Followers

Saturday, October 31, 2020

கையை கட்டி கும்முடு போட்டு குனிந்து நின்ன காலம்லாம் அப்போ

 ''கையை கட்டி கும்முடு போட்டு குனிந்து நின்ன காலம்லாம் அப்போ.. இது திருமாக்களின் காலம்''




அய்யர் அம்மணமாக போனது பற்றி ஒருவரும் பேசவில்லை! :-)

 


சிதம்பர தரிசனமா? அதனை நீ சிந்திக்கலாமா?

 


பிச்சை எடுத்தலில் இது ஒரு புது வகை... :-)

 பிராமணர்கள் உண்ணும் உணவை பொறாமை இன்றி பரிமாற வேண்டும்

- மனு நீதி



ஃபிரான்ஸ் நாட்டில் நடப்பது என்ன..?

 #ஃபிரான்ஸ் நாட்டில் நடப்பது என்ன..?


இதை அறிய வேண்டும் எனில், 

வரலாறு அறிதல் முக்கியம்.


9-2-2006ல், 

சார்லி ஹெப்டோ என்கிற ஒரு ஃபிரெஞ்சு வாரப்பத்திரிக்கை, இஸ்லாமியர்கள் தம் உயிராக மதிக்கும் இறைத்தூதரை கற்பனையான உருவம் கொடுத்து தலைப்பாகையை வெடிகுண்டு மாதிரி கேலிச்சித்திரமாக்கி, நபியை பயங்கரவாதிபோல உருவகித்து, இஸ்லாமை பயங்கரவாத மார்க்கமாக முன்னிறுத்தி முதன்முதலில் நபியவர்கள் பற்றிய 3 கார்டூன்களை வெளியிட்டது. இதற்கு அப்பத்திருக்கைக்கு எவ்வித நியாயமான எதிர்வினையோ  பதில் வன்மமோ  காரணமாக இருக்கவில்லை. இப்படங்கள் அப்பட்டமான அவதூறு, இஸ்லாம் & முஸ்லிம்கள் மீதான மதவெறி காழ்ப்புணர்ச்சி தாக்குதல் என எதிர்த்த... The Grand Mosque of Paris, the Muslim World League and the Union of French Islamic Organisations ஆகிய 3 தரப்பினர் ஃபிரான்ஸ் நாட்டு தீர்ப்பு மன்றத்தில் நீதியை கேட்டு வழக்கு தொடுத்தனர். 22-3-2007ல் வந்த தீர்ப்பில், 'இதெல்லாம் #ஊடகதர்மம், #கருத்துச்சுதந்திரம், முஸ்லிம்களையும் இஸ்லாமையும் தூற்றவில்லை' என்று தீர்ப்பளித்த தீர்ப்புமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து சார்லி ஹெப்டோ பத்திரிக்கையை வழக்கிலிருந்து விடுவித்தது.


அடுத்து...


3-11-2011ல், தம் பத்திரிகை பெயர் தலைப்பை  "ச்சரியா ஹெப்டோ" என்று பெயர் மாற்றி மீண்டும் ஒரு கற்பனை முண்டாசு கார்டூன் முகத்தை அடடைப்படமாக வரைந்து, அந்த முகம்தான் நபி என்றும் இப்பத்திரிக்கையின் தலைமை எடிட்டர் என்றும் கூறி... அந்த 'எடிட்டர்' கூறுவதாக கேவலமான ஒன்றை அப்படத்தில் எழுதி வெளியிட்டது. இதற்கு காரணம் என்னவென்றால்... அப்போது அந்த 2011ஆம் வருஷத்தில் துணிசியா நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து மேற்கத்திய கலாச்சார சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து... முதன்முறையாக பொதுத்தேர்தல் நடந்து, அதில், முன்னர் எப்போதோ தடை செய்யப்பட்டிருந்த துணிசிய இஸ்லாமிய கட்சி ஒன்று பெருவாரியான வாக்குகளில் தேர்தலில் வென்று 23-10-2011 அன்று இஸ்லாமிய மக்களாட்சியை  அமைத்ததும்... சார்லி ஹேப்டோவுக்கு வயிறு எரிந்தது. அதன் விளைவே... அடுத்த இதழில் மேற்படி "ச்சரியா(ஷரியா) ஹெப்டோ" என நபிகள் பற்றிய கேலிச்சித்திரங்கள்..!


இம்முறை, ஃபிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்கள் யாருமே கோர்ட்டுக்கு போகவில்லை. போனாலும் தள்ளுபடி செய்யப்படும் என்பது தெரிந்து விட்டதால்... கண்டிக்கக்கூட விருப்பமின்றி கண்டுகொள்ளாமல் சகித்துக்கொண்டு இருந்து விட்டனர். ஆனால், அப்பத்திரிகையின் ஒரு கிளை குடோன் ஒன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் உடல் சேதமும் இல்லை. இந்த தீ வைப்பு சம்பவத்தை பிரான்ஸ் நாட்டு முஸ்லீம் அமைப்புகள் உட்பட ஆட்சியாளர்கள் எல்லோருமே வன்மையாக கண்டித்தனர்.


பிறகு...


2012 செப்டம்பர் மாத வாரப்பத்திரிகைகளில்... இறைத்தூதரை ஆபாசமாக, நிர்வாணமாக, உடலுறவு படங்கள் எல்லாம் போட்டு கற்பனை அவதூறு உருவங்கள் தீட்டி முஸ்லிம்களை அசிங்கப்படுத்தி கார்டூன்களை வரைந்து தொடர்ந்து வெளியிட்டது. இதற்குக் காரணம், அப்போது... 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என்கிற ஆங்கில திரைப்படம் ஒன்று... நபியவர்களையும் முஸ்லிம்களையும் அவதூறு கற்பித்து இழிவுபடுத்தி எடுத்ததை எதிர்த்து பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம் & ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால்... வயிறு எரிந்த பத்திரிகை... எரியும் தீயில் எண்ணையை ஊற்றும் விதமாகவே மேற்படி ஆபாசக்கார்ட்டூன்களை அப்பத்திரிக்கை அம்மாதம் தொடர்ந்து வெளியிட்டது. இதுதான், கருத்துச்சுதந்திரம் என்று பத்திரிகை பேச, ஆட்சியாளர்கள் பத்திரிக்கையை ஆதரிக்க... இதனால், ஃபிரெஞ்சு முஸ்லீம்கள் மேலும் நொந்துபோய், 'அமெரிக்க படத்தை கண்டித்துக்கொண்டு இருந்த நமக்கு இப்போது இன்னொரு போராட்டமா.?' என சோர்ந்து போய் மூலையில் முடங்கினர்.


அதன் பின்னர்...

2015 ஜனவரி 7ல்தால்...

துப்பாக்கி ஏந்திய 2 அல்ஜீரியா நாட்டு வம்சாவழி பயங்கரவாதிகளால்... சார்லி ஹெப்டோ பத்திரிகை சுடப்பட்டு... அங்கே பணியாற்றியவர்களில் 12 பேர் இறந்து போனார்கள். 11 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரும் தப்பித்து செல்ல... துரத்திக்கொண்டு சென்ற ஃபிரான்ஸ் காவல்துறை 2 நாள் கழித்து இருவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்கள் 'அல்கொய்தா பயங்கரவாதிகள்' என்று அறிவித்தனர்.


பின்னர், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள், உடன் பணியாற்றிய அலுவலர்கள் என்று பலரை விசாரித்து சிலர் மீது வழக்கு போட்டு... அந்த வழக்கு... இவ்வருஷம் 2020ல் செப்டம்பர் மாதம் 2ல் இறுதி விசாரணைக்கு வந்து இம்மாதம் கோர்ட்டில் தீர்ப்புக்கு நெருங்குகிறது.


இந்நிலையில்தான்...


அந்த பத்திரிகை... "எல்லாம் இதற்காகத்தான்" என தலைப்பிட்டு... இதுவரைக்கும் அது நபி பற்றி வெளியிட்ட அத்தனை கார்டூன்களையும் மீண்டும் செப்டம்பர் முதல்வாரம் தன் பத்திரிக்கையில் வெளியிட்டது.


வழக்கு கோர்ட்டில் இருக்க மீண்டும் அப்படங்களை வெளியிட்டதும்... கருத்துரிமை என்றே பேசப்பட்டது. 


அப்படங்களை... இம்மாதம், ஒரு பள்ளி ஆசிரியர் தன் வகுப்பில் தொங்கவிட்டு, 'இப்படங்களை சகிக்க முடியாத முஸ்லிம் மாணவர்கள் வெளியே போகலாம்' என்று கூறிவிட்டு பிற மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.


இதுகுறித்து வகுப்பில் இருந்த ஒரு மாணவி எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆக, ரஷ்ய வம்சாவழி மாணவன் ஒருவன் அந்த ஆசிரியரை சென்ற வாரம் கொன்றுவிட்டதாக கூறி, அந்த மாணவனை அன்றே சுட்டுக்கொலை செய்துவிட்டது ஃபிரான்ஸ் போலீஸ்.


இது மீண்டும் பெரிய சர்சையாக... ஃபிரான்ஸ் முஸ்லீம்கள் மட்டுமின்றி உலக முஸ்லீம்கள் அனைவருமே இந்த கொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்க... பிரான்ஸ் அரசோ... நாட்டிலுள்ள 73 பள்ளிவாசல்களையும் மற்றும் பல இஸ்லாமிய கல்வி நிலையங்களையும் மூட உத்தரவு இட்டது.


அதுமட்டுமின்றி...


ஃபிரான்ஸ் அரசே தன் நாட்டின் அரசு அலுவலகங்களில், சார்லி ஹெப்டோ வரைந்து வெளியிட்டிருந்த அந்த அருவருக்கத்தக்க ஆபாச கார்டூன்களை தொங்கவிட்டு...


"இதுதான்டா #கருத்துரிமை" என்று கூறிய பிரான்ஸ் அதிபர் மெக்ரான்," உலகம் முழுக்க இஸ்லாம் ஒரு பிரச்சினை" என்றும் கூறினார். 


இது ஃபிரான்ஸ் நாட்டு முஸ்லிம்களின் மனதை புன்படுத்தும் என்றோ... உலக முஸ்லீம்களின் மனதை புன்படுத்தும் என்றோ கிஞ்சித்தும் கருதவில்லை. உலகின் அனைத்து முஸ்லீம்களையும் கொலையாளிகளாகவும்... அந்த கொலையை செய்ய தூண்டும் தூதராக நபியையும், பள்ளிவாசல்களையும் இஸ்லாமையும் பார்த்தார், அதிபர் மக்ரோன்.


துருக்கி அதிபர் எர்துகான், இதற்கு கண்டனம் தெரிவித்து, "பிரான்ஸ் அதிபருக்கு மனநல சிகிச்சை தேவை" என்றார்.


உடனே, பிரான்ஸ் தன் துருக்கி தூதரகத்தை மூடிவிட்டு தூதரை அழைத்துக்கொண்டு விட்டது. ஐரோப்பிய யூனியன், எர்துகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எர்துகான் அப்படி கூற அவருக்கு கருத்துச்சுதந்திரம் கருத்துரிமை போன்ற ஈரவெங்காயங்கள் ஏதுமில்லை என்று அறிவித்துவிட்டது.


இதனால், ஒரு நாடே, ஐரோப்பிய கண்டமே அந்த கேவலமான பத்திரிக்கையாகவே மாறிவிட்டதால்... வெகுண்டெழுந்த உலக முஸ்லீம்கள் குறிப்பாக அரேபிய முஸ்லீம்கள், பிரெஞ்சு பொருட்களை பகிஷ்கரிக்க #BoycottFrenchProducts மற்றும் #BoycottMadeInFrance

என்கிற டிவிட்டர் ஹேஷ் டேக்ஸ் போட்டு நேற்று முன்தினம் ட்ரெண்டிங் செய்தனர்.


ஒரே நாளில் அதன் தாக்கம் பிரெஞ்சு பொருளாதாரத்தில் எதிரொலிக்கவே...


இதோ... நேற்று ஃபிரான்ஸ் அதிபர் அரேபிய முஸ்லிம்களிடம் கெஞ்சுகிறார்.


#இஸ்லாமோஃபோபியா நோய்க்கு எது சிறந்த மருந்து என்பதை அரேபிய முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.


இதன் தாக்கம்...

பிரான்ஸ் நாட்டு தீர்ப்பு மன்றத்தில் மட்டுமின்றி... சார்லி ஹெப்டோவில் கூட எதிரொலிக்கலாம்.


ஃபிரான்ஸ் ஒன்றும் கருத்துரிமை காவலில் நடுநிலை பேணும் நாடெல்லாம் அல்ல. கிருஸ்துவ கத்தோலிக்க நம்பிக்கைகளுக்கு எதிரான படம் என்றாலோ... யூதர்களுக்கு எதிரான கருத்துகள் என்றாலோ... சினிமா, புத்தகம், பாடல் ஆகியவற்றுக்கு தடை போடும் நாடுதான் ஃபிரான்ஸ். 


ஆனால், இஸ்லாமுக்கு எதிரான ஒன்று என்றால் மட்டும் அதில் கருத்துச்சுதத்திர கத்திரிக்காய் எல்லாம் பேசும் நாடுதான் ஃபிரான்ஸ். ஆடை அணிவதும் அணியாமல் போவதும் அவரவர் சுதந்திரம் என்று கூறும் நாடு ஃபிரான்ஸ். ஆனால்... முஸ்லீம் பெண்கள் அவர்கள் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல தடைபோடும். இப்படியாக... அதன் சுதந்திரம் அவ்வப்போது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பல் இளிக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு.


மொத்தத்தில்...

சார்லி ஹெப்டோ துணையோடு... கொரோனா மரணங்களை மறக்கடித்து... மக்கள் ஆதரவை பெற்று தேர்தலில் வென்று விடுவார் மெக்ரான். 


ஆம், 

அங்கும் 'மோடி'தான் அதிபர். 

'சங்கிகள்'தான் ஆளுங்கட்சி.

'முஸ்லீம் வெறுப்பு'தான் அரசியல் வெற்றிக்கான எளிய மூலதனம்..! 😢




Friday, October 30, 2020

இந்த முறையும் தோல்வியையே தழுவப் போகிறார்கள்.

 நேற்று வெள்ளிக்கிழமை  ஃப்ரான்ஸில் தொழுகையில் அமைதியாக ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இடையூறு தரும் பாசிசவாதிகள்.


இஸ்லாம் ஃப்ரான்ஸில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு பொறுக்காத யூத பாசிசவாதிகள் இஸ்லாத்தை கொச்சைபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்த பல தந்திரங்களை கையாளுகின்றனர். வழக்கம் போல இந்த முறையும் தோல்வியையே தழுவப் போகிறார்கள்.  




Wednesday, October 28, 2020

திருமாவளவன் மிகச் சிறந்த ஆய்வாளராக உள்ளார்!

 திருமாவளவன் மிகச் சிறந்த ஆய்வாளராக உள்ளார்!


வெறும் வாக்கு வங்கி அரசியல்வாதியாக இல்லாமல் உலக யதார்த்தம் என்ன என்பதை விளங்கி வைத்துள்ளார். இஸ்லாத்தைப் பற்றிய நல்ல புரிதலும் உள்ளது. இவரது வளர்ச்சி ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கும்.






''அந்த மாதிரி கருத்துக்கள் மனுஸ்மிரிதில நிச்சயமா இல்லை... ''

 ''அந்த மாதிரி கருத்துக்கள் மனுஸ்மிரிதில நிச்சயமா இல்லை... ''

அத்தியாயம் சொல்லி ஆதாரத்தோட கேட்டதும்,
“அதனால? அதனால என்னங்க ஆச்சி இப்போ”
வெக்கம், மானம், கூச்ச நாச்சம் கிஞ்சித்தும் இல்லாத இழிபிறவிகள் சங்கிகள்...
இவர் தான் முரசொலி பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரத்தை ஆணையத்திடம் தந்திருக்கேன். உங்களுக்கும் மெயிலில் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிட்டுப் போனவர். அது ஆச்சு ஓராண்டு! இன்னமும் அந்த ஈமெயில் வந்துகிட்டே இருக்கு. "வாய் முழுக்க பொய்! வாழ்க்கை முழுக்க ஃபோட்டோஷாப்". இதுதான் சங்கி வாழ்க்கை.



தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக

 தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)

“ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)

“அன்று அரேபியர் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இச் செயலை நபி(ஸல்) அவர்கள் தடுத்ததுடன் இவ்வாறு செய்பவர்களை சபிக்கவும் செய்தார்கள்” (முஸ்லிம், புஹாரி :5515)

நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்" என்று கூறினார்கள்.

ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.



Tuesday, October 27, 2020

உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான்...

 உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான்...

நெய் எரிக்கப்படுகிறது
பால் கொட்டப்படுகிறது
மாட்டு மூத்திரம் குடிக்கப்படுகிறது.
மாட்டுக்கறி சாப்புடுற நான் இழிவானவன்.
மாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்வானவனா??



படித்தேன்.. பகிர்ந்தேன்

 கடந்த இரண்டு ஆண்டுகளில் .......!


வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!


நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!


கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?


திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!


எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!


பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!


பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!


அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!


இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.


இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்

#மத்தியஅரசுமாநில_அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.


நீட் தேர்வு

ரஃபேல் ஊழல்

இந்தி திணிப்பு

விலைவாசி உயர்வு

கீழடி ஆய்வு முடக்கம் 

வேலை வாய்ப்பின்மை

காவல் துறை அராஜகம்

புதிய மீன்பிடி கொள்கை

OBC இட ஒதுக்கீடு பறிப்பு

பணமதிப்பிழப்பு தோல்வி

GST வரி மற்றும் வரிஉயர்வு

தூத்துக்குடி படுகொலைகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு

எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்

காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு

2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

தமிழக பணியில் வட இந்தியர் நியமனம் புதிய கல்வி கொள்கை என்று குலக்கல்வி

டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்


என அனைத்து மக்கள் பிரச்சினைகளையும்

பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.


தமிழக மக்கள் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமும் நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.


படித்தேன்..  பகிர்ந்தேன்

இன்றைய ரியாத் இரவு மிகுந்த வலியைக் கொண்டு வந்திருக்கிறது.

 மிதமான குளிர் ஆரம்பிக்கும் இன்றைய ரியாத் இரவு மிகுந்த வலியைக் கொண்டு வந்திருக்கிறது.


திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சார்ந்த ரப்பானி என்பவர் , எனது ஊரைச் சார்ந்த எனது தெருவைச் சார்ந்தவர் இங்கு வீட்டு ட்ரைவராக வேலை பார்த்து வந்தவர். இன்று காலை நெஞ்சுவலியில் இறந்துவிட்டார்.

இவருடன் , எனது உறவினர் ஒருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நேற்று மாலை வரையிலும் ஊர் விசயங்கள் ஞாபகங்கள் ஊருக்கு செல்வதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.

எனது உறவினர் அவரது முகம் பார்க்க பயந்து கொண்டிருக்கிறார். நேற்று வரையிலும் அவர் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவர் அவரது குரல்கள் காதுக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறது.

எனக்கு அவரது பாடியை பார்க்கவே பயமாய் இருக்கிறது என்கிறார். இன்றைய இரவை அவர் நிம்மதியாக எப்படி கழிக்க முடியும்? ம் நேற்று நண்பர் இன்று பாடி. அவ்வளவுதான் வாழ்க்கை.. 🙁

அவர் இறப்பதற்கு முன்பு அவரை மருத்துவமனைக்கு தனது காரில் வைத்து அழைத்துச் சென்ற நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார்.

இறந்தவர் தனது வீட்டுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார், 'தான் இறந்து விட்டால் அங்கேயே புதைக்கச் சொல்லுங்கள் - பாடியை அனுப்புவதற்கு செலவாகும் பணத்தை பணமாக குடும்பத்திற்கு கிடைக்கச் செய்யலாம்' என்றும் சொல்லியிருக்கிறாராம்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அப்படியே காரில் உடல் சாய்ந்து இறந்திருக்கின்றார்.அவரது முகத்தை பாருங்களேன் கொஞ்சம். நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் ஊருக்கும பணத்தை அனுப்பி விடுவார்கள் என்கிற நிம்மதியிலேயே இறந்ததைப் போன்ற ஒரு நிலையில் இறந்திருக்கிறார்.

தான் இருக்கும் போது மட்டுமல்ல தான் இறந்த பின்னர் கூட தனது குடும்பத்திற்கு பணம் சென்று சேர வேண்டுமென்கிற இந்த பொறுப்பு கடமை தியாகம் , நிச்சயமாய் இவரது ஆன்மா மதிப்புமிக்கது.

பணத் தேவைக்காகத்தான் ஒவ்வொருவரும் இங்கு வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதுவும் வீட்டு ட்ரைவர் வேலை என்பது சிலருக்கு நரகம். எந்த நேரத்திலும் ஓய்வெடுக்கவே முடியாது. என்னுடைய நண்பர்கள் பலர் இங்கு பல வலிகளைச் சொன்னதுண்டு.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படியான சோகங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கஷ்டப்பட்டாலும் , வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தாலும் , குடும்பத்துடன் சொந்த ஊரில் ஏதோ தொழில் வேலை என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதா ? மகிழ்ச்சியாக இருங்கள். உங்களின் நிலை பலருக்கு கனவு.

தான் சாகப் போகும் நேரத்தில் இன்னொரு வாழ்க்கை ஒன்று நமக்கு இருக்கப் போகிறதா? மண்ணறை வாழ்க்கைப் பற்றிய பயம்? அங்கு என்ன இருக்கும்? கடல் தாண்டிய ஓர் தேசத்தில் நாம் இறக்கப்போகிறோமே , தனது குடும்பத்தை பார்க்க முடியாமல் இப்படி ஒரு மரணம் நிகழப்போகிறதோ என்கிற பயம் சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் இவர் அந்த நேரத்திலும் தனது குடும்பத்திற்கு போன் செய்து தனது கடேசி பயணத்தின் அறிகுறியைப் பற்றி சொல்லியிருக்கிறார். இந்த பாலையில் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளின் முகம் பார்க்க முடியாமல் தான் இறக்கப்போகும் அந்த கடேசி நொடியில் அவர் என்ன நினைத்திருப்பார்?

பாலைவனத்தில் அவர் ஆன்மா உறங்கிவிட்டது. ஊரில் அவரது குடும்பத்திற்கு இது எவ்வளவு பெரிய வலி? 🙁

எங்கோ ஓர் தேசத்தில் யாருக்கும் தெரியாமல் முகம் பார்க்க முடியாமல் இறந்து போவது ஒரு சாபம். அவரது குடும்பத்தினரும் அவரது குழந்தைகளும் அவரது அப்பா எங்கே ஓர் தேசத்தில் திரும்பி வரமுடியாமல் இருக்கிறார் என்றுதான் இந்த மரணத்தை சமாதானம் செய்து கொள்ள முடியும்.

எந்த தேசத்தில் இருந்தாலும் மரணம் சொந்த தேசத்தில் நிகழ வேண்டும்.

அவரது இழப்பின் சக்தியை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்திற்கு இறைவன் தரட்டுமாக.


rasikow.gnaniyar 


மனித நேயம் என்பது இதுதான்.

 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவின்றி தவித்த போது எந்த பிரதிபலனும் பார்க்காமல் ஓடி ஓடி உதவிய முஸ்லிம்கள். மனித நேயம் என்பது இதுதான்.






பாகிஸ்தான் ராணுவத்தில் பணி புரிபவர் ஹேமன் தேஷ்

 பாகிஸ்தான் ராணுவத்தில் பணி புரிபவர் ஹேமன் தேஷ் கொஹ்லி. எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கருகில் சில மாதங்கள் முன்பு நடந்த மோதலில் நமது ராணுவத்தால் சுடப்பட்டு உயிர் நீத்தார் ஹேமன் தேஷ். அவரது உடலுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். 


இதே போல் முன்பு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நமது தரப்பில் அப்துல் லத்தீஃப் என்பவரின் வீர சாகஸத்தை படித்திருப்போம். 


எனவே இந்தியாவோ பாகிஸ்தானோ மத கண்ணோட்டத்தோடு பார்க்காமல் போர்க்களம் என்ற ரீதியில் நாம் அணுக வேண்டும். துப்பாக்கி குண்டுகளுக்கு இவர் இந்து இவர் முஸ்லிம் என்று பார்க்கத் தெரியாது. 





கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!

 கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!


சில சங்கிகளுக்கு இவரின் அருமை தெரிய வாய்ப்பில்லை!




Monday, October 26, 2020

கோவில் பூசாரிகள் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும்

 உபி மாநிலத்தில் கவுசாம்பி கிராமத்தில் கோவில் பூசாரி பாபா ராம்தாஸ் (வயது 65) கோவிலுக்கு வந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொது மக்கள் பாபாவை நைய புடைத்துள்ளனர்.


கோவில் பூசாரிகள் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் போட்டால்தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.




Saturday, October 24, 2020

இந்த முதியவருக்கு இந்த நிலையா !

 மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி முதியவரின் மகன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யப்படவில்லை. தனது மகனுக்கு நீதி வேண்டும் என்று காவல் துறை அதிகாரி முன்பு காலில் விழுந்து போராடுகிறார்.


இந்த முதியவருக்கு இந்த நிலையா என்று வெட்கித் தலை குனிய வேண்டிய அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து இளக்காரமாக சிரிக்கிறார். 


மனு நீதியை ஆதரித்து அதற்கு பெரும்பான்மை மக்கள் வக்காலத்தும் வாங்கும் ஒரு நாட்டில் நாம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? மனு நீதிப்படி அந்த இளைஞன் இறந்தது சரிதான் என்று தீர்ப்பு வந்தாலும் வரலாம். 




நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால்தான்.

 இன்று மனு தர்மத்தை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடைபெறுகிறது. பல நூறு வருடங்கள் முன்பே மனுவினால் பாதிக்கப்பட்ட எங்களின் முன்னோர்கள் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றார்கள். எனது நிறமும் முக சாயலும் ஈரானை ஒத்துள்ளதா? இதே பார்பனர்களை ஒப்பிட்டுப் பாருங்கள். எகிப்தியர்களையும் ஈரானியர்களையும் ஒத்திருப்பார்கள்.


விடுதலை சிறுத்தை கட்சியினரும் திராவிட இயக்கத்தினரும் இஸ்லாமியர்களோடு ஒத்திசைந்து போவதற்கு காரணம் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால்தான்.




நாம் தான் பழகிக் கொள்ள வேண்டும்.... :-(

 உபி ஃபெரோஸாபாத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை கூட்டாக பாலியலாக துன்புறுத்தி கொன்றுள்ளார்கள். கொன்றவர்கள் பெயர் மணிஷ் யாதவ், சோபாலி யாதவ், கவுரவ். இம்மூவரையும் காவல் துறை கைது செய்துள்ளது.


தகவல் உதவி

நியூஸ் 18

24-10-2020


ராம ராஜ்யத்தில்  இது போன்ற சம்பவங்கள் இனி சர்வ சாதாரணமாக நடைபெறும். நாம் தான் பழகிக் கொள்ள வேண்டும்.... :-(

இன்னிசை ராணி

 இன்னிசை ராணி

==================
ஒரு காலத்தில் இந்தப் பெண்மணியின் இனிமையான குரல் ஒலிக்காத இஸ்லாமியர்களின் வீடே கிடையாது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம். இவரது பாடல்கள் எல்லோருடைய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது. இதமான குரல். இனிமையான சாரீரம். பண்ணிசையில் இலகுவான ஏற்ற இறக்கம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும் இது கே.ராணி உடைய குரல் என்று எளிதில் கண்டுபிடித்துச் சொல்லி விடலாம்.
நாகூர் இசைமுரசு இ.எம்.ஹனிபாவுடன் இப்பெண்மணி இணைந்து பாடிய பாடல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அத்தனையும் முத்துக்கள்.
இப்பாடல்களில் புலவர் ஆபிதீன் காக்கா, கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்களுடைய எழுத்தாற்றல் அதற்கு துணை நின்றது.
இசைமுரசு நாகூர் ஹனிபா எத்தனை எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் பாடியிருந்தாலும் தொடக்க காலத்தில் அவர் கே. ராணியுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு நிகரில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இசை ஞானத்தில் இருவருக்கிடையிலும் நல்ல புரிதல்கள் இருந்தன. டி.எம்..எஸ்ஸுக்கு இணையான ஜோடி பி.சுசீலா போன்று, முஹம்மது ரஃபிக்கு இணையான ஜோடி லதா மங்கேஷ்கர் போன்று, இஸ்லாமியப் பாடல்களுக்கு நாகூர் ஹனிபா - கே.ராணி ஜோடி என்ற அளவில் சிலாகித்து பேசப்பட்டது.
இன்று, இசைமுரசு நாகூர் ஹனிபா, கே.ராணி இருவருமே நம்மிடையே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னிசை என்றென்றும் நம் காதுகளில் தேனாய் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.
கே.ராணி பாடிய கீழ்க்கண்ட இஸ்லாமியப் பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் பசுமரத்தாணியாய் நம் மனதில் நீங்காது நிலைத்திருக்கும்.
அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா !
அறிவு தீபம் ஏற்றி வைத்த முஹம்மதே யா முஸ்தஃபா !
**********************************************************
திருமறையின் அருள்மறையில் விளைந்திருப்பதென்ன?-அறிவு
இறைத்தூதர் நபி பொன்மொழியில் பொதிந்திருப்பதென்ன-அன்பு
***********************************************************
ஓதுவோம் வாருங்கள் !
லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க
**************************************************************
நெஞ்சிலே வாழ்கின்றவர் ! நேர்வழி காட்டுபவர் !
நானிலம் போற்றுபவர் ! நீதர் நபியாம் நாயகர் !
***************************************************************
தீனோரே நியாயமா மாறலாமா !
தூதர் நபி போதனையை மீறலாமா ! உள்ளம் சோரலாமா !
****************************************************************
வாழ வாழ நல்ல வழிகள் உண்டு ! நபி வழங்கிய நெறிகளிலே !
வாரி வாரி தந்த வைரம் உண்டு ! அவர் வாய்மலர் மொழிகளிலே !
*****************************************************************
எல்லாம் வல்ல ஏகன் நீயே ! இணையில்லாத அல்லாஹ் நீயே !
என்றும் புகழ்வோமே அல்ஹம்துலில்லாஹ் !!
******************************************************************
அருள் மேவும் ஆண்டவனே ! அன்புடையை காவலனே !
இருள் நீக்கும் தூயவனே ! இணையில்லாத அல்லாஹ்வே !
********************************************************************
தீன் கொடி நாட்டிய தேவா ! - இறைத்
தூதரே யா முஸ்தபா !
********************************************************************
பாலைவனம் தாண்டி போகலாமே நாம் !
புவிபோற்றும் மதினா நகராளும் நபியை நாம் !
பண்போடு சென்று காணலாம் !!
*********************************************************************
எல்லா உலகும் ஏகமாய் ஆளும் இணையற்ற அல்லாஹ்வே !
வல்லமை வாய்ந்த உன்னிடம் நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம் !
*********************************************************************
மக்கள் யாவரும் ஒன்றே குலமெனும் மார்க்கம் வந்தது யாராலே?
மக்காவென்னும் நகரம் தந்த மாந்தர் திலகம் நபியாலே !
**********************************************************************
இன்ப வாழ்வு பொங்கிட வேண்டும் !
ஏழை எளியோர் உயர்ந்திட வேண்டும் !
அன்பு எங்கும் பரவிட வேண்டும் !
யா அல்லாஹ் ! யா அல்லாஹ் !
கருணை செய்வாய் !!
***********************************************************************
இன்று வந்து நாளை போகும் நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய் உலகிலே?
************************************************************************
இஸ்லாமியப் பாடல்கள் மாத்திரமே இவர் பாடியிருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவருடைய சாதனைகளின் மறுபக்கம் சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது என் கருத்து. பி.சுசிலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரியைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இவரை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.
வெறும் எட்டே வயது நிரம்பிய சிறுமியொருத்தி திரைப்படங்களில் பின்னணி பாடி, வானளாவிய புகழைப் பெற்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சிறுமுது திறனாளியாக (Child Prodigy), குழந்தை மேதையாக இவர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அக்காலத்தில் வைஜயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சி பெரிய அரங்குகளில் நடைபெறும். நிகழ்ச்சிக்கிடையில் அவர் உடைமாற்றிக் கொண்டு வர சற்று நேரம் பிடிக்கும். அந்த இடைவெளி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு 5 வயது குழந்தையாக, அருமையாக பாடக்கூடிய திறன் படைத்திருந்த சிறுமி ராணியை மேடையில் ஏற்றி பிரபலமான பாடல்களை பாட வைப்பார்கள். கேள்வி ஞானத்தை வைத்து, கேட்டுப் பழகி, திறமையை வளர்த்துக் கொண்ட சிறுமி ராணியின் பிசிறில்லாத லாவகமான குரல்வளம் பலத்த கரகோஷத்தை அள்ளித் தரும்; அரங்கத்தையே அதிர வைக்கும்.
நாட்டிய நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே குழந்தை ராணி தூங்கிவிடுவாளாம். அவளை வைஜயந்திமாலாவும் அவருடைய பாட்டி யதுகிரி அம்மாளும் அவளை காரில் எற்றிக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பார்களாம். ஒரு பேட்டியில் அவரே இதைச் சொல்லியிருக்கிறார்.
ஒருநாள் வைஜயந்திமாலாவின் நடன நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தபோது அதைக் கண்டு களிக்க இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் வந்திருக்கிறார். சிறுமி ராணியின் திறமை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி போயிருக்கிறார். .
அடுத்த நாள் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு ராணியின் வீட்டுக்கே வந்துவிட்டார். தமிழிலும், தெலுங்கிலும் ஒருசேர வெளிவந்த “தேவதாஸ்” திரைப்படத்தில் பாட வைத்தார். தேவதாஸ் படம் வெளிவருவதற்கு நீண்ட நாட்கள் பிடித்ததால், ராணி பின்னணி பாடியிருந்த மற்ற மற்ற படங்கள் முதலில் வெளிவந்தன.
1943-ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது எட்டாவது வயதிலேயே ரூபாவதி (1951) , சிங்காரி (1951) போன்ற தெலுங்கு சினிமாவில் பாடத் தொடங்கிவிட்டார்.
இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டுச் சென்ற படம் “தேவதாஸ்” என்பதில் சந்தேகமில்லை.
தேவதாஸ் படத்தில் இவர் பாடிய
//எல்லாம் மாயை தானா? - பேதை
எண்ணம் யாவும் வீணா?
ஏழை எந்தன் வாழ்வில் - இனி
இன்பம் காண்பேனோ?”//
என்ற சோகம் பிழியும் பாடல் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ ஆகி இவருக்கு வானளாவிய புகழைத் தேடித் தந்தது தெலுங்கு மொழியில் “அந்தா பிராந்தியேனா” என்று தொடங்கும் இவர் பாடிய இதே பாடலும் மிகவும் பிரபலமானது,
‘தேவதாஸ்’ படத்தில் கண்டசாலாவுடன் இவர் பாடிய “உறவும் இல்லை பகையும் இல்லை” என்ற பாடல், தெலுங்கில் “செலிய லேது செலிமி லேது” என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ராணிக்கு தாய்மொழி தமிழும் கிடையாது; தெலுங்கும் கிடையாது. இவர், கான்பூரிலிருந்து தென்னாட்டில் குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா கிஷன் சிங் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர். பல இடத்திலும் அவருக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.
ராணிக்கு மொழி எந்தக் காலத்திலும் ஒரு தடைக்கல்லாக இருந்தது கிடையாது. ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிய இவருடைய தந்தை பல இடங்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்ததால், பல மொழிகளையும் கற்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிட்டியது. சிறுவயது முதற்கொண்டே கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி மிகுதியாக இருந்ததால், அந்தந்த மொழிக்கு ஏற்றவாறு உச்சரிப்பை அட்சர சுத்தமாக பாடக் கற்றுக் கொண்டார். நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்களில் அரபிமொழி உச்சரிப்பு இவரிடத்தில் அம்சமாக இருப்பதை நாம் நன்றாகவே உணர முடியும்.
இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்ல, பற்பல திராவிட முன்னேற்றக் கழக கொள்கைப் பாடல்கள் நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடியுள்ளார். ‘வாழ்க திராவிட நாடு’, ‘அன்னை மொழி காத்து நிற்கும் அண்ணா வாழ்கவே’ உள்ளிட்ட தி.மு.க. கொள்கை பாடல்களும் ராணியின் குரலில் ஒலிப்பதிவாகி உள்ளன.
நாகூர் ஹனிபா நாகூரில் சொந்த வீடு கட்டி அதன் திறப்புவிழாவிற்கு அறிஞர் அண்ணாவை அழைத்தபோது கே.ராணியுடைய பாட்டுக் கச்சேரியைத்தான் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி, வங்காளமொழி, சிங்களம் என ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் உஸ்பெஸ்கிஸ்தான் மொழியைக் கூட இவர் விட்டுவைக்கவில்லை.
500-க்கும் மேலான பாடல்கள் இவர் பாடியிருக்கிறார். இலங்கை தேசிய கீதம் இவர் பாடியது
அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தில்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் கர்மவீரர் காமராஜர் இவருக்கு “இன்னிசை ராணி” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார். ராஜ்கபூரின் ‘சங்கம்’ படப்பாடலை அந்த மேடையில் பாடியபோது, ராஜ்கபூர் மனம் நெகிழ்ந்து இவர் குரல்வளத்தைப் புகழ்ந்தார்.
‘பாரதரத்னா’ விருது பெற்ற புகழ்ப்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக கர்னாடக அரசு இவரை தனி விமானத்தில் (Chartered Flight) ஏற்றி அனுப்பி வைத்தது.
“நல்ல சுருதி சுத்தமும் வார்த்தை சுத்தமும் உள்ள பாட்டு அவளுடையது, ரொம்ப நல்லா பாடுவா. அனுபவிச்சு பாடுவா, நல்ல ஞானம் உள்ளவ, அன்போடு பழக்க் கூடிய ஜீவன். நான் நிறைஞ்ச மனசோட நினைச்சுப் பார்க்கிற பாடகி” என்று பாடகர் டி.எம்.எஸ். செளந்தர்ராஜன் இவருக்கு புகழாரம் சூட்டினார்.
கே.ராணி அன்றைய காலத்தில் புகழ் உச்சியிலிருந்த அத்தனை இசையமைப்பாளர்களின் இசையிலும், அத்தனை பிரபல பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படத்தில் அவர் பாடியுள்ள படங்களை பட்டியலிட்டால் இங்கு பக்கங்கள் காணாது.
சுஜாதா (1953), செடா சுலங் (1955), சிரிமலி (1959) மெலிகொலுப்பு, போன்ற சிங்கள படங்களில் இவர் பின்னணிக் குரல் பாடியிருக்கிறார்.
கன்னட மொழி படங்கள்:
பாக்யோதயா 1956, ரத்னகிரி ரகசியா, ஸ்கூல் மாஸ்டர் (1958), காலி கோபுரா (1962) , ரத்ன மஞ்சரி (1962) லவகுசா (1963),
மலையாள மொழி படங்கள்:
அச்சனும் மகளும் (1957) வேலுத்தம்பி தாளாவா (1962) கலாயும் காமினியும் (1963)
தமிழில் இவர் பாடிய பாடல்களைக் கணக்கிட்டால் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றன.
சின்னதுரை, தர்ம தேவதை, கல்யாணம் பண்ணிப் பார், கல்யாணி, வளையாபதி, சண்டிராணி, குமாஸ்தா, ஜெனோவா, கண்கள், மாமியார், பெற்ற தாய்,3 திரும்பிப்பார், வஞ்சம், கூண்டுக்கிளி, மா கோபி, நால்வர், நல்ல காலம், பணம்படுத்தும் பாடு, ரத்த பாசம், சுகம் எங்கே, ஆசை அண்ணா அருமை தம்பி, குணசுந்தரி, கதாநாயகி, முதல் தேதி, போர்ட்டர் கந்தன் , அமர கீதம், இல்லறமே இன்பம், காலம் மாறிப் போச்சு, மர்ம வீரன், சர்க்கஸ் சுந்தரி, மறுமலர்ச்சி, மாய மோகினி, நன்னம்பிக்கை, ஒன்றே குலம், பாசவலை, காவேரி, படித்த பெண், பிரேம பாசம், சந்தோஷம், அலாவுத்தீனும் அற்புத விளக்கும், எங்கள் விட்டு மஹாலக்ஷ்மி, மகதல நாட்டு மேரி, மாயா பஜார், தங்கமலை ரகசியம், அரசாளப் பிறந்தவன், பூலோக ரம்பை, எங்கள் குடும்பம் பெருசு, காத்தவராயன், மாலையிட்ட மங்கை, பானை பிடித்தவள் பாக்கியசாலி, சம்பூர்ண ராமாயணம், சாரங்கதாரா, அருமை மகள் அபிராமி, அழகர் மலைக்கள்வன், பால நாகம்மா, தெய்வ பலம், மன்னன் மகள், நல தமயந்தி, பாண்டித்தேவன் புதுமைப் பெண், சுமங்கலி, ஆளுக்கொரு வீடு , சவுக்கடி சந்திரகாந்தா, எல்லோரும் இந்நாட்டு மன்னர், குழந்தைகள் கண்ட குடியரசு, மங்கைக்கு மாங்கல்யமே பிரதானம், இந்திரா என் செல்வம், லவகுசா, வழி பிறந்தது,ஹரிச்சந்திரா, சந்திப்பு (வெளிவரவில்லை)
1965 ஆண்டுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு இசைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார். இக்கால கட்டத்தில் அவர் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் இணைந்து பாடிய பாடல்கள் யாவையுமே இஸ்லாமிய மக்கள் அல்லாது பிறசமயத்தார்களும் விரும்பிக் கேட்டனர்.
இவரது கணவரின் பெயர் சீதா ராமி ரெட்டி. முன்பே இறந்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு (2018) இந்த ‘இன்னிசை ராணி’ தனது 75வது வயதில் மரணமுற்றார். ஹைதரபாத்தில் இவரது மகள் விஜயாவின் வீட்டில் இவருடைய உயிர் பிரிந்தது.
தமிழகத்தில் எந்த ஊடகங்களும் இவரது மரணச் செய்தியை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. தெலுங்கு மற்றும் சிங்களமொழி ஊடகங்கள் மாத்திரமே இவரை நினைவு கூர்ந்து இவரது சாதனைகளைப் பகிர்ந்தன. ஒரு சில தமிழ்ப் பத்திரிக்கைகள் ஓரத்தில் கட்டம் கட்டி சின்னதாக செய்தி வெளியிட்டிருந்தன..
காரணம் இவருடைய மரணச் செய்தி வனிதா விஜயகுமாரின் விவாகரத்து செய்தி போல அவ்வளவு முக்கியமான செய்தியாக அவர்கள் கருதவில்லை.

அதுக்குப்பெயர்தான் சங்கி டிசைன்..

 பெண்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் இழிவு படுத்தும் 'மனு' குறித்து அவமானமில்லை.. கோபமில்லை..

ஆனால்,
அந்த 'மனு' பெண்களை எப்படியெல்லாம் இழிவு படுத்துகிறது என்று சொன்ன திருமா மேல கோபம் வருதுனா.. அதுக்குப்பெயர்தான் சங்கி டிசைன்..



Tuesday, October 20, 2020

"இறைநேச செல்வர் ஔரங்கசீப்..."

 #கொள்கையில் பெரியாரின் பேரன் #சகோதரர் மணிகண்டன் அவர்களின் பதிவு:

"இறைநேச செல்வர் ஔரங்கசீப்..."
இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் அவர்களின் உயிலில்...
நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம்...
நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் "ஆய்பேகா " என்னும் நபரின் வசம் உள்ளன!

அதைக்கொண்டு... என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்!

என் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள்...
என் வசமுள்ளன!

நான் இறக்கும் அன்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்து விடுங்கள்!

என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள்! இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்!

என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்!

*அல்லாஹு அக்பர்...!!!!
- கொடிநகரான் (செய்தி)

டெல்லியை 48 ஆண்டுகள் ஆண்ட பேரரசன்...
எனக்கு பிடித்த சிறந்த அரசியல் தலைமை வழிகாட்டி!

இப்படி ஒருவன் நேர்மையாக வாழ்ந்திருக்கிறான்...

மக்கள் பணத்தை நெருப்பாக நினைத்து, அவற்றை
தனக்காக பயன்படுத்தாது , அவற்றைத் தொடாமலேயே வாழ்ந்திருக்கிறான்... என்று நினைக்கும்போது‌..‌‌.

இவர் வாழ்ந்த நாட்டில் நாளும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போதே... எவ்வளவு கர்வமாக இருக்கிறது தெரியுமா?!?

என் கர்வம்...
என் திமிர்...
இது போன்ற சிறந்த ஆளுமைகளை பின்பற்றுவதே!

வாழ்க என் வழிகாட்டிகள்!

அன்புடன்,
மணிகண்டன்
நன்றி: Manikandan ayyappan




Tuesday, October 13, 2020

அடிப்பரும் ராம பக்தர்..... அடி வாங்குபவரும் ராம பக்தர்...

 அடிப்பரும் ராம பக்தர்..... அடி வாங்குபவரும் ராம பக்தர்..... உபியில் ராம ராஜ்யம் தொடங்கி விட்டது... :-(




Sunday, October 11, 2020

தாய்மதத்திற்கு வந்து உள்ளோம்.

 நாங்கள் மதம் மாறவில்லை.... தாய்மதத்திற்கு வந்து உள்ளோம்.


இஸ்லாத்தை ஏற்ற சகோதரி