Followers

Saturday, February 02, 2019

சஞ்சீவ் பட் குடும்பத்துக்கு உதவிக் கரம் நீட்டும் எஸ்டிபிஐ!

சஞ்சீவ் பட் குடும்பத்துக்கு உதவிக் கரம் நீட்டும் எஸ்டிபிஐ!

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் சஞ்சீவ் பட். குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் அரசியல் ஆதாயம் அடைய நினைத்த மோடி காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் 'இந்துக்கள கொதித்து போய் உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் கலவரத்தை அடக்காமல் வேடிக்கை மட்டும் பாருங்கள்' என்று உத்தரவிடுகிறார். மற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் வாய் மூடி மவுனமாக இருந்து விட்டனர். கலவரம் ஓய்ந்தவுடன் இதனை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் சஞ்சீவ் பட். மன நலம் பாதிக்கப்பட்டதாக மோடி அரசு பொய்யான தகவலை சொல்லி இவரை பணியிடை நீக்கம் செய்து சிறையிலும் தள்ளியது. பிறகு ஜாமீனில் வெளி வந்தார். நம்பர் பிளேட் இல்லாத வேன் மூலமாக இவரது காரை இடித்து கொல்ல முயற்சி நடந்தது. நல்லவேளையாக அதிலும் தப்பித்துக் கொண்டார்.

நேர்மையாக நடந்து கொண்டதால் வேலையிழந்து இன்று வறுமையில் தவிக்கும் சஞ்சீவ் பட் குடும்பத்துக்கு எஸ்டிபிஐ கட்சி உதவ முன்வந்துள்ளது. சென்ற வியாழக்கிழமை சஞ்சீவ் பட்டின் மனைவியை சந்தித்து இதற்கான ஏற்பாடுகளை செய்தது எஸ்டிபிஐ.

அநியாயக் காரர்களும் அக்கிரமக் காரர்களும் கொலைகாரர்களும் இன்று திமிராக வலம் வரலாம். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த 3000 முஸ்லிம்களின் குடும்பத்தவரின் பிரார்த்தனை வீண் போகாது. நாமும் பிரார்த்திப்போம் குற்றவாளிகள் கூடிய விரைவில் தண்டனை பெற.

தகவல் உதவி
கோக்னெட்.காம்
17-01-2019 



1 comment:

Dr.Anburaj said...

இந்த உதவியைப் பெபற்றுத்தான் வாழ வேண்டிய நிலையில் மேற்படி குடும்பம் இல்லை. ஏன் இந்த உதவியை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பது விளங்கவில்லை.