Followers

Wednesday, December 12, 2018

ஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவுவது யார்?


1 comment:

Dr.Anburaj said...

Good friends and relatives -

Respond to this post by replying above this line
New post on Tamil and Vedas


தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)
by Tamil and Vedas

தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும் (Post No.5776)

Research Article written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 13 December 2018

GMT Time uploaded in London – 18-28

Post No. 5776

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கிரேக்க நாட்டு (கிரீஸ்) இலக்கியத்தில் அழியாத இடம் பெற்ற கதை பிதியாஸ்- டாமன் (Pythias- Damon) நட்புறவுக் கதை. அதை சங்க கால இலக்கிய பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

நட்பின் இலக்கணம் என்ன?

வள்ளுவன் தமிழ் வேதமான திருக்குறளில் அழகாகச் சொல்லிவிட்டான்:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு-786

பொருள்

ஒருவரை ஒருவர் சந்தித்துச் சிரித்துப் பேசுவது உண்மையான நட்பு அல்ல; மனத்தளவில் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் போற்றுவதும் பாராட்டுவதுமே நட்பு

இதற்கு முன்னுள்ள குறளில் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:-

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும் - 785

பொருள்

நட்பு கொள்வதற்கு ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, கட்டித் தழுவி, கை குலுக்கிப் பேச வேண்டும் என்பது தேவையல்ல; ஒரே மாதிரியான சிந்தனையே (same wave length) நட்பு என்னும் உரிமையைக் கொடுத்துவிடும்.

இதற்கு முன்னுதாரணமான கதை கோபெருஞ்சோழன் - பிசிராந்தையார் கதையாகும்.

பலரும் அறியாத பிதியாஸ் - டாமன் கதையை முதலில் பார்த்துவிட்டு பிசிராந்தையாருக்கு வருவோம்.


கிரேக்கநாட்டின் மிகப்பெரிய தத்துவ அறிஞர் பிதகோரஸ் (Pythagoras) . அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவரும் வள்ளுவரைப் போலவே நட்பின் இலக்கணத்தை வரையரை செய்துள்ளார். அது என்ன? அதற்கு முன்னுதாரணமான கதைதான் -- உண்மைக் கதைதான் --- பிதியாஸ் கதை.

பிதியாஸும் டாமன் என்பவரும் இணை பிரியாத் தோழர்கள். கிரேக்க நாட்டின் தற்போதைய தலைநகரான ஏதென்ஸில் வாழ்ந்தவர்கள். ஒருமுறை அவர்கள் சைரக்யூஸ் (Syracuse) நகருக்கு வந்தனர். அங்கு டயோனிஸியஸ் (கி.மு. 405-367) என்ற கொடுங்கோலன் ஆட்சி நடாத்தி வந்தான். பிதியாஸ் ஒரு உளவாளி என்று எண்ணி சிறைப் பிடித்தான். எவ்வளவோ மன்றாடியும் மன்னன் விடுவதாயில்லை. மரண தண்டனையும் விதித்தான். இதைக் கேட்ட அவனது ஆருயிர்த் தோழன் டாமன் மனம் வெதும்பினான்.

பிதியாஸ், சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் தொலை தூரத்தில் வசிக்கும் தனது தாயார் உடல் நலம் குன்றி இறந்துவிடும் நிலையிலிருந்ததால் மன்னரிடம் ஒரே ஒரு வேண்டு கோள் மட்டும் விடுத்தான்.

"என்னுடைய மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர், என் தாயாரை மட்டும் தரிசித்துவிட்டு, விடை பெற்று வருகிறேன்; அனுமதி தாருங்கள்; நான் ஓடி விடமாட்டேன்; கட்டாயம் திரும்பி வருவேன்; என்னை நம்புங்கள்" -- என்றான்.

கொடுங்கோலன் டயோனிஸஸ் அதை நம்பவில்லை; உன் தாயாரோ தொலைதூர கிராமத்தில் வசிக்கிறாள்; உன்னை வெளியே விட்டால், நீ கூண்டுக் கிளியாகப் பறந்து விடுவாய். நீ திரும்பி வருவாய் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா; முடியாது போ-- என்றான்.

அப்போது அங்கே டாமன் பிரவேசித்தான்.

மன்னர் மன்னவா; பிதியாஸ் என்னுடைய ஆப்த சிநேகிதன்; அவனுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்; அவன் சொன்ன நாட்களுக்குள் திரும்பி வராவிடில், நான் மரண தண்டனையை ஏற்கிறேன்; அவனை விடுத்து அந்த கை விலங்குகளை எனக்குப் பூட்டுங்கள். அவன் வராவிடில் என்னைக் கொல்லுங்கள்- என்றான். மன்னரும் கை விலங்கை மாற்றி பிதியாஸை அனுப்பிவிட்டு டாமனைப் பிடித்து சிறையில் தள்ளினான்.

அம்மாவைப் பார்க்கச் சென்ற பிதியாஸ் வரும் அறிகுறியே இல்லை; நாளையுடன் கெடு முடிகிறது.பிதியாஸ் வராவிட்டால் டாமன் தலை உருளுவது நிச்சயம். ஆனால் டாமநோ கொஞ்சமும் அஞ்சவில்லை. கெடு முடிவதற்குள் பிதியாஸ் வருவது உறுதி என்று கருதினான்.