Followers

Sunday, April 15, 2012

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-குறள்: 972

பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒருவரே ஆவர். அவர்கள் செய்யும் தொழில்கள் வேறுபட்டிருந்தாலும் அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை. ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனை பிராமணனாகவோ, செட்டியாராகவோ, தேவராகவோ, படையாச்சியாகவோ, பரையனாகவோ, பள்ளனாகவோ பாரக்கலாகாது. மரம்,செடி,விலங்குகள் என்ற அனைத்து உயிர்களும் உலகில் பிறக்கும் போது ஒத்த தன்மையுடனேயே பிறக்கின்றன. இதில் சாதி வேற்றுமை பார்த்து மனிதர்களிடையே பகைமை பாராட்டலாகாது என்கிறார் வள்ளுவர். வள்ளுவர் காலத்திலேயே பிராமணன் சூத்திரன் என்ற சாதி வேறுபாடு தலை விரித்தாடியிருக்கிறது. அதைக் கண்டிக்கும் முகமாகவே வள்ளுவர் தனது குறளில் தமிழர்களுக்கு போதனை செய்கிறார்.

இதே கருத்தையே தொடர்ச்சியாக அடுத்த குறளில்...

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
-குறள் 973

நான் உயர்ந்த சாதி என்று கூறி பெருமை பேசுபவர் மேலான பண்பு இல்லை என்றால் உயர்ந்தோராக மாட்டார். தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கப்பட்டவன் சமூகத்தில் இழிவாக பார்க்கப்பட்டாலும் சிறந்த பண்புகளை கொண்ட அவன் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவான் என்ற பொருளில் சொல்கிறார் வள்ளுவர். இங்கு பிறப்பினால் எந்த பெருமையும் ஒருவனுக்கு வந்து விடாது. அவன் செய்யும் சிறந்த செயல்களினால்தான் அவனுக்கு பெருமை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”



வேதம் படிதத பார்ப்பணர்கள் அதனை மறந்தாலும் பெரும் குற்றம் வந்து விடாது: ஆனால் அவனது ஒழுக்கம் கெட்டால் சமூகத்தால் இழிந்தவனாகப் பார்கக்ப்படுவான் என்கிறார் வள்ளுவர். அன்றே இந்த மேல் சாதியினர் எந்த அளவு கோலோச்சியிருந்தனர் என்பதும் சாதி வெறி எந்த அளவு உச்சத்தை எட்டியிருந்தது என்பதும் நன்கு தெளிவாகிறது.

2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் திண்ணியமும் பாப்பாரப்பட்டியும் கீரிப்பட்டியும் நமது பெருமைகளை கூறிக் கொண்டிருக்கின்றன. வள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வடிப்பது கொண்டும், அவருக்கு ஒரு விழா எடுத்து அவர் பெருமையை பேசுவதோடு நமது கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறோம்.

திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை அதை எழுதியது அகத்தியர் என்று புதிய செய்தியாக ஒரு பதிவை படித்தேன். கலைஞர் எழுப்பிய மிகப் பெரிய வள்ளுவர் சிலை இனி அவ்வளவுதானா? இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் சிலைக்காக கொட்டிய கோடிக்கணக்கான மக்கள் பணம் விழலுக்கு இறைத்த நீர்தானா? நாம் எந்த லட்சணத்தில் வரலாறுகளை பாதுகாத்து வருகிறோம் என்பதற்கு இவை எல்லாம் சில சான்றுகள்.

வள்ளுவரின் இந்த குறளையொட்டி வள்ளலார் தரும் பாடலையும் இனி பார்ப்போம்.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்!அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட
என்சிந்தை மிகவிழைந்த தாலோ

என்ன அழகாக மனித நேயத்தை வள்ளலார் தனது அருட்பாவில் பாடலாக தருகிறார் பாருங்கள். ‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ - 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலக மக்கள் அனைவரிடத்திலும் சகோதர பாசத்தோடு பழகுபவனிடமே உண்மையான இறை பக்தி இருக்கும் என்பது இப்பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகிறது.

நமது முண்டாசு கவி பாரதியும் தனது பங்குக்கு...

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே.....

என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டான். அந்த வாழ்த்துக்கள் அனைத்தும் இன்றும் ஏட்டளவிலேயே இருக்கின்றது. எந்த முன்னேற்றத்தையும் இது நாள் வரை கண்டபாடில்லை. உலக நாடுகள் வேறு எங்கும் இந்த அளவு தீண்டாமைக்கு எதிராக பாடல்கள் புனைந்ததும் இல்லை. இந்த அளவு இன்று வரை நம்மைப்போல் தீண்டாமையை தூக்கிப் பிடிக்கும் நாடுகளும் உலகில் எங்கும் இல்லை.

மனிதர்களில் பேதங்கள் பார்க்கலாகாது என்பதற்கு குர்ஆன் தரும் வசனத்தையும் இங்கு பார்ப்போம்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1


மேலே உள்ள இந்த வசனம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே! நாம் அனைவரும் 'ஒரு தாய் மக்களே' என்ற அரை கூவலை மனித சமுதாயத்தின் முன் வைக்கிறது குர்ஆன். 'நான் நெற்றியில் பிறந்தேன்: எனவே நான் மட்டும்தான் மந்திரம் சொல்ல வேண்டும். மற்றவர்கள் அந்த மந்திரத்தை சொன்னால் நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டும்' என்றெல்லாம் இன்றும் நாம் சொல்லி வருவதும் அதை சட்டமாக இன்னும் வைத்திருப்பதும் தவறு என்கிறது குர்ஆன். அதே போல் தொடையில் பிறந்தவன் கீழானவன் என்றும் அவன் சூத்திரன் என்றும் இழிவாக பேசப்படுவதையும் அதை இன்றும் சிலர் போற்றப்படுவதையும் தவறு என்று இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. நானும், தருமியும், சார்வாகனும், நரேனும், ஆஷிக்கும், சிராஜூம், கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராகுல் காந்தியும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்து விட்டால் எங்கிருந்து வரும் உயர்வு தாழ்வு? எங்கிருந்து வரும் பேதம்?

---------------------------------------------


பரம்பு மலை பாரி மன்னன் முல்லைக் கொடிக்கு தனது தேரையே தானமாக கொடுத்ததை படித்திருப்போம். இந்த சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ஒரு அறிவுடைய செயலா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு முல்லைக் கொடிக்காக தனது தேரையே அங்கு விட்டால் அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஆகாதா? மன்னன் தேரை இடம் பெயர்க்க எவருக்கும் தைரியமும் அந்த காலத்தில் இருந்திருக்காது. அந்த கொடியையே வேறு இடத்தில் படர விட்டாலும் அது தனது போக்கில் படர்ந்து சென்று விடும். இதிலெல்லாம் கவனம் செலுத்திய பாரி மன்னன் மக்களுக்கிடையே உள்ள சாதி வேற்றுமையை தீர்க்க குறைந்த பட்சமாவது முயற்ச்சித்திருக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பை ஆரம்பிக்க போவதாக அரசு அறிவிப்பு வந்துள்ளது. இனி தாரை தப்பட்டையோடு சாதி சங்கங்கள் எல்லாம் வெளிக் கிளம்பும். ஏற்கெனவே முன்னேறிய சாதிகள் மேலும் முன்னேறிச் செல்லும். எத்தனை ஒதுக்கீடுகள் வந்தாலும் நீதிபதியாகவே சென்று ஒரு தாழத்தப்பட்டவன் உட்கார்ந்தாலும் உயர் சாதியினர் பார்வையில் அவன் தாழ்ததப்பட்டவனாகவே கருதப்படுகிறான். ஆரியத்தின் தாக்கம் அந்த அளவு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது.

வாழ்க பாரதம்! வாழ்க தமிழ்நாடு!

----------------------------------------------


கிருமாம்பாக்கம் :புதுச்சேரியில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்து, ஒரே இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம், நோணாங்குப்பம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.நோணாங்குப்பம் புதுக்காலனி, 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் லிங்குசாமி,28, டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கண்ணகி,20, என்பவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு, இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மனமுடைந்த காதலர்கள், நேற்று முன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த காதல் ஜோடிகளின் நண்பர்கள், உறவினர்கள், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும்படி, இரு வீட்டாரிடமும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கண்ணகியின் உடல் லிங்குசாமியின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின், இருவரின் <சடலங்களையும் ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, நோணாங்குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.இவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, மேற்கொள்ளப்பட்ட திருமணச் சடங்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களை, மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

தின மலர்-15-04-2012

ஒரு சமூகத்துக்கு இன்னதுதான் சட்ட திட்டங்கள் என்று இல்லாமல் போனால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்க்க இயலாது.

38 comments:

VANJOOR said...

.
.
CLICK >>>>
PART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற நிகழ்வுகள். மற்றும் காம ஊற்றுக்கண்களா?
<<<< TO READ>
.
.

Seeni said...

nalla seythikalin!
thokuppu!

paaraattukal!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla seythikalin!
thokuppu!

paaraattukal!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!


//PART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற நிகழ்வுகள். மற்றும் காம ஊற்றுக்கண்களா? <<<< TO READ>//

வருகைக்கும் சுட்டியை பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//திரு பரமசிவம்,
சுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கிறார். இஸ்லாமிய அடிமைமுறையை ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்யும் அவருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உதவுகிறீர்கள்.
இதற்கும் விளக்கம் சொல்லி அவருக்கு உதவலாமே?
முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.
உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?
பரமசிவம், காவ்யா போன்றவர்கள் இதற்கு விளக்கம் அளித்தால் உண்மையான சூடோசெக்குலர்கள் என்று போற்றப்படுவார்கள்.//

'நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்லவிதமாக நடந்து அழகிய முறையில் நஷ்ட ஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளமாகும். இதன்பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.'


-குர்ஆன் 2:178

தங்கமணி குறிப்பிடும் குர்ஆன் வசனம் இதுதான். வசனத்தின் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று சொல்வது நகைப்பிற்கிடமானது. இந்த கேள்விக்கு முன்பே பதில் சொன்னதாலும் அதை விட்டு வேறு கேள்விக்கு சென்றேன். இனி விளக்கத்தைப் பார்ப்போம்.

ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது. ஒரு அரசாங்கம் இருந்தால் உண்மையை விசாரித்து கொலையுண்டவன் பக்கம் நியாயம் இருப்பின் தண்டனை வழங்க அதிகாரம் வழங்கப்படுகிறது. கொல்லப்பட்டவனின் வாரிசு பெருந்தன்மையாக நடந்து அவனை மன்னித்து விட்டாலோ அல்லது உயிருக்கு பகரமாக பணத்தை வாங்கிக் கொண்டாலோ அதற்கும் குர்ஆன் அனுமதிக்கிறது. அதை விடுத்து இதை எல்லாம் உதாசீனம் செய்து விட்டு வேறு வழிகளில் சென்று பழி தீர்ப்பதோ, அவரது வாரிசுகளை பழி தீர்ப்பதோ தடை செய்யப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனை உண்டு என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது. இதன் மூலம் கால காலமா தலைமுறை தலைமுறையாக பழி தீர்க்கும் படலங்கள் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

ஆனால் நம் நாட்டு சட்டம் என்ன சொல்கிறது. ஒருவன் அநியாயாமாக கொல்லப்பட்டால் தண்டனை பெற்ற கைதியை மன்னிக்கும் அதிகாரத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவனின் மனநிலை டெல்லியில் ஏஸி அறையில் அமர்ந்திருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு எவ்வாறு தெரியும்? அவனது வலியை உணர முடியுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் சட்டத்தை இயற்றி வைத்துள்ளோம்.

எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ்... அருமையான பதிவு.. உங்கள் அறிவை இறைவன் விசாலம் ஆக்குவானாக....
ஜாதியால் உயர்வு தாழ்வு பார்ப்பது கொடுமையிலும் கொடுமை சகோ... அனைவரும் சமமான மனிதர்களே...
கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம்... அதற்காக மனிதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் வீணர்களின் செயலே...

Anonymous said...

ரியாத்: கடந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி சவூதி மனித உரிமைகள் அமைப்பின் அங்கத்தவரும் சமூகச் செயற்பாட்டாளருமாகிய முகம்மத் பின் ஸாலிஹ் அல் பஜாதி (வயது 34) சவூதியின் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இவர், "சவூதி சிறையில் இடம்பெற்ற தொடர்ச்சியான சித்திரவதைகளாலேயே ஏமன் நாட்டுப் பிரஜையான சுல்தான் அப்துல் துவைஸ் உயிரிழந்தார்" என்ற தகவலைப் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார்.

அதையடுத்து, 'மக்களைப் புரட்சிக்குத் தூண்டியமை, தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தம்வசம் வைத்திருந்தமை, தேசத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தமை' ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் புரைதாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வைத்து பஜாதி கைதுசெய்யப்பட்டார்.

2011 மார்ச் மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பஜாதிக்கு சிறைக்கு வெளியில் உள்ள எவரையும் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

தனக்கெதிரான நியாயமற்ற தண்டனையை எதிர்த்து சுமார் ஒரு மாதகாலம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருந்த பஜாதி கடந்த சனிக்கிழமை முதல் தண்ணீர் அருந்துவதையும் இடைநிறுத்திவிட்டார். இதனால் அவருடைய உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

"தற்போது உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பஜாதி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என சவூதியின் அரசியல், சமூக உரிமைகளுக்கான அமைப்பு தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றது.

"தன்னுடைய கருத்துச் சுதந்திரம், மக்களுடன் ஒன்றுகூடும் உரிமை என்பவற்றைப் பயன்படுத்தி அமைதியான முறையில் செயற்பட்டதைக் குற்றமாகக் கருதி நாட்டின் பிரஜை ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பது வருந்தத் தக்கது" என மனித உரிமைகளுக்கான வளைகுடா மையப் பணிப்பாளர் நபீல் ரஜப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சவூதி மன்னர் இவ்விடயத்தில் தலையிட்டு பஜாதியை உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்பதோடு, சவூதியில் சர்வதேச சட்டங்களுக்கு இசைவாக மனித உரிமைச் செயற்பாடுகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"சுமார் நான்கு மாதகாலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பஜாதியின் உடல்நலக் கேட்டுக்கு சவூதியின் உள்ளகத்துறை அமைச்சு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என அவர் அங்கத்துவம் வகிக்கும் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மேற்படி சமூகச் செயற்பாட்டாளர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை முற்றாக மறுத்து, "பஜாதி கிரமமாக உணவு உட்கொண்டு வருகிறார்; நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அவர் வெகு விரைவில் விடுதலை செய்யப்படுவார்" என உள்ளகத்துறை அமைச்சின் பேச்சாளர் மன்ஸூர் அல் துர்க்கி அறிவித்துள்ளார்

Anonymous said...

//எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.//

அப்போ, மனைவிகளைத்தவிர "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" எனப்படும் பாலுறவு அடிமைகளை இந்த காலத்திலும் எல்லா முஸ்லீம்களும் வைத்துக்கொள்ளலாம் என்கிறீர்களா ?

நேரடியாக சுருக்கமாக பதில் தரவும்

suvanappiriyan said...

அனானி!

//இந்நிலையில், மேற்படி சமூகச் செயற்பாட்டாளர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை முற்றாக மறுத்து, "பஜாதி கிரமமாக உணவு உட்கொண்டு வருகிறார்; நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அவர் வெகு விரைவில் விடுதலை செய்யப்படுவார்" என உள்ளகத்துறை அமைச்சின் பேச்சாளர் மன்ஸூர் அல் துர்க்கி அறிவித்துள்ளார் //

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும் அதன் ஸ்திரத் தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் அந்த குடிமகனை சிறையில் அடைத்து தண்டனை கொடுப்பது நேர்மையுள்ள அரசு செய்யும் ஒரு செயலாகும். உலக நாடுகளிலேயே தனது நாட்டு மக்களை கண்ணியத்தோடும் சிறப்போடும் நடத்தி வரும் ஒரு அரசு சவுதி. அது உங்களுக்கு கசப்பாக இருந்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலும் மசூதியிலும் மாட்டுக் கறியை கொண்டு வந்து போட்டு ஹைதரபாத்தில் கலவரத்தை உண்டாக்கிய இந்துத்வ வாதியை காவல்துறை கைது செய்துள்ளது. இந்து மஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண நினைக்கும் இந்த கொடியவனை இவர்களுக்கு தலைவனாக இருந்து செயல்படும் அத்வானி, மோடி, தொகாடியா போன்ற பாரத நாட்டு விரோதிகளுக்கு அதே போன்ற தண்டனை கொடுக்க வேண்டும் என்பேன். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர் அந்த முடிவைத்தான் எடுப்பர்.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//ஜாதியால் உயர்வு தாழ்வு பார்ப்பது கொடுமையிலும் கொடுமை சகோ... அனைவரும் சமமான மனிதர்களே...
கொள்கைகள் வேறு வேறாக இருக்கலாம்... அதற்காக மனிதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் வீணர்களின் செயலே.//

முஸ்லிம்களிடம் அருமையான வழிகாட்டுதலான குர்ஆன் இருப்பதால் தீண்டாமையை முற்றிலுமாக ஒழித்து விட்டனர். இப்படி ஒரு வழி காட்டுதல் நமது இந்து சகோதரர்களுக்கு இல்லாததால்தான் இன்றும் கூட தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குரான் வசனத்தில் விளையாடியது. ஆங்கிலத்தில் free for the free என்றுதான் இருக்கிறது. சுதந்திரமான்வனுக்கு சுதந்திரமானவன் என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கும் போது, சுதந்திரமானவனுக்காக ( கொலை செய்த) சுதந்திரமானவன் என்று போட்டு விளையாடியிருக்கிறார்கள். குரான் வசனத்தை மாற்றுவதற்கு உங்களிடம் எதாவது தண்டனை உண்டா?//

'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல்,மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை தோராவில்(தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகி விடும்.'
-குர்ஆன் 5:45

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண் என்றால் என்ன பொருள் கொள்வீர்கள்? கொலையுண்டவனின் வாரிசு கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்கலாம். அல்லது மன்னித்து விடலாம் என்ற பொருள் அதில் மறைந்துள்ளது. படிக்கும் யாவருமே இதை எளிதில் புரிந்து கொள்வர். குர்ஆனில் உள்ள சில விளங்காத வசனங்களுக்கு முகமது நபி தனது ஹதீதுகளில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அடைப்புக்குரிகளை மொழி பெயர்ப்பாளர் இடுகின்றனர்

உதாரணத்துக்கு என்னிடம் ஒரு அடிமை இருந்து அவனை ராஜா என்ற ஒருவன் கொன்று விட்டதாக வைத்துக் கொள்வோம் நான் பழி தீர்ப்பதற்காக ராஜாவின் அடிமையை கொன்று போட்டால் என்னை அந்த இறைவன் மன்னிப்பானா? ராஜா குற்றம் செய்ததற்க்காக அவன் அடிமை எப்படி தண்டனையை அனுபவிக்க முடியும்? இது அநியாயம் இல்லையா? ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?

இந்த சிறிய விஷயத்தை விளங்கிக் கொள்ள இவ்வளவு விளக்கம் தேவையில்லை தங்கமணி!

'வறுமை காரணமாக உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'
-குர்ஆன் 6:151

வறுகைக்காக குழந்தைகளை கொல்வதை தடை செய்கிறது குர்ஆன். நாமோ கள்ளிப் பாலையும், அரிசிகளையும் சேலம் ராமநாதபுரங்களில் கொடுத்து சமாதியாக்குகிறோம்.

'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்: விபசாரம் செய்ய மாட்டார்கள்: இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'
-குர்ஆன் 25:68.

தக்க காரணமின்றி ஒரு உயிரை கொல்வதை இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா? கவிதை நடையில் ஒரு வாக்கியத்தை சொல்லும் போது சில சொற்களை விடுவது அனைத்து மொழிகளிலும் உள்ள மரபு. இதை படிப்பவர் வெகு இலகுவாக புரிந்து கொள்வார். வீம்பு பண்ணுபவர் வேண்டுமென்றே மறுதலிப்பார். இதுதான் இங்கு நடக்கிறது.

suvanappiriyan said...

அனானி!

//அப்போ, மனைவிகளைத்தவிர "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" எனப்படும் பாலுறவு அடிமைகளை இந்த காலத்திலும் எல்லா முஸ்லீம்களும் வைத்துக்கொள்ளலாம் என்கிறீர்களா ?//

ஆடு மாடுகளைப் போல் மனிதர்களை கொத்தடிமைகளாக விற்கும் முறை உலகில் ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் என்ற ஒரு அமைப்பே தற்போது இல்லாததால் அந்த வசனத்தை தற்போது உலகில் எங்கும் பயன்படுத்த முடியாது.

ராவணன் said...

///நானும், தருமியும், சார்வாகனும், நரேனும், ஆஷிக்கும், சிராஜூம், கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராகுல் காந்தியும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே என்ற முடிவுக்கு வந்து விட்டால் எங்கிருந்து வரும் உயர்வு தாழ்வு? எங்கிருந்து வரும் பேதம்?///

இதில் நரேந்திரமோடி, நிதின் கட்காரி, ஜார்ஜ் புஷ், பிரபாகரன் போன்றவர்கள் இல்லையே?

வள்ளுவன் சொன்னதில் ஒரு .0001% கூட உங்கள் முஹமது சொல்லவில்லை.

ராவணன் said...

காசிற்கு விலைபோன சில முஹமதியர்கள் மட்டுமே உங்களுக்கு ஜால்ரா போடுவார்கள்.

ராவணன் said...

///ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும் அதன் ஸ்திரத் தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் அந்த குடிமகனை சிறையில் அடைத்து தண்டனை கொடுப்பது நேர்மையுள்ள அரசு செய்யும் ஒரு செயலாகும்.///

குஜராத்தில் அப்படி ஒரு நேர்மையான அரசு இல்லாமல் இருந்தது. அதனால் மக்களே சில புல்லுருவிகளுக்கு தண்டனை கொடுத்தார்கள். அதில் சில அப்பாவிகளும் இருந்தார்கள்.

ராவணன் said...

////ஒருவன் அநியாயாமாக கொல்லப்பட்டால் தண்டனை பெற்ற கைதியை மன்னிக்கும் அதிகாரத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவனின் மனநிலை டெல்லியில் ஏஸி அறையில் அமர்ந்திருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு எவ்வாறு தெரியும்? அவனது வலியை உணர முடியுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் சட்டத்தை இயற்றி வைத்துள்ளோம்.///

ஏஸியோ...ஓசியோ....பிரதீபா பாட்டீல் இருப்பது நிஜம். ஆனால் உங்கள் ஏக இறைவனின் நிலை என்னா நைனா? உலகில் முக்கால்வாசிப்பேர் உங்கள் ஏக இறைவனை நம்புவதே இல்லை.

ராவணன் said...

எங்கள் ஊர் முனியாண்டிசாமியை வணங்காதவர்கள் மனிதகுலத்தில் சேர்த்தியில்லை.

suvanappiriyan said...

சகோ ஸ்மிதா!

//இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்//

அம்பேத்காருக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறது. அவர் இனத்தவரை ஒதுக்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளாரே! அதற்கு கொஞ்சமாவது வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்கு இடம் கொடுங்களேன்.

இஸ்லாத்தை பற்றி இன்னும் பாரிய விமரிசனங்கள் வந்தும் அவை அனைத்தும் மக்கள் புறம் தள்ளி வெகு நாட்களாகிறது. இஸ்லாமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது குறையல்ல. தெரிந்தவரிடம் கேட்டு புரிந்துகொள்வதில் தவறில்லை.//

ஹி..ஹி..எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்து விடுகிறீர்கள். உங்கள் வாதப்படி எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் இங்கு நடக்கும் விவாதத்துக்கு அது அவசியம் இல்லை. தமிழைப் பொல் ஆங்கிலமும் ஒரு மொழி. பிரிட்டிஷ் காரன் நாட்டை விட்டு போயும் இன்னும் அந்த அடிமை புத்தி உங்களை விட்டு போகவில்லை என்பதை உங்களின் பின்னூட்டம் எடுத்துக் காட்டுகிறது.

இப்னு கதீரே சொன்னாலும் முகமது நபியின் கருத்துக்கு முன்னால் எவரது கருத்தும் எடுபடாது. கீழே வருபவற்றையும் சற்று படித்துப் பாருங்கள்.

நபிகள் நாயகம் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்;டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.
அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.
அதே போல் அடிமையாக இல்லாதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.
இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.
அடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.
இந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.

suvanappiriyan said...

.... இவ்வசனத்தின் துவக்கமே 'கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமை' என்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.
பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.
அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.
நபிகள் நாயகம் அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர்.
ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், 'யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் 'ஆம்' என்பது போல் சைகை செய்தார். உடனே நபி (ஸல்) கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி
யாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: திர்மிதீ
இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.

மேலே குறிப்பிட்ட இரண்டு ஹதீதுகளும் அந்த குர்ஆன் வசனம் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நமக்கு விளக்குகிறது. குர்ஆனுக்கு விளக்கத்தை முகமது நபிதான் தர வேண்டுமே யொழிய இப்னு கதீர் அல்ல.

2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.

நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) 'இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?' என்று கேட்டார்கள். பிறகு, 'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்" என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி
Volume :2 Book :49


மேற்கண்ட இந்த நபி மொழி அடிமைகள் கூட அந்த காலத்தில் எந்த அளவு கண்ணியப்படுத்தப்பட்டார்கள் என்பதை விளக்கும்

Anonymous said...

அன்புடன் சுவனப்பிரியன்,

யார் அந்த முட்டாள் தங்கமணி? திருக்குர்ஆன் இருப்பது ஆங்கிலத்திலல்ல, அரபு மொழியில் என்பது தெரியாமல் விதண்டாவாதம் செய்கிறார். அத்துடன் நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்புச் சரி. அந்த ஆளுடன் ஆங்கிலத்தில் விவாதிக்க வேண்டுமாயின், யாம் அதற்குத் தயார்.

இவண்,
முஹம்மது

Anonymous said...

வெவ்வெவ்வே ராவணன்,

///வள்ளுவன் சொன்னதில் ஒரு .0001% கூட உங்கள் முஹமது சொல்லவில்லை.///

முற்றிலும் உண்மை. அப்படிச் சொல்லாததினால்தான், உலகம் முழுவதும் இஸ்லாம் வியாபித்திருக்கிறது.


///காசிற்கு விலைபோன சில முஹமதியர்கள் மட்டுமே உங்களுக்கு ஜால்ரா போடுவார்கள்.///

உங்களின் கூட்டம்தான், நம்மவரைவிட மத்திய கிழக்கில் அதிகம். எல்லாம் துட்டுக்காகத்தான்! தொலைந்து இந்தியாவிலே இருக்கலாமே!


///குஜராத்தில் அப்படி ஒரு நேர்மையான அரசு இல்லாமல் இருந்தது. அதனால் மக்களே சில புல்லுருவிகளுக்கு தண்டனை கொடுத்தார்கள்.///

மோடியைத் தூக்கி வைத்த மிருகங்களுக்கு, இப்போது ஏதோ தண்டனை வழங்குகிறார்களாம்! உலகத்திற்குக் காட்ட!


///உலகில் முக்கால்வாசிப்பேர் உங்கள் ஏக இறைவனை நம்புவதே இல்லை.///

முனியாண்டிச் சாமியை உலகில் யாரும் நம்புவது இல்லை, ராவணன் என்னும் அறிவிலியைத் தவிர!

- Ismath

Nizam said...

//ராவணன் said...

எங்கள் ஊர் முனியாண்டிசாமியை வணங்காதவர்கள் மனிதகுலத்தில் சேர்த்தியில்லை.// மனிசங்கட்ட இருக்கர தன்மையில் .0001% கூட இருந்தா சொல் நா வந்து நி இருக்கார குலத்தில் சேர்ந்திருக்கறான்.

Anonymous said...

//மனிசங்கட்ட இருக்கர தன்மையில் .0001% கூட இருந்தா சொல் நா வந்து நி இருக்கார குலத்தில் சேர்ந்திருக்கறான்.//
எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள் உத்தமரான அல்லாவின் நல்ல குணங்களில் ஓன்று

(இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144))

இந்த அல்லாதான் உலகத்திற்கு சகோதரதத்துவத்தையும் அமைதியையும் போதிக்கிறார். இந்த வசனத்தை முஸ்லிம்கள் கடை பிடிக்கிறார்கள் என்றால், அல்லாவை வணங்காத காபிர்கள் முஸ்லிம்களை விட்டு ஒதுங்கி இருப்பதே நலம்.

Anonymous said...

@அனானி

//அல்லாவை வணங்காத காபிர்கள் முஸ்லிம்களை விட்டு ஒதுங்கி இருப்பதே நலம்.//

அல்லாஹ் -என்று நீங்கள் விளங்கி வைத்திருப்பது என்ன?, இறைநம்பிக்கையாளர்கள் என்றால் நீங்கள் விளங்கி வைத்திருப்பது என்ன? இறைநிராகரிப்பாளர்கள் என்றால் நீங்கள் விளங்கி வைத்திருப்பது என்ன? குர் ஆன் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி எப்படி இறங்கியது? தெரியுமா உங்களுக்கு?, அல்லது இந்த வசனம் இங்கு யாரைக் குறித்து சுட்டுகிறது என்றாவது தெரியுமா?

Anonymous said...

//இதில் நரேந்திரமோடி, நிதின் கட்காரி, ஜார்ஜ் புஷ், பிரபாகரன் போன்றவர்கள் இல்லையே?//

ராவணன் சூப்பர் ராவணன், அப்புறமா இந்த மனிதகுல நன் மக்களிடம் போய், தங்கங்களே! நீங்களும் நானும் சகோதரனுங்க அதுனால இந்த அற்ப வாழ்க்கைக்காக மக்களை அநியாயம கொள்ளக்கூடாதுன்னு கொஞ்சம் சொல்லிப்பாருங்க ராஜா!.

நாட்டு மக்களுக்கு கொஞ்சம் புண்ணியமாப் போகும்!.

Maruthan said...

//ஆடு மாடுகளைப் போல் மனிதர்களை கொத்தடிமைகளாக விற்கும் முறை உலகில் ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் என்ற ஒரு அமைப்பே தற்போது இல்லாததால் அந்த வசனத்தை தற்போது உலகில் எங்கும் பயன்படுத்த முடியாது.//

அப்படியானால் குரான் வசனங்களில் சில அல்லது பல இன்றைய சூழலுக்கு பொருந்தாது. அப்படிதானே?

Nizam said...

//Anonymous said...

//எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள் உத்தமரான அல்லாவின் நல்ல குணங்களில் ஓன்று

(இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144))

இந்த அல்லாதான் உலகத்திற்கு சகோதரதத்துவத்தையும் அமைதியையும் போதிக்கிறார்.//

அனானி
இதில் என்ன குறையை கண்டீர், இந்த வசனத்தில் அல்லாஹ்வின் குணமா இருக்கு, மனிதர்களுக்கு அறிவுரைதானே இருக்கு, கடவுளே இல்லை என்று சொல்லுபவர்யிடம் போயி கடவுள் இருக்கரார் என்று சொல்லுபவர் என்ன சம்மந்தாம பேசமுடியுமா? அதற்கு அடுத்த அடுத்த வசனம் பார்த்தல் உங்க குளப்பம் நிங்கும்.

யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான். (அல்- குர்ஆன் 4:146)

இந்த வசனத்தை நிங்கள் பின்பற்றினால் நிங்களும் நானும் வெற்றி பேரலாம்,

Nizam said...

//Anonymous said...

//எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள் உத்தமரான அல்லாவின் நல்ல குணங்களில் ஓன்று

(இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144))

இந்த அல்லாதான் உலகத்திற்கு சகோதரதத்துவத்தையும் அமைதியையும் போதிக்கிறார்.//

அனானி
இதில் என்ன குறையை கண்டீர், இந்த வசனத்தில் அல்லாஹ்வின் குணமா இருக்கு, மனிதர்களுக்கு அறிவுரைதானே இருக்கு, கடவுளே இல்லை என்று சொல்லுபவர்யிடம் போயி கடவுள் இருக்கரார் என்று சொல்லுபவர் என்ன சம்மந்தாம பேசமுடியுமா? அதற்கு அடுத்த அடுத்த வசனம் பார்த்தல் உங்க குளப்பம் நிங்கும்.

யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான். (அல்- குர்ஆன் 4:146)

இந்த வசனத்தை நிங்கள் பின்பற்றினால் நிங்களும் நானும் வெற்றி பேரலாம்,

suvanappiriyan said...

திரு மருதன்!

//அப்படியானால் குரான் வசனங்களில் சில அல்லது பல இன்றைய சூழலுக்கு பொருந்தாது. அப்படிதானே? //

'திருடினால் கையை வெட்டுங்கள்' என்று குர்ஆன் கூறுகிறது. ஒரு சமூகத்தில் மக்கள் இறைவனுக்கு பயந்து திருடுவதிலிருந்து முற்றாக விலகிக் கொண்டனர். எனவே கையை வெட்டும் சட்டத்தை அந்த சமூகத்தில் நம்மால் பயன்படுத்த முடியாது. இந்த இடத்தில் குர்ஆன் சட்டத்தை பயன்படுத்த முடியவில்லையே என்று யாராவது சொன்னால் அதற்கு நாம் என்ன பதில் சொல்வோம்? அந்த பதிலையே இங்கும் கொடுத்துக் கொள்ளுங்கள். குழப்பம் நீங்கும்.

Anonymous said...

@ராவணன்

//எங்கள் ஊர் முனியாண்டிசாமியை வணங்காதவர்கள் மனிதகுலத்தில் சேர்த்தியில்லை.//

முன்பு கடவுள் இல்லை என்று கூறினார், பிறகு தான் தான் கடவுள் என்று கூறினார், தற்பொழுது "முனியாண்டிசாமியை" கடவுள் என்று கூறுகிறார்! ஐயோ! பாவம்.

"தம்பி! டாக்டர் இன்னும் வரல"

என்ன எந்த டாக்டரா???!!!

ஹா.. ஹா... ஹா..

Anonymous said...

@ராவணன்

//எங்கள் ஊர் முனியாண்டிசாமியை வணங்காதவர்கள் மனிதகுலத்தில் சேர்த்தியில்லை.//

முன்பு கடவுள் இல்லை என்று கூறினார், பிறகு தான் தான் கடவுள் என்று கூறினார், தற்பொழுது "முனியாண்டிசாமியை" கடவுள் என்று கூறுகிறார்! ஐயோ! பாவம்.

"தம்பி! டாக்டர் இன்னும் வரல"

என்ன எந்த டாக்டரா???!!!

ஹா.. ஹா... ஹா..

Maruthan said...

சுவனப்பிரியன் அவர்களே.... இந்த கேள்விக்கு பதில் காண்பது நீங்கள் சொல்வது போல எளிதானது அல்ல...

இப்போதும் உலகில் போர்கள் நடக்கின்றன... இப்போதும் வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அதனால் தோல்வி அடைந்த நாட்டில் உள்ள பெண்களை வெற்றி பெற்ற நாட்டை சேர்ந்தவர்கள் அடிமைகளாக துõக்கிச்சென்றால் ஏற்பீர்களா... உதாரணமாக ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும்....


குரான் எல்லா காலங்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால், அது அடிமைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை பற்றி கூறியிருக்கக்கூடாது, அடிமை முறையே கூடாது என கூறியிருக்க வேண்டும்.

இப்போது உங்கள் மனசாட்சியிடம் கேட்டு சொல்லுங்கள்..... முஸ்லிம்கள் இரண்டு தரப்பினராக இருப்பதாக வைத்துக்கொள்வோம்... ஒரு பிரிவினர் பின்பற்றும் குரானில்... முகமதுவிடம் அடிமைகள் யாருமில்லை... அவர் அடிமை முறையை வெறுத்தார்... அவற்றை ஒழிக்கும்படி கூறினார் ....இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பிரிவினரிடம் இருக்கும் குரானில் (தற்போது பின்பற்றப்படும் குரான்) அடிமைகளை நடத்தும் விதம் பற்றி முகமதுவின் விளக்கங்கள் உள்ளன. இவற்றில் ஏந்த குரான் எல்லா காலதிற்கும் ஏற்றது என கூறுவீர்கள்... ?

suvanappiriyan said...

திரு மருதன்!

//குரான் எல்லா காலங்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால், அது அடிமைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை பற்றி கூறியிருக்கக்கூடாது, அடிமை முறையே கூடாது என கூறியிருக்க வேண்டும்.//

போரில் பிடிபட்ட கைதிகள் விஷயத்தில் நான்கு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

1. பிடிபட்டக் கைதிக்குப் பகரமாக பணயத்தொகைப் பெற்றுக்கொண்டு அந்த கைதியை விடுதலை செய்தார்கள்.
2. போர் கைதிக்கு பகரமாக போர்கைதியை மாற்றிக்கொண்டார்.
3. போர் கைதிகளை அடிமைகளாக – அடிமைச் சந்தையில் விற்று விடுவார்கள்.
4. போர் கைதிகளிடம் வேலையை வாங்கிக்கொண்டு அதற்கு பகரமாக அவர்களை பராமறித்துக் கொண்டார்கள்.
இதுதான் அன்றையப் போர்களில் பிடிபட்ட கைதிகளின் நிலையாக இருந்தது. இதில் முஸ்லிம்கள் மட்டும் பிடிபட்ட போர் கைதிளை .//யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அனைவரும் சம உரிமை படைத்தவர்கள், அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்// என்று சொல்லியிருக்க வேண்டும் என்பது கவ்வைக்குதவாத, வாதமட்டுமல்ல, முஸ்லிம்களை கருவறுக்கச் செய்யும் வழியுமாகும்.
எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ”நீயும் நானும் சமம்” என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். இப்படி ஒரு படுபாதக நிலை இருப்பதோடு, ”நீயும் நானும் சமம்” என்று போர் கைதிகளை உட்கார வைத்து விருந்தும் போட முடியாது. இப்படி நியாயமான காரணங்களால் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்வதை மட்டும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
சுதந்திரமான தனி மனிதனின் உரிமையில் தலையிட்டு, அவனின் உரிமையை நசுக்கி அடிமையாக்கி தொழில் செய்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை மாறாக, அதை வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன்,
சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)

யாருக்கும் நஷ்டம் இல்லாமல் எவ்வாறு அடிமைகள் ஒழிக்கப்பட்டார்கள் என்பதையும் பார்ப்போம்.

9:60 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும் கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமுடையோன்.
இதுவன்றி, ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் ஃடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.
யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.
பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள். தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 33:50, 33:52, 33:55, 70:30)

Maruthan said...

//எதிரிகள் மட்டும் போர் கைதிகளை அடிமையாக்கிக் கொள்ளலாம், ஆனால் முஸ்லிம்கள் பிடிபட்டப் போர் கைதிகளை ”நீயும் நானும் சமம்” என்று விடுதலை செய்தால், விடுதலைப் பெற்றவன் மீண்டும் போருக்கு வரத்தான் செய்வான். //
இதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?
//யாருக்கும் நஷ்டம் இல்லாமல் எவ்வாறு அடிமைகள் ஒழிக்கப்பட்டார்கள் என்பதையும் பார்ப்போம்.//
இதைத்தான் நானும் கேட்டேன், குரான் அன்றைய சூழலுக்கு மட்டுமே ஏற்றதா என. இப்போது போர்க்களங்களில் யாரும் யாரையும் அடிமையாக்க தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானல் அடிமைகளை நடத்தும் முறை பற்றிய குரான் வசனங்கள் காலாவதியாகிவிட்டன சரியா?

suvanappiriyan said...

திரு மருதன்!

//இதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், பெண்களை ஏன் அடிமையாக்க வேண்டும்?//

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அங்கு அடிமைகளாக இருந்தனர். இரு பாலாருக்கும் பொதுவான தொல்லையாகவே இது இருந்தது.

//இதைத்தான் நானும் கேட்டேன், குரான் அன்றைய சூழலுக்கு மட்டுமே ஏற்றதா என. இப்போது போர்க்களங்களில் யாரும் யாரையும் அடிமையாக்க தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானல் அடிமைகளை நடத்தும் முறை பற்றிய குரான் வசனங்கள் காலாவதியாகிவிட்டன சரியா?//

இதை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்? மது கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஒரு ஊரில் மதுவை அனைவரும் தொடுவதில்லை. 'பார்த்தீர்களா? குர்ஆனின் சட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை' என்று யாராவது கூறினால் அவருக்கு நாம் என்ன பதில் கொடுப்போம். எனவே ஒரு தவறு சமூகத்திலிருந்து முழுவதுமாக நீங்கி விட்டால் அங்கு அந்த சட்டத்தை எவர் மீதும் அமுல்படுத்த முடியாதல்லவா?

Maruthan said...

நீங்கள் ஒளித்து மறைத்து கூறினாலும் இந்த சகோ(தரி) எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார் என்று பாருங்கள்

http://www.dailymail.co.uk/news/article-2000292/Men-allowed-sex-slaves-female-prisoners-job--WOMAN-politician-Kuwait.html

Dr.Anburaj said...

மருதன் அவர்களே சுவனப்பிரியன் அரேபிய கல்லறைக்கு நன்கு வௌளை அடிப்பாார். அரேபிய அடிமையான சுவனப்பிரியன் எப்போதும் அரேபியாவை மண்மூடிக்கொண்டு ஆதரிப்பாா். ரொம்ப விவாதம் செய்து பயன் இருக்காது. எனது பதிவுகளை படித்திருப்பீா்கள் என்க் கருதுகின்றேன்.