தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் இன்னும் இரண்டு தினங்களில் மிக விமரிசையாக 'திருக் குர்ஆன் மாநாடு' நடக்கப் போவதாக இண...
Posted by Nazeer Ahamed on Thursday, February 4, 2016
தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தில் இன்னும் இரண்டு தினங்களில் மிக விமரிசையாக 'திருக் குர்ஆன் மாநாடு' நடக்கப் போவதாக இணையத்தில் பார்த்தேன். சந்தோஷம். தர்ஹா வழிபாடு, மீலாது விழா, தீ மிதித்தல், சந்தனக் கூடு எடுத்தல் என்ற மார்க்கம் தடுத்த காரியங்களை நடத்துவதை விடுத்து குர்ஆனின் பக்கம் சுன்னத் ஜமாத்தினர் திரும்பியிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.
இந்த விழாவுக்கு பைத்துல் முகத்திஸின் இமாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறாராம். அவரிடம் விழா ஏற்பாட்டாளர்கள் பைத்துல் முகத்தஸில் தொப்பி போடாதவர்களை, விரலை ஆட்டுபவர்களை, நெஞ்சில் தக்பீர் கட்டுபவர்களை, கூட்டு துவாவில் கலந்து கொள்ளாதவர்களை, அனுமதிப்பீர்களா என்று தயவு செய்து கேட்கவும். மிக அழகிய பதிலை உங்களுக்குக் கொடுப்பார்.
அடுத்த நட்சத்திர பேச்சாளர் சம்சுதீன் காசிமியும் கலந்து கொள்கிறார். முன்பு இவர் பேசிய பேச்சைத்தான் காணொளியாக பார்க்கிறோம். இறந்து போனவரின் வாரிசு 'தான்தான் தொழ வைப்பேன்' என்று கூறினால் அதில் தலையிட எவருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார். ஊர் ஜமாத்தார்கள், பள்ளி வாசல் நிர்வாகிகள் இதில் தலையிட்டு பிரச்னை பண்ணாமல் இருக்கவும் கோரிக்கை வைக்கிறார்.
விழா நடத்தும் பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் சம்சுதீன் காசிமியிடம் இது பற்றி ஆலோசனை கேட்கவும். பலமுறை இந்த பள்ளி நிர்வாகிகள் இறைவனின் பயம் சிறிதும் இல்லாமல் மார்க்க அறிவும் இல்லாமல் இறந்த உடல்களை நபி வழியில் அடக்கம் செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். அவர்களுக்கு இறைவன் விதித்த இறப்பு என்ற ஒன்று இருக்கிறது. நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால் குற்றவாளியாக நிற்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில்தான் இதனை பதிகிறோம். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி வருங்காலங்களிலாவது நபி வழியில் அடக்கம் பண்ண நிர்வாகிகள் ஒத்துழைப்பார்களாக!
No comments:
Post a Comment