ஒரு மாவட்டத்தையே மாற்றிக் காட்டியுள்ள அதார் அமீர் கான்!
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் 2016 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பரீட்சையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதே வருடம் முதலிடம் பிடித்த தினா தபி கான் என்ற பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.
கணவன் மனைவி இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் பணி கிடைத்தது. மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மிகவும் மோசமாக இருந்தன. குழந்தைகள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். எழுதுவதற்கும் எந்த உபகரணங்களும் இல்லை.
'அரசு பள்ளிகளின் நிலையைக் கண்டேன். மாணவர்களுக்கு எழுதும் வசதி கூட இல்லை என்றால் எவ்வாறு படிப்பில் ஆர்வம் வரும் என்று எண்ணி சுற்று வட்டார மக்களிடம் இதற்கான அவசியத்தை உணர்த்தினேன். அவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து கொடுத்தனர். பத்னார் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டெஸ்க் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனை எனது இணைய தளத்திலும் பதிவேற்றி மக்களின் ஆர்வத்தை தூண்டினேன். அருகிலுள்ள கிராம மக்களை அழைத்து வந்து ஒரு வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலை அவர்களுக்கு உணர்த்தினேன். இதனால் பலன் கிடைத்தது. 15 நாட்களில் 4500 அரசு பள்ளிகள் அனைத்து வசதிகளையும் பெற்றன. அரசு உதவி இல்லாமல் மக்களின் ஆர்வத்தினால் இது சாத்தியப்பட்டது' என்கிறார் அதார் அமீர் கான்.
இவ்வாறு சேவை உணர்வோடு பணியாற்ற அனைத்து ஜ.ஏ.எஸ் ஆபீஸர்களும் முன் வந்தால் இந்தியா வெகு சீக்கிரம் வறுமைக் கோட்டைத் தாண்டி விடும். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு சம்மதிக்க வேண்டுமே!
தகவல் உதவி
ஜனதாகா ரிப்போர்ட்
24-02-2019
24-02-2019
1 comment:
நல்லவர்கள் நிறைய பேர்கள்இருக்கின்றாா்கள். வாழ்க
------------------------------------------------------------------------
அனைவருக்கும் கல்வி -சா்வ சிக்சையான் அபியான் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளுக்கு பல கோடி ரூபாய் வளா்ச்சி பணிகளை நிறைவேற்ற வழங்கப்பட்டது.
அந்த நிதி என்னவாயிற்று ?
Post a Comment