நமது நாட்டில் காவலர்கள் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து மாமூல் வசூலிப்பதை பரவலாக பார்த்திருப்போம். ஆனால் சவுதியில் ரமலான் நாட்களில் பயணத்தில் இருப்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு நோன்பு திறக்க உணவுகளையும், பழங்களையும், தண்ணீரையும் தருவதை பார்க்கிறோம். நோன்பு நாட்களில் சவுதியின் பல இடங்களில் இக் காட்சியை பரவலாக பார்கலாம்.
முரட்டு மீசையுடனும் ஒரு வித அதிகார தோரணையுடனும் காவலர்களை பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு சலாம் சொல்லி புன்முறுவலோடு ஓட்டுனர்களுக்கு உணவு பரிமாறும் சவுதி காவல் துறையினர் சற்று வித்தியாசமானவர்கள். இந்த பழக்கம் இஸ்லாம் சொல்லிக் கொடுத்தனால் வந்துள்ளது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
1 comment:
சிறிய நாடு.
மிதமிஞ்சிய வருவாய்.
ஒற்றைக் கலாச்சாரம். முறையான சமய கல்வி. காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைத்தான் படிக்கின்றார்கள் என்றாலும் சமய அனுஷ்டானங்களின் நற்பலன்கள் அவர்களுக்கு கிடைக்கின்றது என்பது சத்தியம்.
சவுதியின் ஒரு பகுதியில் நிறைய ஷியா முஸ்லீம்கள் வாழ்கின்றார்களாம். அவர்கள் பகுதியை அரசு முற்றிலும் புறக்கணிக்கின்றதாம்.வளா்ச்சித் திட்டங்கள் மருத்துவ மற்றும் வசதிகள் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகின்றத என்று சவுதி அரசு மீது ஷியா முஸ்லீம்கள் புகாா் தெரிவித்து வருகின்றார்கள். அதில் உண்மை உள்ளது.
Post a Comment