Followers

Sunday, February 24, 2013

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு யாருடையது? கட்ஜூஎங்கு பாம் வெடித்தாலும் உடன் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பிடமிருந்து தகவல் வந்ததாக நமது காவல் துறையும், புலனாய்வு அமைப்புகளும், இந்துத்வாக்களும் செய்திகளை கசிய விடுவர். 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கியது யார் என்பதை நீதிபதி கட்ஜூ மிக அழகாக விளக்குகிறார். பார்த்து தெளிவு பெறுங்கள்.

--------------------------------------------------------

மும்பை: "பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி, 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக கருதக்கூடாது' என, மகாராஷ்டிரா மாநில அரசு நியமித்த, விசாரணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி, சந்திரசேகர் தர்மாதிகாரி கமிட்டியை, மகாராஷ்டிரா அரசு நியமித்தது. விசாரணை நடத்திய கமிட்டி, முதல் இடைக்கால அறிக்கையை, 2010ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது அறிக்கையை, 2011, செப்டம்பரிலும் தாக்கல் செய்தது. மூன்றாவது அறிக்கையை, இம்மாதம், 16ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை சுட்டி காட்டியிருந்தது.இந்நிலையில், மும்பை ஐகோõர்ட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தொடரப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையின் போது, மேற்கண்ட கமிட்டியின் பரிந்துரை அறிக்கையின் பிரதி தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்திரசேகர் கமிட்டி தன் பரிந்துரையில் கூறியிருப்பதாவது:

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர், 15 வயதுடையவராக இருந்தாலும், அவரை சிறாராக பார்க்க கூடாது. பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உருவாவதற்கு, இணைய தளங்களில் வலம் வரும் ஆபாச படங்களும், முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் காட்சிகளும் காரணம். இவை எளிதாக கிடைப்பதால், இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதுவே குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது.இதை, உடனடியாக தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்து தண்டிக்கப் பட்டவர்கள் பற்றிய விவரங்களை பகிரங்க படுத்த வேண்டும்.

இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை , அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட டிக்கெட் தரக்கூடாது. பள்ளிகளில், தங்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை, மாணவியர் புகாராக தெரிவிக்க, குறை தீர்ப்பு மையங்களை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்
23-02-2013

இதைத்தானே இஸ்லாமும் அன்றே சொன்னது. 18 வயது என்பதை நாமாகவே முடிவெடுத்து கொண்டு இன்று அதனை திருத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு மனிதன் அவன் குழந்தை பெறும் பக்குவத்தை அவனது உடல் அடைந்து விட்டாலே அவன் மேஜராகி விடுகிறான் என்பதுதான் இஸ்லாமிய சட்டம். இஸ்லாமிய சட்டம் இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே இஸ்லாமிய சட்டங்களை ஒவ்வொன்றாக நமது நாடு அமுல்படுத்தி வருவது ஒரு விந்தை அல்லவா!

மேலும் சமீபத்தில் ஆசிட் வீச்சில் இறந்த அந்த இரண்டு பெண்மணிகளுக்கு பகரமாக சம்பந்தப்பட்ட நபர்களின் முகத்திலும் அதே போல் ஆசிட் வீசி கொல்ல வேண்டும் என்ற கருத்தும் தற்போது பரவலாக வைக்கப்படுகிறது. அதாவது 'கண்ணுக்கு கண்' என்ற இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்தச் சொல்லி பலரும் கோரிக்கை வைக்கின்றனர். இதுவும் கூட விந்தையல்லவா! இஸ்லாமிய சட்டங்கள் எக்காலததுக்கும் எல்லா நாட்டு மக்களுக்கு பொருந்தக் கூடியதே என்பது நிரூபணம் ஆகிறது அல்லவா?

6 comments:

Anonymous said...

. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பை உருவாக்கியது யார் என்பதை நீதிபதி கட்ஜூ மிக அழகாக விளக்குகிறார்.//
இதை அறிந்தவர்கள் நடிப்பவர்கள்.
இதை அறியாதவர்கள் மூளைசலவை செய்யப்பட்டவர்கள்.

Muhammed said...

well said sir.

faizeejamali said...

இன்தியன் முஜாஹிதீன் என்பது முஸ்லிம்கலுக்கு எதிரான ஹின்துத்துவா வாதிகலின் அபான்டமான அவதூரு பரப்புரை

Anonymous said...

Good..
Super article..
G.M.Nawash sharif

Anonymous said...

ஷாலி says:
February 26, 2013 at 5:22 pm

திரு.பாண்டியன் கூறுவதுபோல், // வீர சாவர்க்கார் என்ன பண்ணினால் உங்களுக்கென்ன வந்தது? அப்படி என்ன வெறுப்பு?//. அரை டவுசர் சேவக்குகள் விநாயக் தாமோதர் சாவார்க்கரை ஏற்றிப் போற்றட்டும்,அது பற்றி யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இவர்களுடைய ஆதர்ஷ புருஷர் ஏன் அந்தமான் ஜெயிலில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்? ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒருமுறை மன்னிப்பு கடிதம் கேட்டு கடிதம் எழுதியிருந்தால் அதை புரிந்துகொள்ளலாம்.ஆனால் ஜெயிலுக்கு வந்த வருடமே மன்றாடலை ஆரம்பித்துவிட்டார்.1911 அக்டோபரில் ல் முதல் கடிதம்,1912 டிசம்பர் 15 ல் இரண்டாவது கடிதம், 1913 நவம்பரில் மூன்றாவது கடிதம்,19 14 பிப்ரவரியில் நான்காவது கடிதம்.நான் ஏன் வெளியே வரவேண்டும்? என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் இங்கு ஹைலைட்.திருவாளர். க்ருஷ்ண குமார்,பாண்டியன்களின் வீரத் தலைவரின் மன்றாட்டத்தைப் பாருங்கள். “ இந்திய இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள். என்னை விடுவித்தால் நானும் எங்கள் இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.” வழி தவறிப்போன மகன், அரசராகிய பிறந்த வீட்டு வாசலுக்கு வரும்போது சர்வ வல்லமை பொருந்திய தங்களையன்றி வேறு யார் கருணை காட்டமுடியும்? தயவு செய்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”…..இப்படிப்போகிறது சரணாகதி வ்யாசம். சாவர்க்கரின் உறுதிமொழியை இன்றும் அவரது சீடர்கள் வெள்ளையன் வாழ் இங்கிலாந்து,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா நாடுகளில் உஞ்சவிருத்தி சேவை செய்து நிறைவேற்றுகிறார்கள்.
காந்தி கணக்கை முடிக்க என்ன காரணம்? 1942 ஆகஸ்ட் 8 ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறும் முன்பு காந்தியின் சொற்பொழிவில் கூறியது.” வாள் வலிமையால் முஸ்லிம்களை ஹிந்துக்களின் மேலாதிக்கத்தின் கீழ் வைக்கவேண்டும் என டாக்டர் முன்ஷி, திரு.சாவர்க்கர் ஆகியோர் நினைக்கிறார்கள்,அவர்களை என்னால் பிரதிநிதிப் படுத்தமுடியாது.” வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தவர் சாவர்கார். ஹிந்துஸ்தான் என்னும் ஒரு நிலப்பரப்பை மட்டும் நேசித்து,முப்பது முக்கோடி தேவர்கள் நிரம்பிய ஹிந்து மதத்தின் ஞான தரிசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாத்திகரை ஹிந்து மதத்தின் ஆதாரமாக பேசுவது வேடிக்கைதான். நாத்திகரையும் உட்செரித்துக்கொண்டதுதான் ஹிந்து மதம் என்பார்கள்.பவுத்தனையும் பத்தாவது அவதாரமாக ஆக்கிக்கொண்டதால்தான்,தமிழ் ஹிந்து சைவர்களைக் கொன்ற புத்தனின் பேரன் அஹிம்சாமூர்த்தி ராஜ பக்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. அவரும் புத்த பெருமாளை சேவிக்க திருப்பதி வருகிறார். விபரம் புரியாத தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இறுதியாக, வீரர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்வார்கள், வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.

Anonymous said...

நாகர்கோவில்: குமரி மாவட்ட எஸ்.பி.க்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இஞ்ஜினியரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனுக்குநேற்று வந்த இமெயிலில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அடுத்து சிறிது நேரத்தில் மற்றொரு இமெயில் வந்தது. அதில் நாகர்கோவில் ஸ்டேட் பேங்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் அது வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து டி.எஸ்.பி. ரத்னவேல் தலைமையில் போலீசார் ஸ்டேட் பேங்குக்கு சென்றனர். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் பேங்க் முழுவதும் சோதனை செய்தனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இமெயில் மொபைல் போன் மூலம் வந்துள்ளதை சைபர் கிரைம் போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டிபுரம் டவரில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரையும் உடனடியாக கைது செய்தனர். மிரட்டல் விடுத்தவர் செண்பகராஜ் (22). கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர் நண்பரை சிக்க வைக்க அவரது இமெயில் முகவரியில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

-Dinamalar
28-02-2013