Commander. நசீர் அகமது CRPF.
காஷ்மீரை சார்ந்த CRPFயின் 37ஆம் பட்டாலியனின் சேனாதிபதி..!!
“நீங்க தனியான நபர் அல்ல,நான் மட்டுமே உங்கள் பிள்ளை அல்ல.. தேசத்தின் இரணுவமே உங்களுடன் இருக்கின்றது”
நசீர் அகமது தனது தந்தையிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகளின் முக்கியமானது.
நசீர் அகமது தனது தந்தையிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகளின் முக்கியமானது.
இந்த தாக்குதலில் உயிர் இழந்த ஓரே கமெண்டோ இவர் மட்டும் தான்..!!
பனி விழும் பூமியில் பலிகளை கண்டு வீரியமாய் எழுந்த மாவீரனின் இறுதி சடங்கு..!!
தந்தை மகனின் உடலை சுமக்க, கஷ்மீரத்து மங்கைகளின் கண்ணீருடன் இந்த வாழ்வை தேசத்துக்காக அர்பணித்தவனின் மறு உலக வாழ்கை பயணம் சிறக்க எமது பிராத்தனை..!!
இஸ்லாமிய மார்க்கதில் தாய் நாட்டை நேசிப்பது இறை பக்தியின் மேன்மைகளின் முதன்மை சிறப்பு.. அந்த சிறப்பை சிறப்பாக செய்து முடித்து கொண்டு விடை பெற்ற “Comd.நசீர் அகமது” அவர்களின் மண்ணறை வாழ்வும் மறுமை வாழ்வும் அமைதியாக அமைய இறைவனை வேண்டுகிறேன்..!!
சுவனத்தின் உயர்ந்த இடமான ஜன்னதுல் பிர்தோஸ் என்ற இடத்தை வழங்கி இந்த அடியானை மேன்மைபடுத்த வல்லோனிடம் கையேந்துங்கள்..!!
சாதி மதம் கடந்து நாட்டுக்காக உழைத்த ராணுவ வீரர்களை அநியாயமாய் கொன்ற கயவர்களும், அரசியல் ஆதாயம் அடைய,உளவு துறையின் கடுமையான எச்சரிக்கையை மீறிய துரோகிகளை களை எடுப்போம்.. நாட்டை காத்திடுவோம்..!!
ஜெய் ஹிந்த்.
- Karaiyil Irunthu
3 comments:
படிப்பதற்கு சங்கடமாக உள்ளது.
ராணுவ வீரா்களின் ஆன்மா சாந்தியடைவதாக.
அவர்களின் குடும்பத்தின் நலனை அரசும் ஊர் மக்களும் உறவும் பாதுகாக்க வேண்யது முக்கியமாக கடமை.உணா்ச்சி வசப்படும் வேளை அல்ல இது.
சில நேரங்களில் தேவைக்கு அதிகமாக நம்பிக்கை வைக்கும்போது தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.ராணுவத்தினருக்கு பயிற்சியின் போது செத்தவன்போல் கிடப்பவன் எல்லாம் பிணம் அல்ல என்ற சொல்லிக் கொடுப்பார்கள்.சில வேளைகளில் அதை மறந்து செயல்படுவதுண்டு.
காா்கில் போரின் போது கர்னல் நடராஜன் என்பவர் தலைமையில் ராணுவ வீரா்கள் தீரமாக போரிட்டு ஒரு மலைக்குன்றை கைப்பற்றினாா்கள். இறந்து கிடந்த எதிரிகள் உடலை கர்னல் நடராஜன் புரட்டிப் பார்த்தப்போது அந்த குவியலுக்குள் உயிருடன் ஒளிந்து இருந்த ஒரு எதிரி கர்னலை பட்டாக்கத்தியால் நெஞ்சில் ஒங்கி ஆழமாகக் குத்திவிட்டான். உயரமான மலை சிகரம் போர் சுழ்நிலை. கர்னல் நடராஜன் உரிய மருத்துவ சிகிட்சை அளிக்க இயலாத நிலையில் அமரர் ஆனாா்.
ராணுவ வீரா்களும் மனிதர்கள்தானே.
சில மனித தவறுகளின் விலை மிக அதிகம்தான்.
சேனாதிபதி நசீா் அகமதின் வாக்கு மூலம் நமது அரசின் ராணுவ படையின் தரத்திற்கு தகுதிக்கு எடுத்துக் காட்டு
நீங்க தனியான நபர் அல்ல,
நான் மட்டுமே உங்கள் பிள்ளை அல்ல..
தேசத்தின் இரணுவமே உங்களுடன் இருக்கின்றது”
ராணுவத்தில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த நம்பிக்கை உண்டு.
வீரமரணம் அஅடைந்த 44 பேர்களின் படங்களைப் போட தங்களுக்கு மனம் வராது.தாங்களும் தங்கள் கூட்டமும் இந்துக்களை காபீர்கள் என்று வெறுக்கும் கூட்டம்.
43 போ் இறந்தது தங்களுக்கு மகிழ்ச்சியான விசயம்.
ஒரு முஸ்லீம் இறந்ததுதான் தங்கள் கவனத்தை கவர்கின்றது.
தங்களுக்கு சோகமான விசயம்.எனவே அதைமட்டும் பதிவு செய்துள்ளீர்கள்.
காஷ்மீரில் ராணுவ வீரா்கள் செல்லும் வாகனங்களின் மீது சிறுவா்களும் சிறுமிகளும் இளைஞர்களும் வாலிப பெண்களும் திரண்டு கல் எறியும் காட்சியை கண்டிருப்பீா்கள்.என்றைக்காவது அதை கண்டித்து ஒரு பதிவை போடடதுண்டா?
காஷ்மிரில்மட்டும் முஸ்லீம்கள் பெரும்பான்மையினா் அதனால் அதுபாக்கிஸ்தானோடுதான் இணைய வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவிவருகின்றது.
Post a Comment