Followers

Thursday, February 14, 2013

இவர்களெல்லாம் தீவிரவாதிகளாம்! சொல்வது யார்?

10 வயது, 12 வயது, 17 வயது சிறுவர்களையும் பெணகளையும் ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும், எமனிலும் குண்டுகளை போட்டு கொல்லும் அமெரிக்காவே!

இவர்கள்தான் தீவிரவாதிகளா? இவர்கள்தான் மனித குல விரோதிகளா? இந்த சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் உங்களை என்ன செய்தார்கள்? வேற்று கண்டத்தில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவே! உனக்கு ஆப்கானிஸ்தானைப் பற்றியும், பாகிஸ்தானைப் பற்றியும், ஏமனைப் பற்றியும், பாலஸ்தீனைப் பற்றியும் என்ன கவலை. நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்காது. இறந்த அந்த உயிர்களும், கை கால்களை இழந்த அந்த சிறுவர்களின் சாபமும் உங்களை சும்மா விடாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கெல்லாம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இத்தனை கொடூரங்களையும் அந்த அப்பாவி மக்களின் மேல் செலுத்தி விட்டு உலகமெங்கும் இஸ்லாமியர்களால்தான் தீவிரவாதம் பரவுகிறது என்று நாக் கூசாமல் பேசித் திரியும் அற்பப் பதர்களே! அமெரிக்கா தனது நேட்டோ படைகளோடு உலகம் எங்கும் நடத்தி வரும் தீவிரவாத்தை எதில் சேர்க்கப் போகிறீர்கள்? மேற்கத்திய நாடுகளின் தீவிரவாதத்தை பற்றி பேசக் கூட உங்கள் நா எழவில்லையே! இதுதான் நடுநிலையா? இஸ்லாமியர்களை தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி கதை கட்டுவதற்கு முன்பு சற்று மேற்கத்திய நாடுகளின் தீவிரவாத்தையும் அவர்கள் செய்யும் அத்து மீறல்களையும் சற்றே நடுநிலை என்று ஒன்று உங்களுக்கு இருக்குமானால் சீர் தூக்கி பாருங்கள்.List of children killed by drone strikes in Pakistan
January 24, 2013
Name | Age | Gender
Noor Aziz | 8 | male
Abdul Wasit | 17 | male
Noor Syed | 8 | male
Wajid Noor | 9 | male
Syed Wali Shah | 7 | male
Ayeesha | 3 | female
Qari Alamzeb | 14| male
Shoaib | 8 | male
Hayatullah KhaMohammad | 16 | male
Tariq Aziz | 16 | male
Sanaullah Jan | 17 | male
Maezol Khan | 8 | female
Nasir Khan | male
Naeem Khan | male
Naeemullah | male
Mohammad Tahir | 16 | male
Azizul Wahab | 15 | male
Fazal Wahab | 16 | male
Ziauddin | 16 | male
Mohammad Yunus | 16 | male
Fazal Hakim | 19 | male
Ilyas | 13 | male
Sohail | 7 | male
Asadullah | 9 | male
khalilullah | 9 | male
Noor Mohammad | 8 | male
Khalid | 12 | male
Saifullah | 9 | male
Mashooq Jan | 15 | male
Nawab | 17 | male
Sultanat Khan | 16 | male
Ziaur Rahman | 13 | male
Noor Mohammad | 15 | male
Mohammad Yaas Khan | 16 | male
Qari Alamzeb | 14 | male
Ziaur Rahman | 17 | male
Abdullah | 18 | male
Ikramullah Zada | 17 | male
Inayatur Rehman | 16 | male
Shahbuddin | 15 | male
Yahya Khan | 16 |male
Rahatullah |17 | male
Mohammad Salim | 11 | male
Shahjehan | 15 | male
Gul Sher Khan | 15 | male
Bakht Muneer | 14 | male
Numair | 14 | male
Mashooq Khan | 16 | male
Ihsanullah | 16 | male
Luqman | 12 | male
Jannatullah | 13 | male
Ismail | 12 | male
Taseel Khan | 18 | male
Zaheeruddin | 16 | male
Qari Ishaq | 19 | male
Jamshed Khan | 14 | male
Alam Nabi | 11 | male
Qari Abdul Karim | 19 | male
Rahmatullah | 14 | male
Abdus Samad | 17 | male
Siraj | 16 | male
Saeedullah | 17 | male
Abdul Waris | 16 | male
Darvesh | 13 | male
Ameer Said | 15 | male
Shaukat | 14 | male
Inayatur Rahman | 17 | male
Salman | 12 | male
Fazal Wahab | 18 | male
Baacha Rahman | 13 | male
Wali-ur-Rahman | 17 | male
Iftikhar | 17 | male
Inayatullah | 15 | male
Mashooq Khan | 16 | male
Ihsanullah | 16 | male
Luqman | 12 | male
Jannatullah | 13 | male
Ismail | 12 | male
Abdul Waris | 16 | male
Darvesh | 13 | male
Ameer Said | 15 | male
Shaukat | 14 | male
Inayatur Rahman | 17 | male
Adnan | 16 | male
Najibullah | 13 | male
Naeemullah | 17 | male
Hizbullah | 10 | male
Kitab Gul | 12 | male
Wilayat Khan | 11 | male
Zabihullah | 16 | male
Shehzad Gul | 11 | male
Shabir | 15 | male
Qari Sharifullah | 17 | male
Shafiullah | 16 | male
Nimatullah | 14 | male
Shakirullah | 16 | male
Talha | 8 | maleوَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

"மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று நபியே! நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு தண்டனையை தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்."

குர்ஆன்:14:42

24 comments:

Seeni said...

vethanaiyaana pathivu ....

Anonymous said...

//கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அந்த மறுமை நாளுக்காகத்தான்//

So ALLAH or GOD is not capable of doing anything against America in this life ???

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

ஒரு மலாலா யூசுப் சுடப்பட்டதற்கு கூக்குரலிட்டவர்கள் இத்தனை மலாலாக்கள் கொல்லப்பட்டதற்கு மௌனம் காப்பது ஏனோ .

jaisankar jaganathan said...

நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு நான் கொதிக்கிறேன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இதுபற்றி சென்ற வாரம் ஐநாவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட இந்த சிறார்களுக்காக வருத்தப்படும் அதே வேளையில்...

அந்த கொலைகார அமெரிக்க பயங்கரவாத அரசு...

உலக மக்கள் அனைவரின் நலம் நாடும்,
எடுத்துக்காட்டு இஸ்லாமிய அரசாக மாற பிரார்த்திக்கிறேன்..!

இந்த பயங்கரவாதங்களுக்கு எல்லாம் காரணமான, உயிரோடு வாழும் முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், அத்துமீறிய ராணுவத்தினர் அனைவருக்கும், அந்த அமெரிக்க இஸ்லாமிய அரசு... சரியான தண்டனை தரவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

///நீங்க இலங்கை தமிழருக்கு கொதிச்சா மாதிரி இதுக்கு நான் கொதிக்கிறேன்///


இலங்கை முஸ்லிம்களுக்கு, இலங்கைத் தமிழ்ப் பயங்கரவாதிகளினால் ஏற்பட்ட அட்டூழியங்களுக்கு முதலில் உங்கள் கொதிப்பைக் காட்டுங்கள்.

சுவனப் பிரியன் said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் முஹம்மது ஆஷிக், சீனி, அதிரை இக்பால், ஜெய்சங்கர், அனானி அனைவருக்கும் நன்றி!

Anonymous said...

ஷாலி says:
February 13, 2013 at 11:25 am

திரு.பாண்டியன் அவர்களே! உங்களை விஷயம் தெரிந்தவர் என்று நான் நினைத்திருந்தேன்.நீங்களும் வெவரமில்லாமல்தான் இருக்கிறீர்கள் என்று இப்பத்தான் தெரிந்தது. நீங்கள் ஆசைப்பட்ட புத்தமும்,ஹிந்துமதமும் ஒரே நேர் கோட்டில் அல்ல ஒரே கோடாக வந்து பல நூற்றாண்டு ஆகிறது. பெருமாளின் பத்து அவதாரத்தில் ஒரு அவதாரம் தான் புத்த பெருமா(ள்)ன். நாடாளும் காங்கிரஸ்,நாடாண்ட பாஜாக இவர்கள் அனைவரும் பெருமாள் பக்தர்கள்.எனவே ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரப்புள்ளியில் அனைவரும் ஒன்று படுகிறார்கள். கடந்த வாரம் ஜனாதிபதி ராஜ பக்சே திருப்பதி வந்து ஓர் இரவு தங்கி பெருமாளின் அதிகாலை சேவையில் கலந்து கொண்டு சேவித்தது ஏன்? புத்த பெருமானின் மற்றொரு அவதாரம்தான்.ஏழுமலை வாசன் ஸ்ரீ நிவாஸ பெருமாள். சுப்ரமணிய சுவாமி பாரதரத்னா விருதுக்கு ராஜபக்சேவை பரிந்துரை செய்கிறார்.சுஷ்மா சுவராஜ் பரிந்து பேசுகிறார். சிங்க(ள) பெருமாள் பக்தரை காப்பதற்கு இந்தியா ஆளும் வர்க்கம் ஆடிய நாடகம் தாங்கள் அறிந்ததே.சிவனை வழிபடும் சைவ தமிழ் மக்களை விட பெருமாளை வழிபடும் சிங்களர்கள் நட்பில் நெருங்கியவர்களே! இந்த பெருமாள் பக்தியே சிங்களவர்களுக்கு ஆள்,அம்பு,சேனை கொடுத்து தமிழ் சைவப் புலிகளை ஒழித்தது.தமிழ் சைவ இந்துக்களை முள்வேலி வதை முகாமில் அடைத்தது.
“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.” பாரதி விவரமாகத்தான் பாடியிருக்கிறார். பாண்டியன் ஸார்! நீங்க கோடு போடச்சொன்னீர்கள்.நம்ம தேசியக் கவி NH ரோட்டை ஐ முன்பே போட்டுட்டார்.கவலைப்படாதீர்கள் உங்கள் ஆசைப்படியே ஆசியாக் கண்டத்தில் விரைவாக இக்கோடு ரோடு இலங்கை வரை புத்த பெருமாளின் சீனச் சீடர்களால் போட்டு முடிந்தது.பாரதி பாலத்தை கடந்துவிட்டால் முதல் தரிசனம் ராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாத ஸ்வாமி ஆலயம்தான்.இப்ப நீங்க பாட்டை பாடுங்க..தேவுடா…தேவுடா…எழுமலை தேவுடா..சூடுடா..சூடுடா..ராஜபக்சேவை சூடுடா..

Anonymous said...

"காமடியல்ல நிஜம்"

"வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது நம் மராட்டியப் பெண்களைத் தொட்டால்... அவர்களின் கையை உடனே வெட்டுங்கள்; எனது கட்டளைக்காக எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை. எனது கட்சி தொண்டர்கள், யார் கையையாவது அப்படி வெட்டினால், அவர்களை கண்டுக்க வேண்டாம் என்று நான் மகாராஷ்டிரா போலீசை கேட்டுக்கொள்கிறேன்..!" என்று தனது கட்சித் தொண்டர்களுக்கும் போலீசுக்கும்
நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் உத்தரவிட்டுள்ளார்..!

இப்போ உங்களுக்கு ஒரு டவுட்டு வரனுமே..!? (வந்திருக்கணும் சகோ.)

'அப்போ மராட்டியர்கள், மராட்டிய பெண்களைத் தொட்டால்..?'

சும்மா சொல்லப்படாது..!
ராஜ் தாக்கரே ரொம்பவே உஷாரா கீராருப்பா..!

http://www.hindustantimes.com/India-news/maharashtra/Cut-off-hands-of-outsiders-if-they-attack-women-Raj/Article1-1010754.aspx

Anonymous said...

பேப்பர் கப்-ஜாக்கிரதை...

தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்த ஒருவர், பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உங்கள் விழிப்புணர்வுக்காக!

குளோபல் இஸ்லாம் - GI-SHAHEED-

Anonymous said...

வேலூர்: நாட்றம்பள்ளி மாந்தோப்பில், 56 குரங்குகள் மர்மமான முறையில் இறந்த இடத்தில், கோவில் கட்ட, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில், தங்கராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு, கடந்த, 11ம் தேதி, 11 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த குரங்குகளின் உடலை, அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம், அதே இடத்தில், மேலும், பத்து குரங்குகள், நேற்று காலை, 10 மணிக்கு, ஆறு குரங்குகள் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தெய்வக் குற்றம் உள்ளதாகவும், இது வரை, இந்த இடத்தில், 56 குரங்குகள் இறந்துள்ள நிலையில், அங்கு கோவில் கட்டவும் முடிவு செய்தனர். அதன்படி, பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மன் கோவில் கட்ட, அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=16735

சார்வாகன் said...

ஸலாம் சகோ சு.பி

நலமா? பாகிஸ்தானின் நிலை, மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிகாவை நம்பி மோசம் போனார். ட்ரோன் தாக்குதலில் இறந்த பாகிஸ்தானி சொந்தங்களுக்கு அஞ்சலி!!.

பாகிஸ்தானை [ சுய நிர்ணய உரிமையுடன்] இந்தியாவுடன் இணைத்து விடுவோம் சகோ!!

அப்புறம் ஒரு பய வாலாட்ட முடியாது!!
**
தமிழ்மணத்தில் ஏன் இணைந்துள்ள நம்ம சகோக்கள் ஏன் யாரும் உங்கள் பதிவினை சுட்டி தமிழ் மணத்தில் இணைத்து பதிவிடுவது இல்லை??.

நீங்கள் இல்லாமல் நமக்கு போர் அடிக்கிறது!!.

**

மலர் மன்னன் அய்யா இறந்தது கூட உங்கள் பதிவில் இருந்தே அறிந்தேன்.
அவருக்கும் அஞ்சலிகள்!!

மற்றபடி நல்ல சுகம்!!.

நான் சொன்னதை யோசிக்கலாம்!!

இலங்கை விடயம் கூட கொஞ்சம் விவாதித்து முன் எடுப்போம்!!
சூழல் அங்கு மாறுவதை நீங்களும் உணர்கிறீர்கள் அல்லவா!!

டிஸ்கி: அதுக்காக உங்களோடு விவாதம் செய்வதை நிறுத்த மாட்டேன்!!
நான் வில்லன்தான்

நன்றி!!

Anonymous said...

அதிவிரைவில் அமெரிக்காவிற்கு அதனை சார்ந்த கூட்டுபடைகளுக்கும் அல்லாஹ் தன் அடியார்களைக் கொண்டு தண்டிப்பானாக

Anonymous said...

///பாகிஸ்தானின் நிலை, மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிகாவை நம்பி மோசம் போனார்.///


வெகு விரைவில் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தனிலிருந்து வெளியேறியபின், இந்திய நலன்கள் தலபானினால் நிர்மூலாக்கப்படும்.


///பாகிஸ்தானை [ சுய நிர்ணய உரிமையுடன்] இந்தியாவுடன் இணைத்து விடுவோம் சகோ!!அப்புறம் ஒரு பய வாலாட்ட முடியாது!!///

முதலில் கச்சதீவையாவது இணைக்க முடியவில்லை. பாகிஸ்தானை இணைக்கப் போகிறார் சார்வாகன். தலையில் ஏதும் சரக்கு இருந்தால் இப்படி எல்லாம் உளற மாட்டார்.

இலங்கையுடனேயே வாலாட்ட முடியவில்லை. இதில் வாய்ச் சவடால் வேறு.


///இலங்கை விடயம் கூட கொஞ்சம் விவாதித்து முன் எடுப்போம்!!
சூழல் அங்கு மாறுவதை நீங்களும் உணர்கிறீர்கள் அல்லவா!!///


விவாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழ் ஈழம் என்று பிளேட்டை மாற்றப் போகிறீர்களா?

ஈழத் தமிழர்கள், இந்தியாவின் துரோகத்தனத்தை நன்கறிந்தவர்கள். மீண்டுமொருமுறை, அவர்கள் கொத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

சார்வாகன் said...

அனானி சகோ,

உங்களுக்கு வணக்கம் சொல்வதா, ஸலாம் சொல்வதா எனத் தெரியவில்லை.

உங்களுக்கு அமைதி உண்டாவதாக‌

நாம் முஸ்லிம்கள், பிற மதத்தினரை விட மதகுருக்கள் சொல்லை 100% நம்பி மோசம் போகும் மக்கள் என அனுதாபப் படுகிறேன்.

மதம் என்பது ஒரு மனதுக்கு பிடிப்பான நம்பிக்கை.ஆனால் முஸ்லிம்களின் ஒவ்வொரு சிந்த்னை,செயல்களை கட்டுப் படுத்தும் வண்ணம் மதவாதிகள் ஆட்டுவிக்கிறார்.

அப்பாவிகள் மதத்திற்காக போராடுகிறேன் என மோசம் போகிறார்ர் என்பதே நம் வருத்தம்.

சகோ சு.பி மீது கொள்கை மாறுபாடு என்றாலும், அவர் மீது நமக்கு அன்பு உண்டு. நான் சொல்வதை அவரும் ஏற்கும் நாள் வரும்.சொல்ல வருவது நாத்திகம் அல்ல, அரசின் சட்டங்களில் மதத்திற்கு இடம் இல்லை என்பதே!!


உலகளாவிய கிலாஃபா என்பதற்காக சகலவிதத்திலும் முயற்சிக்க வேண்டும் என்னும் பிரச்சாரத்தை எதிர்க்கிறேன். ஷ்ரியாவின் சர்ர்சைக் குறிய விடயங்களை விமர்சிப்பேன்.


ஆனால் தமிழகத்தில் அமைதியாக வாழும் தமிழக முஸ்லிம்களின் உரிமைக்காகவும் ஆதரவு கொடுப்போம்!!.

இப்படி செய்பவன் முட்டாள் என்றால் இருந்து விட்டு போகிறேன்!!

பதிவுலகம் என்பது தமிழகம் அல்ல!!

**
தலிபான்கள் இந்தியாவைத் தாக்க்லாம் என்பது கணிப்பு மட்டுமே.அமெரிக்கா அவ்வள்வு சீக்கிரம் வெளியேறாது என்பது என் கணிப்பு.

ஆஃப்கன் போதை மருந்து வியாபாரம், லித்திய கனிம வளம் விட்டுப் போக மனம் வராது!!

பாகிஸ்தான் இந்தியாவுடன் சேரவேண்டும் என அந்த நாட்டு மக்கள் விரும்பினால் நிச்சயம் நடக்கும்!!

பூட்டோவை என்று ஜியாவுல் ஹக் தூக்கில் போட்டாரோ, அங்கு மனித உரிமைக்கு,வாழ்வுக்கு சமாதி தோண்டியாயிற்று!!
..........
http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto

நன்றி சகோ!!

Anonymous said...

///நாம் முஸ்லிம்கள், பிற மதத்தினரை விட மதகுருக்கள் சொல்லை 100% நம்பி மோசம் போகும் மக்கள் என அனுதாபப் படுகிறேன்.///

முஸ்லிம்களைவிட, பிறமதத்தினரின் மதகுருக்களை நம்பித்தான் அதிகமான பிறமதத்தினர்கள் மோசம் போனதாக செய்திகள் கிடைக்கின்றன.

மதகுருக்களை மட்டுமா நம்பி,மனிதன் மோசம் போகிறான்? இல்லையே!

மதகுருக்களும் நம்மைப் போன்ற மனிதர்களே! மதகுருக்கள் எப்படி இருப்பர், அவர்களின் இலட்சணங்கள் என்ன என்று இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கிறது.

///மதம் என்பது ஒரு மனதுக்கு பிடிப்பான நம்பிக்கை.ஆனால் முஸ்லிம்களின் ஒவ்வொரு சிந்த்னை,செயல்களை கட்டுப் படுத்தும் வண்ணம் மதவாதிகள் ஆட்டுவிக்கிறார்.///

இஸ்லாம் என்பது, மனதிற்குப் பிடிப்பான நம்பிக்கை மட்டுமல்ல, மனிதனை நேர்வழியில் எல்லா வழிகளிலும் செலுத்தி, மறுமையில் வெற்றிக்கு கொண்டு செல்லும் வழி.

ஒரு முஸ்லிமின் சிந்தனை, செயல்கள், அவன் கொண்ட கொள்கைக்கேற்ப பரிணமிக்கும். இங்கு மதவாதிகள் ஆடுவதும் இல்லை, ஆட்டுவிப்பதும் இல்லை.

///சகோ சு.பி மீது கொள்கை மாறுபாடு என்றாலும், அவர் மீது நமக்கு அன்பு உண்டு. நான் சொல்வதை அவரும் ஏற்கும் நாள் வரும்.சொல்ல வருவது நாத்திகம் அல்ல, அரசின் சட்டங்களில் மதத்திற்கு இடம் இல்லை என்பதே!!///

நான் சொல்வதை அவரும் ஏற்கும் நாள் வரும் என்று எவ்வளவு காலத்திற்கு சதா புலம்பலிலே காலம் தள்ளுவீர்கள்?

அரசின் சட்டங்களில் மதத்திற்கு இடம் இல்லை என்றால், ஏனாம் இந்தியாவிலே அவரவர் மதத்திற்கெல்லாம் தனியார் சட்டங்களை உருவாக்கி இருக்கிறார்கள்?

///உலகளாவிய கிலாஃபா என்பதற்காக சகலவிதத்திலும் முயற்சிக்க வேண்டும் என்னும் பிரச்சாரத்தை எதிர்க்கிறேன். ஷ்ரியாவின் சர்ர்சைக் குறிய விடயங்களை விமர்சிப்பேன்.///

உங்களின் முயற்சியை நான் ஏன் கெடுப்பானேன்?

நீங்கள் விரும்பும் சர்ச்சையில்லாத விடயங்களும் ஷரியாவில் இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.

///தலிபான்கள் இந்தியாவைத் தாக்க்லாம் என்பது கணிப்பு மட்டுமே.அமெரிக்கா அவ்வள்வு சீக்கிரம் வெளியேறாது என்பது என் கணிப்பு.///

தலபான்கள் இந்தியாவைத் தாக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய நலன்கள் குறிவைக்கப்படும் என்றுதான் சொன்னேன்.

அமேரிக்கா சீக்கிரம் வெளியேறக்கூடாது என்பது, இந்தியாவின் எதிர்பார்ப்பு.

///ஆஃப்கன் போதை மருந்து வியாபாரம், லித்திய கனிம வளம் விட்டுப் போக மனம் வராது!!///

உண்மைதான். தலபான் வந்தால், போதை வஸ்து வியாபாரம் அங்கு இருக்காது. கனிய வளமும் கிடைப்பது நிபந்தனைகளுடந்தான்.

///பாகிஸ்தான் இந்தியாவுடன் சேரவேண்டும் என அந்த நாட்டு மக்கள் விரும்பினால் நிச்சயம் நடக்கும்!!///

எமது வாழ்வில் ஒருவர் விரும்புவதெல்லாம் கிடைக்காது, நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்!

இலங்கையும் ஓர் இந்திய மாநிலமாக மாறுவதை இந்திய மக்கள் அனைவரும் விரும்பலாம்.

விரும்புவது வேறு! நடைமுறைச் சாத்தியம் வேறு!

///பூட்டோவை என்று ஜியாவுல் ஹக் தூக்கில் போட்டாரோ, அங்கு மனித உரிமைக்கு,வாழ்வுக்கு சமாதி தோண்டியாயிற்று!!///

காந்தியை சுட்டுக் கொன்றபின், தெருவில் போகும் முஸ்லிம்களை எப்படி கொன்றொழித் தார்கள்?

இந்திரா காந்தியைப் போட்டுத் தள்ளியபின், 3000 சீக்கியர்வரை போட்டு தள்ளினார்களே! இதுதான் உங்களது மனித உரிமையா?

ராஜீவ் காந்தி செத்தபின், எத்தனை ஈழத் தமிழர்களை வாட்டி எடுத்தீர்களே! இதுதான் மனித உரிமையா?

கசாப், அப்சல் குருவிற்கான தண்டனைகளையும் சிறிது நினைத்துப் பாருங்கள்.

அமைதிப்படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் உயிர்களில் காவடி ஆட்டம் ஆடினார்களே! இதில் மனித உரிமை பற்றிப் பேசலாமே!

விஷமரூபம் எடுத்த குலக் கொழுந்துகளுக்கு, இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களைப் பற்றியும் ஒரு திரைவிருந்தைப் படைக்கலாமே!l

இன்னொரு நாட்டின் மனித உரிமைகளைத் தோண்ட முன், தன்னைக் கேட்டுக் கொள்வது நலம்.

பாகிஸ்தான்காரன் said...

பாஸ்.
வாழ்த்துக்கள். இவ்வளவு காலமும் தமிழருக்கு சிங்களவருடன் சேர்ந்து ஆப்பிறுக்கிக்கொண்டிருந்த முஸ்லீம்களுக்கு
சிங்களவர் பாரிய ஆப்பினை வைக்கத்தொடங்கியுள்ளார்கள். சின்ன உதாரணம் : கொழும்பில் பிரபலமான ஆடை கடை Nolimit. கடந்த மாததில் மட்டும் 5 கோடி லாபம் குறைந்துள்ளதாம்.

இனி மேல் சிங்களவரை எதிர்த்து நிறைய எழுத வேண்டும். சும்மா அமெரிக்கா பற்றி எழுதி சக்தியை வீணாக்காமல் தண்ணியை குடித்து தெம்பாக இருக்கவும். அப்பதான் சம்பிக்க மற்றும் பால சேன ஆகியவற்றை பிரிச்சு மேயலாம்.

பாகிஸ்தான்காரன் said...

அட
என்னுடய நாட்டினை என்னுடய நாட்டு மக்கள்தான் ஆளுறாங்கள் என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன். ஆனால்
அமெரிக்கா காரன் ஆளுறது , சவுதியில் இருக்கும் இந்த பாய் சொல்லித்தான் தெரியுது. நன்றி பாய். இதுதான் காசு
வருகுது என்றதற்காக வெளி நாட்டிலை நிறையக்காலம் இருக்கக் கூடாது என்றுறது. பிறகு புத்தி பேதலிக்கமல் என்ன செய்யுமாம்?? நான் என்னை சொன்னேன்.
இப்படிக்கு
பாக்கிஸ்தான்காரன்.
(வேட்டைக்கரன் விஜய் இன் சொந்தக்காரன்)

பாகிஸ்தான்காரன் said...

பாய்
எனக்கு ஒரு சந்தேகம். அல்லா பெயரை சொல்லி அமெரிக்க ருவின் ரவருக்கு குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை
கொன்றவர்களை அல்லா மன்னிப்பாரா ? மாட்டாரா?
மற்றும்படி பாகிஸ்தானில் குண்டு போட்டு சிறுவர்களை கொன்றவரை யேசு நாதர் மன்னிக்கமாட்டாராம். அப்படியென்று
கிறீஸ்த நண்பர் ஒருவர் சொன்னார்.

பாகிஸ்தான்காரன் said...

பாய்
என்னுடய நாடு இன்னமும் சுதந்திரம் அடையவில்லையா?
முகமது ஜின்னா சுகந்திரத்திற்காக போராடியதாக சொன்னாங்களே?
பிரிட்டிஸ் சுதந்திரம் தந்த பிறகு அமெரிக்கர்கள் கைப்பற்றிவிட்டார்களா?

ஓ அல்லாவே நீர் ஏன் என் நாடினை முஸிலீம் பெயர் தாங்கிகளிடம் விட்டு விட்டீர் ?
உமக்கு ஒர் இஸ்லாமியன் கிடைக்கவில்லையா என் நாட்டினை ஆள??
சவுதியில் எனக்குத்தெரிந்த ஓர் உண்மை இஸ்லாமியர் உள்ளார். சுகவனம் எனம் பெயர் கொண்டவர்.
இப்பவே நாள் முழுவது இஸ்லாத்திற்காக செலவிடுவபர்.
முஸ்லீம் பெயர் தாங்கியாக மட்டும் இல்லாமல் இஸ்லாமியராக 5 வேளை தொழுகை செய்பவர்.
தன்னுடய 10 % வருமானத்தை ஏழை எழியவருக்கு செலவிடுபவர்.
நீர் அவரை பாகிஸ்தான் ஜனாதிபதியாக்கி
அமரிக்கர்களிடம் இருந்து என் நாட்டினை காப்பாற்றும் அல்லாவே.

பாகிஸ்தான்காரன் said...

அப்புறம் பாய்
இது கண்டிப்பாக கண்டிக்கவேண்டியது.
இந்த உலகத்தில் புலிப்பயங்கரவாதம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
மிச்சம் உள்ளது அமெரிக்க பயங்கரவாதம் மற்றும் இஸ்ரேல் பயங்கரவாதம்.
இப்போது சிங்கள் பயங்கரவாதம் சிறிது சிறிதாக தலை எடுக்கிறது.
இவையெல்லாம் அழிந்தால், இந்த உலகம் முழுவதும் சவுதி போல மிகச்செழிப்பாகும்.
அந்த குழந்தைகளை கொன்றவ்ர்களுக்கு கண்டனங்கள்

பாகிஸ்தான்காரன் said...

//அதாவது அமெரிக்காவின் ஆடை அவிழ்ப்பு கலாசாரத்தை ஒழித்து விட்டு கண்ணியமான உடைகளோடு சிறந்த கலாசாரத்தை பேணக் கூடிய மக்களை இஸ்லாம் உருவாக்கும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்? //

பாய்
நானும் கூட துபாயிலை 2 வருஷம் டாக்சி ஓட்டினவந்தான்.
முஸ்லீம்களி ஆடை அவிழ்ப்பு கலாச்சாரம் நமக்கும் தெரியும்.
எத்தனை சவுதி யுவதிகள் துபாயில் வந்து ஆடை அவிழ்த்தார்கள் என்பது தெரியும்.

பாகிஸ்தான்காரன் said...

// ஒரு மலாலா யூசுப் சுடப்பட்டதற்கு கூக்குரலிட்டவர்கள் இத்தனை மலாலாக்கள் கொல்லப்பட்டதற்கு மௌனம் காப்பது ஏனோ .//

அந்த ஒர் மலாலாவுக்காக நீங்கள் ஏன் போராடவில்லை? போயும் போயும் விஸ்வரூபத்திற்கு போராடிய நீங்கள் ஏன்
அந்த மலாலாவுக்காக போராடவில்லை. ? ஏன் பொண்களின் உரிமைக்காக மலாலா குரல் கொடுத்ததாலா ? இல்லை பெண்கள் கல்வி கற்றால் உங்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள் என்று பயந்த்தாலா?
அத்துடன் தினமும் நூற்றுக்கண்க்கான மலாலாக்கள் சிரியாவில் முஸ்லீம்களாளேயே கொல்லப்படுகிறார்களே. அதை சொல்ல முடியவில்லையா??
சிரியாவில் இது வரை இறந்த 60000 பேரின் பெயர் வயது விபரங்களை பதிவேற்றவும்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

அலி சினாவின் சவாலை உங்களால் சந்திக்க முடியுமா? சவாலை தமிழில் காண இந்த சுட்டியை சொடுக்குங்கள்:

https://manidhan.wordpress.com/2013/02/26/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

சவாலுக்கு பயந்து என்னுடைய இந்த பதிவை நீக்கிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.