Followers

Sunday, July 08, 2012

கடலில் வீசினால்தான் இந்தியா உருப்படுமா?



ஊழல் செய்யும் அரசியல்வாதியே!

காமலீலைபுரியும் ஆன்மீக வாதியே!

கொலைகள் பல செய்யும் கூலிப்படையே!

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியே!

பெண்களை கொடுமைபடுத்தும் பேடியே!

மதங்களை மோதவிடும் அரக்கர்களே!

சாதிகளை வளர்த்து விடும் சாத்தான்களே!

உங்கள் அத்தனை பேரையும் ஒருநாள்

இந்த யூட்யூபை மாடலாக வைத்து

குண்டு கட்டாக கட்டி கடலில் தூர

வீசினால்தான் எனது நாடு நிமிருமா?

------------------------------------------------------------





Sunday 8 July 2012

PHILADELPHIA: Temperatures soared to more than 100 degrees Fahrenheit in several cities as Americans dipped into the water, went to the movies and rode the subway just to be in air conditioning for relief from unrelenting heat that has killed at least 30 people across half the country.

The heat Saturday sent temperatures above 100 Fahrenheit (38 degrees Celsius) in cities including a record 105 F (40.5 C) in Washington, St. Louis (106 F, 41 C), and Indianapolis (104 F, 40 C), buckled highways and derailed a Washington-area train even as another round of summer storms threatened.

Temperatures soared in more than 20 states to 105 F (40.5 C) in Louisville, Kentucky, 101 F (38.5 C) in Philadelphia, and 95 F (35 C) in New York; besides Washington, a record of 104 F (40 C) was set in Sioux Falls, South Dakota, and Baltimore set a record at 102 F (39 C).

At least 30 deaths were blamed on the heat, including nine in Maryland and 10 in Chicago, mostly among the elderly. Three elderly people found dead in their houses in Ohio had heart disease, but died of high temperatures in homes lacking power because of recent outages, officials said. Heat was also cited as a factor in three deaths in Wisconsin, two in Tennessee and three in Pennsylvania.

Officials said the heat caused highways to buckle in Illinois and Wisconsin. In Maryland, investigators said heat likely caused rails to kink and led a green line train to partially derail in Prince George’s County, Maryland, on Friday afternoon. No one was injured, and 55 passengers were safely evacuated.

Thousands of mid-Atlantic residents remained without power more than a week after deadly summer storms and extreme heat struck the area, including 120,000 in West Virginia and some 8,000 in the suburbs around Baltimore and Washington, D.C. In the Washington area, the utility company Pepco asked customers to conserve power, saying the heat was stressing the system.

“This is becoming a black swan of heat waves, in the sense that it’s such a long heat wave, such a severe heat wave and encompassing such a large area,” said Chris Vaccaro, spokesman for the National Oceanic and Atmospheric Administration.
At the Smithsonian’s National Museum of Natural History, Abraham Lewis and his wife, Dzifa Fianoo of Lorton, Virginia, brought their 8-week-old son out for a walk in the 100-degree F (38-degree C) heat.

“I really don’t want to be out, but she’s a new mother and was feeling cooped up,” Lewis said. “Do you see how hot it is?” he said, wiping beads of sweat from his forehead more than once.

The couple’s home in northern Virginia lost power for two days last week after a severe wind storm swept through. Fianoo had to haul the family’s food to a cousin’s house to prevent it from spoiling, then took it home again.

In Manhattan, customers who stepped in to see “Jiro Dreams of Sushi” at an IFC movie theater were there for more than entertainment.

“Of course we came to cool off!” said John Villanova, a writer who was on his second sweaty T-shirt of the day — expecting to change again by evening.

He said that earlier, he rode a Manhattan subway back and forth for a half an hour, with no destination in mind, “because it really keeps you cool.”

In cities around the Midwest and Mid-Atlantic region, people struggled to find ways to cope with the heat, but at least one such effort ended in tragedy.

In Aurora, Illinois, Gene Autry Pryor, 52, had been drinking with three adult friends near Veterans Memorial Island and jumped into the Fox River to cool off, police said. The man’s friends lost sight of him after a few minutes and then spotted him floating face down and pulled him to shore. Pryor died Friday evening.
In Chicago, street magician Jeremy Pitt-Payne said he has been working throughout the three-day stretch of triple-digit temperatures, but acknowledged that he might doff the Union Jack leather vest by the end of the day, even though it’s part of his British magician character along with the black top hat.

But he had a secret for beating the heat — he starts his shows at 2 p.m. “when the Trump Tower is gracious enough to block out the sun” along his stretch of sidewalk.
At New York City’s Penn Station, the air conditioning was falling short of full capacity. The doors were left wide open at a half dozen locations around the two-block-wide underground station.

“It’s so hot I feel like I want to faint,” said Betty De la Rosa, 19, of the Bronx, who was working at a station doughnut shop.
-arab news
08-07-2012

14 comments:

vimalanperali said...

இவர்கள் எல்லோரையும் இப்படி உருவாகியதும்,இவர்கள் இம்மாதிரி செய்ய அனுமதித்ததும் எது என்பதுவே இந்த நேரத்து கேள்வியாக உள்ளது.

suvanappiriyan said...

திரு விமலன்!

//இவர்கள் எல்லோரையும் இப்படி உருவாகியதும்,இவர்கள் இம்மாதிரி செய்ய அனுமதித்ததும் எது என்பதுவே இந்த நேரத்து கேள்வியாக உள்ளது.//

'நோய் நாடி...நோய் முதல் நாடி' என்பது போல் இதன் மூல காரணத்தை அறிந்து அதை களைய முற்பட வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

NEWTON'S THIRD LAW!

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//NEWTON'S THIRD LAW!//

"ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு."

இந்த பதிவுக்கும் நியுட்டனின் மூன்றாம் விதிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கினால் மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள்.

suvanappiriyan said...

தினமலர் ஜனவரி 25,2010

திருவனந்தபுரம்:"வெளிநாட்டில் வசிக்கும் கள்ளக்காதலனுடன் போனில் மணிக்கணக்கில் பேசிய மனைவியே தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்' என, குடும்ப நலக் கோர்ட் உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (36) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர், வெளிநாட்டில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீலேகா(30) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பினார்.வீட்டுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தொலைபேசி கட்டண நிலுவைத் தொகையாக நான்கு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கட்டவேண்டும் என, நிறுவன கடிதத்தை கண்டார். மேலும், அந்த நிறுவனம் நிலுவைத் தொ கையை உடனடியாக செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து அவர் தொலைபேசி நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது தொலைபேசியில் இருந்து எந்தந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளப் பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து அறிந்தார்.அதில் தனது மனைவி வெளிநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு அடிக் கடி தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் யார் எங்கிருக்கிறார் போன்ற விவரங்களையும் அவர் சேகரித்தார்.அதில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபருடன் தனது மனைவி பேசியதும், அந்த நபர் தனது மனைவியின் கள்ளக்காதலன் என்பதையும் கண்டறிந்து அதற்கான விவரங்களையும் சேகரித்தார். பின் இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நலக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இ.எம்.முகமது இப்ராகிம், "கள்ளக் காதலனை போனில் அழைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட மனைவியே தொலைபேசி நிலுவைக் கட்டணத்தை பதினைந்து தினங்களுக்குள் செலுத்தவேண்டும்' என்று உத்தரவிட்டார்.மனைவியின் கள்ளக்காதல் குறித்து அறிந்த கணவன், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தீயவற்றை கேட்காதே, பார்க்காதே, பேசாதே என்ற போதனைக்கேற்ப பொதுவாக இதுபோன்ற தவறான விஷயங்களைக் காணும் கணவர்களுக்குத் தீய செயல்களைக் கண்டதற்காக (வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு) தண்டனை வழங்கப்படும். மனைவியின் உரிமையில் தலையிட்டு கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவரின் குடும்பத்தோடு அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் தீய செயல்களைக் காணாதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களை கண்டுகொள்ளாதீர்கள்), தீயவிஷயங்களைச் செவிகொடுத்துக் கேட்காதீர்கள் (கள்ளக்காதல் விஷயங்களில் தலையிடாதீர்கள்), தீயவிஷயங்களைப் பற்றி பேசாதீர்கள் (கள்ளக்காதல் தவறு என்று அறிவுரை சொல்ல முயற்சிக்காதீர்கள்). இவற்றை செய்தால் IPC498A, DV, DP போன்ற பிரிவுகளில் தண்டனை நிச்சயம் கணவருக்குத் தான் கிடைக்கும்!

ஆனால் சிலசமயம் நீதிதேவதையின் கருணையால் சில எதிர்மறையான அதிசயங்களும் நடக்கலாம்! அது அவரவரின்அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

ஷர்புதீன் said...

1 ) நாடும்., (நாட்டில் உள்ள மக்களும்) அது செய்யும் செயலுக்கும் கண்டிப்பாக அதன் எதிர்வினையை அனுபவித்தே தீரவேண்டும். (இது போன்ற போட்டிகளுக்குரிய எதிர் வினை உட்பட)

2 ) கார்பன் டை ஆக்சைடை அதிகம் உமிழும், அதிகம் எரிக்கும் அமெரிக்க போன்ற நாடுகள் அதற்குரிய விலையையும் கொடுத்தே ஆகவேண்டும்

நான் தினமும் இரண்டு வேளை உணவையும் ஹோட்டலில் கேரி பேக்கில் வாங்கி தின்று விட்டு, பாளிதினை குப்பையில் போடுவதை பற்றி யோசித்துகொ...ண்.........டே...................... இருக்கிறேன்.

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//ஹிந்துஸ்தானம் தன் சிரசில் வைத்துக் கொண்டாடிய இசைவாணி நூர்ஜஹான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானைத் தமது தேசமாகத் தேர்ந்துகொண்டார். அங்கு ஒருமுறை இசைதான் எனது வழிபாட்டுமுறை என்று சொன்னார். அதனால் மத விலக்கம் செய்யப்பட்டார்.//

//இதேபோல் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்ட நஸாகத், ஸலாமத் அலி சகோதரர்கள் ஒருமுறை கல்கத்தாவுக்குக் கச்சேரி செய்ய வந்தபோது, தங்கள் இசையை காளி மாதாவுக்கு அர்ப்பணம் செய்வதாக அறிவித்தார்கள். இப்படிச் சொன்னதற்காக அவர்கள் பாகிஸ்தான் திரும்பியபோது மிகவும் அவதிப்பட நேர்ந்தது.//

'அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்'
-குர்ஆன் 36:78

'தனக்கு இணை கற்பிப்பதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்'
-குர்ஆன் 4:48

'எதையும் படைக்காதவற்றையா அவர்கள் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அவர்களே படைக்கப்படுகின்றனர்'
-குர்ஆன் 7:191

இது போன்று எண்ணற்ற வசனங்கள் இறைவனுக்கு நிகராக எவரையும் எந்த பொருளையும் வணங்குவதை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது. ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு குர்ஆனின் வார்த்தையை மதிக்கமாட்டேன் என்று சொல்வது எந்த வகை நியாயம் சார். பிடித்தமில்லை என்றால் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட வேண்டியதுதானே. உள்ளே இருந்து கொண்டே நான் இசையை தெய்வமாக மதிக்கிறேன் என்றால் அவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதை ஒரு பொழுது போக்காக ஒரு ஓரத்தில் வைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இசைதான் உலகம். இசைதான் கடவுள் என்றெல்லாம் பிதற்றுவதற்கு நமது அறிவும் இடம் கொடுக்காது. இஸ்லாமும் அனுமதிக்காது.

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இதே போல தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்ய வாழ்த்துக்கள். இஸலாத்தில் இருக்க பிடிக்காதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்பதை தமிழ் முஸ்லீம்கள் அறியச்செய்யுங்கள். பல முஸ்லீம்கள் இஸ்லாம் ஒரு ஒருவழிபபாதை என்று தவறாக நினைத்து மருகிக்கொண்டிருக்கிறார்கள்.//

இணையத்தில் எழுதும் பல இஸ்லாமியர்கள் பெயரளவில்தான் முஸ்லிம்களாக உள்ளார்கள். அவர்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு இட்டிருந்தேன். போன மாதம் மட்டும் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றவர்களின் பட்டியல் அது. அதில் பிஹெச்டி முடித்த கல்லூரி பேராசியரும் ஒருவர். ஒரு அமைப்புக்கு கீழ் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கையே இது. இது அல்லாமல் வெளியில் கணக்கில் வராமல் மாறியவர்கள் அனேகம் பேர். இவர்கள் யாரும் வலுக்கட்டாயமாகவோ பண ஆசை காட்டியோ மாற்றப்பட்டவர்கள் அல்ல. தாங்களாகவே விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/07/blog-post_02.html

அடுத்து நான் முன்பே கூறியது போல் பெரியார்தாசனையோ, ஏ.ஆர்.ரஹ்மானையோ தற்போது பழைய மதத்துக்கு அழைத்து பாருங்களேன். அவரது தொழிலான இசையை இஸ்லாத்தில் ஒரு சாரார் வெறுக்கின்றனர். இசையை மூலதனமாக வைத்து இஸ்லாத்தில் பெயர் பெற முடியாது. ஆனால் இந்து மதத்தில் இசையை வைத்தே பெரிய ஆளாக ஆகி விட முடியும். கோவில்களில் பாடுவதற்கும் எந்த தடையும் ரஹ்மானுக்கு இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஹஜ் பயணத்துக்காக வந்த ரஹ்மான், புனித பூமியான மெக்கா அமைநதுள்ள சவுதி அரேபியாவின் ஏதாவது ஒரு இடத்தில் தான் கச்சேரி பண்ண விரும்புவதாக சவுதி அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது தான் இஸ்லாமில் இசைக்குள்ள முக்கியத்துவம். தங்கமணி ரஹ்மானை சந்தித்து பழைய இந்து மதத்துக்கே திரும்பி விட கோரிக்கை வைக்க வேண்டியதுதானே!

அப்படி ரஹ்மான் திரும்பி விட்டால் நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன். :-)

நேற்று கூட பாப்பாரபட்டி கிராம அரிஜனங்களை கோவிலில் நுழைய விடாமல், திருவிழாவுக்கு பணம் வசூலிக்காமல் ஒதுக்கியதால் கோவிலையே பூட்டியிருக்கிறது அரசு. கண்டதேவி விவகாரம் வருடா வருடம் உங்களுக்கும் தெரிந்ததே! இதுதான் இந்து மதத்தின் நிலை. தவறு உங்களிடம் வைத்துக் கொண்டு 'மதம் மாறிட்டான்! மதம் மாறிட்டான்' என்று கூப்பாடு போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. போனவர்கள் திரும்ப உங்களிடம் வருவதற்கு சான்சே இல்லை. உண்மை நிலவரம் இதுதான்.

திரு வெங்கட் சாமிநாதன்!

//சுவனப் பிரியனின் மன அமைப்பும், சிந்தனை ஓட்டங்களும் விசித்திரமானவை. மனித நேயமே அற்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், அவர் தயக்கம் காட்டுவதே இல்லை. வெட்கப் படுவதும் இல்லை//

மனித நேயமே அற்று இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தாழ்த்தப்பட்டவர்களை இன்று வரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அதை நியாயப்படுத்தியும் பேசுகிறீர்களே! அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சத்துணவு ஆயா தாழ்த்தப்பட்டவராக இருந்தால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்லி மாற்ற வைத்தீர்களே! இன்று வரை மதுரை பக்கங்களில் தனி குவளை கொடுத்து அந்த மக்களை ஒதுக்குகிறீர்களே நீங்கள் அல்லவா வெட்கப்பட வேண்டும்! வேதனை பட வேண்டும்...

Anonymous said...

Kavya says:
July 9, 2012 at 9:16 am

மலர்மன்னன்!

இசுலாமியர்கள் அல்லாவைத்தவிர வேறெவரையும் இறைவன் எனச்சொல்லக்கூடாது; வணங்கக்கூடாது. மோனோதீயிசம் எனபதே இசுலாம். அதை எடுத்தாலோ, சிதைத்தாலோ இசுலாம் தொபுக்கடீர் என்று விழுந்து விடும்.

இசுலாமில் 99.9% முசுலீம் என்றெல்லாம் கிடையாது. இருந்தால் 100/100 இல்லையென்றால் இசுலாமியன் இல்லை.

இப்படியிருக்க, ஒரு இசுலாமிய இசைப்பாடகர் இசையே என் தெய்வமென்றும், கலைவாணியைத் தெய்வமாகத் தொழுகிறேன் காளிமாதாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதெல்லாம் தவறு. ஒரு கணவனோடு வாழ்ந்து கொண்டு இன்னொருவனை மோஹிப்பதைப்போன்று. அவர் இசுலாத்தைவிட்டு விலகிவிட்டு எதையும் எவரையும் ஏற்று என்ன வேண்டுமனாலும் செய்துகொள்ளலாம். டிவோர்ஸ் வாங்கிக்கொண்டு மற்றவனோடு சென்றுகொள்ளலாமில்லையா? அதைப்போல.

இசுலாமியர் என்று சொல்லிக்கொண்டே செய்தால், அவரை பஹிஷ்காரம் மற்ற இசுலாமியர்கள் செய்வதில் தவறேயில்லை.

மதங்கள் வெவ்வேறு கொள்கைகளை உடையன. இவ்வுண்மையை நாம் உணர்ந்து கொண்டால் மதச்சண்டைகளுக்கிடமில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உங்களை ஆரும் அல்லாவை ஏற்றுக்கொள்ளச்செய்யவில்லை. ஆனால் அவர்கள் கொள்கையை அவர்கள் பின்பற்றுவதை ஏளனம் செய்யாதீர்கள்.

ஷர்புதீன் said...

//மதங்கள் வெவ்வேறு கொள்கைகளை உடையன. இவ்வுண்மையை நாம் உணர்ந்து கொண்டால் மதச்சண்டைகளுக்கிடமில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உங்களை ஆரும் அல்லாவை ஏற்றுக்கொள்ளச்செய்யவில்லை. ஆனால் அவர்கள் கொள்கையை அவர்கள் பின்பற்றுவதை ஏளனம் செய்யாதீர்கள்//

i totally agreed !!!

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//பொதுக்கூட்ட மேடையிலும், தொலைக்காட்சியிலும் உங்கள் பிரியமான ஜாகிர் நாயக், இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை வழங்கவேண்டும் என்று பேசுகிறார்.இந்தியாவில் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் இந்து அரசியல்வாதியும், கம்யூனிஸ்டுகளும், கண்டித்ததாகவோ அல்லது அவரை நீங்களோ அல்லது தமிழ்நாட்டு ”உண்மையான இஸ்லாத்தை” பரப்பும் வீரர்களோ கண்டித்ததாக தெரியவில்லை.//

இப்படி ஜாகிர் நாயக் பேசியதாக எங்கும் கேள்விப்படவில்லை. தவறான தகவலை தர வேண்டாம். குர்ஆன் கூறும் கட்டளையைப் பார்ப்போம்.

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும், அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும். உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணிக்கவில்லை. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.

நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம்
சித்தப்படுத்தியுள்ளோம்;

(அல் குர்ஆன் 18:29)

இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக்
கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்த வர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய
சட்டமாக இருக்க முடியும்?

*எவர்கள் நிராகரித்து,* *நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும்
விட்டார்களோ,*அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை) அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க
மாட்டார்கள். (3:91)

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான். இதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அதன் பின்னர் நிராகரிப்புக்குள் சென்று விட்டவர்களுக்கு இந்த உலகில் அல்லாமல் மறு உலகில் தண்டனை அளிப்பதாகத்தான் இறைவன் கூறுகிறான். அதற்கு பகரமாக உலகில் எவ்வளவு பொருட்களை கொடுத்தாலும் அது ஈடாகாது என்பதுதான் கட்டளை.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது
(அல்குர்ஆன் 2:256)

எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
(அல்குர்ஆன் 4:137)

இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம். ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். எனவே மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மறுப்பாக இந்த வசனங்கள் நம்மை தெளிவுபடுத்துகின்றன.

எனவே இந்த குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவருடைய கருத்து இருந்தாலும் அது ஜாகிர் நாயக்காகவே இருந்தாலும் அந்த கருத்து புறந்தள்ளப்பட வேண்டியதே!

suvanappiriyan said...

தங்கமணி!

//http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI
ரொம்ப நல்லது சுவனப்பிரியன்.
புறந்தள்ளுவது என்பது பெரிய பிரச்னை இல்லை. புறந்தள்ளிவிட்டு அந்த பாடகியோ அல்லது மலேசிய, சவுதி முஸ்லீம்களோ உயிரோடு இருக்க வேண்டுமே.//

பலர் ஒரு ஹதீதை தவறாக விளங்கியதால் வந்த குளறுபடி இது.
நீங்கள் கொடுத்த யுட்யூபிலும் மதம் மாறியதற்காக அல்ல இறைவனை மட்டுமே வணங்கி வரும் ஒற்றுமையாக உள்ள ஒரு சமூகத்தில் இடையில் புகுந்து இஸ்லாத்தில் பிரிவுகளை உண்டாக்கி குழப்பத்தை உண்டு பண்ணும் நயவஞசர்களையே கொலை செய்ய அந்த ஹதீத் கூறுகிறது. ஜாகிர் நாயக்கும் அதைத்தான் சொல்கிறார். நஸயீயில் வரும் நபிமொழி மேலதிக விபரமாக தெளிவாகவும் குழப்பம் விளைவிப்பவர்களையே கொலை செய்யச் சொல்கிறது. மதம் மாறியவர்களை அல்ல. கீழே வரும் ஹதீதுகளை கவனமாக படித்தால் உண்மை விளங்கும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ் - முஸ்லிம்)

‏''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)



மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.

புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.

//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும். இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி குறிப்பிடுகிறார்கள்.

நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.

மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி) என்று நபி கூறி இருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான்.

நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். "நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது.

//இத்தனை நாட்டு தலைவர்களும் மாங்க மடையர்கள் என்பத்யும் உங்களுக்கு ஒருவருக்கு மட்டுமே இஸ்லாம் சரியாக புரிந்திருக்கிறது என்பதை அறிந்து ரொம்ப சந்தோஷம்.//

இந்தியாவிலும் மற்றும் ஐரோப்பிய ஆப்ரிக்க கண்டங்களில் மதத்தின் பெயரால் நடந்த கொலைகளின் பட்டியலை இதை விட அதிகமாக என்னாலும் தர முடியும். இஸ்லாத்தை சரிவர விளங்காது சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் யாருமே மாங்கா மடையர்கள்தான். அதில் என்ன சந்தேகம்.

suvanappiriyan said...

திரு பொன் முத்துக்குமார்!

//ஒரு தாலிபான் குழுவினரை இதுபோல உங்களால் மாற்ற இயலுமா என்பதே கேள்வி. அவ்வளவெல்லாம் வேண்டாம், கஜாலாக்கள் கொல்லப்படுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று குரானை மேற்கோள் காட்டி கொலைகாரர்களை திருத்தவாவது//

எங்கும் போக வேண்டாம் தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும் சிறையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களை அடைப்பதுமாகவே காவல் துறை இருந்தது. கல்வியில் பின் தங்கி இருந்தனர். தர்ஹா போன்ற மூடப் பழக்கங்களில் மூழ்கியிருந்தனர். குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பு இளைஞர்களை சென்றடையாமல் இருந்தது.

இந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு முஸ்லிம்கள் மத்தியில் உண்மையான இஸ்லாத்தை எடுத்து சொல்ல ஆரம்பித்தது. வழக்கமான எதிர்ப்புகள். என்னைக் கூட பள்ளியில் தொழுக வரக் கூடாது என்று சிலர் தடுத்தனர். இது வெல்லாம் கடந்த இருபது வருடத்துக்கு முந்தய நிலை. தற்போதய நிலை என்ன?

குர்ஆனை பட்டி தொட்டிகளெல்லாம் பிரசாரம் பண்ணியதால் சிறந்த இளைஞர் சமுதாயத்தை தற்போது உருவாக்கியிருக்கிறோம். வீட்டுக்கு ஒரு பட்டதாரி சர்வ சாதாரணமாக வருடா வருடம் வெளி வருகின்றனர். பெண்களும் கல்லூரியை தொடுகின்றனர். வரதட்சணை வாங்காமல் சவுதியை போல் பெண்ணுக்கு பணம்(மஹர்) கொடுத்து திருமணம் முடிக்கின்றனர். தவறுதலாக ஏற்கெனவே வாங்கியவர்கள் தற்போது பெண்ணின் தகப்பனிடத்தில் திரும்ப கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாற்று மதத்தவரின் கசப்பான எண்ணங்களையும் சந்தேகங்களையும் ஒவ்வொரு ஊராக சென்று தீர்த்து வருகிறோம். ஒரு சில தீவிர எண்ணம் உடைய இளைஞர்களை இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்கி இன்று அவர்களும் மற்ற சமூகத்தோடு சேர்ந்து வாழ பழக்கியுள்ளோம்.

முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போராடி பெற்றதனால் இன்று அரசு வேலைகளில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தங்களின் பங்கை ஆற்றுகின்றனர். இவை எல்லாம் குர்ஆனை சிறப்பாக விளங்கிய மக்களாலேயே சாத்தியப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வன்மையாக நானும் பல பதிவுகளில் கண்டித்து வந்துள்ளேன். பாடகர்களை கொலை செய்த செயல் காட்டுமிராண்டித் தனமானது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். தாலிபான்கள் செய்யும் எந்த செயலுக்கும் இஸ்லாம் பொறுப்பாகாது. போதைப் பொருள்களை தனது முக்கிய வியாபாரமாக கொண்டிருக்கும் ஒரு கூட்டம் எப்படி முகமது நபி கூட்டமாக முடியும்? எனவே மாற்று மதத்தவர்களோடு சந்தோஷமாகவும் சுமூகமாகவும் வாழ்க்கையை நகர்த்தி செல்லவே இஸ்லாம் கட்டளையிடுகிறது. இது தொடரும்.

ஷர்புதீன் said...

திரு சுவனப்பிரியன் அவர்களுக்கு!

மனித மனது மிக மிக சிக்கல் வாய்ந்தது., அதனை தீர்க்க முடியாது! இது குறித்து மிக நுண்ணிய விஷயங்கள் / விளக்கங்கள், குறித்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன், பார்க்கலாம்!

இதில் உங்களை சொல்கிறேனா, இல்லை நீங்கள் யாருக்கு பதில் அளிதீர்களோ அவர்களை சொல்கிறேனா என்று யோசியுங்கள்...கடவுள் நாடினால் சீக்கிரம் அது குறித்து எழுதுகிறேன்