Followers

Monday, December 03, 2018

தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.


//தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.// - Narendran

பிறந்த தாய் நாட்டை நேசிக்காதவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு பேச்சுக்கு மொகலாயர்கள் அந்நியர்கள் என்றால் நம் நாட்டு பிராமணர்கள் யார்? வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார்? இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார்? இன்று வரை மண்ணின் மைந்தனை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுப்பது யார்?


//அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.//

உங்கள் வாதப்படி வாள் முனையினால் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதோ மோடி, ஆதித்யநாத் போன்றோரின் பாசிச ஆட்சி. இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன்? ஏனென்றால் இந்து மதம் என்பது பார்பனிய மதம். பார்பனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மதம். இதனாலேயே மக்கள் இந்த காலத்திலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இதுதான் உண்மை.

4 comments:

Unknown said...

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்
November 25, 2018


ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.

எல்லாக் கோயில்களும் ஆண், பெண் அனைவரும் செல்லும் விதமாகவே அமைந்திருக்கின்றன. இன்றைக்கு பல கோவில்களில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சந்தித்துப் பொழுதுபோக்குவதைப் பார்க்கிறோம். கோவிலுக்கு வருபவர்களில் நோக்கம் பலவிதமாக இருக்கிறது. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் ஒரே நோக்கத்தைக் கொண்டது. அதற்காகவே கண்டிப்பான விதிமுறைகளும் விரத முறைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்தையும் துறந்து இறைநிலையை அடைந்த ஞானிகளை, யோகிகளை, துறவிகளை சாமி, சாமியார் என்று இறைவனாகவே பார்ப்பது நமது பண்பாடு. தாற்காலிகமாக துறவிகளைப் போல் கடுமையாக விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்களையும் சாமி என்று சொல்கிறோம். காமம் அனைத்து உயிர்களின் மனதிலும் பொதுவாய் இருப்பது. அதுவே உலகை இயக்குவது. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது.

(மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது.

பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்ட ஆண்களே எதையும் சாதிக்கும் சக்தி படைத்தவர்கள். அதுவே அவர்களுக்குப் பெருமை. ஆண்கள் தர்மத்தைக் கடைபிடிக்க பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் அதுவே மனைத்தக்க மாண்பு.

இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சமூகத்தில் அதிகமாவதற்குக் காரணம் ஆண்களுக்கு பிரம்மச்சரிய ஒழுக்கம் வலியுறுத்தப்படாததே. தர்மம்-மோக்ஷத்தை விட அர்த்தம்-காமம் பிரதானம் ஆக்கப்பட்ட சீர்கெட்ட சமூகம் இது. மேலான, சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட நம் பண்பாடு திட்டமிட்ட அந்நியப் படையெடுப்புகளால், சக்திகளால் தவறாக வழி நடத்தப்பட்டு அழிவை அடைந்து வருகிறது. இளைஞர்கள் தவறுதலாக வழி நடத்தப்படுகிறார்கள். ஆண் பெண் ஒழுக்கம் நாகரீகம், புதுமை, சுதந்திரம், உரிமை எனும் பெயரால் சிதைக்கப்படுகிறது.

பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் இன்று வலியுறுத்தப்பட வேண்டும். அதுவே மேலான சமூகத்தை, சமூக ஒழுக்கத்தை உண்டாக்கும். அதற்கு பிரம்மச்சாரி ஐயப்பன் முன்மாதிரி ஆக்கப்படவேண்டும். எல்லா மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் ஐயப்பன் கோவில் உருவாக்கப்படவேண்டும். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்” என்ற வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து, உண்மையாக விரதமிருந்து சபரிமலை செல்லும் ஆண்களின் எண்ணிக்கை இன்னும் பெருக வேண்டும். பாரம்பரியத்தை மதிப்பவர்களாகவும் பாரதப்பண்பாட்டின்படி விரதம், பண்டிகை முதலானவற்றைக் கடைபிடித்து வாழ்பவர்களாகவும்‌ பெண்கள் வளர்க்கப்படவேண்டும். தர்மசாஸ்தா ஐயப்பன் அருளால் தர்மத்தையும் மோக்ஷத்தையும் மேலான லட்சியமாகக் கொண்டு வாழும் பாரத சமுதாயம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சரணம் ஐயப்பா!

ஸ்ரீ சுவாமி பூர்ணானந்த சரஸ்வதி அவர்கள் ஓர் இந்துத் துறவி. தேனி வேதபுரீ ஸ்ரீ சுவாமி சித்பவாநந்த ஆசிரமத் தலைவர் ஸ்ரீ சுவாமி ஓங்காராநந்த மஹராஜ் அவர்களின் சீடர். முறையாக அத்வைத வேதாந்த தத்துவம் பயின்று ஸந்நியாஸ தீக்ஷை பெற்று வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். தற்போது நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் எடப்பாடி சாலையிலுள்ள ஆநந்தாச்ரமத்தில் வசித்து வருகிறார்.

Dr.Anburaj said...

இந்தியாவில் கலாச்சார பரிணாமம் நடந்து கொண்டேயிருக்கின்றது.
”இந்து சமயத்தின் லட்சியம் பிறாமணா்களை உருவாக்குவது” என்கிறாா் பாா்பனகுடியில் பிறக்காத சுவாமி விவேகானந்தா். அந்தணன் எனற தமிழ் சொல்லுக்கு இணையாது பிறாமணன் என்ற சொல்.
”அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்”-திருவாசகம்
முறையான சமய கல்வி கிடைக்கப்பெற்ற பல சாதி (கலாச்சார குழுக்கள்) இணைந்து புதிய சாதியை உருவாக்கி வருவதை வரலற்றில் காணலாம். ஆழ்வார்கள் தொண்டால் பல கலாச்சார குழுக்கள் ஒருங்கிணைந்து புதிய கலாச்சாரத்தை பின்பற்றி தொடா்ந்து அதில் நிலைத்து புதிய அய்யங்காா் என்ற சாதியை உருவாக்கினாா்கள். வைணவத்தில் முதல் நிலைபெற்றவா் நம்மாழ்வாா் பிறப்பில் ”நாடாா்” சாதி யாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.தூத்துக்குடிமாவட்டம் ஆழ்வாா் திருநகரியில் வாழும் அய்யங்காா் சாதியினர் நாடாா் யாதவா் தேவா் அரிசனங்கள் ஆகிய சாதிகளின் ஒருங்கினணப்பில் தோன்றியவா்கள்.

திருக்குறுங்குடியில் வாழும் அய்யங்கார்கள் அதிக அளவில் யாதவா்கள் கொஞசம் நாடாா்கள் மற்றும் பலசாதிமக்களால் உருவாக்கப்பட்டது.

இதுபோல்தான் சைவ வேளாளா் சாதியும் பலசாதி மக்களின் ஒருங்கினைப்பால் நாயன்மார்களின் முயற்சியால் ஏற்பட்டது.
500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்படி இரு சாதியும் இந்தியாவில் கிடையாது.
குரோமசோம் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

இனி சொல்லுங்கள் சுவனப்பிரியன்

அய்யங்காார்கள் ---- சைவ வேளாளாா்கள் ஆரியரா ? பார்ப்பனா்களா ? பிறாமணா்களா ? திராவிடா்களா ? தமிழா்களா ?

Dr.Anburaj said...


முஸ்லீம்கள் அரேபிய அடிமையாக இருந்து இந்துக்களை காபீா் என்று இன்றும்இழிவு படுத்தி வருவதுதான் பிரச்சனைக்கு அடிப்படையாகும்.

Dr.Anburaj said...

இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன்
--------------------------
இந்துக்கள் என்பதால் எதாவது ஒரு சிறப்பு சலுகை உள்ளதா ? எங்கே பட்டியல் இடுங்கள் பார்க்கலாம். சிறுபான்மை யினருக்கு தான் இந்திய அரசு பணத்தை கோடிக்கணக்கில் அள்ளி வீசுகின்றது. சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட மானியத்தொகை்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு செய்தாரே? பத்திரிகையில் படிக்கவில்லையா ?
பயங்கர வாத செயல்களால் நொந்து இந்துக்கள் வாழும் காஷமீரில் இந்துக்களுக்கு என தனி உரிமை உள்ளதா ? சிறுபான்மை சலுகைகள் கிடையாது. இந்திய ராணுவம்தான் பாதுகாப்பு.நாகலாந்து மிசோரம் போன்ற மாநிலங்களில் கிறிஷதவர்கள் பெரும் பான்மையாக இருந்து சிறுபாண்மை அந்தஸ்து சலுகைளைப் பெற்று வருகின்றாார்கள். இந்துக்களுக்கு ?????????
பாவம் பரிதாபம்.