுதி என்பதால் அவரது வருமானத்தை கணக்கிட்டு இந்த தொகையை நிர்ணயம் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்//

இல்லை. அவர் இஸ்லாமியர் என்பதனால். ப்ளட் மணி மதத்தைப் பொறுத்து மாறும் என்று உங்களுக்குத் தெரியாதா?

http://en.wikipedia.org/wiki/Diyya

In Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows[8]:
100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian or Jewish man
25,000 riyals if a Christian or Jewish woman
6,666 riyals if a man of any other religion
3,333 riyals if a woman of any other religion
The amount of compensation is based on the percentage of responsibility. Blood money is to be paid not only for murder, but also in case of unnatural death, interpreted to mean death in a fire, industrial or road accident, for instance, as long as the responsibility for it falls on the causer.[8]

Anonymous said...

நிச்சயமாக இது ஒரு முக்கிய செய்தியாகும் ... அண்மையில் இலங்கைப் பெண் ஒருத்தியின் உடல் முழுதும் ஆணியடித்து கொடுமை செய்தார்கள் .. ஜோர்டான் நாட்டில்...

மத்தியக் கிழக்கு நாடுகளில் வளர்ச்சியடைந்த சௌதி, அமீர்கம், குவைத் போன்ற நாடுகளில் கூட மனித உரிமைகள் மதிக்கப்படாது இருப்பதும் வேதனையான ஒன்று .. இதுக் குறித்து அவர்களிடம் நேரிடையாகத் தங்களைப் போன்றோர் பேசுவதும், மனித உரிமைகளை மதிப்பதன் தேவையை அவசியத்தைப் பற்றி எடுத்துரைப்பதும் சாலச் சிறந்தது என்பேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்...

சவூதி அரேபியா நூறு சதவீதம் இஸ்லாத்தை பின்பற்றும் நாடு கிடையாது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி.

அல்லாஹ் கொடுத்த உயிர்... எந்த நாட்டில் பிறந்தோராய் இருந்தாலும் சமம் சமம்தான்.

ஒரு சவுதிக்கு கொடுக்கப்படும் தண்டனைதான்... சவூதியில் தவறு செய்யும் மற்ற நாட்டினருக்கு கொடுக்கப்படவேண்டும்.

ஒரு சவுதிக்கு கொடுக்கப்படும் இழப்பீடுதான் சவூதியில் பாதிப்புக்குள்ளாகும் மற்ற நாட்டினருக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

இரண்டுமே ஒழுங்காய் நடப்பது கிடையாது.

ஒரே வேலைக்கு தரப்படும் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வுகள்..! வசதிகளில் ஏற்றத்தாழ்வுகள்..!

இறைத்தூதரின் இறுதிப்பேருரையை சவூதி அரசு பின்பற்றினால் நன்மை அவர்களுக்கு.

இல்லையேல் இது மகாபாவம்தான். இன்ஷாஅல்லாஹ்... இவ்விஷயத்தில், சவூதி அரசு கியாமத் நாளில் பதில் இல்லாமல் கைசேதப்படப்போவது உறுதி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தன் நாட்டவருக்கும் பிற நாட்டவருக்கும் ஏற்றத்தாழ்வு பாராட்ட இஸ்லாத்தில் அனுமதியுண்டா..? சமநீதி வழங்காமல் இருக்க இஸ்லாத்தில் இடமுண்டா..?

நிரூபன் said...

பாஸ் வெளிநாட்டுச் சட்டங்களைப் பற்றியும், இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு வரும் பெண்களுக்கு அறிவுரை கூறும் வகையிலும் உங்கள் பதிவு அமைந்துள்ளது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

//சவூதி அரேபியா நூறு சதவீதம் இஸ்லாத்தை பின்பற்றும் நாடு கிடையாது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி.//

//தன் நாட்டவருக்கும் பிற நாட்டவருக்கும் ஏற்றத்தாழ்வு பாராட்ட இஸ்லாத்தில் அனுமதியுண்டா..? சமநீதி வழங்காமல் இருக்க இஸ்லாத்தில் இடமுண்டா..?//


‘அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால்,அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் – ‘

இந்த வசனத்தின் படியே சவுதி அரசு தீர்ப்பு வழங்கியிருப்பதாக எண்ணுகிறேன். முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜகாத், சதக்கா என்று தனது சொத்தில் பெரும் பகுதியை இறை வழியில் செலவிடுவதால் இந்த பாகுபாடு காட்டப்படுவதாக நான் உணர்கிறேன். இறைவனே அறிந்தவன்.

suvanappiriyan said...

//இல்லை. அவர் இஸ்லாமியர் என்பதனால். ப்ளட் மணி மதத்தைப் பொறுத்து மாறும் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி!

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//நிச்சயமாக இது ஒரு முக்கிய செய்தியாகும் ... அண்மையில் இலங்கைப் பெண் ஒருத்தியின் உடல் முழுதும் ஆணியடித்து கொடுமை செய்தார்கள் .. ஜோர்டான் நாட்டில்... //

என்ன செய்வது சகோதரரே! சிலருக்கு பணம் வந்து விட்டால் தலைகால் புரிவதில்லை. இது போன்ற கொடுமையில் ஈடுபடும் மனித விரோதிகளை சவுதி சட்டம் கொண்டு சிறையில் அடைக்கிறார்கள். சட்டத்தை இன்னும் இறுக்கமாக்க வேண்டும்.

//இதுக் குறித்து அவர்களிடம் நேரிடையாகத் தங்களைப் போன்றோர் பேசுவதும், மனித உரிமைகளை மதிப்பதன் தேவையை அவசியத்தைப் பற்றி எடுத்துரைப்பதும் சாலச் சிறந்தது என்பேன்.//

முன்பு இதற்கான ஒரு கருத்தரங்கு ரியாதில் நடைபெற்றது. நானும் கலந்து கொண்டு என்னுடைய கருத்தையும் பகிர்ந்தேன். முஸ்லிம் அல்லாதவர்களை சில முத்தவாக்கள் தொழுகை நேரங்களில் சிரமத்துக்கு உள்ளாக்குவதைப் பற்றி என் கருத்தை வைத்தேன். அதற்கு மூத்த அதிகாரி 'நம் விரல்கள் அனைத்தும் ஒரே அளவில் இல்லை. அதுபோல் இஸ்லாத்தை விளங்காத ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகள் இஸ்லாத்தையே களங்கப்படுத்துகிறது. உங்களின் ஆலோசனை எடுத்துரைக்கப்படும்' என்று எடுத்துரைத்தார். எனவே சட்டம் சரியாக இருந்தாலும் நம் நாட்டைப்போல் ஒரு சில கறுப்பு ஆடுகளும் சட்டத்தை வளைக்கின்றன. இங்கு தப்பித்தாலும் இறப்புக்கு பிறகு இதற்குரிய தண்டனையை கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.

suvanappiriyan said...

நிரூபன்!

//பாஸ் வெளிநாட்டுச் சட்டங்களைப் பற்றியும், இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு வரும் பெண்களுக்கு அறிவுரை கூறும் வகையிலும் உங்கள் பதிவு அமைந்துள்ளது. //

சில சகோதரிகளுக்கு மொழியும் தெரிவதில்லை. ஆங்கிலமும் சரியாக வராது. புதிய இடம். புதிய கலாசாரம். இதுதான் பல பிரச்னைகளை தோற்றுவிக்கிறது. அன்றைய காட்டுமிராண்டி காலத்திலேயே இன்றும் இருந்து வரும் ஒரு சில அரபுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு 'வேலை நேரம், சம்பளம், உரிய பாதுகாப்பு அனைத்தையும் உறுதி செய்து கொண்டே அரபு நாடுகளுக்கு வரச் சொல்லி நமக்கு தெரிந்தவர்களிடம் அறிவுறுத்துவது நல்லது.

baleno said...

ஒரு சவுதிக்கு கொடுக்கப்படும் தண்டனைதான்... சவூதியில் தவறு செய்யும் மற்ற நாட்டினருக்கு கொடுக்கப்படவேண்டும்.
ஒரு சவுதிக்கு கொடுக்கப்படும் இழப்பீடுதான் சவூதியில் பாதிப்புக்குள்ளாகும் மற்ற நாட்டினருக்கும் கொடுக்கப்பட வேண்டும். -முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
உண்மை தான் சகோ. யாராக இருந்தாலும் பாதிக்கபடுபவர்களுக்கு சம இழப்பீடுகள் ஐனநாயக நாடுகளில் கொடுக்கப்படுகின்றன.ஆனால் சவூதி அரேபியா இப்படி அநியாயமாக நடந்து கொள்கிறது.இதை வெளியே கொண்டு வந்த சுவனப்பிரியன் பாராட்டபட வேண்டியவர்.

அண்மையில் இலங்கைப் பெண் ஒருத்தியின் உடல் முழுதும் ஆணியடித்து கொடுமை செய்தார்கள் .. ஜோர்டான் நாட்டில்...
-இக்பால் செல்வன்
அது ஜோர்டான் நாட்டில் இல்லை. அதுவும் புனித பூமி சவூதி அரேபியாவில் தான் ஆரியவதி என்ற பெண்ணுக்கு நடந்தது. இலங்கையில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்திற்கு முன்னால் இலங்கையர்கள் கண்டன ஆர்பாட்டங்கள் எல்லாம் செய்த பின்பு தான் ஆணியடித்து கொடுமை செய்த சவூதி தம்பதிகள் கைது செய்யப்பட்டார்கள்.

suvanappiriyan said...

//யாராக இருந்தாலும் பாதிக்கபடுபவர்களுக்கு சம இழப்பீடுகள் ஐனநாயக நாடுகளில் கொடுக்கப்படுகின்றன.ஆனால் சவூதி அரேபியா இப்படி அநியாயமாக நடந்து கொள்கிறது.//

இதைப் பற்றி முன்பே சார்வாகன் பதிவில் விளக்கியிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் 2000 ரியால் சம்பளத்தில் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம். 10 வருடத்துக்குப் பிறகு அந்த இருவருடைய சேமிப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால் முஸ்லிமை விட இந்துவின் சேமிப்பு அதிகமாகவே இருக்கும். அந்த முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தின் படி வாழ்ந்தால் வரதட்சணை வாங்காமல் பெண்ணுக்கு மஹர் என்ற பெரும் செல்வத்தை அன்பளிப்பாக தர வேண்டி வரும். அடுத்து ஒரு முஸ்லிம் தனது சேமிப்பை வட்டிக்கு கொடுத்து பெருக்க முடியாது. மாறாக தான் தங்கியிருக்கும் வீடு தவிர வாடகைக்கு விடும் வீடு, கடைகள், சொந்தமாக வைத்திருக்கும் நில புலன்கள், நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கணக்கிட்டு ஏழைகளுக்கும் தனது வறிய உறவினருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். இதெல்லாம் கணக்கு பண்ணி கொடுத்தால் அவருக்கு சேமிப்பு என்று மிஞ்சுவது சொற்பமே!

மேலே சொன்ன எந்த காரணமும் இந்து நண்பர்களுக்கு பொருந்தாது. சவுதியிலேயே தனது சம்பளத்தை மொத்தமாக சேர்த்து வைத்து வட்டிக்கு விட்டே லட்சாதிபதி ஆன இந்து நண்பர்களை எனக்குத் தெரியும். அவரது மார்க்கத்தின் படி இது தவறல்ல. அதே போல் திருமணத்தில் வரதட்சணையாக பல லட்சங்களைப் பெறுகிறார். அதற்கு எந்த வரியும் கட்டத் தேவையில்லை. நகைக்கோ சொத்துக்கோ எந்த வரியும் இந்து மதத்தில் கட்டத் தேவையில்லை. எனவே இந்து நண்பரின் சேமிப்பு முஸ்லிமை விட எந்த வகையில் பார்த்தாலும் அதிகமாகவே இருக்கும். இதே அளவு கோல்தான் கிறித்தவ மத நண்பர்களுக்கும்.

இப்பொழுது மேலே உள்ள சட்டத்தைப் பொருத்திப் பார்த்தால் இதில் உள்ள நியாயம் நமக்கு விளங்கும். இறைவனே மிக அறிந்தவன்.

அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லா நாட்டிலும் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. பல லட்சம் கோடி நஷ்டத்தை நமது அரசுக்கு உண்டாக்கிய அமைச்சர் ராசாவுக்கு முதல் தர சிறைவாசம். தற்போது ஓய்வு நேரத்தில் டென்னிஸ் விளையாடுகிறாராம். ஒரு 20000 மோசடியை நீங்களோ நானோ செய்து நிரூபிக்கப்பட்டால் காவல்துறை எந்த அளவு சம்பந்தப்பட்டவரை அவமானப்படுத்தும்? நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் இன்று நமது முதல் அமைச்சர். பல கொலைகளை ஆள் வைத்து செய்து மாட்டிக் கொண்டவர்களெல்லாம் இன்று அதிகாரத்தில். மாட்டை உரித்த நான்கு தலித்துகளை உயிரோடு கொளுத்தியதும் நம் நாடுதான். மனிதனை திண்ணியத்தில் மலத்தை திங்க வைத்ததும் நம் நாடுதான். இவை எல்லாம் நமக்கு வித்தியாசமாக தெரியவில்லை.

Anonymous said...

//மேலே சொன்ன எந்த காரணமும் இந்து நண்பர்களுக்கு பொருந்தாது. சவுதியிலேயே தனது சம்பளத்தை மொத்தமாக சேர்த்து வைத்து வட்டிக்கு விட்டே லட்சாதிபதி ஆன இந்து நண்பர்களை எனக்குத் தெரியும். அவரது மார்க்கத்தின் படி இது தவறல்ல. அதே போல் திருமணத்தில் வரதட்சணையாக பல லட்சங்களைப் பெறுகிறார். அதற்கு எந்த வரியும் கட்டத் தேவையில்லை. நகைக்கோ சொத்துக்கோ எந்த வரியும் இந்து மதத்தில் கட்டத் தேவையில்லை. எனவே இந்து நண்பரின் சேமிப்பு முஸ்லிமை விட எந்த வகையில் பார்த்தாலும் அதிகமாகவே இருக்கும். இதே அளவு கோல்தான் கிறித்தவ மத நண்பர்களுக்கும்.

இப்பொழுது மேலே உள்ள சட்டத்தைப் பொருத்திப் பார்த்தால் இதில் உள்ள நியாயம் நமக்கு விளங்கும். இறைவனே மிக அறிந்தவன்.//

அடடா, அட்டகாசமாக விளக்கியிருக்கிறீர்கள். ஆக ஏக-இறைவன் மற்ற நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்குத் தக்கபடி ரத்தப் பணத்தைக் குறைத்துக் கொள்கிறார். ஆமா, பெண்களுக்கு ஏன் பணத்தைப் பாதியாகக் குறைத்து விடுகிறார்?


அந்த வரதட்சிணையை வட்டிக்கு விட்டுட்டு இந்தியாவிலேயே இருந்திருந்தா உயிராவது மிஞ்சியிருக்கும்.