Followers

Saturday, February 02, 2019

கடவுளின் பெயரில் நடைபெறும் அராஜகங்கள்!

கடவுளின் பெயரில் நடைபெறும் அராஜகங்கள்! #சட்டத்தின்ஆட்சியா?
*************
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக்கோட்டை கிராமத்திலிருந்து 300 டன்கள் எடையுள்ள மிகப் பெரும் பாறையை வெட்டியெடுத்து, 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலுக்கு எடுத்துச் சென்று, மகா விஷ்ணு சிலை அமைப்பதற்கு மாபெரும் பல அச்சு டிரெயிலர் சென்று கொண்டிருக்கிறது. 20 வாகனங்கள், 500 தொழிலாளர்கள் எனப் பெரிய பரிவாரங்களுடன் செல்கிறார், கோதண்ட சுவாமி.
இன்று கிருஷ்ணகிரி தாண்டி குருபரப்பள்ளியில் பாலத்தின் மேல் செல்ல முடியாமல் கோதண்ட சுவாமியுடன் வந்த வாகனங்கள் நிற்கின்றன. நெடுஞ்சாலை ஓரமாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லையாம் ! கர்நாடகத்திலும் இல்லையாம் !
பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை, தமிழக அரசினை அணுகியது; தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அரசு கண்டுபிடித்து, அத்தனியார் அறக்கட்டளைக்குத் தெரிவித்தது எனவும், 2014 ஆம் ஆண்டிலிருந்தே பாறையை வெட்டிச் சிலையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
108 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட இச்சிலையை உருவாக்குவதற்கு முன், 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பெருமாளின் முகம் மட்டும் முதல் கட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதை 240 டயர்கள் கொண்ட மாபெரும் வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் முதல் நெடுஞ்சாலை துறை வரை யாரிடமும் முறையான அனுமதிகளைப் பெற்றிருப்பதாக தெரியவில்லை.
சிலைக்கான பெரும் கல்லை எடுத்துச் செல்வதற்கு வழியில் இடையூறாக உள்ள ஏழை எளியவர்களின் குடிசைகள் பிய்த்தெறியப் பட்டுள்ளன; கடைகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குப் பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய சட்டவிரோதமான இந்த அராஜகத்தை, அந்த ஒப்பந்தத் குழுமத்தின் முகவர்களே முன் நின்று செய்கின்றனர். வருவாய்த் துறையினரோ, காவல் துறையினரோ இவற்றைக் கண்டு கொள்ளவில்லை.
பாறையில் பெருமாள் முகம் செதுக்கப்பட்டுள்ளதால், அதைக்காட்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் ஒப்பந்தக்காரர்களால் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக யார் மீதும் இதுவரை எவ்விதச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
பாறையை கொண்டு செல்ல சுரங்கம் மற்றும் கனிமம், காவல்துறை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மின்வாரியம் போன்ற எவரிடமும் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை.
#சட்டத்தின்படிசெய்ய_வேண்டியவை :- ---------------------------------------------------
1) எந்தவொரு பல் அச்சு Multi axle சிறப்பு வாகனம் மாபெரும் எடைப் பொருளை கொண்டு செல்ல, மாநில நெடுஞ்சாலைத் துறையின் டிராபிக் செல் இடம் ஒப்புதல் வாங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் ஒப்புதல் பெற வேண்டும்.
2) மாநில நெடுஞ்சாலைத் துறை வழங்கும் டிசைன் படி வாகனம் தயாரிக்கப் பட வேண்டும். கொண்டு செல்லும் வழியில் சாலைகளுக்கு, பாலங்களுக்கு ஏற்படும் சேத மதிப்பீட்டை கணக்கிட்டு பணம் முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
3) நெடுஞ்சாலைகள் துறை அறிவிக்கும் வழித் தடத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் மனம்போன படி சென்று சாலைகள், பாலங்கள், வீடுகள், கட்டிடங்களை இடித்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
4) ஆர் டி ஓ அனுமதி அவசியமாகும்.
ஆனால், #கடவுளின்_பெயரால் அறக்கட்டளையும், ஒப்பந்ததாரரும் அனைத்து சட்ட விதிகளையும், நிபந்தனைகளையும் நிராகரித்து விட்டு செல்கின்றனர்.
ஆனால் … ஒரு டெம்போ வில், நான்கு மாடுகளையோ அல்லது பத்து மனிதர்களையோ ஏற்றிச் செல்லும் போது, நமது காவல்துறை, ஆர்டிஓ போக்குவரத்து துறை அனைத்தும் வந்து நின்று சட்டம் பேசும்; தண்டம் விதிக்கும்!
***************
1) Any Special Multi axle vehicle wants to carry a luggage/ consignment , it must obtain a special permission from State Highway department's Traffic Cell as well as NHAI
2) The party should get the design of the multi axle as well as cost accounting estimate (for the road, culverts, bridges damages concerned) from the department and prior payment should also be made for damages. The vehicle should be with the specified design.
3)State Highway & National Highway will provide a Route Map also, that should be strictly followed. But this Trust seems to be voilated everything and took it's own routes, damaged Highways, small bridges, buildings etc..
4) RTO permission also must.
#IN_THE_NAME_OF_GOD, everybody violated the rules & regulations of the land.
#Atrocious!
(As copy past from Chandra Mohan )


4 comments:

vara vijay said...

How many people died from stampede during hajj.

suvanappiriyan said...

அது விபத்து. இது தெரிந்தே எளியவர்களை கொடுமைபடுத்துவது. Vijay...

Dr.Anburaj said...

Hats off Mr.Vijai.
I appreciate your presence of mind and befitting reply.
This issue is the internal affairs of Hindu community.

We Hindus must also ponder over certain things .
What is the extra use of gigantic Idols in our temples ?
When simple size idol serves the purpose, why and what is the logic behind installing such sky scrabbing size idols ?
This is not devotion.simply extravagance which we must avoid.
I would not support such acts.

Dr.Anburaj said...

திரு.விஜய் அவர்களே

ஸ்ரீநாராயணகுரு சுவாமிவிவேகானந்தா் வாழ்வு-வாக்கு குறித்து தாங்கள் நிறைய படிக்க

வேண்டும்.

தனிமனிதனுக்கு மத விசயங்களில் முழுமையான சுதந்திரத்தை அளிக்கின்றது இந்து சமயம். ஆனால் இது போன்ற பிரமாண்டமான சிலைகளை அமைப்பவர்கள் பெரும்பாலும் “காசு பண்ணுபதில் கவனம்“ செலுத்தும் பக்த சிகாமணிகளாகவே இருப்பார்கள்.
அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் உதிரமாடன்குடியிருப்பு என்ற ஊரில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அந்த ஊருக்கு அடுத்த இராமசாமிபுரம் என்ற ஊரில் ஒரு கோவிலில் சிலைகள் கிடையாது.மூலவா் இடத்தில் ஒரு திருவிளக்கு மட்டும் உள்ளது. ஆச்சரியமாக இருந்தது. ஸ்ரீநாராயணகுரு போதித்தது இதைத்தான். எளிமையாக வழிபாடு செய்ய நாம் பழகிக் கொள்ள வேண்டும். 50-100ஆண்டுகளுக்குள் அபிசேகம் போன்ற வைதிய சடங்ககள் இல்லாத சமய அனுஷ்டானங்களை மக்கள் பின்பற்றச் செய்ய வேண்டும்.
முறைாயன சமயகல்வி பெற உதவுங்கள்.