உய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தங்கி விட்ட உய்குர் முஸ்லிமான அய்தின் அன்வர் தரும் செய்திகளே இவை......
'கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பல உய்குர் முஸ்லிம்கள் விசாரணையின்றி சித்தரவதை கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரபியில் பெயர் வைத்தாலோ இஸ்லாமிய நடைமுறைகளை பின் பற்றினாலோ உங்களை விசாரணையின்றி அழைத்துச் செல்கின்றனர். அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கம்யூனிஷ சித்தாந்தை பின்பற்றவில்லையானால் முடிவில் கொன்று விடுகின்றனர். உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. துர்கிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.
சித்தரவதைக் கூடம் மிகவும் கொடூரமானது. பாம்புகளை விடுதல், பற்களை பிடுங்குதல், நகங்களை பிடுங்குதல் என்று வெறித்தனமாக தங்கள் சித்தாந்தத்தை அந்த மக்கள் மேல் புகுத்துகிறார்கள். எனது உறவினர் 2017ல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரை பிணமாகத்தான் வெளிக் கொண்டு வந்துள்ளனர். சிலருக்கு உடல்களும் கிடைப்பதில்லை. மற்றொரு உறவினர் தனது உறவினரை பார்க்க அமெரிக்கா சென்றதை காரணம் காட்டி 15 வருட தண்டனையை கொடுத்துள்ளார்கள்.....' இவ்வாறாக அந்த பெண்மணியின் பேட்டி தொடர்கிறது.
எந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையாலோ, சித்திரவதையாலோ பரவி விடாது. மக்களின் மனதை அது வெல்ல வேண்டும். இதனை அந்த சீன மூடர்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். வன்முறையால் ஒரு சித்தாந்தம் நிறுவப்பட வேண்டுமானால் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இன்று இந்துக்களாக மாறியிருக்க வேண்டும். அந்த அளவு மோடியாலும், அமீத்ஷாவாலும் சித்தரவதையை அனுபவித்தவர்கள் முஸ்லிம்கள். உயிரைத்தான் விட்டார்களோயொழிய ஒரு முஸ்லிமும் இதுவரை இந்துவாக மனம் மாறவில்லை. உலகம் முழுக்க இதுதான் நிதர்சனம். வாள் முனையில் எந்த சித்தாந்தமும் வெற்றி பெறாது என்பதனை பாசிச வாதிகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
2 comments:
தனது நாட்டு மக்கள் அரேபிய அடிமையாக இருக்கக்கூடாது என்று நினைக்க சீன அரசுக்கு உாிமை உள்ளது. அதை செயல்படுத்த சட்டம் இயற்ற சீனா அரசுக்கு உரிமை உள்ளது. மீறுகின்றவா்களை தண்டிக்கும் அதிகாரம் கடமையும் அதற்குள்ளது.
The appointment of Bishop for Catholic Church in china is also made by Chinese
Government. Please accept the policy of Chinese Government. Do not criticise and
spread wrong information about Chinese people.
Post a Comment