Followers

Tuesday, February 23, 2016

35 சீக்கியர்களை கொன்று குவித்த மாபாவிகள் யார் தெரியுமா?

பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.

முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)

அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.

மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம்.

Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret

2 comments:

Dr.Anburaj said...

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது

ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.
இதனால் படுகொலையைச் செய்தவா்கள் இந்துக்கள். அலலாகோ அக்பா் என்று கோஷமிட்டால் முஸ்லீம்கள். என்ன முட்டாள்தனம்.

அப்சல்குரு குற்றவாளி என்று நீதி மன்றம் தீா்ப்பு வழங்கி விட்டது.வேறு விவாதம் அநாவசியம்.

தங்களின் கட்டுரை தாங்கள் ஒரு அரேபிய வல்லாதிக்க அடிமை என்பதைக் காட்டுகிறது. காஷமீாில் பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்கள் செய்துள்ள அட்டூழியங்கள் கொஞ்சமா ....... ?
சண்டாளன் முஹம்மது அலி ஜின்னா வின் ஈனத்தனத்தால் 70 ஆ்ண்டுகளாக ஹிந்துஸ்தானம் இரத்த ஆறில் நீந்துகின்றது. ஹிந்துஸ்தான் -பாக்கிஸ்தான் பிாிவினை -அகதிகள் பிரச்சனை - யுத்தம் என்று இரத்“த ஆறு ஓடியது. பின்மேற்கு பாக்கிஸ்தான் - கிழக்கு பாக்கிஸ்தான் என்று அடுத்த மோதல்.,இரத்தக்களறி. பங்களாதேஷ் உதயம். இந்துக்கள் பங்காதேஷ்யில் குறிப்பிட்டு இனப்படுகொலைக்கு இலக்காயினா்.முஜிபுா் ரஹ்மானின் ஆதரவாளா்கள் முஸ்லீம்களும் கொல்லப்பட்டனா். முஜிபுா் ரஹ்மான் மற்றும் அவர் குடும்பமே ராணுவ அதிகாாிகளால் படுகொலை செய்யப்பட்டனா்.
என்றாவது தாங்கள் இப்பிரச்சனைகள் குறித்து எழுதியதுண்டா ? இன்றும் பங்களாதேஷயில் இந்துக்கள் நாய்கள் வாழக்கையைத்தான் வாழ்கின்றாா்கள். அரேபிய மத வெறி அவர்களின் இரத்தத்தைக் குடித்துக் கொணடுதான் இருக்கின்றது.

எங்கே அமைதி ??? Homicide is being carried on like a vicious cycle.

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானில் உள்ள லாகூா் பிாிவினைக்கு முன்பு சீக்கிய இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி.பிாிவினையில் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டாா்கள்.எப்படியோ அது பாக்கிஸ்தானோடு இணைக்கப்பட்டது. விளைவு அக்கிருந்த அனைவரும் கொன்று குவிக்கப்பட்டு மீதம் உள்ளவா்கள் அகதியகளாக பிச்சைக்காரா்களாக இந்தியா வந்ததாா்கள். இந்த கொடூரத்தை அரங்கேற்றியவா்கள் யாா் ? இந்துத்துவாவாதிகளா ?