Followers

Monday, April 02, 2012

செல் போனும் கணிணியும் முக்கியந்தான்! அதற்காக இப்படியா! :-)



நாட்டு மக்களில் அதிகமானோர் கழிவறை கட்டிக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அவர்களுக்கு செல்போன் அவசியமாகி விடுகிறது.

-மத்திய அமைச்சர்

-------------------------------------------------



'நானும் உன் அப்பாவும் உனக்கு ஒரு தண்டனை கொடுக்கலாம் என்றிருக்கிறோம்!'

'ஏம்மா?'

'கணிணியே கதி என்று கிடக்காமல் இனி தினமும் ஒரு மணி நேரம் வெளியில் போய் விளையாட வேண்டும். புரிஞ்சுதா!'

'!!!!!!!!!'

9 comments:

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

நாம் எழுதுவது ஓட்டை எதிர்பார்த்தோ மகுடத்தை எதிர்பார்த்தோ அல்ல. இறைவனின் உண்மை மார்க்கம் அறியாத மக்களை உரிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதி வருகிறோம். எனவே இவர்களை அலட்சியம் செய்து விட்டு நம் பணிகளை தொடர்ந்து செய்து வருவோம்.

'உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம்' என்று அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் கூறினர்.'
-7:66

இதுதான் அவர்களின் நிலை.

Nasar said...

@ சுவனப்பிரியன் சொன்னது :
// 'உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம்' என்று அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் கூறினர்.'
-7:௬௬ //
இதைவிட பெருசா, சிறப்பா யாரும் சொல்லமுடியாது ....
புகழ் அனைத்தும் இறைவனுக்கே !!......

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//இதைவிட பெருசா, சிறப்பா யாரும் சொல்லமுடியாது ....
புகழ் அனைத்தும் இறைவனுக்கே !!......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

24. இஸ்லாம் மார்க்கமா? மதமா?

கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்பு கிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? - டி. பாலு, கோவை.

பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை.

மார்க்கம் என்றால் பாதை, வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்? என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம்.

மலஜலம் கழித்தல் முதல், மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல், பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், விசாரணைச் சட்டங்கள், உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும், புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத் தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

மதம் என்பது வெறி என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. (உம்: மதம் பிடித்த யானை) இதன் காரண மாகவும் முஸ்லிம்கள் இவ்வார்த்தையைத் தவிர்க்கின்றனர்.
-p.jainullabudeen

suvanappiriyan said...

25. முதலில் தோன்றிய மதம் எது?

கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார்.
ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா.


இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், கிறித்தவம், புத்தம் ஆகிய மதங்களின் தோற்றத்துக்கு வரலாற்றுக் குறிப்பு உண்டு. எனவே தான் இம்மதங்கள் தோன்றுவதற்கு முன் இந்து மதம் தான் இருந்தது என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்பது தான் வரலாற்று உண்மை.

இந்து மதம் என்றால் என்ன என்று அவரிடம் இலக்கணம் கேளுங்கள்! அவர் கூறும் இலக்கணத்தை 99 சதவிகிதம் இந்துக்கள் மறுப்பார்கள். ஆம். இந்து மதம் எது என்பதற்கு நூற்றுக்கணக்கான இலக்கணங்கள் உள்ளன. ஒவ்வொரு இலக்கணத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர்.

'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறித்தவர் இல்லையோ அவர் தான் இந்து' என்று எதிர் மறையாகத் தான் இந்துக்களுக்கு இந்திய அரசு இலக்கணம் கூறுகிறது.

இந்து மதம் என்ற பெயர் இம்மதத்திற்குரியது அல்ல என்று காஞ்சிப் பெரியவாள் கூட கூறியுள்ளார்.

எனவே, நூற்றுக்கணக்கான மதங்களை ஒருங்கிணைப்பதற்காகத் தான் இப்பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. சைவம், வைணவம், ஜைனம், சமணம் என்று பல நூறு மதங்களுக்கும் பொதுப் பெயராக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

இவற்றில் எது முதல் தோன்றியது என்பதில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால், அகில உலகுக்கும் ஒரு கடவுள் என்ற கொள்கை முதல் மனிதரிலிருந்தே இருந்து வருகிறது. இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் கூட ஓரிறைக் கொள்கை குறித்த குறிப்புகள் இன்றளவும் கிடைக்கின்றன. இக்கொள்கையின் பெயர் தான் இஸ்லாம்.. எனவே, கடவுள் ஒரே ஒருவன் தான் என்ற கொள்கை தான் முதல் கொள்கை. இக்கொள்கையில் இஸ்லாம் மட்டும் அறவே சமரசம் செய்து கொள்ளாமல் கடைப்பிடித்து வருகிறது என்பதை அவருக்கு விளக்குங்கள்!

-p.jainullabudeen.

Anonymous said...

பாஸ்,
your over obsessed with religion and its a psychiatric problem. Better consult some good psychiatrist.

//இறைவனின் உண்மை மார்க்கம் அறியாத மக்களை உரிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதி வருகிறோம். எனவே இவர்களை அலட்சியம் செய்து விட்டு நம் பணிகளை தொடர்ந்து செய்து வருவோம்//

By above statement you declare every other believe in the world is not true and hence you are trying to enlighten everyone in the world who doesnt follow islam. This is sheer non-sense. i see no difference between RSS way of thinking and yours.மொக்கைய போடாம போய் பொழப்ப பாருங்க ...ooops...sorry...இது தான் உங்க பொழப்புன்ன தமிழ்மணத்த தயவு செய்து நாரடிக்கதீங்க....நான் யாருக்கும் இவ்வளவு சூட பின்னூட்டம் இட்டதில்லை..ஆனால் உங்க ரௌசு தாங்க முடியல சகோ.

I just read tamilmanam to explore some quality blogs and all the time one or the other islamic posts are hanging in the front page which is really irritating. try to go beyond religion and think.

Raja

suvanappiriyan said...

திரு ராஜா!

//your over obsessed with religion and its a psychiatric problem. Better consult some good psychiatrist.//

இந்த அறிவுரையை மைனஜ் ஓட்டும், அதிலும் கள்ள ஐடியில் போட்டு வரும் உங்கள் சகாக்களுக்கு சொல்லவும். நகைச்சுவை பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டை குத்தி வரும் இவர்கள்தான் நல்ல மருத்துவரை அணுக வேண்டியவர்கள். :-)

//By above statement you declare every other believe in the world is not true and hence you are trying to enlighten everyone in the world who doesnt follow islam. This is sheer non-sense. i see no difference between RSS way of thinking and yours.//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதும் நமது முன்னோர்களின் வழக்கம். இடையில் இத்தனை சாதிகளும் இத்தனை கடவுள்களும் எப்படி வந்தது? என்று சிந்திததீர்கள் என்றால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள்.

//I just read tamilmanam to explore some quality blogs and all the time one or the other islamic posts are hanging in the front page which is really irritating. try to go beyond religion and think.//

ஒரு பதிவு உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதே பதிவு மற்றவர்களுக்கு மிகவும் பிடித்தும் இருக்கலாம். இஸ்லாமிய பதிவர்கள் வைக்கும் அனைத்து பதிவுகளும் தக்க ஆதாரங்களுடனேயே வருகிறது. எனவே இது படிப்பவரின் மன நிலையை பொருத்தது. என்னைப் போலவே எல்லோரும் சிந்திக்க வேண்டும் விரும்ப வேண்டும் என்பதும் அறிவுடையோருக்கு அழகல்ல.

Raja said...

Bro
You are a missing a point here . Since people are pissed off coz of lot of islamic or mokkai/copypaste posts, they are showing their agitation in different way ( i am neither one of them nor endorse their action). will you tolerate if somebody is keep on preaching you about Jewish or something you dont like or not interested?

///ஒரு பதிவு உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதே பதிவு மற்றவர்களுக்கு மிகவும் பிடித்தும் இருக்கலாம். இஸ்லாமிய பதிவர்கள் வைக்கும் அனைத்து பதிவுகளும் தக்க ஆதாரங்களுடனேயே வருகிறது. எனவே இது படிப்பவரின் மன நிலையை பொருத்தது. என்னைப் போலவே எல்லோரும் சிந்திக்க வேண்டும் விரும்ப வேண்டும் என்பதும் அறிவுடையோருக்கு அழகல்ல.////

Good point. But Can you please prove that your posts/ other islam bloggers posts (i am referring only those who do propaganda or preaching ) are appreciated by all or most of the tamilmanam audiences and not only by islam fundamentalists (off course you have all the rights to turn down my words) ?

I have no right to ask you to stop writing abt your believe but when you do the same on the forum which is not meant for it, people will reciprocate. Thanks for your understanding

Raja

suvanappiriyan said...

திரு ராஜா!

//You are a missing a point here . Since people are pissed off coz of lot of islamic or mokkai/copypaste posts, they are showing their agitation in different way//

நீங்கள் சொல்வது தவறு. இந்துக்களில் பெரும்பாலான சகோதரர்கள் இஸ்லாமிய பதிவுகளை விரும்பி படிக்கின்றனர். தனி மெயிலில் என்னிடம் பலர் தங்களின் எண்ணத்தை என்னோடு பகிர்ந்துள்ளனர். ஊடகங்கள் சித்தரித்த இஸ்லாத்துக்கும் நாங்கள் எடுத்து வைக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர்.

இந்த முயற்சியினால் முஸ்லிம்களின் மேல் உள்ள தப்பபிப்ராயம் விலகியுள்ளது. இதற்கு எதிராக களம் இறங்கியிருப்பவர்கள் மிக சொற்ப எண்ணிக்கையினரே! அதனால்தான் அவர்களுக்கு ஆதரவு இல்லாமல் என் பெயரிலும் மற்ற முஸ்லிம் பதிவர்கள் பெயரிலும் போலி ஐடிக்களை உருவாக்கி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர்.

நான் சொல்லும் கருத்து பிடிக்கவில்லை என்றால் படிக்காமல் சென்று விடலாம். அல்லது பின்னூட்டத்தில் தங்களின் கருத்தை வைக்கலாம். அல்லது எதிர் பதிவு போடலாம். அதை விடுத்து என்பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும் போலி ஐடிக்களில் மைனஸ் ஓட்டு குத்துவதும், பின்னூட்டம் இடுவதும் எந்த வகை நாகரிகம் என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் இதனால் எல்லாம் சளைத்து விடுபவர்கள் அல்ல நாங்கள். ஓட்டுக்காகவோ பின்னூட்டத்துக்காகவோ அதை எதிர் பார்த்தோ பதிவு எழுதுபவன் அல்ல நான்.

//Good point. But Can you please prove that your posts/ other islam bloggers posts (i am referring only those who do propaganda or preaching ) are appreciated by all or most of the tamilmanam audiences and not only by islam fundamentalists (off course you have all the rights to turn down my words) ?//

மற்றவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனது எந்த பதிவு உண்மைக்கு புறம்பாகவோ அறிவியலுக்கு புறம்பாகவோ வந்திருக்கிறது அல்லது மதமோதலுக்கு வழி வகுக்கிறது என்று பட்டியலிடுங்களேன் பார்ப்போம். நானும் தெரிந்து கொள்கிறேன்.

எனது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் முஸ்லிம்களை விட இந்துக்களே அதிகம் கௌ;விகளைக் கேட்டு பதில் பெற்றிருக்கிறார்கள். பழைய பதிவுகளை படித்து பாருங்கள். உண்மை விளங்கும்.