'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 28, 2012
சோமாலிய குழந்தை ஒன்றின் உள்ளக் குமுறல்.....
ஆதமுடைய மகன் ஒருவன் பசித்திருக்கிறேனே.....
ஆட்டையும், மாட்டையும், கோழியையும் ருசிப்பவரே......
ஆறுதல் கூறக் கூட எவரும் என்னிடம் வருவதில்லையே......
இதுதான் மனித நேயமா...சொல்லுங்கள் எனக்கு மட்டும்....
பலரும் இந்த நிலைக்கு வழக்கம் போல் இஸ்லாத்தை காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் தற்போதய நிலைக்கு யார் காரணம் என்பதை அலசுவோம்.
அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.
இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆக்கியது சோமாலியா. குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது.
எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.
தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை.
எனவே இக்பால் செல்வன் சொல்வது போல் அவர்களின் வறுமைக்கு இஸ்லாம் காரணம் அல்ல. அமெரிக்க ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மை போட்ட விதை இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.
ஆனால் அதனை தற்போது இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட அந்த மக்களை எவ்வாறு நாம் காப்பாற்றப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.
http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/
யுனிசெஃப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட சுட்டியில் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம். ரமலானில் நம்முடைய தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு நம்மவர்களின் உதவிகளை திருப்பி விடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
சோமாலிய மக்களை நினத்தால் கண்கள் கலங்கின்றது, இன்ஷா அல்லா நாடினால் அவர்களின் வறுமை போக்குவான், இந்த வருடம் ரமலான் நோன்பின் துவாவில் அவர்களுக்கா துவா தான் கேட்க முடிகிறது.
ஒரு சோமாலியன் கேட்ட கேள்வி "ஷகர் இப்தார் இரண்டு நேரத்தில் உணவு உண்ணவில்லை என்றால் இறைவன் நோன்பு ஏற்று கொள்ளபடுமா" என்ற கேட்ட கேள்வி மனதை காயபடுத்தி, கண்ணிர் வர வைக்கிறது.
கண்முன் காணும் இந்த ஒரு குழந்தை கதி போல் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் எத்தனை எத்தனையோ.
பஞ்சாபில் ரூ.200 கட்டணம் செலுத்தாததால் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய டாக்டர்கள்
ஜலந்தர்: பஞ்சாபில் இன்குபேட்டருக்கு ரூ.200 கட்டணம் செலுத்தாததால் அதை மருத்துவர்களே அகற்றியுள்ளனர்.
இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தை இறந்தது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சுனிதாவுக்கு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததையடுத்து அதை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர்.
குழந்தையை மேலும் சில நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று தெரிவித்த மருத்துவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சஞ்சீவிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பலரிடம் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் பணம் இல்லை என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்குபேட்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவர்கள் இன்குபேட்டரை அகற்றினர். இதையடுத்து குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.
இது குறித்து சஞ்சீவ் கூறுகையில்,
எனது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இன்குபேட்டர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் இல்லை என்று கொஞ்சம் தயவு காட்டுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் இன்குபேட்டரை அகற்றிவிட்டனர்.
மேலும் கட்டண பாக்கி இருந்ததால் குழந்தைக்கு ஏற்றிய குலுகோஸையும் நிறுத்திவிட்டனர்.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை என்னால் நம்பமுடியவில்லை. குழந்தையின் தந்தையை இது குறித்து புகார் கொடுக்க சொல்லியிருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கிறேன் என்றார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SOURCE: http://tamil.oneindia.in/news/2012/07/26/india-infant-dies-as-father-can-t-pay-rs-158432.html
கண்முன் காணும் இந்த ஒரு குழந்தையின் கதி போல் வெளிவராத இது போன்ற சம்பவங்கள் எத்தனை எத்தனையோ.
இது மட்டும் ஒரு முஸ்லீம் நாட்டில் சம்பவித்ததாக இருந்திருந்தால் ?
ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி கைகால் மூக்குநாக்குடன் தும்பிக்கையும் அமைத்து வாலையும் வளர்த்து மதச்சாயம் பூசி வலையுலகில் வரிசைபிடித்து மாறி மாறி இஸ்லாமிய கோட்பாடுகளையும் அனைத்துலக முஸ்லீம்களையும் அட்ராஅட்ராநாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க என்று காலத்துக்கும் குத்தாட்டம் ஆடி வறுத்தெடுப்பது மட்டுமே குறியாக கொண்டிருக்கும் சில ஜந்துகளும் அவைகளின் சொம்பு தூக்கிகளும் ஐயோ வடை போச்சே!!!! என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
சோமாலியா மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற நாடுகளில் மக்கள் வறுமையில் உழல்கின்றார்கள் .. குறிப்பாக முஸ்லிம்கள் !!! வடக்கு ஆப்பிரிக்காவின் சாகல் எனப்படும் பகுதி தான் வறுமைக்கு பேர் போன பகுதி ! அங்கு வாழும் மக்களில் 90 சதவீதம் முஸ்லிம்கள் .. ஆனால் ஏனைய வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடுகள் அவர்களை கண்டு கொள்வதே இல்லை !!! மனித நேயமற்ற மதங்களும் மலமும் ஒன்றே இரண்டும் பயனற்றவை .. மலமாவது மண்ணுக்கு உரமாகின்றது ... !!! முன்னையது ?
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ PART 1.
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது.
ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன்.
Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.
இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும்.
''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.
மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.
சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை.
நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது.
கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.
அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன்.
ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.
''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,
o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.
ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன்.
நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.
Continued……..
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ PART 2.
உதாரணமாக,
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!. அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!
அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள்.
ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்.
அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன்.
அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன்.
அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.
நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது.
அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.
ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார்.
அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.
மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.
''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.
அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம்.
எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார்.
அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.
Continued…….
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ PART 3..
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ''ஏன்?''
அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன்.
அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.
''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான்.
ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.
அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!
''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.
இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.
( இக்கட்டுரை முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து சுவனத்தென்றல் நிர்வாகியால் எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.)
''Jazaakallaahu khairan'' - Suvanathendral.com
சலாம் அண்ணன்,
சோமாலியாவின் வருமைக்கு காரணம் தான் என்ன??? அங்கு இயற்கை வளங்கள் இல்லையா??? மழை பெய்யாதா???? என்ன தான் பிரச்சனை??
தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்....
தொழில் வளங்களை உருவாக்கவே முடியாதா??? என்ன தான் செய்கின்றன உலக நாடுகள்....?
இக்பால் செல்வன்!
//அங்கு வாழும் மக்களில் 90 சதவீதம் முஸ்லிம்கள் .. ஆனால் ஏனைய வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடுகள் அவர்களை கண்டு கொள்வதே இல்லை !!! மனித நேயமற்ற மதங்களும் மலமும் ஒன்றே இரண்டும் பயனற்றவை .. மலமாவது மண்ணுக்கு உரமாகின்றது ... !!! முன்னையது ?//
அந்த மக்களின் தற்போதய நிலைக்கு வல்லரசுளின் தேவையற்ற தலையீடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியும் அவர்களின் சோகம் இன்னும் மறையவில்லை. அது இஸ்லாமிய மதமாக வெறும் சடங்கு சம்பிரதாயமாக மாறிப் போனதும் ஒரு காரணம். என்று இஸ்லாத்தை மார்க்கமாக கடைபிடித்து குர்ஆனின் வழிகாட்டுதலை ஒரு சமூகம் எடுக்கிறதோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு ஏற்படும். இயற்கையான மழை பொழிவு நின்று போனதும் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சிறு சிறு குழுக்களும் ஆயுதங்களை கையிலெடுப்பதும் பல காரணங்களில் ஒன்று.
செல்வந்த நாடுகள் உடன் ஏதாவது செய்ய வேண்டும். ஈரானையும் மற்ற முஸ்லிம் நாடுகளையும் தேவையில்லாமல் சண்டைக்கு இழுத்து விட்டு ஆயுத வியாபாரம் செய்து வரும் அமெரிக்கா இங்கு சற்று கவனத்தை செலுத்தலாம்.
அருமையான பகிர்வு
அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மை முஸ்லிமல்ல என்கிற நபிமொழி நினைவுக்கு வருகிறது
சலாம் சகோ சிராஜ்!
//சோமாலியாவின் வரு(று)மைக்கு காரணம் தான் என்ன??? அங்கு இயற்கை வளங்கள் இல்லையா??? மழை பெய்யாதா???? என்ன தான் பிரச்சனை??
தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்....
தொழில் வளங்களை உருவாக்கவே முடியாதா??? என்ன தான் செய்கின்றன உலக நாடுகள்....?//
பலரும் இந்த நிலைக்கு வழக்கம் போல் இஸ்லாத்தை காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் தற்போதய நிலைக்கு யார் காரணம் என்பதை அலசுவோம்.
அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.
இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆக்கியது சோமாலியா. குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது.
எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.
தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை.
எனவே இக்பால் செல்வன் சொல்வது போல் அவர்களின் வறுமைக்கு இஸ்லாம் காரணம் அல்ல. அமெரிக்க ரஷ்யாவின் ஆதிக்க மனப்பான்மை போட்ட விதை இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.
ஆனால் அதனை தற்போது இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கையாக எடுத்துக் கொண்ட அந்த மக்களை எவ்வாறு நாம் காப்பாற்றப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.
http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/
யுனிசெஃப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட சுட்டியில் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.
சகோ ஃபைஜ் ரஹ்மான்!
//ஒரு சோமாலியன் கேட்ட கேள்வி "ஷகர் இப்தார் இரண்டு நேரத்தில் உணவு உண்ணவில்லை என்றால் இறைவன் நோன்பு ஏற்று கொள்ளபடுமா" என்ற கேட்ட கேள்வி மனதை காயபடுத்தி, கண்ணிர் வர வைக்கிறது. //
மனித நேயமுடைய ஒவ்வொருவரும் இவ்வாறு ஒரு நாடு வறுமையில் உழன்று கொண்டிருக்க நமக்கு ஆடம்பர செலவுகள் தேவைதானா என்று கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
சலாம் சகோ ஹைதர் அலி!
//அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மை முஸ்லிமல்ல என்கிற நபிமொழி நினைவுக்கு வருகிறது//
உண்மைதான் சகோ... அங்கு முறையாக இஸ்லாம் இன்னும் சென்றடையாததும் ஒரு காரணம்.
சலாம் சகோ உண்மைகள்.!
//ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கி கைகால் மூக்குநாக்குடன் தும்பிக்கையும் அமைத்து வாலையும் வளர்த்து மதச்சாயம் பூசி வலையுலகில் வரிசைபிடித்து மாறி மாறி இஸ்லாமிய கோட்பாடுகளையும் அனைத்துலக முஸ்லீம்களையும் அட்ராஅட்ராநாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க என்று காலத்துக்கும் குத்தாட்டம் ஆடி வறுத்தெடுப்பது மட்டுமே குறியாக கொண்டிருக்கும் சில ஜந்துகளும் அவைகளின் சொம்பு தூக்கிகளும் ஐயோ வடை போச்சே!!!! என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.//
அருமையான பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தூக்கில் போடலாமே!
Sunday, July 29, 2012 விடுதலை
தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் வரை - அந்தத் தண்டனை வழங்கப் பெற முழுத் தகுதி உள்ளவர்தான் குஜராத் மாநில முதல்அமைச்சர் நரேந்திர தாஸ் தாமோதரதாஸ் மோடி.
அவருடைய ஆட்சியில்தான் 2000 முசுலிம்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன.
203 தர்க் காக்கள், 205 மசூதிகள் சாம்பலாக்கப்பட்டன.
4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகளும் நெருப்பின் பசியை ஆற்றின. ரூ 3,800 கோடி இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
70 ஆயிரம் முசுலிம்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 10,000 தோட்டக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இவ்வளவும், மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன.
குறைந்த பட்சம் இவற்றிற்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?
அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு லால்பகதூர் சாஸ்திரியும், ஓ.வி.அளகேசனும் பதவி விலகி இருக்கும்போது,
இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் அவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் என்பது, அரசியலில் பாலபாடமாகும்.
அதனைக் கூடச் செய்ய முன்வராத ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தவறு செய்திருந்தால், என்னைத் தூக்கில் போடுங்கள்! என்று குரல் கொடுப்பது அசல் பசப்பும், நயவஞ்சகமும், நரித்தனமும் கொண்டதே!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பிரபல சட்ட வல்லுநருமான கபில் சிபல் கிளப்பிய வினாவுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
10 வருடங்களாக மோடி மீது ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி நாணயமான கேள்வி அல்லவா?
ஏதாவது நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறினால் அதனை வீரவாளாகச் சுழற்றுவார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள்.
இதே மோடி மீது உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்தது?
முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னனுககு ஒப்பிட்டுக் கூற வில்லையா? அப்போது தம் வீரத்தைக் காட்டாமல் மவுனிகள் ஆனது ஏன்?
மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான், மனிதம் உண்டாக்கப்பட்டது.
இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப்போய்விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்பதற்காகவா, இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்ப வில்லையா?
மொத்தம் 4,252 வழக்குகளில் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளுக்கும் புலனாய்வு மீண்டும் செய்யப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வைத்த குட்டு, மோடியின் தலையில் அல்லவா?
மோடியின் அமைச்சரவையில். முக்கியப் பொறுப்பில் இருந்தவர் ஹரேன் பாண்டியா; மக்கள் விசாரணை ஆணையத்திடம் நடந்தவற்றை அப்படியே வெளியிட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப் பட்டதன் பின்னணி என்ன?
தனது மகன் படுகொலைக்குக் காரணம், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தாரே!
குஜராத் கலவரம் நடைபெற்றபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதிகாரிகளான ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ் பட் முதலியோர், வன்முறையின் பின்னணியில் முதல் அமைச்சர் மோடி இருந்தார் என்று கூறி இருக்கிறார்களே - நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனரே!
இவ்வளவுக்குப் பிறகும் நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார் என்றால், எவ்வளவு அசட்டுத் துணிவும், நீதித் துறையின் மீது ஏளன உணர்வும் இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட நரவேட்டைப் பேர்வழியை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள் - எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய காட்டு மிருக உணர்வைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாரீர்! -
வாய்ப்பு இருந்தால் முதலில் இத்தகையவர்களைத் தூக்கில் போட வேண்டுமே!
SOURCE: Sunday, July 29, 2012 “விடுதலை “
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே அருமையான பதிவு.
மொத்த அப்பிரிக்கவை காட்டிலும் இந்தியவில்தான் வறுமை பட்டினி ஊட்டச்சத்துயின்மை அதிகம்.
சகோதரே சிராஜ் said...
//சோமாலியாவின் வருமைக்கு காரணம் தான் என்ன??? அங்கு இயற்கை வளங்கள் இல்லையா???//
இங்கு நாட்டில் மலைகளில் கல்கள் மின்னும் (டைமன் இல்லை), இயற்கை வளங்கள் கொட்டிகிடக்கிறாது. அதற்காக தான் ஒலகமாக நாட்டமையும் முக்கை உள்ளே நுலைக்கிறார்.
//மழை பெய்யாதா???? என்ன தான் பிரச்சனை??
தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்....//
கிளைமேட் நல்ல 20-30 டிகிரி தான் இருக்கும். சோமலியா கடலில் மீன்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இங்கு பெருபண்மையான மக்கள் மீன்களை விரும்பி உண்ணுவதில்லை. வெளி நாட்டில் இருந்து சென்று மீன்களை டண்கனக்கில் பிடிப்பார்கள்.(அதுவும் ஒருதடவை கடலுக்குல் கிரேனை போட்டால 5 டன் முதல் 10 வரை) பெரும்பாலும் இவர்கள்தான் அவர்களிடத்தில் பணய கைதியா மாட்டுகிறார்கள்.
//தொழில் வளங்களை உருவாக்கவே முடியாதா??? என்ன தான் செய்கின்றன உலக நாடுகள்....?// சோமலியா என்ற நாடு முன்று நாடகளகா பிரிந்துவிட்டாது. அரசங்கமே இல்லதா நாடுகள்,
அதில் சோமலிலேண்ட் என்ற நாடு இப்பொழு நல்ல வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறாது. இவர்களுக்குள் ஒர் அரசங்கத்தை நிறுவிகொண்டு நன்கு செயல்படுகிறார்கள். உலகத்தில் இந்த நாட்டிற்கு ஒர் அங்கிகாரம் மட்டும் கிடைத்தால் போதும் கிழக்கு அப்பிரிக்கா அவர்கள் செல்வந்த நாடுகாக இருக்கும்.
மொத்தத்தில் நம்ம ஒலகமாக நாட்டமையும் ஓர் காரணம்.
வஅலைக்கும் சலாம் சகோ நிஜாம்!
//மொத்தத்தில் நம்ம ஒலகமாக நாட்டமையும் ஓர் காரணம்.//
முக்கியமான காரணத்தை மிகச் சரியாகவே சொன்னீர்கள்.
Post a Comment