Followers

Wednesday, May 18, 2011

இந்தியாவின் மிகப் பெரும் மசூதி!


இதுவரை சாஜஹான் கட்டிய டில்லி ஜூம்ஆ மசூதிதான் இந்தியாவின் மிகப் பெரும் மசூதியாக இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் கேரளா கோழிக் கோட்டில் திறந்து வைக்கப் பட இருக்கும் புதிய மஸ்ஜித் டில்லி மசூதியின் இடத்தைப் பிடிக்கப் போகிறது. இனி இந்தியாவின் மிகப் பெரும் மசூதியாக கோழிக்கோடு மசூதி விளங்கும்.

கோழிக்கோட்டில் கட்டப்படும் இந்த பள்ளி 250000 ஸ்கொயர் பீட்டில் கட்டப்படுகிறது. 'இந்த பள்ளி உலக சகோதரத்துவத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும். ஒரு நூலகமும், இஸ்லாமிய ஆராய்ச்சி கூடமும், கான்பரன்ஸ் ஹால் ஒன்றும் சேர்த்து கட்டப்படுகிறது. இங்கு முஸ்லிம் அல்லாதவர்களும் தங்களின் சந்தேகங்களை போக்கிக் கொள்ளும் வகையில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.என்கிறார் இப்பள்ளியின் நிர்வாகி அபுபக்கர்.

இதுவரை 30000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகள் இங்கிருந்து கல்வி கற்று சென்றுள்ளனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் குழந்தைகள், காஷ்மீர் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மாணவர்கள் சிறந்த கல்வியை கற்று சென்றிருக்கிறார்கள். இன்றும் கற்று வருகிறார்கள்.

'இந்த பள்ளி இன்னும் இரண்டு வருடத்தில் பூர்த்தியாகும். ஐந்து வருடங்களில் மத்ரஸா, நூலகம்,கான்பரன்ஸ் ஹால் என்று அனைத்தும் இன்ஷா அல்லாஹ் கட்டி முடிக்கப்படும். இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 250000 பேர் தொழ முடியும். பசுமை கட்டிடமாக இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. பள்ளியைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் வைக்கப்பட்டு பரமரிக்கப்படுகின்றன. எட்டு ஏக்கரில் மொகல் பாரம்பரியத்தை விளக்கும் முகமாக மிகப் பெரும் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதன் மொத்த செலவின் மதிப்பீடு 40 கோடி' என்கிறார் இப்பள்ளியின் ஆர்க்கிடெக்சர் ரியாஸ் முகம்மது.

டிஸ்கி: இதெல்லாம் சரிதான். இவ்வளவு சிரமப்பட்டு திறக்கப் போகும் பள்ளியில் அமையவிருக்கும் மத்ரஸா பழைய மாடலில் இல்லாமல் தொழில் கல்வியும் அங்கு கற்று கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குர்ஆன், நபிமொழி, ஆங்கிலம், கணிணி, தொழிற்கல்வி, விளையாட்டு என்று அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதாக மத்ரஸா கல்வி அமைய வேண்டும்.

ஏனெனில் முகமது நபியோ, அவரது தோழர்களோ புரோகிதம் செய்து தங்களின் வருமானத்தை பெறவில்லை. அனைவருக்கும் பல தொழில்கள் இருந்தன. முகமது நபியிடம் நூறு ஆடுகள் இருந்தன. அவை குட்டி போடும்போது அதனை விற்று தனது செலவுகளை பார்த்துக் கொண்டதாக நாம் படிக்கிறோம். ஆட்டின் எண்ணிக்கை நூறை விட குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். எனவே மதரஸா மாணவர்கள் கல்வி கற்று வெளியேறும்போது உலக போட்டியை சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

மத்ரஸா கல்வி வெறும் குர்ஆனையும் சட்டதிட்டங்களை மட்டும் கற்றுக் கொடுப்பதால் அந்த மாணவர்கள் வருமானத்துக்கு புரோகிதத்தை வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதை நியாயப்படுத்தவும் ரொம்பவும் மெனக்கிடுகிறார்கள். எனவே இனி வருங்கால இஸ்லாம் சிறப்புற வேண்டுமானால் கல்விக்கு இஸ்லாமிய சமுதாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் தொய்வடையாமல் கல்வியின் அவசியத்தை நம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம்முன் உள்ள மிகப் பெரிய பணியாகும்.

8 comments:

Sketch Sahul said...

சரியாக சொன்னீர்கள்....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

மிகவும் வித்தியாசமான பகிர்வு சகோ.சுவனப்பிரியன்.

///எட்டு ஏக்கரில் மொகல் பாரம்பரியத்தை விளக்கும் முகமாக மிகப் பெரும் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதன் மொத்த செலவின் மதிப்பீடு 40 கோடி///

-----பிரம்மானடமாக அதிக பொருட்செலவில் கட்டப்படும் பள்ளிகளில்... அது காலியாக கிடந்தால் சிறப்பு இல்லை.

பெரிதாக கட்டினாலும் அது தொழுகையாளிகளால் நிறைய வேண்டும். அதுதான் பள்ளிக்கு சிறப்பு.

உங்கள் 'டிஸ்கி'

----- மிக மிக அருமையான கருத்துக்கள்..! நடைமுறை படுத்தப்பட்டாக வேண்டிய அவசியமான கருத்துக்கள்.

அந்த கொழிக்கொட்டுக்காரர்கள் செய்துவரும் அளப்பரிய கல்விப்பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.


மிக்க நன்றி சகோ..!

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்...

எதற்காக சகோதரர் இவ்வளவு பொருட்செலவில் ஒரு பள்ளிவாசல்? இந்த பணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையோ, தொழில் தொடங்க முனைவோருக்கு கடனோ தந்து வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

என்னவோ போங்க. நடந்து விட்டது. இனி சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. இன்ஷா அல்லாஹ் இந்த இடத்தை பல்நோக்கு இடமாக பயன்படுத்தி சமுதாயத்திற்கு உதவியாய் இருந்தால் சரி.

நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

suvanappiriyan said...

//சரியாக சொன்னீர்கள்....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஷாகுல்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//பெரிதாக கட்டினாலும் அது தொழுகையாளிகளால் நிறைய வேண்டும். அதுதான் பள்ளிக்கு சிறப்பு.//

கண்டிப்பாக! பெருமைக்கு பள்ளியை கட்டி விட்டு தொழுகையாளிகள் நிறையாமல் இருந்தால் அந்த பள்ளிக்கு என்ன பெருமை?

//----- மிக மிக அருமையான கருத்துக்கள்..! நடைமுறை படுத்தப்பட்டாக வேண்டிய அவசியமான கருத்துக்கள். //

ஏழு வருடத்தை நான்கு வருடமாக குறைக்க வேண்டும். மதரஸாவில் சேருவதற்கு குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இதெல்லாம் நிறைவேறினால் மதரஸா மாணவர்கள் பாத்திஹா ஓதி கையேந்தாமல் கவுரமாக தங்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//எதற்காக சகோதரர் இவ்வளவு பொருட்செலவில் ஒரு பள்ளிவாசல்? இந்த பணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகையோ, தொழில் தொடங்க முனைவோருக்கு கடனோ தந்து வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். //

சிறந்த கருத்து. பணம் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டுமே! நீங்கள் சொல்வது போல் இந்த பணத்தை கொண்டு சில கிராமங்களை தத்தெடுத்து அங்குள்ள ஏழை முஸ்லிம்களின் கல்வி உயர்வுக்கு பாடுபடலாம். இனிமேலாவது செல்வந்தர்கள் சிந்திக்க வேண்டும்.

450. உபைதுல்லாஹ் அல் கவ்லானி அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) பள்ளியை விரிவுபடுத்தியபோது 'நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்' என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு 'அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்" என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்' என உஸ்மான்(ரலி) கூறினார்.
Volume :1 Book :8

429. அபூ தய்யாஹ் அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் ஆடுகள் கட்டுமிடங்களில் தொழுபவர்களாக இருந்தனர். என்று அனஸ்(ரலி) ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பின்னர் 'பள்ளி கட்டப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள் ஆடுகள் கட்டுமிடங்களில் தொழுபவர்களாக இருந்தனர்' என்று விளக்கமாக அனஸ்(ரலி) கூறினார்.
Volume :1 Book :8

ஹுஸைனம்மா said...

பள்ளிவாசல் மட்டுமல்லாம, ஒரு நூலகமும், இஸ்லாமிய ஆராய்ச்சி கூடமும், கான்பரன்ஸ் ஹால் ஆகியவையும் சேர்ந்திருப்பது சிறப்பு. இவையும் நல்ல முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

suvanappiriyan said...

//பள்ளிவாசல் மட்டுமல்லாம, ஒரு நூலகமும், இஸ்லாமிய ஆராய்ச்சி கூடமும், கான்பரன்ஸ் ஹால் ஆகியவையும் சேர்ந்திருப்பது சிறப்பு. இவையும் நல்ல முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி ஹூசைனம்மா!