Followers

Thursday, March 28, 2013

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

பள்ளி வாசலை தினமும் சுத்தமாக வைத்திருப்பது மாணிக்கத்துக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. எல்லா வேலைகளும் இரண்டு மணி அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும். வேலை முடிந்து சும்மா இருக்காமல் தினமும் கையோடு கொண்டு வந்த குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ரமலானும் வந்தது. நோன்பு திறப்பதற்காக சவுதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பழங்கள் பலகாரங்கள் என்று நிறைய பள்ளிக்கு அனுப்புவார்கள். அரசாங்கமும் 50 பேர் சாப்பிடும் அளவுக்கு பிரியாணியையும் அனுப்பி வைக்கும். அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் வேலையும் தற்போது மாணிக்கத்துக்கு கிடைத்தது. இதற்கு தனியாக 500 ரியால் போனஸாகவும் கிடைத்தது. ஒரு பெரிய தட்டில் சாப்பாடு பழங்கள் வைத்து அதை சுற்றி 4 பேர் அமர்ந்து கொண்டனர். மாணிக்கம் இவ்வாறு சாப்பிட்டு பழக்கம் இல்லை ஆதலால் சிறிய தட்டில் தனக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கினான்.

இதை தூரத்திலிருந்து கவனித்து விட்ட ஒரு சவுதி நாட்டவர் மாணிக்கத்தை அழைத்தார்.

'நீ முஸ்லிம் தானே'

'ஆம்'

'பிறகு ஏன் உனக்கு மட்டும் தனி சாப்பாடு? அது தவறல்லவா? எங்களோடு சேர்ந்து சாப்பிடு! அதுதான் சிறந்தது'

மாணிக்கத்துக்கு ஒன்றும் சொல்ல வழியில்லை. அவர்களோடு ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். தனது சொந்த கிராமத்தில் இவன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கோவில் குருக்கள் பிரசாதத்தைக் கூட சற்று தூரமாக நின்றே கொடுப்பார். கை மேலே பட்டு விடக் கூடாது என்பதிலே மிக கவனமாக இருப்பார்.

கோவிலுக்குள்ளும் மாணிக்கத்துக்கு அனுமதி கிடையாது. அந்த அளவு தீண்டாமை மாணிக்கத்தை கோவிலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இங்கோ மாணிக்கம் கை வைத்த சாப்பாட்டை கோடீஸ்வரனான சவுதி நாட்டவர் அசூசைபடாமல் சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? எல்லோரும் ஆதமுடைய மக்களே! சாப்பிடு'

மாணிக்கத்தின் கண்கள் சிறிது கலங்கியது. சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும தொழுகைக்கு தயாரானார்கள். சாப்பிட்ட இடங்களை மாணிககம் சுத்தம் செய்ததால் அவனால் தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே கூட்டு தொழுகை முடிந்ததும் தனது தொழுகையை தனியாக தொழ ஆரம்பித்தான் மாணிக்கம். வீட்டில் நோன்பு திறந்து விட்டு சற்று தாமதமாக வந்தவர்கள் மாணிக்கத்தின் பின்னால் தொழுவதற்கு நின்று கொண்டனர். சவுதி வந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகி விட்டதால் தொழுவதும் அதன் வசனங்களும் மிக நன்றாக மனனம் ஆகியிருந்தபடியால் எந்த பயமும் இல்லாமல் அனைவருக்கும் தலைவராக நின்று தொழுக வைத்தான் மாணிக்கம். தனக்கு பின்னால் சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ என்று பல நாட்டவரும் தனது கட்டளைக்கு அடி பணிவதை நினைத்து இனம் புரியாத இன்பத்தில் திளைத்தான் மாணிக்கம். தனியாக தொழும் போது பூமியில் நெற்றியை வைத்து இந்த சிறந்த நிலையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அழ ஆரம்பித்து விட்டான். இது போன்று தொழ வைப்பது பலமுறை நிகழ ஆரம்பித்தது. வேலைக்காக முஸ்லிமாக நடித்த மாணிக்கத்துக்கு தற்போது உண்மையிலேயே இஸ்லாத்தின் மேல் பற்று வர ஆரம்பித்தது.

சவுதி அரசு நடத்தும் அழைப்பு வழி காட்டு மையத்துக்கு வந்து இஸ்லாம் சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும், சிடிக்களையும் தனது ரூமுக்கு கொண்டு வந்தான். வேலை நேரம் போக மாணிக்கத்தின் தேடல் இஸ்லாமாகவே இருந்தது. சில காலத்திற்கு பிறகு தனது பெற்றோரிடமும் தனது நிலையை மெல்ல மெல்ல விளக்கினான் மாணிக்கம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் மாணிக்கத்தின் விளக்கத்துக்குப் பிறகு மௌனமானார்கள்.

'நம்ம புள்ள என்னாங்க இப்படி பண்ணிட்டான்'

'ஆமாம்! காலத்துக்கும் தீண்டத்தகாதவனாகவே தான் நான் வாழ்ந்துட்டேன். எம் புள்ளையாவது கொஞ்சம் கௌரவமா இருக்கட்டும்'

'நம்ம சாதி சனம் எல்லாம் தப்பா பேசாதுங்களா'

'நாம கஷ்டப்பட்டப்போ, அவமானப்பட்டப்போ இந்த சாதி சனம் நமககாக என்ன பண்ணுச்சு. ஒண்ணும் ஆகாது கவலைபடாதே'

'நம்ம பையனுக்கு நம்ம சனத்துல பொண்ணு தர மாட்டாங்களே'

'தர வேணாம். எனக்கு தெரிஞ்ச பாய்க்கு 3 பொண்ணுங்க. அதுல மூத்த பொண்ண நமக்கு தர்ரதா சொல்லியிருக்கார்'

'நெசம்மாவா சொல்றீங்க'

'அட..ஆமா புள்ள...மாணிக்கம் மதம் மாறிட்டான்னு தெரிஞ்சவுடனேயே அவர் கிட்ட அரசல் புரசலா இந்த பேச்சை உட்டு பார்த்தேன். அந்த பாயும் 3 பொண்ணுங்கள வச்சுகிட்டு சிரமப்படுரார். அதான் நான் சொன்னவுடனேயே ஒத்துக்கிட்டார். மாணிக்கத்தையும் நல்லா தெரியும்னு சொனனார்'

'ரொம் சந்தோஷங்க....பொண்ணு கிடைக்குமான்னுதான் பயந்தேன்'

'பையன் வந்ததும் நாமலும் முஸ்லிமா மாறிடுவோம். என்ன சொல்றே'

'நம்ம முனியாண்டி சாமி கோவிச்சுக்க மாட்டாரா'

'அவரு கோவிச்சுக்குவேன் என்று உன் கிட்டே வந்து சொன்னாரா! எல்லாரும் கும்புடுறது ஒரு சாமியைத்தான். நம்மல படைச்சதும் ஒரு சாமிதான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறதுதான் நம்ம நாட்டு வழக்கம். பின்னால மாத்திப்புட்டானுங்க. அதைத்தானே இஸ்லாமும் சொல்லுது. அதனால பேசாம அந்த பாய் கிட்டேயே சொல்லி முஸ்லிமா மாற ஏற்பாடு பண்ணுறேன். மாணிக்கத்துக்கும் இந்த விஷயத்தை போன்ல சொல்லிடு' என்று சொல்லி விட்டு மாணிக்கத்தின் அப்பா தனது வருங்கால சம்பந்தியை பார்க்க கிளம்பினார்.

'சலாம் பாய்'

'என்னப்பா வணக்கம் போய் சலாம் வந்துருச்சு'

'நானும் அஞ்சலையும் என் மகனைப் போல முஸ்லிமா மாறலாம்னு இருக்கோம்'

'அடடே ....ரொம்ப சந்தோஷமான செய்தியாச்சே! இனி உன்னை சம்பந்தியா ஏத்துக்கிறதுல எந்த கஷ்டமும் எனக்கில்லே'

'அப்போ மவுலானா கிட்டே போய் அதுக்கு ஏற்பாடு பண்ணுறீங்களா'

'அதுக்கு ஏம்பா மவுலானா கிட்டே போகணும்? நம்மல படைச்சது ஒரே இறைவன். அதை நம்புறியா'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறது காலாகாலமா இந்த மண்ணுல பொறந்த பழக்கம் தானே பாய்'

'சரியா சொன்னே. அடுத்து அந்த இறைவன் பல தூதர்களை அனுப்பியிருக்கான். அதுல கடைசியா அனுப்பிய தூதர் முஹமது நபிங்கறத உளமாற நம்புறியா'

'கண்டிப்பா நம்புறேன் பாய்'

'அவ்வளவு தான் நீ இப்போ முஸ்லிம்' என்று முத்துவை கட்டி தழுவினார்.

'பேரை மாத்த வேண்டாங்கலா'

'முத்து என்கிற பேரே அழகாக இருக்கு. அதே பெயரையே வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. ஆனால் இந்த பழைய பேர் உனது சாதியை திரும்பவும் மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தும். எனவே ஒரு அழகான அரபு பேரை நீயே தேர்ந்தெடுத்துக்கோ'

'அப்துல்லா ங்கற பேரு எனக்கு பிடிச்சுருக்கு பாய்'

'ஆஹா...இறைவனுக்கும் மிகவும் பிடித்தமான பெயர். 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். இந்த வார வெள்ளிக்கிழமை பள்ளி வாசலுக்கு உன் மனைவியையும் அழைச்சுகிட்டு வந்துடு. எல்லோர் முன்னிலையிலும் இஸ்லாத்தை ஏற்றதை சொல்லிட்டா தானாக உனது கிராமத்துக்கும் இந்த சேதி போயிடும்'

'நல்லது பாய்! பையன் இன்னும் ஆறு மாசத்துல ஊருக்கு வரான்! அப்போவே கல்யாணத்தை வச்சுகிடலாம்னு'

'தாராளமா! இரு பொண்ணு போட்டோவை தர்றேன். பையனுக்கு அனுப்பி வை' என்று வீட்டின் உள்ளே சென்றார் காதர் பாய்.

பெண்ணின் போட்டோவையும் வாங்கிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார் முத்து. தனக்கும் தனது மனைவிக்கும் தனது மகனுக்கும் சிறந்த வாழ்வும் கௌரவமான வாழ்வும் கிடைக்கப் போவதை எண்ணி மனம் மகிழ்ந்தவராக வீட்டை நோக்கி சென்றார் முத்து என்கிற அப்துல்லா.

-முற்றும்.

7 comments:

suvanappiriyan said...

தங்கமணி!

//எந்த புகாரி, திர்மிதி, முஸ்லீமில் “அரபு அரபியனல்லாதவனை விட மேலானவனல்ல” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது?
எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கும் சுவனப்பிரியன், அதனை செக் பண்ண இணைய இணைப்பையும் கொடுக்க வேண்டும்.//


The Prophet of Islam, Muhammad (peace and blessings of Allah be upon him) affirmed the prohibition of racial discrimination and of despising coloured people, when he said in his famous speech: "O people, your Lord is One and your father [i.e., Adam] is one. There is no superiority of the Arab over the non-Arab, or of the non-Arab over the Arab, or of the red over the black, or of the black over the red except with regard to taqwa." (Reported by Imaam Ahmad, 22391)

When a Muslim once insulted another Muslim having a black mother in the presence of the Prophet. The Prophet (peace and blessings of Allaah be upon him) said to him, You are a man who still has jaahiliyyah (ignorance) in him.

http://www.muslimconverts.com/shahadah/islam_for_all.htm

suvanappiriyan said...

//இமாம் அஹ்மது எழுதிய ஹதீஸ் புத்தகத்தில் உள்ளதா?
இமாம் அஹ்மது ஹதீஸ் புத்தகத்தில் எழுதியிருந்தால், அந்த புத்தகத்தின் இணைய இணைப்பை கொடுங்கள். //


حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ ثُمَّ قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ ثُمَّ قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ وَلَا أَدْرِي قَالَ أَوْ أَعْرَاضَكُمْ أَمْ لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ

Tell Ismail told us happy Jariri from Abu supple told me who heard a sermon the Messenger of Allah peace be upon him in the middle of tashreeq said O people Lord is one, although Father and one not not preferred for an Arab outlandish nor Ajami on Arab nor red on black or black on red except by piety informed said the Messenger of Allah peace be upon him and then said any day this said on haram then said any month this said sacred month said then said any country that said country haram said, God has deprived you your blood and money, said I do not know said or your honor or not as sacred as this day in this month of yours in this country reported to have said the Messenger of Allah, peace be upon him said to a witness absent


'முஸ்னத் அஹ்மத் 22391' என்று கூகுளில் தட்டினாலே ஆயிரக்கணக்கான சுட்டிகள் உங்களுக்கு கிடைக்கும். முஹமது நபியிடமிருந்து இமாம் அஹமதுக்கு எவ்வாறு இந்த ஹதீது கிடைத்தது என்பதை அரபு மூலத்தோடு மேலே பார்த்துக் கொள்ளுங்கள். கீழே அந்த கிரந்தம் முழுவதையும் பிடிஎஃப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://islaminonesite.wordpress.com/2013/03/21/musnad-ahmad-english-pdf-3-volumes

வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை. :-)

suvanappiriyan said...

தங்கமணி!

//ஆனால் சஹி ஹதீஸ் என்று இருபப்தை காட்டினாலே, அதனை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று தப்பிக்கவும் செய்கிறீர்கள்.//

முதலில் உங்களுக்கு நம்பகமான ஹதீஸ் என்றால் என்ன? பலஹீனமான ஹதீஸ் என்றால் என்ன? அதை எவ்வாறு பிரித்தறிவது என்பதே சரியாக தெரிந்திருக்கவில்லை. முதலில் பிஜே கொடுத்துள்ள இந்த அழகிய விளக்கத்தை படித்து தெளிவு பெறுங்கள்.
http://onlinepj.com/books/sariyana_hatheeskalum/

//அதனால்தான் சொல்கிறேன். இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ். சொல்லப்போனால் ஹன்பாலி மத்ஹபு பிரிவினர் தவிர வேறு யாருமே ஏற்றுக்கொள்ளாத புத்தகங்கள் இவை.//

அப்படி சொன்னது யார்? இஸ்லாமிய அறிஞரா? அஹ்மத் ஹதீதை தமிழ்நாட்டிலும் சட்டமாக வைத்துள்ளார்களே. தமிழ் முஸலிம்கள் ஹம்பலியா? :-)

suvanappiriyan said...


//முகம்மது இறந்து 250 வருடங்கள் கழித்து பிறந்த ஒருவர், முகம்மது சொன்னதாக அதற்கு முன்னால் எழுதப்படாத ஒன்றை சொன்னால் உங்களைப்போன்றவர்கள் நம்பலாம். ஆனால், கொஞ்சம் மூளையுள்ளவர்கள் கூட நம்பமாட்டார்கள்.//

250 வருடங்கள் கழித்து அஹமத் அவர்கள் எழுதிய புத்தகம் எவ்வாறு வந்தது? முஹமது நபியிலிருந்து இமாம் அஹமத் வரை தொடர்பு விடுபடாமல் யார் மூலமாக இந்த ஹதீத் பெறப்பட்டது என்ற விபரம் ஒவ்வொரு ஹதீதிலும் குறிக்கப்பட்டுள்ளதை வசதியாக மறைத்து விடுகிறீர்களே! புகாரி, முஸ்லிம், அஹ்மத்,அபு தாவுத் என்று எந்த ஹதீது கிரந்தங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த தொடர் அவசியம் ஒவ்வொரு ஹதீதிலும் பதியப்பட்டிருக்கும். இந்த செய்தி இஸ்லாத்தைப் பற்றி ஆரம்ப காடம் எடுக்கும் ஒரு மாணவனுக்கு கூட தெரிந்தது தங்கமணிக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே.

//மத்ஹபுக்களே தவறு. எந்த மத்ஹபுவையும் பின்பற்றக்கூடாது என்று சொல்லும் பிஜேவை பின்பற்றி (இன்னொரு மத்ஹபு!) அவரை பாராட்டும் நீங்கள், ஹம்பலி மத்ஹபு புத்தகத்தை விதந்தோதுகிறீர்கள்.//

மத்ஹபு(சாதி அல்லது பிரிவு) கூடாது என்பதில் இரு வேறு கருத்தில்லை. அதே சமயம் அந்த இமாம்களை கண் மூடித் தனமாக பின்பற்றாமல் நம்பகமான ஹதீதுகளை ஆதாரத்தோடு சொன்னால் தங்கமணி சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். பிஜே சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். ஜவாஹிருல்லாஹ் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். என்ன சொல்லப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டுமேயொழிய யார் சொன்னது என்று பார்க்க மாட்டேன். இதுதான் எனது நிலை.

mohamed said...

சலாம் சோனப்பிரியன் பாய்

மாஷா அல்லாஹ் கதை அருமை.படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.தொடர்ந்தி இது போல் நிறைய எழுதுங்க பாய் இன்ஷா அல்லாஹ்

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் இது கதையல்ல ,ஜெட்டாவில் நடந்துதான் ராமநாதபுரத்தை சேர்ந்த ஓர் சகோதரர் இங்கே வந்து முஸ்லிம் ஆக மாறி , பள்ளிவாசலில் பாங்கு கொடுப்பது முதல் தொழுகையும் நடத்தி வந்தார் . மேலும் எனக்கு தெரிந்து பரங்கிபேட்டையை சேர்ந்த ஒரு மாற்று மத நபர் அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் பெயரில் வந்து ரியாதில் பக்காலா நடத்தி வந்தார் ,ஆனால் அவர் விசா தருவதாக எல்லாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு ஊருக்கு ஒடி விட்டார்.

Unknown said...

மாஷா அல்லாஹ் ...

கதை நன்றாக இருந்தது ...