சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!
மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.
முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.
இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.
அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.
சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.
வி.ஆர்.சோண்டி, இந்தியானா
வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006
இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.
1 comment:
இம்மன்னா்கள் பற்றி உயா்ந்த செய்திகளையும் தவறான செய்த்களையும் நான் அறிய மாட்டேன். அணை கட்ட தாமே முன்வந்து உதவியது பெருந்தன்மையான நற்குணம்.நற்குணங்கள் ிறைய பெற்றிருந்தாலும் அரசியல் வாழிவில் அரேபிய நாடுகள் தவறான கொள்கையை -மன்னா் ஆட்சியை கொண்டிருப்பது பெரும் கேடு.
சவுதி நாட்டிடம் இருக்கும் பணபலத்திற்கு அவரகள் உலக நாடுகள் அரங்கில் செய்யும் தொண்டுகள் வெகு குறைவே. பள்ளிவாசல் கட்டவும் அரேபிய மத பிரச்சாரங்களுக்கு உதவும் ஆர்வம். வறுமை ஒழிப்பு பணிகளுக்கு மத ஆதாயம் கருதாமல் தொண்டு செய்யும் எண்ணம் கிடையாது.சோமாலியா போன்ற நாடுகளுக்கு மதத்தை கருதாமல் இவர்கள் தொண்டு செய்தார்களா ?
மேலதிக தகல் என்னிடம் இல்லை.யாராவது சவுதி மன்னா் ஆட்சி செய்யும் தொண்டுகள் குறித்த தகவல்கள் இருந்தால் பதிவு செய்யலாம்.
Post a Comment