Followers

Saturday, April 21, 2012

நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!


நபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்!


'இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் ' 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய பயணம் இறைவனும் அவனது தூதரும் சொன்ன கட்டளையின்படி அமையுமோ அவரின் பயணத்தை அவ்வாறே இறைவன் கருதுவான். மேலும் எவருடைய பயணம் உலகத்தை குறிக்கோளாக கொண்டிருக்குமோ அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கமாக இருக்குமோ அவர் நினைத்ததற்க்கேற்பவே அவரது பயணம் அமைந்து விடுகிறது.'

அறிவிப்பவர் உமர் கத்தாப்

ஆதாரம் புஹாரி 54   

இந்த நபி மொழியிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:

1. நாம் செய்யும் எந்த காரியத்திற்கும் இறைவனின் பொறுத்தம் இருக்கிறதா என்று தேர்ந்தெடுத்து செய்தால் அதற்குரிய கூலியை இறைவன் தந்து விடுகிறான். அது வணக்கமாகவும் கருதப்படுகிறது.

2. எண்ணங்களின் பிறப்பிட்ம் உள்ளமாகும். அந்த உள்ளத்தை தூய்மையாக்கி செய்யும் காரியத்தை இறைவன் விரும்புகிறான். அதற்கான கூலியையும் இந்த உலகிலும் மறு உலகிலும் தருகிறான்.


இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594

பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.

22 comments:

ப.கந்தசாமி said...

அருமையான கருத்துக்கள்.

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

நல்ல பகிர்விற்கு நன்றி சகோ... உங்கள் பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக...

suvanappiriyan said...

திரு பழனி கந்தசாமி!

//அருமையான கருத்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//நல்ல பகிர்விற்கு நன்றி சகோ... உங்கள் பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்....சகோஸ்,
அருமையான நபி மொழிகள் ...
எளிமையான விளக்கங்கள் ...
தொடரட்டும் உம பனி (இறைநாடினால்)

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//அஸ்ஸலாம் அலைக்கும்....சகோஸ்,
அருமையான நபி மொழிகள் ...
எளிமையான விளக்கங்கள் ...
தொடரட்டும் உம பனி (இறைநாடினால்)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?

கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும். -எம். திவான் மைதீன், பெரியகுளம்

பதில்: இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். இதைத் திருக்குர்ஆன் 2:282, 5:106 ஆகிய வசனங்களில் காணலாம். திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான்.

ஆனால் ஒரு பெண்ணுடைய கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்துவது சாதாரண ஒப்பந்தம் போன்றது அல்ல. அவதூறு சுமத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். விபச்சாரம் நிரூபிக்கப் பட்டால் அளிக்கும் தண்டனை மிகவும் கடுமையானது. இரண்டு நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்க முடியாது.

எனவே தான் பெண்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்துவோர் குறைந்த பட்சம் நான்கு சாட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க வேண்டும். ஆணுக்கு எதிராக விபச்சாரக் குற்றம் சுமத்தினாலும் நான்கு சாட்சிகள் நேரடியாகப் பார்த்ததாகக் கூற வேண்டும், என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது.

அது மட்டுமின்றி நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் இது பற்றி யாரேனும் பேசினால் அவ்வாறு பேசியவர்களுக்கு எண்பது கசையடி வழங்க வேண்டும் என்றும், நீங்கள் சுட்டிக் காட்டும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை ஒருவரோ இருவரோ கண்டால் கூட அதைப் பரப்பத் தடை விதிக்கப்படுகிறது. நான்கு பேரும் நேரடியான சாட்சிகளாக இருக்க வேண்டும்.

இதில் கணவனுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கிறது. தன் மனைவியைத் தகாத நிலையில் பார்க்கும் கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் அதன் பின்னர் அவன் அவளுடன் வாழத் தயங்குவான். எனவே பிரிந்து விட அவன் விரும்பினால் நான்கு தடவை சத்தியம் செய்து கூறி பிரிந்து விட வேண்டும்.

கற்பு விஷயத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றம் சுமத்துவதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், பெண்களின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அற்புதமான சட்டத்தை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது. எந்த நாட்டிலும் இத்தகைய அற்புதமான சட்டம் இருபதாம் நூற்றாண்டில் கூட இல்லை. சர்வ சாதாரணமாக கிசுகிசுக்கள் பரப்படுகின்றன. இத்தகைய ஒரு சட்டம் உலகில் நடைமுறைப் படுத்தப் பட்டால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும்.

-P.Jainullabdeen

suvanappiriyan said...

சிந்திப்பது இதயமா? மூளையா?
குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.
- எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.


......

suvanappiriyan said...

....இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

-P.Jainullabdeen

Anonymous said...

Amudhan says:
April 19, 2012 at 3:54 pm

Hi friends,

I write here in English because I don’t have Tamil facility in my place. (pls forgive me )

(1) The caste of sytem Muslims is not like caste system of Hindus.

The mulsim caste system cannot be called as a caste sytem in its true meaning because it was division of people happened naturally based on geography, language, races etc. and Islam doenot prescribe or allow any caste sytem within human beings.

It says God created peole in different color, diff languages etc to identify each other and there is no descrimination among human being based on these.

Where as in Hiduism, as per Manu the caste system is prescribed by the religion and it has a well said top down Hirearachy based on birth and still followed by the cultural , social and political setups.

(2) Among Muslims, marriage between any two groups within Islam is not banned , rather it is recomended.

But grops among Muslims exits at apoinmt of time always.
Slowly the groups shall get merged in Time. for example Muslims from some part of Tamilnadu was not willing to marrry Mulsims from some other part of Tamilnadu . But this gets vanished in the present socio econmical scenario. Even Tamil Muslims choose thier bride from Malayali Muslims is happening for a long time. (of course Urdhu & Tamil maarriages are not common, because of the big language/culture differnece.)
Alos this is not seen as a Purtchihar thirumanam or intercaste marriage . It is percieved as a normal one.

Is this possible within Hindu fold?

(3) Caste system in Hindus putforth Brahmins as top most /sacred people who are closer to God.
and we know about the Varnaashrama (a)dharma.

But you can’t find such things in any other religious texts.

(4) The motive of Mohamed and Quran was to abloish Slavery. Mohamed tried to to do it step by step, because sudden ban on this then exitng sytem was not easy.
The ultimate motto is abolishing it.

Now the slavery system has been abolished (not only by Islam but also by the social and econmical changes in the History) and is not prevailing anywhere in the (islamic)world and hence the rules putforth by Mohamed/Quran for the welfare/betterment of the slaves have only text value, and no practical applicability now.

(5) I can see the motto of the people involved in this discussion to degrade Islam and to justify the bad Hierachical caste sytem based on Manu. They use Ambedkar also for this. These peple really dont write ever about the uplitment of Dalits or abolishment of Caste sytem within Hindu fold. Are they ready for intercaste marriage? atleast they support or recommend it?
Ambedkar’s view is for the freedom of Dalits. As per the then staus of Muslim comminty he saw the evidence of similar issues in the Muslim community too and he denied the convertion into Islam. That may be a good decision then.

I have below the question:

why intellectuals from Brahmin community like Malar Mannan always wants to grow hatred on Muslims?
Is it the only way to deviate the hatred on Brahmins from the other backward or Dalit groups?
There is no other way? please think , sir.
Sir, you are working for triggering fights , communal clashes, bloodsheds,to safe guard the welfare of a small community.
Is it the only way? Is it right way?
Reply

Anonymous said...

Mr Anonymous,

///why intellectuals from Brahmin community like Malar Mannan always wants to grow hatred on Muslims?///

Intellectuals comment or criticise any religion or dogma in a civilised manner, and they do not wish to propagate hatred to any religion or ethnicity, even if they differ.

The person you quoted, is not an intellectual, but rather he is a person with characteristic of ignorance.

- Ismath

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,மாஷா அல்லாஹ்

அருமையான நபி மொழிகளை அறியத்தந்ததற்கு ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

suvanappiriyan said...

சலாம் சகோ இஸ்மத்!

//Intellectuals comment or criticise any religion or dogma in a civilised manner, and they do not wish to propagate hatred to any religion or ethnicity, even if they differ.

The person you quoted, is not an intellectual, but rather he is a person with characteristic of ignorance.

- Ismath//

வருகைக்கும் சில நபர்களுக்கு பதில் கொடுத்து எனது சுமையை குறைப்பதற்கும் நன்றிகள் பல.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மது இக்பால்!

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,மாஷா அல்லாஹ்

அருமையான நபி மொழிகளை அறியத்தந்ததற்கு ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

நபியவர்களின் போதனைகள் முடிந்த அளவிற்கு பின்பற்ற நினைப்பவர்களை முழுவதும் வரவேற்கிறேன்.

ஒரு மறைமுக ஆதங்கம்!
நபியவர்களின் போதனைகள் முடிந்த அளவிற்கு பின்பற்ற நினைப்பவர்களை முழுவதும் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரம் சாதாரண விசயங்களை கூட பின்பற்ற முடியாதவர்கள் ( உதாரணம் - தாடி உடனே வளர்ந்துவிடுகிறது, அதனால் வளர்த்து உடனே நமது பயபக்கதியை நபியவர்கள் மேல் உள்ளதை காட்டிடலாம்., இந்த பாலாய் போன சிகரேட்ட் , அது விடுங்க பாஸ், மனிதன் பலகீனமானவன். எனக்கு சிகரெட்டை விடுவது ஈசியாக இருக்கிறது, ஆனால் இந்த தாடி வளர்ப்பதுதான் கஷ்டமாக தெரிகிறது., ஆனால் பாருங்கள் இந்த விசயத்தில் என்னை தாடி வைக்கததர்க்கு தான் கேள்வி கேட்டிருக்கிறார்கள், சிகரெட்டை விடாததற்கு அவர்களே "சரி சரி விடுங்கள், சீக்கிரறம் விட்டுவிடுவார் என்று ஆறுதல் தருகிறார்கள், காரணம் சிகரெட் விட முடியாதவர்கள் அதிகம் இருக்கும் சூழலில் தாடிக்கு வாய்தா வாங்கினால் யாருக்குதான் கோவம் வராது., ஆனால் நான் தாடி வளர்ப்பதை இப்போதைக்கு இல்லை,.அதனாலேயே பாவியாய் தெரிகிறேன். அவன் அனைத்தையும் அறிந்தவன் , அது போதும்! நானும் மனிதன்தானே , பலகீனமாவந்தானே

suvanappiriyan said...

கடந்த 13.04.2012 அன்று ரியாத் TNTJ- வின் 18ஆவது இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரைக்காலில் இருந்து முஹம்மது கபீர் என்ற சகோதரர் ரியாத் மண்டலச் செயலாளர் சகோ: அரசூர் ஃபாரூக் அவர்களை தொடர்பு கொண்டு, “காரைக்கால் – ஹாஜியார் தெருவைச் சேர்ந்த முஹம்மது யாசீன்” என்பவர் ரியாதில் இன்று காலை இறந்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அவரை ரியாதிலேயே நல்லடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார், உடனடியாக, தாயகத்தில் “நோட்டரி பப்ளிக்” -இடம் ஆவணங்களை தயார் செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மறுநாள் மரணித்தவரின் அண்ணன் ஜெயினுலாபுதீன் மற்றும் சகோ. இஸ்மாயில், ஆகியோருடன், மண்டல செயலாளர் சகோ அரசூர் ஃபாரூக் அவர்கள், சவூதியில் பெறப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் சேகரித்தார்.

அல்லாஹ்வின் உதவியால் 15.04.2012 ஞாயிறு அன்று லுஹருக்கு பிறகு ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக சகோ. காரைக்கால் ரஃபீக் மற்றும் சவூதி அப்துல்லாஹ் ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். சகோ. யாசீன் பணி புரிந்து வந்த நிறுவன உரிமையாளர் 27,000 சவூதி ரியால் (3 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய ரூபாய்கள்) தொகையினை இறந்த யாசீனின் குடும்பத்தாருக்கு தருவதாக வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

-tntj.net

Anonymous said...

Mr Sharfudeen,



நீங்கள் குறிப்பிட்ட தாடியும் புகை பிடிப்பதும் தங்களின் பலவீனத்திற்கு உள்பட்டதல்ல.

இஸ்லாமிய நெறிமுறைகள், எந்த மனிதனுக்கும் சிரமத்தைத் தரக்கூடியதல்ல. இலகுவாகப் பின்பற்றக் கூடியவை. மனித பலவீனத்திற்கு அப்பாற்பட்டவை.

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//ஆனால் பாருங்கள் இந்த விசயத்தில் என்னை தாடி வைக்கததர்க்கு தான் கேள்வி கேட்டிருக்கிறார்கள், சிகரெட்டை விடாததற்கு அவர்களே "சரி சரி விடுங்கள், சீக்கிரறம் விட்டுவிடுவார் என்று ஆறுதல் தருகிறார்கள், காரணம் சிகரெட் விட முடியாதவர்கள் அதிகம் இருக்கும் சூழலில் தாடிக்கு வாய்தா வாங்கினால் யாருக்குதான் கோவம் வராது., ஆனால் நான் தாடி வளர்ப்பதை இப்போதைக்கு இல்லை,.அதனாலேயே பாவியாய் தெரிகிறேன். அவன் அனைத்தையும் அறிந்தவன் , அது போதும்! நானும் மனிதன்தானே , பலகீனமாவந்தானே//

இறைவனுக்கு இணை வைக்காமலும், ஐந்து வேளை தொழுது கொண்டும் குர்ஆனின் கட்டளைகளையும் முகமது நபியின் அறிவுறுத்தல்களையும் நம்மால் முடிந்த வரை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் முயற்ச்சிக்க வேண்டும். நாம் செய்து விடும் சிறு சிறு தவறுகளை இறைவன் மன்னித்து விடுகிறான். தவறுகளிலிருந்து விடுபட நாமும் முயற்ச்சி எடுக்க வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

டியர் சுவன்,

அருமையான மொழிதல்கள்.

ஆனால், சொல்லுங்கள் சுவனப்பிரியன்: வஹ்ஹாபியாக இருந்துக் கொண்டு இந்த ஹதீஸ்களைப் பின்பற்றமுடியுமா ? சூஃபியாக இருந்தாலே அது முடியும் என நினைக்கிறேன்.

suvanappiriyan said...

Mr Anany!

//ஆனால், சொல்லுங்கள் சுவனப்பிரியன்: வஹ்ஹாபியாக இருந்துக் கொண்டு இந்த ஹதீஸ்களைப் பின்பற்றமுடியுமா ? சூஃபியாக இருந்தாலே அது முடியும் என நினைக்கிறேன்.//

இந்த ஹதீதுகளை சொன்ன முகமது நபிதான் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்றும் சொல்கிறார். ஒன்றை பின் பற்றுவேன்: மற்றொன்றை பின்பற்ற மாட்டேன் என்று சொல்வது அறிவுடைய செயலாகுமா! எதை வைத்து மேற்கொண்ட ஹதீஸ்களை வஹாபிகளால் பின்பற்ற முடியாது என்று சொல்கிறீர்கள்.

மாற்று மதத்தவர்களிடம் மிக அன்பாக பழகுபவர்க்ள சூஃபிகளை விட உங்கள் பார்வையிலான வஹாபிகளே! இதை கடந்த 25 வருடங்களாக தமிழகத்தில் பார்த்து வருகிறோம். குண்டு வெடிப்புகளும், மத சண்டைகளும் இன்று குறைந்திருப்பது வஹாபிய வளர்ச்சியினால்தான்.

Anonymous said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க சுவன்,

அப்போ, கோவை பாஷா பாய் வஹ்ஹாபி இல்லைங்கிறீங்களா ? அவருக்கும் பிஜேக்கும் நட்பு இருந்ததே இல்லைங்கிறீங்களா ?

இப்போ வஹ்ஹாபிகளால்தான் உறவு மேம்படுகிறது என்பது, அவர்கள் பைபிளை போர்னோகிராஃபி என்று சொல்வதன் மூலம் என்கிறீர்களா? கோயிலுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதால் இந்துக்களுடன் உறவு மேம்படுகிறது என்கிறீர்களா ? எதைச் சொல்கிறீர்கள்

ஷர்புதீன் said...

சலாம்!
எனது பின்னூட்டத்திற்க்கான சுவனப்ப்ரியனின் பதில் என்னால் ஏற்றுகொள்ள கூடியதே,

அனானியாக பதில் கொடுத்தவர் தாடி-புகையை பற்றி மட்டுமே சொல்வதாக நினைத்துகொண்டார் போலும், நான் குறிப்பிட வந்தது , ஒருத்தருக்கு இலகுவாகன விஷயம் மற்றவருக்கு கஷ்டமாக தெரிகிறது, யார் யார் எதில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்களோ, அதனை அதிகம் பின்பற்றும்படி மற்றவர்களை வற்புறுத்துகிறார்கள், அதனைத்தான் குறிப்பிட வந்தேன்.