'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, February 03, 2013
சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும்!
ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னைகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது. பிராமணர் சங்கம் இடையில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களாம். அது அவர்களின் உரிமை. இப்படியே போனால் நாங்கள் எப்படி படம் எடுப்பது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த கூத்தாடிகளின் வருமானத்துக்காக மற்றவர்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று நாமும் அவர்களைப் பார்த்து கேட்கலாம். இது போன்ற பிரச்னைகளால் சினிமா தொழில் படுத்து விடும் என்று நினைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது தமிழகத்துக்கு ஒரு விடிவு காலமாகவே அமையும். இன்று வரை சமூகம் சீரழிந்ததற்கு முக்கிய காரணம் இந்த சினிமா என்றால் மிகையாகாது. சமூகத்துக்கு இந்த சினிமாவால் விளைந்த நன்மைகள் என்று தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. எனவே சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும் என்றால் அது மிகையில்லை.
இது ஒரு படம் தானே! ஏன் இந்த அளவு எதிர்ப்பு என்று பலரும் யோசிக்கலாம். வேறு நாட்டவருக்கு இந்த இஸ்லாத்தின் மகிமை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக சாதியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இந்த பாரத நாட்டில் இஸ்லாம் என்று நுழைந்ததோ அன்றே வர்ணாசிரமத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. எங்கு செல்வது என்று திக்குத தெரியாமல் தவித்த அந்த மக்களை அன்பாக அரவணைத்துக் கொண்டது இஸ்லாம். அந்த மக்களுக்கு மதம் மாறிய இஸ்லாமியருக்கு வழி வழியாக அதே இன்பம் இன்று வரை கிடைத்து வருகிறது. வேத நூலான குர்ஆன் மற்றவர்களுக்கு ஒரு சாதாரண புத்தகமாக தெரியலாம். ஆனால் முஸ்லிம்களுக்கோ தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சட்ட புத்தகம்.
இந்து மதத்தை பலமுறை கேலி செய்துள்ளார். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? நீங்கள் ஏன் கொதிக்கிறீர்கள்? என்று வாதம் வைக்கப்படுகிறது. இந்து மக்களில் 90 சதவீதமான பேர் தங்களின் வேதத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. விரும்புவதும் இல்லை. அந்த வேதங்கள் இறைவன் அருளியதுதானா என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கவில்லை. நாத்திகனாகவும் ஆத்திகனாவும் இருந்து கொள்ள இந்து மதம் அனுமதிக்கிறது. ஆனால் குர்ஆனை இறை வேதம் என்று நம்பவில்லை என்றால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதாக இஸ்லாத்தின் கட்டளை. கமல் தனது மதத்தின் குறைகளை பொதுவில் வைப்பதற்கும் இஸ்லாத்தை வம்புக்கிழுப்பதற்கும் நிறைய வித்தியாகம் உள்ளது. தாலிபான்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு மாற்றமாக உள்ளதாக கதை பிண்ணனி அமைந்திருந்து பிறகு அந்த இளைஞன் குர்ஆனின் வசனங்களை படித்து திருந்துவதாக காட்சி அமைத்திருந்தால் முஸ்லிம்களும் வரவேற்றிருப்பர். ஆனால் இவரோ தீவிரவாத செயல்களுக்கு குர்ஆனின் வசனங்களும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுமே காரணம் என்பதை மிக லாவகமாக புகுத்துகிறார். இஸ்லாமியர்களிலும் நாத்திகர்கள் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறார். அமெரிக்காவை புகழ்ந்து தனது ஆஸ்கார் கனவை நனவாக்கத் துடிக்கிறார். இது அனைத்துமே கானல் நீர்தான் என்பதை சில காலம் கழித்து புரிந்து கொள்வார்.
சமீபத்தில் விஸ்வரூபம் சம்பந்தமாக நான் படித்த சில விமரிசனங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன். படிதது கருத்துக்களை பகிருங்கள்.
-----------------------------------------------------------
விஸ்வரூபம் 100/100
டக்ளஸ் அண்ணே,
கமல் கோய்ச்சிக்கிட்டு தமியகத்தை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போறதும் இல்லை;
ரசினி காந்து 'தோ வர்றேன் தோ வர்றேன்னனு' சொல்லிட்டு அரசியலுக்கு வரப்போறதும் இல்லை.
இது சினிமாண்ணே... டிக்கிட்டு வாங்கினோமா, பார்த்தமான்னு போய்ட்டே இருக்கணும்.
000
"டேய் மவனே, நம்மள ஏசப்பா காப்பாத்திட்டாரு. கை விடலை. அல்லேலுயா. இல்லைன்னா துப்பாக்கிக்கும் இதே கதிதான் ஆகி இருக்கும்." எஸ். ஏ. சந்திர சேகர் இப்படி இளைய தளபதியிடம் சொல்லி இருக்க சான்ஸ் நிறைய இருக்கு!
000
"கமல்ஹாசன், ஒபாமாவிடம் சூட்கேஸ் வாங்கிய புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது!"
விஸ்வரூபம் படத்துக்கான ஓசி டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், சு.சாமி இப்படியும் சொல்லக்கூடும்.
விஸ்வரூபம் : பட விமர்சனம் :
சினிமாட்டிக்கா சொல்லணும்னா, சரியான சிச்சுவேஷன்!
மிகச் சரியான லொகேஷன்!
மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டான்னு மக்களால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெஸ்மரைசிங் மெலடி.
நான் இந்தியனா, தமிழனா, அமெரிக்கனா, இடியட் இந்துவா அல்லது முட்டாள் முசுலீமா என நம்மையே குழப்பிவிடும் அற்புதமான எடிட்டிங்.
ட்விஸ்ட்டுமேல ட்விஸ்ட்டா வந்த திரைக்கதை அமைப்பு.
இந்துக்களும் முசுலீம்களுக்குமான அந்தர் பல்ட்டி ஸ்டண்ட்.
"இந்தியா இடம் கொடுக்கலைன்னா நான் அமெரிக்கா போறேன்" போன்ற சென்டிமென்ட் வசனங்கள்.
கோலிவுட்டில் கோலி விளையாடிய ஹாலிவுட் தமிழ்ப்படம். ஃபன்டாஸ்டிக் ப்ரிமியர்.
நாம முட்டாளா இருந்தா, இந்தப் படத்துக்கு கண்டிப்பா, மார்க் 100/100.
000
கோர்ட்டு தீர்ப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால், "விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் கிட்னிக்கு மிகவும் நல்லது," போன்ற அறிவுபூர்வமான விஞ்ஞான விளக்கங்களை நம்ம 'பாஞ்சி நாள் புகழ் நாராசாமி' அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கலாம்!
000
http://puthiyapaaamaran.blogspot.com/2013/01/100100.html
--------------------------------------------------------------
Noorul Amin
“மெல்லிய இதயம் உள்ளோர்க்கு ஒரு எச்சரிக்கை: தினம் உலகச் செய்திகளில் காணும் வன்முறைக் காட்சிகள் சில எம் படத்திலும் கதைக்கேற்ப சித்தரிக்கப்பட்டுள்ளது. திடமனதுடன் காண்க.” என்கிற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது விஸ்வரூபம். இங்கு வாசிக்கும்/கேட்கும் என்ற சொல் இல்லாமல் “காணும்” என்கிற சொல்லின் பின்னால்தான் கமல் தன் பாசிச பரப்புரையை கட்டமைக்கிறார். பொதுவாக செய்திகளில் கழுத்தறுப்பது தூக்கிலிடுவது போன்ற வன்முறை காட்சிகள் காணொளியாகவோ புகைப்படமாகவோ காண்பிக்கப்படுவதில்லை. அப்படியே காட்டப்பட்டாலும் சில இடங்கள் மறைக்கப்பட்டிருக்கும் .இவற்றை எந்த செய்தி ஊடகங்களில் “கண்டார்” என்பதை கமல்தான் விளக்க வேண்டும். அவர் செய்திகளில் “கண்ட” கருவருத்தல் காட்சியை உன்னைப் போல் ஒருவன் படத்தில் காட்சிப்படுத்தாமல் வசனம் மூலமாக சொல்லத் தெரிந்த கமலுக்குக்கு விஸ்வரூபத்தில் பல செய்திகளை காட்சிப் படுத்தம் தேவையை அவரது ஹாலிவுட் தாகம் ஏற்படுத்தியிருக்கிறது பாவம். அல்லது படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது ரகசிய முதலாளிகளின் ஏகாதிபத்திய அரிப்பிற்கு இதமாக சொறிந்துவிட கமல் தன் கலை விரலகளை பயன்படுத்தியிருக்கலாம்.
இங்கு ஒரு சிறிய நினைவுறுத்தல். ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ ஒரு பேட்டியில் கில் பில் படத்தில் சில வன்முறை காட்சிகளை அனிமேஷனில் காட்டும் உத்தியை ஒரு இந்திய திரைப்படத்தில் இருந்து எடுத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். அந்த படம் ஆளவந்தான். ஹாலிவுட் இயக்குநகளே வியக்கும் வண்ணம் தன் படங்களின் காட்சிகளை அமைக்கும் திறம் படைத்த கமல் கழுத்தறுப்பு, தூக்கிலிடும் காட்சிகளை அப்பட்டமாக காண்பித்தது தற்செயலானது அல்ல. ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு முஸலிம் வன்முறையாளன் ராணி முகர்ஜியின் கழுத்தை அறுக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டதும் தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை.
தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தலையை வெட்டும், கையை வெட்டும் காட்சிகளை கமல் வைத்திருந்தாலும் அந்த படங்களின் இயக்குனர் கமல் இல்லை. அந்த படங்களின் காட்சிகள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படாததால் அவை கற்பனையானவை என புறந்தள்ளிவிடலாம்.
நிருபமா (பூஜா குமார்) படத்தின் ஆரம்பத்திலேயே ”மிடில் கிளாஸ் ஊழல்” என்று எதை கூறுகிறார் என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் லோ கிளாஸ் ஆக இருந்தவர்களையெல்லாம் இடஓதுக்கீடு இன்று மிடில் கிளாஸ் ஆக்கியிருக்கிறது. ஒருவேளை இதைதான் மிடில் கிளாஸ் ஊழல் என படத்தின் இயக்குனர் குறிப்பிடுகிறாரோ?
பணத்தை வங்கியில் போடாமல் இரும்பு பெட்டியில் ஏன் வைக்கிறாய் என்கிற நிருபமாவின் கேள்விக்கு அமேரிக்க வங்கிகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் என்னுடைய மத்திய கிழக்கு வாடிக்கையாளர்கள் மேல் அமேரிக்க வங்கிகளுக்கு நம்பிக்கையில்லையே என தீபக் பதிலளிக்கிறான். அமேரிக்காவின் மிகபெரிய வங்கியான சிட்டி வங்கியின் கணிசமான பங்குகளை வைத்திருப்பது சவுதி இளவரசர்களில் ஒருவரான அல் வலித் பின் தலால் என்பதை அறியாத மக்களுக்கு இந்த வசனம் ஆச்சரியமளிக்காமல் இருக்கலாம். எனக்கு சற்று வியப்பை தந்தது என்னவோ உண்மைதான். அந்த காட்சியியை தொடர்ந்து ஓசாமா கொல்லப்பட்டதை குறித்து அமேரிக்க அதிபர் ஓபாமாவின் உரை வருகிறது.. அப்போது விஸ்வநாத் “மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது” என தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்.. மேலும் அங்கு ஆண்ட்ரியா “அசுராளக் கொன்னா கொண்டாடதானே செய்வா?” என கேட்க அதற்கு சேகர் கபூரின் பதில். ”அத அசுரனோட அண்ணன், தம்பி, பொண்டாட்டி புள்ளைகிட்ட சொல்லு பாப்போம்” என்கிறார். இங்கு ஒசாமாவின் சாவை பார்ப்பன பெண்ணான ஆண்ட்ரியா கொண்டாடுகிறாள், பார்ப்பனரான சேகர் கபூர் நடுநிலை வகிக்கிறார். பார்ப்பன பெயரில் வாழும் முஸ்லிமான கமல் மட்டும் வருத்தம் தெரிவிக்கிறார்.. இதற்கு அடுத்த காட்சியிலேயே கமல் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது காட்டப் படுகிறது.. அதாவது என்னதான் இந்திய உளவு அமைப்பான ரா வின் அதிகாரியாக இருந்தாலும், விஸ்வநாத் என்கிற இந்துப் பெயரில் வாழ்ந்தாலும், அமேரிக்க மண்ணில் பிழைப்பு நடத்தினாலும் ஒரு (இந்திய) முஸ்லிம் ஓசாமா போன்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் வருத்தப்படத்தான் செய்வான் என்னும் பாசிச கருத்துருவாக்கத்தை சப்தமில்லாமல் செய்கிறார் கமல்..
பின்னர் கமல் ஒரு முஸ்லிம் என தெரிந்த பிறகு தீபக் கமலிடம் நீ முஸ்லிமா? அதன் பிறகு நம்முடைய பிரச்சினையை மூன்றாவது மனிதன் பேச வேண்டாமே என அவளை (தன் மனைவியை) தனியாக இழுத்து செல்லும் கமலைப் பார்த்து ”அவள தொட்டன்னா கையை உடைச்சுடுவேன்” என மிரட்டும்போது ஒரு இந்து பெண்ணை முஸ்லிமான நீ எப்படி தொடலாம் என்னும் துணைக் கேள்வி தொக்கி நிற்கிறது.. குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம் ஆண்களை காதலித்து மணந்த இந்துப் பெண்களை இந்துத்துவ தீவிரவாதிகள் குறி வைத்து கொன்ற செய்திகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நிருபமா கமலுடன் உடல் ரீதியாக கணவன் மனைவியாக வாழாத (வாழந்திருந்தால் கமல் முஸ்லிமா என்கிற சந்தேகம் என்றோ வந்திருக்குமே) காரணத்தினாலும். அவளே கமலுடன் வாழவிரும்பாத காரணத்தினாலும் மன்னிக்கப் படுகிறாள்.
வாயில் ஒட்டுவதற்கான டேப்பை கமல் வீட்டு கத்திரியை எடுத்து வெட்டும் தீவிரவாதியை பார்த்து ”எங்காத்து கத்திரியால உன் டேப்பை ஏன் வெட்டற” என நிருபமா சொல்லும் தீண்டாமை வசனங்கள் வேறு இடைச் செருகலாக வருகின்றன. தன்னை எதுவும் செய்யும்முன் துஆ செய்யவேண்டும் என் கோரிக்கை விடுத்து கைக்கட்டுகளை அவிழ்த்த பிறகு அந்த இடத்தில் இருக்கும் தீவிரவாதிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகளையும் அங்கு பின்னணியில் வரும் “யாரென்று தெரிகிறதா. இவன் தீ என்று புரிகிறதா” எனும் பஞ்ச் பாடலையும் பார்த்து ஒரு முஸ்லிமை வீரனாக காட்டிருக்கிறாரே என்று புளகாங்கிதமடைந்து விடுவார்கள் இந்த முட்டாள் துலுக்கர்கள் (காலம்காலமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வழக்குச் சொல்தான்) என்ற கணக்கில்தான் இது முஸ்லிகளுக்கு எதிரான படம் இல்லையென மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறார் கமல். ..
கமல் தீவிரவாதியின் பிடியில் இருந்து தப்பித்து சென்றபின் “இத்தனை பேர் இருக்கும்போது எப்படி அவன் தப்பிச்சு போனான்?” என்கிற கேள்விக்கு உமரின் பதில் ”மறந்துட்டியா? இதில் என்ன ஆச்சரியம்? அவன் ட்ரெயினிங் குடுத்த்து அல் காய்தாவிற்கே?” ஒரு இந்திய/தமிழ் முஸ்லிமை நம்பிக்கையோடு ரா போன்ற அமைப்புகளில் சேர்த்துக் கொண்டாலும் அவன் வாய்ப்பு கிடைத்தால உளவு பார்க்கும் வேலையை விடுத்து அல் காயிதாீபோன்ற தீவிரவாத அமைப்புகளுக்கே பயிற்சி அளிப்பான். ஆப்கான்/அரேபிய முஸ்லிம் தீவிரவாதிகளை விட புத்திசாலியான தமிழ் முஸ்லிம் தீவிரவாதி (அவன் ரா உளவாளியாகவே இருந்தாலும்) ஆபத்தானவன் என்கிற கருத்துருவாக்கத்தை ஏற்படும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.
தாலிபான் தீவிரவாதி உமரின் அறிமுக காட்சியில் அவன் தனது செயற்கை கண்னை பொறுத்துகிறான். உண்மையான தாலிபான் தலைவன் முல்லா உமருக்கும் ஒற்றைக் கண்தான். என்று செய்திகளில் படித்தது நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த கதை கற்பனையல்ல உண்மைதான் என நிறுவும் முயற்சியாகதான் இதை பார்க்க வேண்டியிருக்கிறது.,
அமேரிக்காவில் வாழும் எல்லா இஸ்லாமிய தீவிரவாதிகளும் தமிழ் பேசுகிறார்கள். விஸ்வநாத்தையும் நிருபமாவையும் கடத்தி செல்லும் காட்சிகளில் மட்டும் யெல்லா யெல்லா (நட நட) என அரபியில் கதைக்கிறார்கள் (ஒருவேளை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போன தமிழ்நாட்டு தீவிரவாதிகள் எல்லாம் அமேரிக்காவில குடியேறிவிட்டார்களோ என்னவோ?) ஆப்கான் தீவிரவாதி ஒருவன் தமிழ் பேசுவது ஒரு லாஜிக் ஓட்டையாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும். சமீபத்தில் வந்த சிறுத்தை என்கிற மசாலா படத்தில் கூட ஆந்திராவில் நடக்கும் கதையில் எல்லோரும் தமிழ் பேசுவதை ஒரு விளக்க செய்தியை போட்டு ஏற்க வைத்திருப்பார்கள். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கூட மும்பையின் தாராவியின் குடிசைப் பகுதியில் வளரும் குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசியதை உலகத்தின் பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே ஆப்கன் தீவிரவாதி தமிழ் பேசுவதற்கான காரணியை விளக்கும் உரையாடலின் பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்வதில் சிரமமேற்படவில்லை.
”நீங்க எங்கே தமிழ் கத்துகிட்டிங்க?”
”தமிழ்நாட்டுல! ஒரு வருஷம் ஒளிஞ்சுகிட்டுருந்தேன். கோயம்புத்தூர், மதுரை, அயோத்தியா. அகமதாபாத்.” இதில் அயோத்தியாவையும், அகமதாபாதையும் எப்போது தமிழ்நாட்டில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை.
இந்த நான்கு நகரங்களில் கடந்த காலங்க்ளில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் வடநாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இல்லாததாகவே நம்ப பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் தொடர்பு உண்டு என நம்ப வைக்கும் முயற்சியன்றி வேறென்ன?
தமிழ்நாட்டில் உமர் மட்டும்தான் சுற்றினானா அல்லது அவன் அல்லக்கைகளும் சுற்றினார்களா?. சுற்றாத பட்ச்ததில் அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள்? முற்றிலும் அந்நியமான ஒரு மொழியை ஒரே வருடத்தில் கற்றுக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. இது என் சொந்த அனுபவம். நான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாகவும். தெலுங்கு, கன்னடம் ஒரளவிற்கு நன்றாக பேசுவேன். ஆனால் எனக்கு முற்றிலும் அந்நியமான் மொழியான அரபு மொழியை ஒரு வருடத்திற்கு மேலாகவும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தும் கற்றுக் கொள்ளமுடியவில்லை; நான் இரண்டு வருடம் ஜெர்மனியில் இருந்து கற்றுக் கொண்ட ஜெர்மன் மொழி பயிற்சி இல்லாததால் சுத்தமாக மற்ந்தேவிட்டது. இதில் ஆபகானி ஒருவன் ஒரே வருடத்தில் தமிழ் போன்ற ஒரு பழமை வாய்ந்த மொழியை கற்றுக் கொண்டானாம். கேக்குறவன் கேனப் பயலா இருந்தா கார்ல் மார்க்ஸோட பேரன்தான் கமலஹாசன்னு சொல்லுவாங்க போல..
ஆப்கன் தீவிரவாதிகளை தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்தும் நோக்கத்துடனே எழுதப் பட்டதாக் தோன்றுகிறது. ரோஜாவில் காஷ்மீர் தீவிரவாதியாக வரும் பங்கஜ் கபூர் தமிழில் பேசுவதற்கான காரணம் அவர் கோவையில் படித்ததாகஇருக்கும். காஷ்மீரை சேர்ந்த ஒரு இந்திய குடிமகன் கோவையில் படிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மணிரத்னம் உருவாக்கியதை விட மிக ஆபத்தான ஒரு கருத்துருவாக்கத்தை கமல் இங்கு முயற்சிக்கிறார்..
உமரின் நினைவுபடுத்தலில் நாசர் கமலைப் பார்த்து உனக்கு நீ ஆங்கிலத்தில் குர்ஆன் படித்திருக்கிறாயா என கேட்கிறார்.. அதற்கு கமல் இல்லையென பதிலளிக்கிறார். தாலிபான் போன்ற ஒரு அடிப்படைவாத இயக்கத்தில் குர்ஆனே படித்திராத ஒரு மதப்பற்று அல்லது மதவெறியே இல்லாத ஒரு முஸ்லிம் மிக எளிதாக சேர்ந்துவிட முடிகிறது. நாளை நான் எங்காவது சென்று நான் குர்ஆனைப் படித்ததில்லை என்ற உண்மையை சொன்னாலும் இவனுக்கும் தாலிபான்களை போல தீவிரவாத சிந்தனை இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்ற் கருத்து உருவாவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது மிதவாத முஸ்லிம் என்று யாருமே கிடையாது என்கிற ஆர். எஸ். எஸ் சின் நச்சுப் பரப்புரையை ஒத்திருக்கிறது.
”அப்பன் இல்லாத பசங்க உஷாரா இருப்பாங்க. உன்னை மாதிரி. தமாஷ்” இது ராகுல் போஸ் (உமர்) கமலை பார்த்து பேசும் வசனம்.. அதற்கு கமலின் பதில் “அப்பன் யாருனே தெரியாத பசங்க அதைவிட உஷாரா இருப்பாங்களோ உங்களை மாதிரி.. தமாஷ்?” இது கமல் அளிக்கும் பதில். இந்திய முஸ்லிமகள் தம் மனைவியரை தலாக் செய்துவிடுவார்கள். ஆப்கானிய பெண்கள் பெயர் தெரியாத யாருடனும் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் என ஒரு ஆப்கானிய முஸ்லிமும் இந்திய முஸ்லிமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்கிறார்கள். ஒருவன் கையை வைத்து அவன் கண்ணைக் குத்தும் கலை கமலுக்கு நன்றாகவே வருகிறது.. அதற்கு பிறகு “டேஞ்சர்பா இந்த ஆளு” என அந்த காட்சியை முடிக்கிறார் ராகுல் போஸ். அதாவது இந்திய/தமிழ் முஸ்லிம்கள் தாலிபான் பார்வையிலேயே மிகவும் ஆபத்தானவர்களாம்.. உசாமா பின் லேடன் போன்ற உருவ அமைப்பை உடைய ஒருவன்“ உச(ர)மா இருப்பாரே நம்ம ஷேக்” என விளிக்கபடுகிறான். பின்னர் “ஷேக் உசாமா எங்கே? அவர பாதுகாக்க வேணாம்” என கமலே கேட்கிறார் இன்னாரை இன்னார் என்று அறிமுகப்படுத்தும் நேர்மை கூட கமலிடம் வெளிப்படவில்லை. இந்த லட்சணத்தில் படத்தின் ஆரம்பத்தில் ஒரு வெங்காய விளக்கம் வேறு.. ஒரு குகைக்குள் அந்த உச(ர)மான ஷேக் கண்முன் தோன்றியதும் கமல் பக்கத்தில் இருக்கும் தீவிரவாதியிடம் ”அது?” என உறுதி படுத்திக் கொள்ளும் தொணியில் வினவ “அவரேதான்! எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது” என பதில் வருகிறது. அந்த காட்சியின் முடிவில் கடவுளைக் கண்ட பக்தனை போல அந்த உச(ர)மான ஷேக்கைக் கண்டு காமுற்றுக் கொண்டே குகையை விட்டு வெளியேறுகிறான் அந்த இந்திய./தமிழ் முஸ்லிம். ஒரு ரா உளவாளி அவன் முஸ்லிமாக இருந்தால் அந்த உச(ர)மான தீவிரவாதியை பார்த்து பேரின்பம் அடைவான் என ஒரு வக்கிரமான பாசிச செய்தியை இந்த காட்சியின் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது..
தங்களை காட்டிக் குடுத்ததாக தாங்கள் நம்பும் அரபியை பொது இடததில் தாலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள்.. அவனது அம்மாவும் அப்பாவும் கதறி அழுகிறார்கள். அப்போது சூரா- அல்- பாத்திஹா ஓதப்படுகிறது. (சூரா அல் பாத்திஹாவின் அர்த்தம், அல்லாவே எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! எனபதாகும்). அங்கு குழுமியிருக்கும் முஸ்லிம்கள் (கமல் உட்பட) எல்லாரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அந்த அரபி மரணத்துவிட்டான் என்பது உறுதிபடுத்தியபின் சுற்றியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.
அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக் கதிர்தான் என கமலின் குரலில் ஒரு பாடல் வேறு ஆப்கானிய காட்சிகளிலே வருகிறது.. அப்படி பார்த்தால் சி.ஐ,ஏ மூலமாக ஓசாமா பின் லேடனை விதைத்ததே அமேரிக்காதான். ஓசாமாவை விதைத்துவிட்டு உமர் கய்யாமையா அறுவடை செய்யமுடியும்.
ஆனால் இத்தனையும் வெளிப்படையாக செய்யும் நேர்மை கமலுக்கு கிடையாது.. தனது பாசிச கருத்துருவாக்கத்திற்கு ஒரு கேடயம் வைத்திருப்பார். ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் மகாத்மா காந்தி. ஆனால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் கதையில் காந்தியை எங்கு கொண்டு வருவது. அதனால் விசாம் (கமல்) என்னும் கதாபாத்திரத்தின் மனசாட்சியையே கேடயமாக்கி கொள்கிறார். “நான என் வாழ்க்கையில நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன். கெட்டதும் செஞ்சிருக்கேன். ஆனா நான் செத்தாலும் அழிக்கமுடியாத பாவம் என் நெத்தியில எழுதியிருக்கு.” என்று அமேரிக்க படைகளுக்கு தாலிபான்களை காட்டிக் கொடுத்தவன் என்று கமல் மற்றும் அவரது ரா கூட்டாளியின் தவறினால் பொய்யாக குற்றம்சாட்டபட்டு தூக்கிலடப்படும்) தவுபீக் என்னும் தீவிரவாதியின் மரணத்திற்காக வருந்துகிறார். ஒரு முஸ்லிமை ரா உளவாளியாக்கினால் அவன் கடமையை மறந்து ஒரு தீவிரவாதிக்காக அனுதாபப் படுவான் என இங்கும் ஒர் கருத்துருவாக்கம்..
இதற்கு மேல் எழுதுவதற்கு எனக்கே அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்க பாசிச விஷக் கருத்துகள் மிகவும் கவனமாக மறைமுகமாக விதைக்கபட்டிருக்கின்றது.. மொத்தத்தில் விஸ்வரூபம் ஒரு பார்ப்பனிய பாசிச மலம்!
http://m.facebook.com/photo.php?fbid=10200311647372226&refid=52&_ft_=qid.5839283837983940140%3Amf_story_key.-9030655700719840830&refsrc=http%3A%2F%2Fwww.facebook.com%2Fstory.php&_rdr
-----------------------------------------------------
Thaagam Senguttuvan
அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது !
இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் . நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள் .1992 ஆம் ஆண்டு தாகம் அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து ,குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள் ."சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள். இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ க்கட்டுரைகள் வெளிவந்து விட்டது .இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக ,கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது ! 50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால், உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன்,குணசீலன்,உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர் ) அய்யா அவர்களின் மகன் சக்தி .புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர் .இன்று அவர்கள் எல்லாம் எங்கே ?
இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே ,இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ ,மதன் ,s .v .சேகர் ,உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல் ,ஹேராம் ,உன்னைப் போல் ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதைப்பேசின? மதம் பேசாமல் எதை பேசின ? 1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ?
ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் ! தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர் ..நடிகர் ! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து ,உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை ..ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் !
நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நன்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப் பாருங்கள். இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்குக் கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள் ...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் !போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்தப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!
என்றும் அன்புடன்
தாகம் செங்குட்டுவன்
மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
மொத்த திரையுலகமும்,
எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- திரையுலகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
.
சலாம் சகோ.சுவனப்பிரியன்
ரொம்ப நீ.......ண்ட விடுப்புல போயிட்டு வந்துருக்கீங்க போல் இருக்கு..!! :-)) நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவுகளின் தொகுப்பாக அருமையாக தந்துள்ளீர்கள்...! ஆனாலும் இதை பற்றி அதிகம் பேசி டையர்ட் ஆகிவிட்டேன்..! ஆனாலும் ஒரு விஷயம் பற்றி பேசியே ஆக வேண்டும்..!
//பிராமணர் சங்கம் இடையில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களாம்.இப்படியே போனால் நாங்கள் எப்படி படம் எடுப்பது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.//
ஆம்.."கருத்து" சுதந்திர போராட்ட தியாகிகள் கவலை கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை (!!!) இது...இது பல பதிவுகளிலும் நம் உணர்வுகளை கேலிசெய்து வெளிப்படுவதை காண முடிகிறது...அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசத்தை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் !!!
விஜய் டிவி " கலக்க போவது யாரு " என்ற நிகழ்ச்சியை தொடங்கினர்..வித்தியாசமான நிகழ்ச்சி..ஆனால் அதையே "அசத்த போவது யாரு" என்று சன் டிவி நடத்தினார்கள் ...அதை ஒரு காப்பியாகவே மக்கள் பார்த்தனர்..புறக்கணித்தனர்...!ஆப்பிள் போன் போன்று சம்சன்க் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அபராதத்துடன் கேவலப்பட்டதுதான் மிச்சம்...இன்னும் சொல்லலாம்..! எதற்கு சொல்கிறேன் என்றால் 'காப்பி'க்கு எங்குமே மரியாதை இருக்காது..!
இவ்வளவு நாட்கள் எத்தனயோ படங்கள் கழுவி ஊத்துவது போல் வந்துள்ளது..அப்போதெல்லாம் சும்மா இருந்து விட்டு முஸ்லிம் மக்கள் களத்தில் நின்று போராடி வென்றதை பொறுக்க முடியாமல் அவர்களை போன்று "காப்பி " அடிக்க முயலுகின்றனர்..இதில் பெரிய காமெடி என்ன வென்றால் ஓடாமல் ஓய்ந்து போன " அலெக்ஸ் பாண்டியன் " படத்தில் சில காட்சிகள் உள்ளனவாம்.அதனால் பெட்டியில் சுருண்டு கிடக்கும் படத்திற்கு எதிர்ப்பாம்..! இப்படிதான் கேவலப்பட்டு கிடப்பார்கள் ...!
எங்க ....இவர்களுக்கு ஆண்மை இருந்தால் தனக்கு ஆதரவாக ஒரு நடுநிலை மனிதரையாவது கருத்து சொல்ல சொல்லட்டும்..வீதியில் இறங்கி பொதுமக்கள் குடும்பத்துடன் போராட்டம் செய்ய சொல்லட்டும்..மக்கள் எல்லாம் தெளிவாக உள்ளனர் அசல் எது நகல் எது என்று , இவர்கள் அசிங்கப்பட்டுதான் அடங்குவார்கள்..அதில் சந்தேகமே இல்லை..!!
நன்றி !!!
படத்தை படமா மட்டும் பாருங்க சுவனம். இல்லைன்னா வாழ்க்கை போயிடும்.(இது உங்களுக்கு அல்ல)
கூத்தாடிகளினால் எத்தனை தலைவார்கள் வீழ்ந்தார்கள் என்று நினைத்து பார்க்கவேண்டும்
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
பாதுகாக்கப்பட வேண்டிய அருமையான பதிவு.
வெட்கத்தை விட்டு ஓர் உண்மை சொல்கிறேன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் அப்படி ஒரு கமல் ரசிகனாக இருந்தேன்..! பட்டுக்கோட்டையில் ரிலீஸ் ஆகவில்லை என்று, காசு செலவழித்து தஞ்சாவூர் சென்று கமல் படம் பார்த்துள்ளேன்.
சகோ.தாகம் செங்குட்டுவன் அவர்களின் கடித வரிகள் ஒவ்வொன்றும் இடி..!
சகோ.நூருல் ஆமீன் விமர்சனம் நான் ஏற்கனவே முகநூலில் பகிர்ந்து இருந்தேன். அதில் அவரின் விவாத பின்னூட்டங்களும் மிகவும் அருமை.
கமல் போன்ற பணமும் விருதும் சம்பாரிக்க 'எதையும் செய்யும்' வியாபாரிகளால்தான் சினிமா மீது நடுநிலையாளர்களுக்கு அருவருப்பான வெறுப்பு வருகிறது.
இவர்கள் திருந்தினால் அனைவருக்கும் நன்று.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெறியை மண்டையில் குட்டி படம் எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன், தன் அவதார் படத்தில்..! அதற்கும் அகிலமெங்கும் பணமும் விருதுகளும் புகழும் கிடைத்தன. இதை கமல் போன்ற அமெரிக்க ஜால்ராக்கள் அறியவும்.
அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ் ..
சகோஸ் தாகம் செங்குட்டுவன் , நூருல் அமீன் ஆகியோர்களுக்கு என் ராயல் சல்யுட் அருமையாக சொல்லியிருக்காங்க ...
வழக்கம் போல சகோ நாகூர் மீரானின் 'பஞ்ச் டயலாக் ' அசல் நகல் ...சூப்பர் டயலாக் ...
" வரிக்குதிரையை நினைத்துக்கொண்டு தன உடம்பில் சூடு போட்டுக்கொண்டதாம் கோவேறுக் கழுதை "
அவாள்கள் சொன்னதை இப்போ எனக்கு நினைவுக்கு வருது .....
ஒரு மாசத்துக்கு முன்பு கமல் சொன்னது ::
அவர்கள் [முஸ்லிம்கள்] இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கலாம் ஆனால் உலகத்தில் பெரும்பான்மையினரே ...
அதாம்பா நீ ஆபகானிகளை அடித்தினா
இங்கே உள்ள முஸ்லிம்களுக்கு நெறி கட்டுது ..
சுவன் பாய்..வி/ரூபத்தின் தொடர் சர்ச்சை பதிவுகள் படித்து வந்ததுல " அன்பே சிவம் , மகாநதி , உ .போ . ஒருவன் , படங்களை பார்க்கணும், நமக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரமூங்கொ ......
சலாம்!
வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் ஆஷிக், நாகூர் மீரான், உண்மைகள், ஜெய்சங்கர், நாஸர் அனைவருக்கும் நன்றி! தொடர்ந்த வேலை காரணமாக தொடர்பு விடாமல் இருக்க அவ்வப்போது தலை காட்டுவேன். தனித்தனியாக பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். தொடர்பில் இருப்போம்.
poovannan says:
February 3, 2013 at 5:35 am
இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த கடவுள் நம்பிக்கை கொண்ட ஹிந்து மக்களுக்கு பெரியார் பெரியாழ்வார் தான்.மற்ற மாநிலங்களில் உயர் சாதியினரின் ஆதிக்கம் இன்றும் ஜோராக உள்ளது.மத்திய அரசு பணிகளில் உள்ள இட ஒதுக்கீட்டு இடங்களை தங்கள் மக்கள் தொகை சதவீதத்தை(மற்ற மாநிலங்களில் உள்ள BC/SC மக்களோடு ஒப்பிட்டால் ) விட அதிக அளவில் தமிழகத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் பெறுவதற்கு முக்கிய காரணம் இங்கு இட ஒதுக்கீட்டிர்க்க்கு இருக்கும் நீண்ட வரலாறு.அதற்க்கு போராடியவர்களில் யார் எப்படி மறைத்தாலும் மறைக்க முடியாத சூரியன் பெரியார் தான்.தமிழகத்தில் பிராமணர்களை துணைவியாக கொள்ளும் தாழ்த்தப்பட்ட /பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட நூறு மடங்கு இருக்கும்.இதற்கும் முக்கிய காரணம் பெரியார் தான்.பிராமண பெண்களின் இந்த துணிச்சலுக்கு.சுயமாக முடிவு எடுக்கும் சக்திக்கு முக்கிய காரணம் பெரியார்.
தமிழகத்தை சார்ந்த பிராமணர் அல்லாத ஹிந்துக்கள் அரசியல்,கல்வி,உயர்பதவிகளில் ஒரளிவிற்கு மேலே வந்ததற்கு காரணம் பெரியார் அல்லாமல் வேறு யார்.
கமலஹாசன் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்.ஆனால் கடவுள் நம்பிக்கையில் பெரியார் ஆதரவாளர்.அது அவர் விருப்பம். இட ஒதுக்கீடிற்கு எதிரரான கருத்து கொண்டவர் என்பதால் சில பிராமண துவேஷம் கொண்ட தி க ஆட்கள் அவரை வெறுப்பார்கள்,குறை கூறி கொண்டே இருப்பார்கள்.ஆனால் இட ஒதுக்கீடு பெரும் பெரும்பான்மை மக்கள் அவருக்கு இட ஒதுக்கீடு தவறு என்று கருதும் உரிமை உண்டு என்பதை புரிந்து கொண்டு அவரின் ரசிகர்களாக இருப்பார்கள்.யாரையும் ஒரு விஷயத்தில் அடக்கி பார்ப்பது வன்மம் கொண்டவர்களின் பார்வை
அதே போல தான் கடவுள் நம்பிக்கை உள்ள பெரும்பான்மை இந்துக்களும் பெரியாரை கொண்டாடுவர் .பெரியாரை வெறுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்ல,இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்,சாதி ஆதரவு அடிப்படைவாதிகள் தான்.
poovannan says:
February 3, 2013 at 4:37 am
மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கியமான இரு மாநிலங்களாக ஆந்திரமும் ,தமிழகமும் 1996 முதல் உள்ளன.1996இல் காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் மண்ணை கவ்வியதால் இங்கு பெரும் வெற்றி பெற்ற தி மு க,த மா க ,தெலுகுதேசம் கட்சிகள் முக்கிய பங்கு வஹித்த UF அரசு ஆட்சியில் இருந்தது
1998இல் ஆட்சி கவிழ்ந்து மறு தேர்தல் நடக்கும் போது கோவை குண்டுவெடிப்பு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பலத்த தோல்வி அடைந்த அ தி மு க தலைமையிலான அணிக்கு பெரும்பான்மை இடங்கள்(குண்டு வெடிப்புக்கு முன் தி மு க கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று தான் எல்லா கருதுகணிப்புகளும் தெரிவித்தன ) கிடைக்க உதவி செய்தது .ஆந்திரத்தில் நாய்டு ராஜ்ஜியம் தான்.இந்த இரு கட்சிகளும் NDA அரசை ஆட்டுவிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கின.அடுத்து வந்த 1999 தேர்தலிலும் அ தி மு க போய் தி மு க வந்தது தான் ஒரே மாற்றம்.நாய்டுவும்,தமிழக கட்சிகளும் முக்கிய பங்கு வகித்தன
அடுத்த தேர்தலில் 2004 இல் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த NDA கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு மாநிலங்கள் .தமிழகத்தில் 40 -0,ஆந்திரத்தில் தெலுகு தேசத்திற்கு நான்கு தான் .இதனால் தான் UPA ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவுடன் வர முடிந்தது.இந்த இரண்டு மாநிலங்களில் நிலை மாறியிருந்தால் NDA கூட்டணி தான் ஆட்சியை பிடித்திருக்கும்.
2009 தேர்தலிலும் இந்த இரண்டு மாநிலங்கள் தான் UPA தொடர முக்கிய காரணம்.இடதுசாரி போய் மம்தா வந்தார்.அதிக இடங்கள் இருக்கும் உத்தர்ப்ரதேசதில் இரண்டு ,மூன்று கட்சிகள் இடங்களை பிரித்து கொள்வதால் ,ஒன்றை ஒன்று ஆட்சியில் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதால் அதன் முக்கியத்துவம் குறைவு தான்.
பா ஜ கா .காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ஒரு தேர்தல் மாற்றி இன்னொன்றில் ஒரு கட்சி வெற்றி பெறுவதால்(ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் இன்னொன்றில் தோல்வி அடைவதால் எண்ணிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவது இல்லை.)
இந்த இரு மாநிலங்களை குறி வைத்து அற்புதமாக காய் நகர்த்துதல் நடைபெறுவது போல தெரிகிறது .ஆந்திரத்தில் திடீரென்று சார்மினார் நான்கு தூண்களில் ஒரு தூணை ஒட்டி ஒரு கோவில்(ஐம்பது வருடங்களுக்கு முந்தைய சார்மினார் புகைப்படம் ஹிந்து பத்திரிக்கையில் வந்ததை பார்த்தால் அங்கு ஒரு கோவிலும் கிடையாது),கலவரம்,வழக்கு,இஸ்லாமியர் கட்சி மிரட்டல்,ஆதரவு வாபஸ் மற்றும் பல ஆண்டுகளாக வெற்றி கொண்டான்,ராமகோபாலன் ,தொகாடிய போல பேசி வந்த MIM நிறுவனரின் மகனின் பேச்சு வீடியோக்களை வைத்து இந்தியாவிற்கே ஆபத்து போல நடக்கும் போராட்டங்கள்,பிரசாரங்கள் ஆகியவற்றோடு நம் ஊரில் நடக்கும் (இங்கே சினிமா தானே கோவில்)சினிமா எதிர்ப்பு கோஷங்களோடு பொருத்தி பார்த்தால் சாணக்கிய தந்திரங்கள் தெரிகிறது.
இரு மாநிலங்களிலும் இஸ்லாமிய இயக்கங்களை தூண்டி விட்டு விட்டு மோடி தலைமையில் ராமர் கோவில் கட்டுவோம் ,சார்மினாரை உடைப்போம் நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று அவர் உருவாக்கிய பொன்வாக்கியங்கலொடு அவர் ரத யாத்திரை நடந்து இந்த மாநிலங்களில் கலவரம் வெடித்தால் ஆகா வோட்டுக்களை அள்ளலாமே
Post a Comment