Followers

Saturday, February 16, 2019

"என்னமோ பண்றாய்ங்க மாப்ள" - அரத்தம் பொதிந்த வார்த்தைகள்

"என்னமோ பண்றாய்ங்க மாப்ள" - அரத்தம் பொதிந்த வார்த்தைகள்
உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்!
ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.
அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"
அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை. அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது.
ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!
-ஜான்
(வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)


4 comments:

vara vijay said...

Why JEM claimed credit for attack.

Dr.Anburaj said...

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஒன்றில் இரட்டையர்களான சிறுமிகள் மேடை ஏறி சரவெடி வெடிப்பது போல் திருக்குறள்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர். 800 திருக்குறள்களை ஒப்புவித்த நிலையில் இரட்டையரில் ஒரு சிறுமி மயக்கம் வருவதாக கூறி, மேடையில் இருந்து இறங்கினார்.
பதிவு: பிப்ரவரி 17, 2019 14:25 PM
அப்போது மேடை அருகில் நின்று கொண்டிருந்த அவருடைய தாயார் ஓடிவந்து, அந்த சிறுமியின் காதில் ஏதோ சொன்னார். அடுத்த வினாடியே மீண்டும் மேடை ஏறிய அந்த சிறுமி மலர்ந்த முகத்துடன் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அதை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆகிவிட்டது.

அந்த இரட்டையர்களின் பெயர்: ஷாலினி, ஷாமினி. வயது 10. தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள தே.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரட்டையர்கள் 5-ம் வகுப்பு படிக்கின்றனர். அவர்களின் பெற்றோர் அறிவுச்செல்வம் - ஜெயமணி. இரட்டையர் களுக்கு 3 வயதில் ரோஷினி என்ற தங்கை இருக்கிறாள்.

Advertisement

Powered by PlayStream

ஏழ்மையான குடும்பம். தகரக் கொட்டகை வீடு. தினமும் வீட்டுக்குள் திருக்குறள் மழை பொழிகிறது. மழைக் காலங்களில் இவர்களது வீட்டிற்குள்ளும் மழை பொழிகிறது.

இந்த குறள் இரட்டையர்களை சந்திக்க சென்ற போது அவர்கள் இளையவள் ரோஷினிக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந் தனர். அவளும் மழலைக் குரலில் ஒப்புவித்தாள்.

3 பெண் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் ஊட்டி வளர்த்த ஜெயமணி, தமிழ்ப்பாலும் ஊட்ட மறக்கவில்லை. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பாலையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்துள்ளார்.

அது பற்றி தாயார் ஜெயமணியிடம் கேட்போம்!

‘‘நான் 10-ம் வகுப்பு படித்துள்ளேன். படிக்கும்போது திருக்குறளை மனப்பாட பகுதியாக மட்டுமே பார்த்தேன். எனக்கு முதலில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2-வது பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவம் நடந்த பிறகு எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. முடக்கு வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டேன். குழந்தைகளை கவனிக்க ரொம்பவும் சிரமப்பட்டேன். அப்போது மனதளவிலும் பலவீனமாகிப்போனேன்.

ஒருநாள் கம்பு ஊன்றிக்கொண்டு கடைக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையோர குப்பைத் தொட்டியில் திருக்குறள் புத்தகம் ஒன்று கிடந்தது. அதை வீட்டுக்கு எடுத்து வந்தேன். இரட்டை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கைக்குழந்தையை தொட்டிலில் தூங்கவைத்து விட்டு, பொழுதுபோகாமல் திருக் குறளை படிக்க தொடங்கினேன். விளக்க உரையை படித்தபோது வியந்துபோனேன். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களில் இருந்தும் மீள அதில் வழி இருந்தது. அதனோடு ஒன்றிப் போனேன். நம்பிக்கை பிறந்தது. தினமும் திருக்குறள் வாசிக்க வாசிக்க எனக்குள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமை கிடைத்தது. கம்பைத் தூக்கிவீசிவிட்டு எழுந்து நடக்கத்தொடங்கிவிட்டேன். திருக்குறள் எனக்கு மகத்துவம் நிறைந்த மருந்துபோல் ஆகிவிட்டது.

Dr.Anburaj said...

அப்போது ஒருநாள் நான் வானொலி நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்தபோது அதில் பேசிய ஒருவர், ஒரு கல்லூரியில் திருக்குறளில் புலமை இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகை வழங்குவதாகவும், இலவச கல்வி வழங்குவதாகவும் தெரிவித்தார். ஏழ்மையில் இருக்கும் எனது குடும்பத்தில், 3 பெண் குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். அவர்களின் எதிர்கால கல்வி குறித்த அச்சமும் எனக்குள் இருந்தது. திருக் குறள் கற்றால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்பதை நான் உணர்ந்ததால், குழந்தைகளுக்கு திருக்குறள் கற்றுக்கொடுக்க முன்வந்தேன். 8 வயதில் இருந்து அவர்களுக்கு தினமும் கற்றுக்கொடுத்தேன்.

இரட்டையர்கள் திருக்குறளை எளிதில் மனப்பாடம் செய்தனர். அப்போதே விளக்கத்தையும் சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஆண்டில் கற்றுத் தேர்ந்துவிட்டனர். தேனி நாகலாபுரத்தில் திருவள்ளுவர் மன்றம் நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று இருவரும் 1,330 குறள்களையும் ஒப்புவித்து பாராட்டு பெற்றனர். ஒப்புவித்தபோது ஷாமினி மயக்கம் வருவது போல் உணர்ந்து மேடையை விட்டு இறங்கினாள். அவளிடம் சென்று, ‘உன்னால் அனைத்து குறளையும் ஒப்புவிக்க முடியும். முயற்சி செய். வெற்றிபெறுவாய்’ என்றேன். உடனே அவளும் மீண்டும் மேடை ஏறி அனைத்து குறளையும் ஒப்புவித்தாள். தேனி தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில், 2 பேருக்கும் `குறள் செல்வி விருது’ என்ற பெயரில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அக்காள்களுக்கு குறள் சொல்லிக் கொடுப்பதை பார்த்து, ரோஷினியும் கற்கத் தொடங்கினாள். மூன்று வயதிலே அவள் 180 குறள்களை மனப்பாடம் செய்து விட்டாள். நான் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தால் அக்காள்கள் இருவரும், ரோஷினிக்கு திருக்குறள் சொல்லிக் கொடுப்பார்கள். என் மகள்கள் திருக்குறள் சொல்வதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்குமாறு கேட்கின்றனர். விருப்பத்துடன் வரும் குழந்தை களுக்கு இலவசமாகவே சொல்லிக் கொடுக்கிறேன். உலகில் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமான திருக்குறள் நமக்கு கிடைத்திருக்கிறது. அதை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதுதான் என் ஆசை’’என்றார், ஜெயமணி.

Dr.Anburaj said...

ராணுவ வண்டி மிது தாக்குதல் நடத்தியது நாங்கள்தாம் என்று ஜெயஷி முஹம்மது என்று காடையர்களின் இயக்கம் அறிவித்துள்ளது.அந்த கயவன் குறித்து சுவனப்பிரியன் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் அந்த காடையன் மீது பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவன் இந்திய விமானத்தை கடத்தி பணயம் வைத்து தப்பி விட்டான். தப்பினாலும் குற்றவாளி குற்றவாளிதான்.

பாக்கிஸ்தான் அதிபா் சுவனப்பிரியனின் அன்பு காக்கா சகோதரா் இசுலாமிய காலிபா ஜனாப் ஹாஜி இம்ராம்கான் என்ன செய்யப் போகின்றாா் ? இந்தியாவிடம் ஒப்படைப்பாரா ? ஒப்படைக்க வேண்டும் என்ற சுவனப்பிரியன் சொல்வாரா ? இதுவரைச சொல்லவில்லை.பாசம் பொத்துக் கொண்டு வருகின்றது. மசுத் ஆசாரும் கூட சுவனப்பிரியனுக்கு மத சகோதரா் தானே. ஆகவே இசுலமிய தர்மம் படி இசுலாமியா் இசுலாமியரை காபீர்களுக்கு காட்டிக் கொடுக்கக் கூடாது. அந்த தர்மத்தை வழுவாது கடைபிடிப்பவா் சுவனப்பிரியன்.