Followers

Friday, April 13, 2012

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும்!



“வானம் பிளந்து எண்ணையை ஒத்த மலரைப் போன்று சிவந்ததாக ஆகிவிடும் போது” -ஸூரா ரஹ்மான்
-குர்ஆன் 55:37





வானம் பிளந்து போகும் அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும். அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும்.



எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன.

விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.



இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன் படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

23 comments:

Rabbani said...

ஸலாம் சகோ
அருமையான படங்கள்
நல்ல விளக்கங்கள் மாஷா அல்லா
உங்களின் சுறுசுறுப்பு ........
நல்லவைகளை கண்டறிந்து பதிவிடும் ஆற்றலை உங்களுக்கு இறைவன் விசாலமடைய செய்வானாக

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
நேற்று இந்த வசனத்தை Mp3ல் கேட்டுக்கொண்டிருந்த போது, வானம் ரோஜாவைபோல் சிவக்குமா என்று வியந்து அது எப்படியான நிகழ்வாக இருக்கும் என்று யோசித்து
கொண்டிருந்தேன். அல்லாஹ் உங்கள் மூலம் விளக்கத்தை என்க்கு இவ்வளவு விரைவாக விளங்கவைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை சகோதரா! அல்லாஹ் உங்கள் ஞானத்தை என் போன்றவர்களுக்காக இன்னும் அதிகப்ப்டுத்தி எமக்கும் நல்லருள் புரிவானாக!

suvanappiriyan said...

சலாம் சகோ ரப்பானி!

//ஸலாம் சகோ
அருமையான படங்கள்
நல்ல விளக்கங்கள் மாஷா அல்லா
உங்களின் சுறுசுறுப்பு ........
நல்லவைகளை கண்டறிந்து பதிவிடும் ஆற்றலை உங்களுக்கு இறைவன் விசாலமடைய செய்வானாக//

இறைவனுக்கே புகழ் அனைத்தும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ ஜபருல்லாஹ்!

//அஸ்ஸலாமு அலைக்கும்,
நேற்று இந்த வசனத்தை Mp3ல் கேட்டுக்கொண்டிருந்த போது, வானம் ரோஜாவைபோல் சிவக்குமா என்று வியந்து அது எப்படியான நிகழ்வாக இருக்கும் என்று யோசித்து
கொண்டிருந்தேன். அல்லாஹ் உங்கள் மூலம் விளக்கத்தை என்க்கு இவ்வளவு விரைவாக விளங்கவைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை சகோதரா! அல்லாஹ் உங்கள் ஞானத்தை என் போன்றவர்களுக்காக இன்னும் அதிகப்ப்டுத்தி எமக்கும் நல்லருள் புரிவானாக!//

மிக எளியோனான எனக்கு இந்த அளவு வாய்ப்பையும் பதிவு இடுவதற்கு நேரத்தையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ்.. நல்ல பகிர்வு சகோ... அல்லாஹ் உங்கள் அறிவை விசாலமாக்குவானாக...

suvanappiriyan said...

புனை பெயரில்!

//கேட்க நல்லா தான் இருக்கு… ஆனா நீங்கள் பிறப்பால் தானே முகமதியர்.//

இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்து விட்டதனால் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது. அரசு கெஜட்டில் வேண்டுமானால் 'முஸ்லிம்' என்று பதிந்து கொள்ளலாம். ஆனால் குர்ஆன் சொன்ன வழிபடி அந்த முஸ்லிம் நடந்தால்தான் இறைவனின் பொருத்தத்தை பெற முடியும்.

//சரி அடிமைகள் தேசத்தில் சரிசமமாக நடத்துகிறார்களா..? ஒழுக்கமாக இருக்கிறார்களா…? பஹ்ரேன் பாலத்தில் வியாழ்ன் வெள்ளி அதிக டிராபிக் ஏன் என்று சொல்லாமே..?//

ஒரு காலத்தில் அடிமைகள் கட்டக்கடங்காமல் இருந்து முகமது நபியின் கட்டளையால் அவரது காலத்திலேயே அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் நமது பாரதத்திலோ ஒரு தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிக்கும் நிகழ்ச்சி சமுpபத்தில் நடந்ததை மறந்து விட மாட்டோம். இன்றும் சிரட்டையில் தேனீர் கொடுப்பதும், இரட்டை குவளை முறையும் ராமநாதபுரம், மதுரைகளில் நடந்து வருவதை மறுக்க முடியுமா? கோவிலில் தேர் இழுக்கவே அவர்களை அனுமதிப்பதில்லை. தெருக்களில் செருப்பை கைகளில் தூக்கிக் கொண்டு செல்வதும், மேல் சாதியினரை பார்த்தால் கூழை கும்பிடு போடுவதும் நமது பாரதத்தில் இன்றும் நடக்கும் நிகழ்ச்சி. 'அடிமை தேசம்' என்று நமது பாரதத்தை வேண்டுமானால் சொல்லுங்கள்.

சவுதிகளிடம் உள்ள பணமும் வசதியும் நம் நாட்டவரிடம் இருந்தால் அதை விட மோசமாக நடந்து கொள்வார்கள். பணம் அதிகம் புரள்வதால் சிலர் சந்தோஷத்துக்கு பஹ்ரைனை நாடுகின்றனர். இது தவறு என்று பள்ளியில் போதனையும் செய்யப்படுகிறது.

//அப்பாடியோ உலகின் சிறந்த கண்டுபிடிப்பு… ஒரே கலர் உடை என்றால் ஈக்குவாலிட்டி வருமா..?//

எங்களிடம் வந்திருக்கிறதே! 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியனின் சொல் ஹஜ் நேரத்தில் நிறைவேறுவதை கண் கூடாகப் பார்க்கலாம். இந்த வருட ஹஜ்ஜை நேரிடையாக ஒளிபரப்பும் போது பார்த்து மகிழுங்கள்.

ஒரே ஹிந்து மதத்தில் கட்டி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்டவனை ஒரு முறையாவது வேதம் கற்பித்து அவனை புரோகிதராக மாற்ற உங்கள் மனம் இடம் கொடுக்குமா? ஆனால் அவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவனுக்கு குர்ஆனை கற்பித்து பள்ளியின் தலைவராக தொழுகை நடத்துபவராக மாற்றப்பட்டுள்ளதை தமிழகத்தின் பல கிராம நகர மசூதிகளில் பார்க்கலாம். இதுதான் உண்மையான புரட்சி.

//ஆண்கள் முண்டாசு துணி ஏன் சிவப்பு புளூ என்று வேறுபாடு..? படித்த சௌதி பெண்களிடம் பேசிப் பார்த்திருக்கிறீர்களா..?//

அது அரபு உடைக் கலாசாரம். நீங்கள் பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதும் மடிசார் புடவை கட்டிக் கொள்வதும் உங்கள் அடையாளம் என்பது போல். இந்த வேறுபாட்டை வைத்து ஒரவனை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வேறுபாடு காட்டுவதைத்தான் எதிர்க்கிறோம்.

ஒருவகையில் உங்களைப் போன்றவர்கள் நன்மை செய்திருக்கிறீர்கள். உங்கள் மூதாதையர் எங்கள் மூதாதையர்களை கொடுமைபடுத்தாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்று முஸ்லிம்களாக மாறி இருக்க முடியாது. :-)

//இதெல்லாம் விடுங்கள், நீங்கள் உங்களை விட ஏழையான, உங்களை விட குறைந்த அழகுள்ள, உங்களை விட உடல் பலமற்ற, நோய் உள்ள, படிக்காத, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலைகொண்ட ஒருவரை நீங்களோ இல்லை உங்கள் வாரிசோ திருமணம் செய்வீர்களா..?//

ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கும் சமூகத்தில் ஒருவனை சுயமரியாதையோடு நடத்துவதற்கும் வித்தியாசம் இல்லiயா? வர்ணாசிரமம் எந்த அளவு உங்கள் கண்களை மறைக்கிறது என்பது தெளிவாகிறது.

//வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே வாழ்வின் நாக்ரீகம்..//

ஆக தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டும். பேசாமல் முன்பு ராஜாஜி கொண்டு வர முயற்ச்சித்த 'குலக்கல்வித் திட்டத்தை' ஜெயலலிதாவிடம் சொல்லி உடன் அமுல்படுத்தச் சொல்லுங்கள். இந்தியா வெகு சீக்கிரம் முன்னேறி விடும். :-)

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//மாஷா அல்லாஹ்.. நல்ல பகிர்வு சகோ... அல்லாஹ் உங்கள் அறிவை விசாலமாக்குவானாக...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.குரான் வசனங்களுடன் கூடிய படங்களும் மிக அருமை.அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை அதிகப் படுத்துவானாக.

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அருமையான விளக்கங்கள் சகோதரா

கேள்விகளுக்கு பொறுமையாக பதில்கொடுக்கும் உங்களுக்கு அல்லாஹ் பொறுமையையும், கல்வி ஞானத்தை அதிகபடுத்திதருவனாக.(Ammen)

suvanappiriyan said...

சலாம்! சகோ முஹம்மது இக்பால்!


//மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.குரான் வசனங்களுடன் கூடிய படங்களும் மிக அருமை.அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை அதிகப் படுத்துவானாக.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ நிஜாம்!

//அருமையான விளக்கங்கள் சகோதரா

கேள்விகளுக்கு பொறுமையாக பதில்கொடுக்கும் உங்களுக்கு அல்லாஹ் பொறுமையையும், கல்வி ஞானத்தை அதிகபடுத்திதருவனாக.(Ammen)//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

//"ஆகு" என்றால் ஆகிவிடும்!
அப்படியானால் இறைவனும் இறந்துபோக முடியும் அப்படித்தானே?//

"நான் இனியெப்போதும் தோன்றாதவாறு முற்றிலும் அழிந்து போகுமாறு ஆகுக..." என்று இறைவன் சொன்னால் அது அப்படியே ஆகிவிடுமா?

அப்படியானால் இறைவனும் இறந்துபோக முடியும் அப்படித்தானே?//

'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்க்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்'
-குர்ஆன் 3:2

இறைவனுடைய பண்புகளில் ஒன்று அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அந்த தன்மைக்கு மாற்றமாக இறைவன் எப்படி கட்டளை இட முடியும்? வெகு சாதாரணமான இந்த சிந்தனை உங்களுக்கு ஏன் வரவில்லை நண்பரே!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//ஆப்கானிஸ்தான், இந்தியா, போன்ற பகுதிகளிலும் அடிமை முறையை புகுத்தியது முஸ்லீம்களே. வடக்கு கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான அடிமைகளை வைத்திருந்தது முஸ்லீம்களே. வரலாற்றாசிரியர்கள் இந்தியாவுக்கு அடிமைமுறையை கொண்டுவந்து அந்த அடிமைகளை மதம்மாற்றியது முஸ்லீம்களே என்று கூறியுள்ளார்கள்.//

ஹா..ஹா...நகைச்சுவையாக இதுபோன்று நிறைய எழுதுகிறீர்கள். உங்கள் ஆட்களே நீங்கள் சொல்லும் பொய்களை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் மனசாட்சியையே இன்னொருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்

“ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!” (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)


ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

suvanappiriyan said...

....“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.
“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி’ என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி’ அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

“இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.”
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;

“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.”
“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.”
பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை’யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த’ ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை’யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!////

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_2.php -
.

Anonymous said...

வட இந்தியாவிலிருந்த அடிமை முறை பற்றி நன்றாகச் சொன்னீர்கள், சுவனப்பிரியன். இப்போது தென்னிந்தியாவிலிருந்த அடிமை முறை பற்றியும் கூற வேண்டாமா?

"சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆன்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள்."

- http://ta.wikipedia.org/wiki/சோழர்காலச்_சமுதாயம்

இவண்,
முஹம்மது

Anonymous said...

ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய "தமிழகத்தில் அடிமை முறை" என்ற நூலிலிருந்து:

சங்க காலத்தில் அடிமை முறை என்ற பகுதியில் மருத நிலப்பகுதியில் அடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுகிறார் “சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வந்த மருத நிலப்பகுதிகளிலும் அடிமை முறை வழக்கிலிருந்தது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்டிரையும் சிறை பிடித்து வந்ததைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சிறை பிடித்துக்கொண்டு வரப்பட்ட பெண்கள் காவிரி பூம்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனைக் கூறும் பொழுது “கொண்டி மகளிர்” என்று இவர்களைப் ‘பட்டினப் பாலை’ ஆசிரியர் குறிப்பிடுகிறார். (22)

பல்லவர்கள் காலத்தில் வேளாண் பெருக்கம் காரணமாக அடிமை முறை விரிவடைந்தது. இப்பொழுது உள்ள முறையில் “ஆள்” என்று அடிமைகள் குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல்லைச் சுந்தரர் பல இடங்களில் பயன்படுத்தியதைச் சுட்டிக் காட்டுகிறார். “கூழாள்” என்ற சொல் பெரியாழ்வார் பாடலில் இடம் பெறுகிறது. இது பற்றிப் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பல்லாண்டு வியாக்கியானத்தில் ‘கூழாள்’ என்ற சொல்லிற்கு “சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை” என்று விளக்கம் எழுதியுள்ளார் (பக். 29) அடிமைத் தொழில் இழிவாக இக்காலகட்டத்தில் கருதப்பட்டதைப் பல சமய இலக்கியச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார்.

சோழர் காலத்தில் அடிமை முறை இன்னும் விரிவாக்கம் பெற்றது. அடிமைகள் குறித்த பல கல்வெட்டுச் சான்றுகள் சோழர் காலத்தில் கிடைக்கின்றன. போர் அடிமைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். (34) வீட்டடிமைகள் என்ற வழக்கமும் இருந்தது. சுந்தரர் கதை இதற்குச் சிறந்த உதாரணம் (35) இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பின்வரும் முடிவுகளை ஆ. சிவசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

(1). அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது, (2). அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை, (3). அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு. இதற்கு ஆளோலை என்று பெயர், (4). ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிக் கையெழுத்தும் இருக்கும், (5). தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு, (6). அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றத்தில் முறையிடலாம், (7). தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையை ஊரவை உறுதிப்படுத்தும் (36) சோழர் காலத்தில் கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் அடிமைகள் இருந்தனர். இவற்றிற்கு அடிமைகளைத் தானமாகக் கொடுத்தனர்.

அடிமைகள் வேளாண்மையிலும், அது சார்ந்த தொழில்களிலும் இடம் பெற்றிருந்தனர். “உவச்சர் பறை கொட்டும் பணியினைச் செய்தனர். அடிமைகளுக்கு முத்திரையிடப்பட்டது. (சைவத்தில் உள்ள தீக்கையும், வைணவத்தில் உள்ள சமாச் சரணமும் இந்த வகையைச் சார்ந்தவை) அடிமைகளுக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. (பக். 40).

இதன் நீட்சியாக மராட்டியர்கள் கால அடிமை முறையைக் காட்டுகிறார். இந்த அதிகாரத்தில் அடிமைகள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றியும் கூறுகிறார். இதற்கு முழு உதாரணமாக ‘ஒடைப்பிலே போடு’ என்ற சொல்லாக்கத்திற்கு ஒரு உதாரணம் காட்டுகிறார்.

“எப்பொழுதாவது ஒரு குளத்தில் அல்லது ஆற்றில் கரை உடைந்துவிட்டால் அதற்கு தெய்வத்தின் அல்லது பிசாசின் கோபமே காரணம் எனக் கருதி, அவற்றின் கோபத்தைத் தணிக்க ஓர் அடிமையை அந்த உடைப்பில் தள்ளி, அவர் மேல் மண்ணைப் போட்டு மூடி அவரைப் பலி கொடுத்து விடுவார்கள்..... இந்தப் பயங்கரமான பழக்கம் அவ்வளவு பரவலாக இருந்ததன் விளைவாக அது ஒரு பொதுவான பழமொழிக்கே வழிவகுத்தது! இவன் என்னத்துக்கு ஆவான்! ஒடைப்பிலே போட்டு மண்ணைச் சுமக்கவா?” என்று கூறுவர். அதாவது இவன் உடைப்பில் உயிருடன் போட்டுப் புதைப்பதற்கன்றி வேறெதற்கும் லாயக்கில்லை என்பதாகும்” (58/59).

Anonymous said...

தமிழகத்தில் அடிமை முறை:

அடிமை முறையின் ஒரு அருவருக்கத்தக்க அம்சம் தேவரடியார்கள் முறை. இது பிற்காலச் சோழர் காலத்தில் வளர்ந்ததென்று இவர்களுக்குச் சுயத்தன்மை உண்டு என்றாலும், இவர்களைக் கோயில்களுக்குத் தானமாக அளித்தனர். போரில் பிடித்த பெண்களைத் தேவரடியார்களாகத் தானமளிப்பது பெண்களை விலைக்கு வாங்கித் தானமாக அளித்தது இந்த இரு கூறுகளில் இதில் காணலாம். இவர்கள் தவறு செய்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் (61) ‘பொட்டுக்கட்டுதல்’ என்ற நிகழ்ச்சி வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இருந்தது.

“பாலியல், பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொது மகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல். சமய முத்திரையின் வாயிலாக வரை முறையற்ற பாலுறவு புனிதமாக்கப்படுகிறது” (67) (இன்றைக்கும் கூட பெருமாள் கோயில்களில் பெருமாள் “தேவடியாக் குடிக்குச்” சென்று வருவது ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது).

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குடும்பத்துடன் அடிமையாக்கப்பட்ட கொத்தடிமைகள், பண்ணையடிமைகள், படியாள் என்ற முறையும், தஞ்சைப் பண்ணையாள் முறை என்பதும் வழக்கத்தில் இருந்தது. இந்தப் பண்ணையாள் முறையை ஒழிப்பதற்கு மணலி சி. கந்தசாமி தலைமையிலான போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (82)

“முழங்கால் வரை இருந்த சேலையை / கணுக்கால் வரை கழுத்து விட்டதாரு / மணலி கந்தசாமி என்று கூறு” (82) இவர்கள் தவிர ஆங்கில ஆட்சியில் மலைத்தோட்ட அடிமைகளும் உருவாயினர்.

இந்த நூலில் அவர் மிகக் கவனமாக அடிமைமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் இங்கு நிலவியது அடிமைச் சமுதாயம் அல்ல. அடிமை முறை மட்டுமே இருந்தது. இது மேற்கத்திய முறையில் இருந்து மாறுபட்டு இருந்தது. சமூக அமைப்பு புராதன இனக்குழு மக்கள் அமைப்பு, அடிமைச் சமுதாயம், நிலஉடைமைச் சமுதாயம், முதலாளித்துவச் சமூகம் என்றபடி மூளை வளர்ச்சி நம்மிடையே நேர்கோட்டுப் பாதையில் இடம் பெறவில்லை. ஆசிய உற்பத்தி முறை என்று மார்க்ஸ் அழைத்ததற்கு ஏற்ப இங்கு அவற்றில் ஒருவகைத் திணை மயக்கம் ஏற்பட்டு இருந்தது. இவற்றை கா. சிவத்தம்பி சமச்சீரற்ற வளர்ச்சி என்று அழைக்கிறார். சங்ககாலத்தில் ஐவகை நிலங்களில் அடிமைகள் மருத நிலத்தில் மட்டுமே இருந்தனர். சமுதாயமாக அல்ல ஏனென்றால் அடிமைகள் சமுதாயமாக இயங்குவதற்குரிய உபரி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் அடிமைகளின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. இது பற்றி ஆசிரியர் கூறுகிறார்:

“நில உடைமைச் சமூக அமைப்பு சோழர் காலத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்திருந்தது. அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும் வேளாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுடன் கோயிலும் இணைந்து கொண்டது” (பக். 87) இங்குக் கோயில் என்பது தனி சக்தியாகக் காண்பதை விட பிராமணிய வேளாண் சமூகத்தின் ஒரு அடக்குமுறைச் சாதனமே என்றும், அது அந்த அமைப்பின் பிரதிபலிப்பு என்றும் காண்பது நல்லது. இதன் பின்னர் உருவாகும் கருத்தியலை ஆசிரியர் சரியாகவே விளக்குகிறார்.

“தமிழகத்தில் தோன்றிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அடிமைகளை உருவாக்க, பிராமணியம் அடிமைகளைத் தீண்டத் தகாதவர்களாக மெல்ல மெல்ல மாற்றியது எனலாம்” (பக். 8) இதன் விளைவாக “ஐரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத் தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. “இந்திய அடிமை முறையானது ஐரோப்பிய அடிமைமுறையை விட மோசமாக இருந்தது (பக். 87). ஐரோப்பிய அடிமைகள் அறிவுசார்ந்த துறைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியாவில் அறிவு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஐரோப்பிய அடிமைகளை விட அதிக சுதந்திரம் உள்ளவர்கள் போல இந்திய அடிமைகள் தென்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய அடிமைகளைவிட அதிகமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர். அடிமைகளின் பணியை மேற்பார்வையிட “ஊரில் உள்ள ‘சபா’ என்ற பிராமணரின் ஊராட்சி மன்றமும் ‘ஊர்’ என்ற ஏனையோரின் ஊராட்சி மன்றமும் ஏற்றுக் கொண்டிருந்தன” (பக் 95).

மடத்துக்குளம் கொடத்துக்கள்ளு said...

////அப்பாடியோ உலகின் சிறந்த கண்டுபிடிப்பு… ஒரே கலர் உடை என்றால் ஈக்குவாலிட்டி வருமா..?//

எங்களிடம் வந்திருக்கிறதே! 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியனின் சொல் ஹஜ் நேரத்தில் நிறைவேறுவதை கண் கூடாகப் பார்க்கலாம். //

அவ்வளவு தூரம் செல்வானேன்? மார்கழி சீசனில் சபரிமலையிலும், சஷ்டியின்போது திருச்செந்தூரிலும் காணலாமே?

மனமிருந்தால் மார்க்கமுண்டு.

ஷிவாஸ் ரீகல் said...

இவ்வளவு நுணுக்கமா விவரிச்சு சொன்ன அல்லா வானம் சுருட்டக்கூடிய பாய்னு சொல்லி சாச்சுபுட்டாரே?

Seeni said...

good msg!
good picture!

thanks!

suvanappiriyan said...

திரு ஷிவால் ரீகல்!

//இவ்வளவு நுணுக்கமா விவரிச்சு சொன்ன அல்லா வானம் சுருட்டக்கூடிய பாய்னு சொல்லி சாச்சுபுட்டாரே?//

எந்த இடத்துல சொல்லியிருக்காரு. சொன்னீங்கன்னா நானும தெரிஞ்சுக்குவேன்.

suvanappiriyan said...

சகோ சீனி!

//good msg!
good picture!

thanks!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Dr.Anburaj said...

சுவனப்பிாியன்

முஹம்மதுவின் காலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்படவில்லை.பின்னும் தொடா்ந்தது.

அாிச்சந்திரன் தனது மனைவியையும் மகன் லோகிதாசனையும் காசியில்

வைத்து ஏலம் போட்டான் என்றுள்ளது.

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்நது மெ து வா க பாிணாமம் அடைந்து பண்பாடு பெற்று வளா்ந்து வருகின்றான். உலகம் முழவதும் அனைத்து நாடுகளிலும் அதுதான் நிலைமை. இந்தியாவிலும் நல்ல முயற்சிகளுக்கு அப்பால் மனிதன் அரக்கனாகவே வாழந்து வருகின்றான். என்பது உண்மை.இன்றும் ஸ்ரீராமனுக்கும் சீதைக்கும் பஞசமில்லை. சுா்ப்பநகைக்கும் பஞ்சமில்லை. பாண்டவா்களும் உண்டு கௌரவா்களும் இருக்கின்றாா்கள்.
ஒரு ஆணின் ஈரலை எடுத்து உண்ட கொடூம்புத்தி பெண்ற பெண் முஹம்மது காலத்தில் வாழ்ந்தது தாங்கள் அறீவீா்கள்.

நபி ரசுல் என்று சிறப்பித்து பேசிய மக்கள் மற்றும்நபி தோழா்கள் நபியின் மறைவிற்குப் பின் பதவி அதிகாரம் ஆட்சி என்று வரும் போது என்ன வெல்லாம் தகிடுதத்தங்களைச் செய்தாா்கள் என்பதை தாங்கள் நன்கு அறீவீா்கள்.

நபியின் மகள் பாத்திமா கடைசிவரை அபுபக்கா் கலிபா ஆனதை ஏற்கவில்லை. பாத்திமா வசம் இருந்த சில சொத்துக்களை அபுபக்கா் அரசுக்குச் சொந்தம் என்று எடுத்துக் கொண்டாா்.
பாத்திமாவிற்கும் அபுபக்கருக்கும் பேச்சே கிடையாது. கா்ப்பிணியாக இருந்த பாத்திமாவை 2-ம் கலிபா உமா் தவறுதலாக கீழே தள்ளிவிட்டதனால் கருச்சிதைவு ஏற்பட்டு பாத்திமா இறந்தாா் என்று இணையதகவல் படித்தேன்.

3-ம் கலிபா உதுமான் மென்மையானவா். ஆனால் அவா் கொலை செய்யப்படுகின்றாா்.

கொலை செய்தவன் யாா் என்று முடிவு செய்யப்பட்டுள்ள தகவலை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.ஆனால் அனைவரும் முஹம்மதுவின் மருமகன் அலி யை சந்தேகம் கொள்கின்றாா்கள்.

முஹம்மது நபியின் மகளை திருமணம் செய்த அலியாவது நிம்மதியாக ஆட்சி செய்தாரா என்றால் அதுதான் இல்லை.அவா் காலத்தில்தான் அதிக குழப்பம்.அவரது அதிகாரத்தை கைப்பற்றிட நபியின்ன மனைவியே ஆயிசாவே அலிக்கு எதிராக படை திரட்டி-முஸ்லீம்களும் முஸ்லீம்களும் முதல் முதலில் யுத்தம் செய்கின்றாா்கள்.பி்ன்னால் முஹம்மதுவின் மகள் குடும்பமே அடியோடு அழிக்கப்படுகின்றது.முஹம்மதுவை மக்கள் உண்மையாக நேசித்திருந்தால் அவாின் குடும்பத்தை மக்கள் நேசித்து இருப்பாா்கள். ஆனால் முஹம்மதுவின் குடும்பம் மக்களின் வெறுப்பிற்கு அளாகி அழிந்து போய்விட்டது என்றுதான் வரலாறு உள்ளது.முஹம்மது வின் குடும்பம் மீது ஏன் இந்த வெறுப்பு ? நன்றி கெட்டகூட்டமா ?

இதில் பழைய இந்தியாவில் அடிமை முறை இருந்தது என்று ஆதாரங்களைக் திரட்டி ஏன் பழிபோட முயற்சிப்பது ஏன் ? இந்தியாவை மலினப்படுத்தி பாா்ப்பதில் முஸ்லீம்களுக்கு அரபு அடிமைகளுக்கு எப்போதும் சந்தோசம்தான்.

தற்சமயம் உள்ள சமய புத்தகங்களில் ”யுத்தத்தில் கைபற்றிய பெண்களை எத்தனைபோ்களளை வேண்டுமானாலும் அடிமைப் பெண்களாக -காமசுகத்திற்கு மட்டும்-வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் ஒரே புத்தகம் குரான் தான் . படிப்பதற்கு அசிங்கமாக உள்ளது.அதில் பீற்றல் வேறு.