Followers

Tuesday, July 10, 2012

ஒரு நாள் பயணமாக கஸிம் சென்றேன்!

சனிக்கிழமையன்று(07-07-2012) அதிகாலை தொழுகை 4 மணிக்கு முடித்து விட்டு நானும் ஹைதரபாத் டிரைவர் ஷேக் ஷாபிரும் அல்கஸீமுக்கு பயணப்பட்டோம். அங்குள்ள எங்கள் கம்பெனியின் ஷோரூமில் கணக்கெடுப்பு நடத்த வேண்டி எனது பயணம் ஏற்பாடாகியிருந்தது. ரியாத்திலிருந்து 360 கிலோ மீட்டர். பயணத்தில் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. எனவே ஒரு பிஸ்கெட், ஒரு ஜூஸ் மட்டுமே காலை டிஃபனாக எடுத்துக் கொண்டு பயணப்பட்டோம். காலை நேரத்தில் அந்த அளவு டிராஃபிக் சிரமம் இல்லை. பொதுவாக சவுதியின் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் நேர்த்தியான சாலை அமைப்பு. கச்சிதமாக வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு நான்கு வழிப்பாதைகளை அமைத்து பயணிகளுக்கு சிரமமின்றி அமைத்திருப்பார்கள். சாலையின் நடுவில் ஆங்காங்கே பேரித்தம் மரங்கள் அழகிய வடிவில் காட்சியளிக்க 100 மற்றும் 110 கிலே மீட்டர் வேகத்தில் எங்களின் பயணம் இருந்தது.



இடையில் சிறிது இளைப்பாறி தண்ணீர் ஜூஸ் வகைகளை உள்ளே தள்ளி விட்டு எங்களின் பயணம் தொடர்ந்தது. இங்குள்ள சாலைகள் மிகவும் நேர்த்தியாக பல காலம் உழைக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் வருடா வருடம் டென்டர் கொடுப்பதும். கட்சிக்காரர்கள் பாதியை சாப்பிடுவதும்: அதிகாரிகள் பாதியை சாப்பிடுவதும் தொடர்கதை: இதில் முதலமைச்சருக்கு வேறு கப்பம் கட்ட வேண்டும். இத்தனை தொல்லைகளையும் தாண்டி சாலையும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும். இங்கு சவுதியில் ஒரு முறை சாலை போட்டார்கள் என்றால் பல வருடங்களுக்கு அதில் கை வைப்பதே இல்லை. செல்வந்த நாடு இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு செயல்படும் போது வறிய நாடான நாம் சாலைகளை பராமரிப்பதில் ஏன் இவ்வளவு அசட்டையாக இருக்கிறோம்? குண்டும் குழியுமாக நமது சாலைகளில் இரு சக்கர வாகனத்தினால் எத்தனை உயிர்கள் தினமும் பலியாகின்றன. ஒரு மழை பெய்தால் சாலைகளை பார்க்க சகிக்காது. அந்த அளவு குறைந்த தார்களை சாலைகளில் இட்டு அனைத்தும் கரைந்து பல் இளித்துக் கொண்டிருப்பதை நாம் ஒவ்வொரு முறையும் பார்க்கலாம். அதே போல் சில இடங்களில் செம்மண்ணைக் கொண்டு சாலைகளை சரி செய்வதையும் பார்த்துள்ளேன். இதற்கு ஆயுள் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் தான். நிரந்தரமாக சிமெண்ட் சாலைகளை போட அரசுக்கு என்ன தயக்கம். கட்சிக்காரன் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாலேயே இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.



ஒன்பதரை மணிக்கெல்லாம் எங்கள் ஷோரூமை அடைந்தோம். போனவுடன் காலை டிஃபன் எங்களுக்காக ரெடியாக இருந்தது. 10 பேர் ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கணக்கெடுப்பு வேலையை ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காஃபி வந்தது. அதையும் இடையில் அருந்தி கொண்டு 12.30க்கெல்லாம் முழு வேலையும் முடிந்தது. பிறகு மதிய தொழுகைக்கு சென்று தொழுது விட்டு மதிய சாப்பாடு அனைவருக்கும் ஹோட்டலில் இருந்து தருவிக்கப்பட்டது. பாகிஸ்தான், பங்களாதேஷ், உபி, பீகார், மும்பை, ஹைதரபாத், சென்னை என்று அனைத்து பிரதேசமும் ஒன்றாக அமர்ந்து சவுதி பிரியாணி(கப்ஸா)யை ஒரு பிடி பிடித்தோம். பிறகு சிறிது தூங்கலாம் என்று படுத்தோம்.


படுத்த ஐந்து நிமிடத்தில் பஞ்சாபை சேர்ந்த ஜெகிருத்தீன் தனது வழக்கமான குறட்டையை ஆரம்பித்தார். ஆஹா...என்ன சுகமான தூக்கம் (அவருக்கு மட்டும்தான்). நாங்கள் புரண்டு படுத்தும் தூக்கம் வராததால் வெயிலையும் பொருட்படுத்தாது ரியாத் நோக்கி கிளம்பினோம். 4 மணிக்கு அஸர் தொழுகையை பள்ளியில் தொழுது விட்டு பயணம் திரும்பவும் தொடங்கியது. மற்ற ஊர்களை விட கஸீமில் வயல்வெளிகள், பேரித்தம் தோட்டங்கள் அதிகம். நம் ஊரைப் போலவே பூமிக்கு அடியிலும் தண்ணீர் வருகிறது. சுவையான நீர். மலைகளை குடைந்து அமைத்திருந்த சாலைகளை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். சூரியன் மறைய ஆரம்பித்தது. ஆங்காங்கே சாலைகளின் ஓரங்களில் சவுதிகள் வண்டியை ஓரம் கட்டி விட்டு குடும்பத்தோடு தொழ ஆயத்தமானார்கள். பெண்கள், குழந்தைகள் சகிதம் தங்களின் இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் முகமாக கூட்டு தொழுகையில் சவுதிகள் ஈடுபடுவதை பார்த்துக் கொண்டே சென்றோம். சில தவறுகள் இவர்களிடம் இருந்தாலும் தொழுகை நேரம் வந்து விட்டால் அது எந்த இடமாக இருந்தாலும் உடன் தயாராகி விடும் இந்த பழக்கத்தை நாமும் கடை பிடிக்க பழகிக் கொள்ள வேண்டும். 7 மணிக்கு ரியாத் வந்து சேர்நதோம். வந்த களைப்பில் இரவு நேர (இஷா) தொழுகையை தொழுது விட்டு ஹோட்டலில் சென்று ஒரு தோசை ஒரு பூரி செட் சாப்பிட்டு விட்டு ஹாய்யாக தூங்க வந்து விட்டேன். பயண களைப்பு அருமையான தூக்கத்தை தந்தது.



அல்கஸீமில் உள்ள பல்கலைக்கழகத்தை பார்வையிடலாம் என்று நினைத்தோம். ஆனால் நேரம் ஒத்து வர வில்லையாதலால் யுட்யூபில் பார்த்துக் கொண்டேன். :-) நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள். மேலே உள்ள படங்கள் நான் எடுத்தது அல்ல. யுட்யூபிலிருந்து காப்பி பண்ணப்பட்டது.


கஸீமின் ஒரு பகுதியான உனைஸா இரவு நேரத்தில்....


உயூன் அல்ஜிவா என்ற இந்த கல்லை மையமாக வைத்து ஒரு காதல் கதை இங்கு சொல்லப்படுகிறது. இது பற்றி மேலதிக விபரங்கள் கிடைத்தால் பகிருகிறேன்.

Many historic as well as pre-historic societies have settled in the Al Jiwa land. One example is Banu Abs who gave birth to the famous knight, adventurer, lover, and poet, Antarah Bin Shaddad. Moreover, Al Jiwa contains many Thamudic patterns (e.g. Thamudic Petroglyphs). In recent history, many of the region inhabitants' forefathers were amongst who are called Al Oqilat, which was a group that traveled long distances to trade, work for money, and bring back merchandise. Others were farmers and worked either in harvest or raising livestock. They were known for their loyalty, honesty, and hard work. The name of Al Jiwa has been mentioned (on record) in both Islamic and Pre-Islamic-era Arabic poetry by famous poets such as Antarah Bin Shaddad, Zuhayr Bin Abi Salma, Imru' al-Qais, Kumait Ibn Zaid, and Hassan Bin Thabit. This not only proves that Al Jiwa long-time existed, but it also proves that it held a type of status in the past.

http://en.wikipedia.org/wiki/Uyun_AlJiwa

13 comments:

Anonymous said...

Salam - I was at Qassim for about 6 years, before that I was at Riyadh for 8 years. I like Qassim very much. - Abusalih - Yanbu

Anonymous said...

Salam - I was at Qassim for about 6 years, before that I was at Riyadh for 8 years. I like Qassim very much. - Mohammed - Yanbu

suvanappiriyan said...

ஸ்மிதா!

//U guys raised a hue & cry when painter M.F Hussain was not allowed to return to India.//

யார் ஆர்ப்பரித்தது? இஸ்லாத்தை முறையாக உணர்ந்த ஒருவன் ஹூசைனை எதிர்க்கவே செய்வான். மதிப்பு மிக்க உருவப்படங்களை வரைவது இஸ்லாமிய சட்டத்துக்கு முரணானது. அதிலும் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த கிறுக்கன் ஹூசைன். அதிலும் இந்த தள்ளாத வயதில் மாதுரி தீட்சித்தின் ரசிகையாகி அந்த நடிகையை விதம் விதமாக வரைந்து ரசித்தவன். எனவே இவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த வொரு சம்பந்தமும் இல்லை. இவனுக்காக எந்த உண்மையான முஸ்லிமும் போராடவும் இல்லை.

//What have the right thinking muslims (forget the muslims) done in the shah bhano episode?//

ஷாபானு வழக்கில் அந்த பெண்ணின் திருமணம் பல லட்சம் மஹர் பெண்ணுக்கு கொடுத்து இஸ்லாமிய முறையில் முறையாக நடந்திருந்தால் இந்த வழக்குக்கே அவசியம் இல்லாமல் போயிருக்கும். அட்வான்ஸ் ஜீவனாம்சம்தான் மஹர் என்பது. அதை திருமணத்துக்கு முன்பே கேட்டு வாங்காதது ஷாபானுவின் குற்றம். இதற்காக இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எப்படி அனுமதிக்க முடியும்? மஹர் தராத மணமகனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வாருங்கள். அது வரவேற்கப்பட வேண்டியது.

//Hindus made the mistake during partition – we are paying now – with our lives.//

ஜின்னா ராஜாஜி பட்டேல் நேரு போன்ற சுயநலமிகளால் பாகிஸ்தான் என்ற நாடு பிரிந்தது முஸ்லிம்களை பொறுத்த வரை பெரும் இழப்பே! பாகிஸ்தானை நமது நாட்டோடு தற்போது இணைத்தால் அதற்கு முதல் ஆதரவு குரல் என்னிடமிருந்தே வரும்.

உங்களின் மற்ற கேள்விகளுக்கு ஒரு சில முஸ்லிம்கள் ஆதரவளித்தாலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிராகவே இருக்கின்றனர். இஸ்லாமும் எதிர்க்கவே செய்கிறது.

ஷர்புதீன் said...

ரொம்ப டிரையா இருக்குது இந்த பதிவு ., ஒரு வேளை பாலைவன பிரதேசம் என்பதாலா?

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//ரொம்ப டிரையா இருக்குது இந்த பதிவு ., ஒரு வேளை பாலைவன பிரதேசம் என்பதாலா?//

ஹா..ஹா....இருக்கலாம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ அபு சாலிஹ்!

//Salam - I was at Qassim for about 6 years, before that I was at Riyadh for 8 years. I like Qassim very much. - Abusalih - Yanbu //

என்னோடு ஒன்றாக படித்த அப்துல் குத்தூஸ் தற்போது யான்பூவில் இருப்பதாக நினைவு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

naren said...

இந்திய சாலைகள் பற்றி சொன்னது 100% சரிதான்.

கஸிம் நகரை பற்றி தகவல்கள் வரும் என்று பார்த்தால், அதை பற்றி ஓண்ணுமே இல்லாமே ரோட்டைபத்தியும் சாப்பாடை பத்தியும் தகவல் தர்றீங்களே.

suvanappiriyan said...

தங்கமணி!

//சுவனப்பிரியன் செய்யும் குரூர காமெடிக்கு அளவே இல்லை.//

நீங்கள் பண்ணும் காமெடியை விடவா? :-)

//விவாகரத்தின் போது மெஹரை திருப்பி தரவேண்டுமே என்ன செய்வார்? மெஹரையும் திருப்பி தந்து அதற்கும் காசு இல்லாமல் கடனாளியாக தெருவில் பிச்சை எடுப்பாரா?//

எந்த ஆதாரத்தை வைத்து இப்படி சொல்கிறீர்கள்? குர்ஆன் என்ன அழகாக இதற்கு தீர்ப்பு தருகிறது என்று பாருங்கள்.

‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன் 2:241)

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆயினும் முஸ்லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே இந்த வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

இதை ''இத்தா காலத்தில்'' என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் ''அழகிய முறையில் நியாயமான முறையில்'' என்று கூறுகிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப்படுகிறதோ அது தான் நியாயமானது.

வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (அல்குர்ஆன் 2:236)

இந்த வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் தொகை கொடுக்க வேண்டும் என்பதே இவ்வசனத்தின் கருத்தாக இருக்க முடியும்.

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப, பெரும் தொகையைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

தங்கமணி சொல்வது போல் திருமணத்துக்கு பிறகு ஒரு கணவனிடம் சொத்தே இல்லாமல் வறுமையில் இருந்தால் அவனால் எங்கிருந்து ஜீவனாம்சம் கொடுக்க முடியும். எனவேதான் திருமணத்துக்கு முன்பே அட்வான்ஸாக மஹர் தொகையை வாங்கிக் கொள்ளச் சொல்லி இஸ்லாம் பணிக்கிறது. இந்த மஹர் தொகையை நிர்ணயிப்பது கூட மணப்பெண்ணின் விருப்பத்துக்கு விடுகிறது இஸ்லாம்.

suvanappiriyan said...

திரு நரேன்!

//கஸிம் நகரை பற்றி தகவல்கள் வரும் என்று பார்த்தால், அதை பற்றி ஓண்ணுமே இல்லாமே ரோட்டைபத்தியும் சாப்பாடை பத்தியும் தகவல் தர்றீங்களே. //

நான் போனதோ கம்பெனி வேலையாக! ஒரு நாளில் வேலைதான் சரியாக இருந்தது. இதில் சுற்றிப் பார்க்க நேரமேது. விடுப்பு நாட்களில் ஒரு முறை சென்றால் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு தனி பதிவாகவே இடுகிறேன்.

khaleel said...

உங்களுடைய கருத்து சரி தான். இந்தியாவோடு ஒப்பிடும் பொது சவுதி சாலைகள் சிறப்பானவை தான். ஆனால் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை. இன்னும் ரியாதிளியலே பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக கரடு முரடாக தான் உள்ளன. சில இடங்களில் சென்னையை ஞாபபடுதும் அளவுக்கு சாலைகள் மிக மோசமாக இருகின்றன. இத்தனைக்கும் சென்னையில் பெய்யும் அளவு 1% குட மழையெல்லாம் இல்லை. அதுபோல மழை பெய்தால் சாலைகள் கதி என்னென்று தெரியவில்லை.
உயர் ரக சாலைகள் பார்க்க வேண்டுமென்றால் துபாய் அபுதாபி சாலையில் பயணம் செய்து பாறுங்கள். அப்பொழுது உங்களுக்கு சவுதி சாலைகள் பற்றி ஒரு சரியான அபிப்பிராயம் கிடைக்கும். அதே போல டெல்லி ஆக்ரா (yamuna expressway), சென்னை பெங்களூர் ஏன் சென்னை திருச்சி சாலை குட மிகவும் சிறந்த highway தான்.

suvanappiriyan said...

வெங்கட் சாமிநாதன்!

//ஜின்னாவுக்கு கராச்சியில் கட்டியிருக்கிறார்களே பெரிய நினைவிடமாக சரித்திர நினைவிடமாக, அதை என்ன செய்யப் போகிறார்கள்.//

இஸ்லாம் தடுப்பதால் அதை இடித்து விட்டு அங்கு ஒரு பாடசாலை கட்டலாமே! (அந்த மக்கள் விரும்பினால்)

//சாதி மன்னர் இறந்த போது அவர்க்கு கல்லறை கட்டவில்லை. இங்கு அவரது உடல் புதைக்கப் பட்டது என்பது கூட ரகசியம். அவ்வளவு தீவிர வாதம் அங்கு.//

ஒரு ரகசியமும் இல்லை. நீங்கள் வந்தால் அழைத்து சென்று காட்டுகிறேன். வெறும் மண் தரையில் தான் மன்னரின் உடல் அடக்கப்பட்டுள்ளது. நானும் நேரில் பார்த்துள்ளேன்.

http://suvanappiriyan.blogspot.com/2011/04/blog-post_29.html

மன்னர் பஹத் இறந்த போது நான் இட்ட பதிவு. வெறும் மண்ணால் அவரது சமாதி உள்ளதை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

//நாகூர் தர்காவுக்கும் அஜ்மீர் தர்காவுக்கும், பஞ்சாப் பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லா தர்காக்களுக்கும் இனி ஆபத்துத் தான்//

இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் முன்பு தவறுதலாக தர்ஹாக்களை கட்டி விட்டனர். தற்போது அனைவருக்கும் குர்ஆன் மொழிபெயர்ப்பு கிடைப்பதால் தர்ஹா கட்டுவதன் தவறை உணருகின்றனர். செய்த தவறை திருத்திக் கொள்வதுதானே அறிவுடைமை. அந்த இடத்தில் பாட சாலைகளோ, பள்ளிவாசல்களோ, மருத்துவ மனைகளோ கட்டிக் கொள்ளட்டுமே!

suvanappiriyan said...

இந்தியன்!(சங்கர் பட இந்தியனோ!:-))!

//Another video for Mr Swanapriyan to watch and to think ways of justifying this horrible act of Islam.//

முதலில் தாலிபான்கள் பெயரில் வெளிவரும் பல வீடியோக்கள் அமெரிக்கர்களால் புனையப்படுவது. தாலிபான்களின் பெயரை கெடுக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றனர். இதனால் நான் தாலிபான்களை ஆதரிப்பதக நினைக்க வேண்டாம். இஸ்லாத்தை தவறாக விளங்கிய மூடர்கள் அவர்கள். அவர்களின் செயல்கள் இஸ்லாத்தை ஆதாரமாக கொண்டதல்ல. எல்லா நாட்டிலும் சட்டத்தை கையில் எடுப்பவர் இருந்தவண்ணமே உள்ளனர். நேற்றைய செய்தியாக தினமலர் தந்த செய்தியை கொஞ்சம் பார்த்து விடுங்கள்.:
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகரைச்சேர்ந்தவர் சுப்பிரமணியம், 50. இவரது மனைவி சுப்புலட்சுமி, 40. சுப்பிரமணியத்தை விட்டு பிரிந்து, கள்ளக் காதலர்கள் ஆறுமுகம், சின்னச்சாமியுடன் வசித்து வருகிறார். சுப்பிரமணியம், மகன் ரவிக்குமார், 27, மருமகள் ராஜலட்சுமி ஆகியோர் ஒரே வீட்டில் உள்ளனர். இரவு மாமியார் தங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்துவதாக ராஜலட்சுமி பாலவநத்தத்தில் இருக்கும் தன் அப்பா சுப்பிரமணியனுக்கு போன் செய்தார். நேரில் வந்த அவர், மகன் முருகன், சம்பந்தி சுப்பிரமணியம், ரவிக்குமார், உறவினர்கள் சுப்புலட்சுமியை கற்களால் தாக்கியதில் இறந்தார். டவுன் போலீசார் பாலவநத்தை சேர்ந்த சுப்பிரமணியன், முருகன் மற்றும் <உறவினர் ஒருவர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Dinamalar
10-07-2012
-------------------------------------------------------------------

சென்னை:ஆபாச படம் பார்க்க வைத்து, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 77 வயது முதியவருக்கு, மகளிர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், 77. தையல் கடை நடத்தி வந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சிலரை அழைத்து, ஆபாச படத்தை பார்க்க வைத்து, சிறுமிகளின் கை, கால்களை கட்டிப் போட்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று அந்த சிறுமிகளை மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்குப் பயந்து குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளியில் சொல்லவில்லை. இதையறிந்த, பள்ளி ஆசிரியர், சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, கடந்த 2010ம் ஆண்டு ராயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து, பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி மீனா சதீஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சோமசுந்தரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேரில் ஆஜராகி, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சாட்சியமாக கூறினர்.
இதையடுத்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் சோமசுந்தரத்துக்கு ஆயுள் தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சம்பவங்களை எல்லாம் இந்து மதத்தோடு சம்பந்தப்படுத்த மாட்டீர்கள். தாலிபான்கள் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்தால் 'பார்த்தீர்களா? இதுதான் இஸ்லாம்' என்று கூப்பாடு போடுவீர்கள்.

suvanappiriyan said...

தங்கமணி

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திருவிளையாடல் தருமியைப் போல 'எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும்' என்ற கொள்கை உடையவர் போல் தெரிகிறது. :-) நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தெளிவுபட பதில் அளித்தும் திரும்பவும் முதல்லேருந்து ஆரம்பிக்கணும் என்றால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டி விடும்.

//1) ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண், அடிமைக்கு அடிமை கொலை செய்து பழி தீர்ப்பது என்றால், ஒரு சுதந்திரமானவன் அடிமையை கொலை செய்தால், பதிலுக்கு யாரை கொலை செய்யவேண்டும்? முனாவர் சொல்வது போல ஹதீஸ் துணையுடன் பதில் சொல்லாமல், குரான் வசனத்தின் அடிப்படையில் பதில் சொல்லவும்.//

குர்ஆனை மனிதர்களுக்கு விளக்கி அதை செயல் முறை படுத்தவே முகமது நபி வந்தார். எனவே ஆதாரபூர்வமான ஹதீஸ்களே குர்ஆனின் விளக்கம். ஏற்கெனவே விளக்கியாகி விட்டது.

//2) மெக்கா தர்ஹா அல்ல என்று அவர் சொன்னதற்கு, மெக்காவில் இஸ்மாயீலும் அவரது தாயாரும அடக்கம் செய்யப்பட்டிருப்பதை இஸ்லாமிய பக்கங்களே சொல்கின்றன என்றால், மெக்கா தர்ஹா தானே? மெக்காவை இடிக்க வேண்டுமா?//

மெக்கா என்பது ஒரு ஊர். கஃபா என்பது இறைவனை வணங்க உலகில் முதலில் ஏற்படுத்தப்பட்ட ஆலயம். இந்த இரண்டுக்குமே வித்தியாசம் தெரியாமல் கேள்வி கேட்டால் அரிச்சுவடி பாடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.
//3) 33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;//

ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது.

//4) நாஸிக் மன்சூக் வசனங்களை லிஸ்டு போட்டு எவை நீக்கப்பட்ட வசனங்கள் என்று சுவனப்பிரியன் விளக்குவாரா?//

இப்படி நீக்கப்பட்ட எந்த வசனங்களும் இல்லை. இறைவன் அருளிய குர்ஆன் முழுமைபடுத்தப்பட்டது.

//5) இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்லும் நாடுகளில் உள்ள பாடகிகள், இஸ்லாம் தவறு என்று சொல்பவர்கள் எப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுவது//

வெளியேறுவதற்கு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இல்லை. குர்ஆனின் கட்டளையை மதிக்காமல் தனது மனோ இச்சை படி வாழ ஆரம்பித்தாலே அந்த நபர் தானாகவே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார். இதற்காக கூட்டம் கூட்டி மைக் போட்டா கூற முடியும்?

//6) சமண மதமும் பௌத்தமதமும் ஓரிறைகொள்கைகள் என்பதற்கு நிரூபணம்.//

திருக்குறளும் திருமந்திரமும் சமணர்களின் பொக்கிஷங்கள் என்றும் பின்னால் வந்த ஆரியர்கள் அந்த நூல்களில் பல தெய்வ வணக்கங்களை சேர்த்து விட்டதாகவும் ஒரு கருத்து அறிஞர்கள் மத்தியில் உள்ளது. சித்தர்கள் சூஃபிகளின் கருத்துக்களை உள் வாங்கியவர்களாக இருந்துள்ளனர். ஆரியர்களுக்கு அரசர்கள் பக்க பலமாக இருந்ததால் இந்த திருத்தல் வேலைகள் மிக ஜரூராக அன்றைய காலத்தில் நடந்தது.

//7) அந்த இடத்தில் ஒரு அசிங்கம் நடந்தால் சிலை தீட்டுபட்டு விட்டதாக கருதி சிலை உள்ள இடங்களை மாற்றுவது தொன்று தொட்டு வரும் பழக்கம் என்று இந்துமத விளக்கத்துக்கு ஆதாரம் எங்கே?//
செவி வழி செய்தியே! ஆதாரங்கள் இருந்தால் நண்பர் காவ்யா தருவார் என்று நம்புகிறேன்!

//8) 20ஆம் நூற்றாண்டு பாண்டே விடும் அவுரங்கசீப்பு கதை 17ஆம் நூற்றாண்டு ஆவணத்தில் எங்கே இருக்கிறது?//

பல கோப்புகளை சாமர்த்தியமாக வெள்ளையனின் உதவி கொண்டு அழித்து விட்டீர்களே! பிறகு எங்கிருந்து கிடைக்கும்?