Followers

Sunday, July 01, 2012

எம் எல் ஏ திருமணம்! அடி உதை!

எம் எல் ஏ திருமணம் அடி உதை!

கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.



2006-ம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போர்கோலா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் 2011-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.
ரூமிநாத், ராகேஷ் சிங் என்பவரை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 வயது மகளும் இருக்கின்றார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த ஜாகி ஜாகிர் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார் ரூமிநாத். இதைத் தொடர்ந்து தமது மனைவியைக் காணவில்லை என்று ராகேஷ்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கரீம்கஞ்ச்சில் நேற்று இரவு ரூமிநாத் தமது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த 200க்கும் மேற்பட்டோர் இருவரையும் அடித்து துவைத்துள்ளனர்.

ரூமி நாத், தனது முதல் கணவரை விவகாரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது தலைநகர் கவுகாத்தியில் ரூமிநாத்தும் அவரது இரண்டாவது கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-இணைய செய்தி

....Congress leader Rumi Nath, who represents Borkhola assembly constituency, married Jaki Jakir, a Muslim, last month and converted to Islam. She had allegedly not divorced her first husband.

"I got attacked by some boys who were drunk. They even tried to rape me and take my clothes off, so it's an attempt to murder and rape. Since I got married it has been a political issue; its 100 per cent a political conspiracy," said Mrs Nath.

She was rushed to the hospital but has been brought to her Guwahati residence where she is recovering.

"They went to a hotel and tried to take shelter when a crowd of people surrounded them and manhandled, and also physically assaulted them. We have registered a case. Some elements are trying to give a communal colour to this incident," said Jayanta Choudhury, DGP, Assam.

Superintendent of Police Pradip Pujari said that five people, suspected to have been involved in the attack, have been arrested.

Mrs Nath was visiting her constituency in South Assam for the first time since her remarriage and conversion to Islam. Some reports say they were attacked because they had together visited a temple during the day.

Rumi Nath was first elected to the Assembly in 2006 on a BJP ticket from Borkhola constituency. She later defected to the Congress and won the seat a second time in the 2011 elections.

Her first husband Rakesh Singh, with whom she has a two-year-old daughter, had filed an FIR last month saying his wife was missing. But Mrs Nath herself came out in the open saying she remarried her Facebook friend and converted of her own free will.

"It is a complex situation because of personal dynamics but our interest is to maintain order and take action. She is a sitting MLA and no one has any business to manhandle the woman whether they agree to what she has done or not," said Mr Choudhury.

Her own party has condemned the incident. "There are legal means if they have any grievance. But this is reprehensible and we condemn this incident," said Haren Das, general secretary, Assam Pradesh Congress Committee.

The National Commission of Women (NCW) too has promised to look into the case.

"It was a matter of marriage affair; it's an unfortunate incident and the government should have tightened the security. We would take suo moto cognizance," said Mamata Sharma, Chairperson, NCW.....
-NDTV

ஒரு நாட்டின் எம் எல் ஏவுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலையை சொல்லத் தேவையில்லை. இந்த பெண்மணி முன்பே விளக்கமாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். 'தனது முதல் கணவனோடு வாழ பிடிக்க வில்லை. விவாகரத்து கோரியிருக்கிறேன்' என்று. தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டதாகவும் ஜாகிரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்த பெண் முதலில் முதல் கணவனை முறையாக விவாகரத்து செய்திருக்க வேண்டும். அடுத்து 4 மாதங்கள் வரை பொறுத்திருந்து அதன் பிறகே புது கணவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் முதல் கணவன் மூலமாக குழந்தை ஏதும் வயிற்றில் இருந்தால் பின்னால் பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் இந்த கட்டளைகளை தருகிறது. இவற்றை எல்லாம் இருவருமே கடைபிடிக்கவில்லை.

ஃபேஸ் புக் மூலமாக கிடைத்த நட்பு காதலாகி இன்று கணவனையும் குழந்தையையும் கைகழுவும் நிலைக்கு அந்தப் பெண் தள்ளப்பட்டுள்ளார். ஒரு கணவன் இருக்கும் போது இன்னொரு கணவனை தேடிய இந்த பெண் அதற்கான தண்டனையை பொது மக்களால் கொடுக்கப்பட்டு இன்று ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஃபேஸ் புக் மூலமாக மாற்றானின் மனைவிக்கு வலை விரித்ததும் ஜாகிரின் தவறு. இஸ்லாம் அவரது வாழ்வில் நிலை பெற்றிருந்தால் இத்தகைய இழி செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார்.

இந்துக்கள் அமைதியானவர்கள்: முஸ்லிம்கள்தான் எதற்கெடுத்தாலும் உடனே உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று கூறும் பலருக்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இங்கு குடி போதையில் வந்த குண்டர் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து அந்த இருவரையும் நையப் புடைத்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இரு தரப்புமே தவறிழைத்திருக்கிறார்கள்.

எனவே கனம் நீதிபதியவர்களே!

முதல் கணவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து வாங்கி இந்த பெண்ணை முறைப்படி இஸ்லாததிலும் இணைத்து ஜாகிரோடு முறைப்படி திருமணம் நடத்தி வைக்குமாறு பெண் எம் எல் ஏ சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



நமது நாட்டு விவாகரத்து சட்டங்கள் மிகவும் கடுமையாக இருப்பது இது போன்ற பல தவறுகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. எனவே விவாகரத்து சட்டங்களை இஸ்லாமியர்களுக்கு உள்ளது போன்று இலகுவாக்க சட்ட அறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர். அரசும் இது விஷயத்தில் உடன் முடிவெடுத்து பல சிக்கல்களை தீர்க்க வழி காண வேண்டும். ஆறு மாதம் ஒரு வருடம் என்று பிடிக்காத கணவன் மனைவிகளை ஒன்றாக்கி வைத்து அதனால் கொலை செய்யக் கூட சிலர் தயாராகி விடுவதை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.





6 comments:

Yasmin Riazdheen said...

அருமையான கருத்தை எத்தி வைத்துள்ளீர்கள்..

அப்படி ஒரு சட்டத்தை ஏற்பார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்........

Yasmin Riazdheen said...

அருமையான கருத்துக்கள் சகோ...

என்னதான் எடுத்துரைத்தாலும் எவர உண்மையை ஏற்றுக் கொள்கிறார்.

இஸ்லாம் கூறும் விவகாரத்து சட்டத்தை ஏற்குமா நீதிமன்றம் பொறுத்து இருந்து பாப்போம்........

Yasmin Riazdheen said...

அருமையான கருத்தை எத்தி வைத்துள்ளீர்கள்..

அப்படி ஒரு சட்டத்தை ஏற்பார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்........

suvanappiriyan said...

சலாம் சகோ யாஸ்மின்!

//அருமையான கருத்துக்கள் சகோ...

என்னதான் எடுத்துரைத்தாலும் எவர உண்மையை ஏற்றுக் கொள்கிறார்.

இஸ்லாம் கூறும் விவகாரத்து சட்டத்தை ஏற்குமா நீதிமன்றம் பொறுத்து இருந்து பாப்போம்........//

விவாகரத்தை இவ்வளவு இலகுவாக்கியிருக்கிறீர்களே என்று சொல்பவர்கள் அப்படி செய்யாததால் நடக்கும் பின் விளைவுகளை ஏனோ சிந்திக்க மறுக்கின்றனர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

suvanappiriyan said...

திரு இந்தியன்!

//What happens to Muslim ladies who end up in heaven? What are their rewards?//

‘”முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்”.’
-குர்ஆன் 33:35

'அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.'
-குர்ஆன் 13:23

இங்கு இறைவன் நல்லறம் புரிந்து தனது குடும்பத்தவரையும் நல் வழியில் கொண்டு சென்ற ஒரு மனிதன் தனது குடும்பத்தாரோடு சொர்க்கத்தில் நுழைவதாக கூறுகிறான். எனவே ஹூருல் ஈன்கள் என்ற படைப்பு எப்படி பட்டது? அந்த படைப்பின் சேவை சொர்க்கவாசிகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இறைவனே அறிவான். அல்லது சொர்க்கத்துக்கு சென்றவர்கள்தான் நம்மிடம் வநது சொல்ல முடியும். அதுவும் தற்போதைக்கு முடியாத ஒன்று. ஒரே வழி ஹூருல் ஈன்கள் என்றால் அரபி அகராதியில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

Mates - தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்

Modest Gaze - அடக்கமான பார்வையுடையவர்கள்

Most Beautiful of Eye - அழகிய கண்களையுடைவர்கள்

Well-matched - மிகவும் பொருத்தமான துணையாளர்கள்

Neither man nor invisible being will have touched ere then – களங்கமற்றவர்கள்

வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. 'ஹூருல் ஈன்கள்' என்ற அரபி பதத்துக்கு அரபி அகராதியும், குர்ஆன் விரிவுரையாளர்களும் தரும் விளக்கமே மேலே நாம் பார்ப்பது. அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அது பெண்ணாகவும் இருக்கலாம், சொர்க்கத்துக்கென்றே பிரத்தியேகமாக படைக்கப்பட்ட (தேவதைகள்) படைப்பாகவும் இருக்கலாம். அவர்கள் யாரென்று அறியும் ஆவல் அதிகரித்தால் சொர்க்கத்துக்கு செல்ல என்ன அமல்களை செய்ய வேண்டுமோ அதை செய்து அதனை பெற்று 'ஹூருல்ஈன்களை' நமது கண்களால் பார்ப்போம். பலரது கேள்விக்கு அன்றுதான் விடை கிட்டும்.

என்ன இந்தியன்? இந்த உலகில் நற்காரியங்கள் செய்து சொர்க்கத்தை அடைய நான் ரெடி! நீங்க ரெடியா?

Anonymous said...

குஜராத் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட ஒரு அறிக்கையில், நரேந்திர மோடி, ரூ. 16,706,99,000,00.00 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழல் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களை மோடியின் சபாநாயகர், சபையை விட்டு வெளியேற்றிவிட்டார். ஊழல் வழக்கில் குஜராத் உயர் நீதி மன்றத்திலும் மோடி அரசுக்கு பலத்த அடி : நேற்று, குஜராத் உயர்நீதி மன்றத்தில், மோடியின் அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீதான, 400 கோடி ரூபாய் ஊழல் பற்றி மாநில கவர்னர் விசாரித்து, 3 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.