Followers

Friday, December 28, 2018

ரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை

I am proud of Quran as Quranic guidelines on divorce are the best, govt. should enact them: MP Ranjeeta Ranjan
Mrs.Ranjeet Ranjan, INC,Bihar.
ரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.
இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது
இதில் சூரத்துன் நிசாவில் தலாக் குறித்த ஐந்து அம்சங்களை தெளிவாககூறப்பட்டுள்ளது., மேலும் "சூரத்துல் பக்ரா"வில் தலாக் சட்டம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்
உள்ளன .
எந்தெந்த காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோரலாம், எந்தெந்த காரணங்களுக்காக ஆண் விவாகரத்து கோரலாம் என்ற தெளிவான சட்ட நடைமுறை உள்ளது.
மூன்று தாலாக் கூற குறைந்தது 90 நாட்கள் கால இடைவெளி தேவைப்படுகிறது இதில் ஒருமுறையாவது கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் கூட மீண்டும் முதல் முறையிலிருந்தே சட்டம் செல்லுபடியாகும்.
இவ்வளவு தொலைநோக்கு பார்வை, உலகில் எந்தச் சட்டத்திலும் இல்லை மேலும் இதை இந்திய விவாகரத்து சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் உங்கள் எண்ணம் தவறு, உங்கள் நோக்கம் தவறு.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்பது வெகு சொட்பமே இதை அளவுகோலாக கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது
இதில் பெண்களுக்கான நீதி எங்குள்ளது? கணவனை சிறைக்கு அனுப்பிய பின் அந்தப் கணவன் மூன்று வருடம் கழித்து மீண்டும் விவாகரத்து தருவானேயன்றி ஜீவானாம்சம் தரமாட்டான், இதில் குழந்தைகளின் பொறுப்பு யாருக்கு சார்ந்தது? உங்களுக்கு பெண்களின் மீதோ, முஸ்லீம்கள் மீதோ எந்த அக்கறையும் இல்லை.
இந்த மசோதா நிறைவேற்றினால் முஸ்லீம் பெண்கள் பஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் இதன் மூலம் முஸ்லீம்கள் வாக்கு பெற்றுவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு ஒரு ஓட்டும் கிடைக்காது.
இந்த மசோதா பெண்கள் நலன் சார்ந்தது எனில் முஸ்லீம் பெண்களின் மீது மட்டும் கரிசனம் ஏன் இந்து பெண்கள் மீது இந்த கரிசனம் இல்லை எத்தனை பலாத்கார வழக்குகள், எத்துனை விவாகரத்துகள் இந்து கணவன்கள் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்காக ஏன் உங்களால் சட்டம் இயற்றவில்லை.
சில ஆண்கள், தவறு செய்யும் ஆண்கள் அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள் அவர்கள் சட்டத்தையும் தவறாக பயன்படுத்துபவர்களே அவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
முஸ்லீம் சமூகம் தலாக் சட்டத்தை புரிந்து கொள்ளவும் இல்லை அதன் இயல்பில் அதை கடைபிடிக்கவும் இல்லை, இது புரிதல் மற்றும் பின்பற்றுதல் குறைபாடு அதை இந்த சமுகமே சட்டத்தின் அம்சங்களை அனைத்து முஸ்லிம்களும் எடுத்து கூற வேண்டும்.
முஸ்லிம் பெண்களில் கல்வியறிவு குறைந்தே உள்ளது. இந்துப்பெண்களில் கல்வி கற்றவர்கள் மிகுந்து உள்ளனர். உங்களது சட்ட நுணுக்கங்களை புரிந்து தனது வழக்கை எங்கு கொண்டு செல்வாள்?
அவளுக்கு யார்தான் உதவி புரிவார்கள். கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு அவளது, அவள் குழந்தைகளுக்கு யார் செலவு செய்வார்கள்.
நீங்கள் அவளை அவளது சமுதாயத்திலிருந்து வெளியேற்றி அவளை நிர்க்கதியாக்கும் வகையில் சட்டம் இயற்ற முயற்சிக்கின்றீர்கள்.
இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களை முஸ்லிம் அறிஞர்கள் துணையுடன் இய்ற்றப்பட வேண்டும்.
என்னைக்கேட்டால் குர்ஆனின் அடிப்படையில் விவாகரத்து சட்டம் தான் ஆக சிறந்த சட்டமாக இருக்கும்.
பெண்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்பதே எனது கோரிக்கை.
thanks :Zafar Rahmani


1 comment:

Dr.Anburaj said...

ஒரே நேரத்தில் முத்தலாக் அளித்து வருவது வழக்கமாகி விட்டது.குரானின் போதனைக்கு எதிரானது. ஆனால் நடைமுறையை யாரும் எதிர்க்கவில்லை. ஒரே நேரத்தில் அவசர கதியில் விவாகரத்து வழங்கப்பட்டது. முஸ்லீம் பெண்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டது. தீா்வு காண முடியாமல் முஸ்லீம் பெண்களின் நலனை முஸ்லீம்கள் காப்பாற்றவில்லை. அதனால்தான் அப்பெண் கொடுமை தாங்க முடியாது நீதி மன்றத்தை நாடினாள். அவளை நீதி மன்றம் செல்லும் அளவிற்கு அலட்சியப்படுத்தியது முஸ்லீம் சமூகம்.

ஒரே நேரத்தில் முத்தலாக் செய்தால் -குரானுக்கு மாறு செய்ததற்கு

”தண்டணை”

இல்லையெனில்

அதை எப்படி நிறுத்த முடியும் ? ஏன் இப்படி பித்தலாட்டம் செய்கின்றீா்கள் ?
முஹம்மது சௌதாவை புறக்கணித்தது போல் பல பெண்கள் சங்கடப்பட்டு வருகின்றார்கள்.இவரகள் நீதிமன்றம் போனால் நாம் மனம் போல வாழ முடியாமல் போய்விடுமே நமது கட்டுபாடற்ற சுதந்திரம் போய்விடுமே என்ற முஸ்லீம் ஆண்கள் பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிா்க்கின்றார்கள்.நீதி மன்றத்திற்கு வராமல் பார்த்துக் கொண்டால் எந்த சட்டம் முஸ்லீம்களை என்ன செய்யும் ?