இறந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உதவும் இனாயத் கான் ஐஏஎஸ்!
பீஹார் மாநிலத்தை சேர்ந்த இனாயத் கான் ஐஏஎஸ் ஆபீஸராக 2012ல் பணி புரிந்துள்ளார். அதன் பிறகு தற்போது மாவட்ட அதிகாரியாக பீஹார் மாநிலத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் பணியில் உள்ளார்.
புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 44 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தது நாம் அறிந்தது. இந்த வீரர்களில் ரத்தன் குமார்(பாகல்பூர்) சஞ்சய் குனார் சின்ஹா(பாட்னா) என்ற இரு சிஆர்பிஎஃப் வீரர்களும் அடங்குவர். இந்த இருவரின் இரு குழந்தைகளை இனாயத்கான் தனது பொருப்பில் எடுத்துள்ளார். இவர்களின் படிப்பு செலவு முதற்கொண்டு வாழ்நாள் முழுக்க இவர்களின் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
31 வயதான இனாயத்கான் கூறும்போது 'நாட்டுக்காக தனது இன்னுயிரை ஈந்த இந்த வீரர்களின் குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதன் விளைவாக எழுந்ததே இந்த அறிவிப்பு. இது அல்லாமல் இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக ஒரு ஓபன் அக்கவுண்ட் திறந்துள்ளோம். மக்கள் கொடுக்கும் நன்கொடைகளை வரும் மார்ச் 10ந்தேதி வசூலாகும் மொத்த தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளோம்' என்கிறார்.
தேசப் பற்று என்பது இதுதான். இஸ்லாம் கூறும் வழிமுறையும் இதுதான்.
வாழ்த்துக்கள் சகோதரி. நம் மீடியாக்கள் இது போன்ற பாஸிடிவ்வான செய்திகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லாது. அதனால் என்ன... நாம் கொண்டு செல்வோம் மக்களிடத்தில்....
தகவல் உதவி
முஸலிம் மிர்ரர்
20-02-2019
முஸலிம் மிர்ரர்
20-02-2019
1 comment:
எனது முகநுாலிலும் வாட்ஸ்அப் குழுவிலும் இச்செய்தியை போட்டுள்ளளேன். வாழ்க.
Post a Comment