'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 01, 2016
சுபாஷ் சந்திர போஸூக்கு உதவிய முஸ்லிம்கள்!
வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய விடுதலைக்காக போராடினார். வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிய ஆயுதம் ஏந்துங்கள் என்று அவர் கட்டளையிட்டவுடன் அவருக்கு உறுதுணையாக அன்று இருந்தது பெரும்பாலும் முஸ்லிம்களே! 1944 ஜூலை ஆறாம் நாள் 'டெல்லி சலோ' என மீட்புக் குரல் கொடுத்தார். தனி அரசை இந்தியாவுக்கென அமைத்து பல பொறுப்புக்களை முஸ்லிம் வீரர்களிடம் கொடுத்தார்.
மொகலாய கடைசி மன்னரான மன்னர் பகதூர் ஷா சமாதிக்குச் சென்று ஒரு பிடி மண்ணை எடுத்து தன் வாளின் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காக வீர முழக்கம் செய்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படைப்பிரிவில் மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் எராளமான உதவிகளை இந்த தேசத்தின் விடுதலைக்காக செய்தனர் முஸ்லிம்கள். அன்றைய கால கட்டத்தில் பர்மாவில் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர் வள்ளல் ஹபீப். பெரும் கோடீஸ்வரரான இவர் நேதாஜி பர்மாவிற்கு சென்ற போது தனது சொத்தில் பெரும் பகுதியை இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். இவரது செயலைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார்.
இதன் பிறகு நேதாஜி கிழக்காசியாவில் தான் பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
பாடுபடுவது ஒருவன் அதன் பலனை அனுபவிப்பது வேறொருவன் என்ற நிலை நமது நாட்டில் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை தொடர்கிறது. இது பொன்ற வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்க நமது இஸ்லாமிய செல்வந்தர்கள் முன் வர வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment