Followers

Saturday, October 03, 2020

மார்க்கம் அறிந்த ஒரு தாயால்தான் சாத்தியப்படும்.

 இந்த சிறுவயதில் எத்தனை அழகாக தன்னை படைத்த இறைவனை விளங்கி வைத்துள்ளான் இந்த சிறுவன்.

இவை எல்லாம் மார்க்கம் அறிந்த ஒரு தாயால்தான் சாத்தியப்படும்.
நமது குழந்தைகளையும் இவ்வாறு சிறு வயதிலேயே ஏகத்துவத்தை போதித்து வளர்ப்போம்.



3 comments:

Dr.Anburaj said...


1500 + ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ். ஏதோ நேற்று எழுதியது போல இருப்பது ஆச்சரியம்.

அற்புத திருவந்தாதி - காணாமலே காதல்
காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.
நமக்கு வரப் போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்கும்.
பார்பதற்கு முன்னாலேயே நாம் அவர்கள் வசம் காதல் வயப் படுகிறோம்.

ஒரு வேளை அவர்களை நேரில் பார்த்து விட்டால், "அட, இந்த பொண்ணுக்காகத்தான் / ஆணுக்காகத்தான் இத்தனை நாளாய் கனவு கண்டு கொண்டு இருந்தேன்" என்று சட்டென்று காதல் பூ மலரும்.
இங்கே அப்படி இறைவன் மேல் காதல் கொண்ட காரைக் கால் அம்மையார் சொல்கிறார்
அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’

ரொம்ப எளிய பாடல்.

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.

இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.

ஒன்று, இன்னும் உன் திரு உருவை காண்கிலேன்.

மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால், உன் திரு உருவத்தை தனியாகக் காணேன்

என்னிடம், "உன்னுடைய பிரான் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.

(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)


1500 + ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ். ஏதோ நேற்று எழுதியது போல இருப்பது ஆச்சரியம்.

Dr.Anburaj said...

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை

கும்பகர்ணனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமா ? கிண்டலும் கேலிப் பேச்சும் அவனுக்கு வருமா ? வரும் என்று கம்பன் காட்டுகிறான்.

யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன், இராவணனிடம் சொல்கிறான்.


"இராவணா, நமக்கு என்ன குறை இருக்கிறது ? காலினால் கடலை கடந்த அனுமன் இருக்கிறான், சிறை விட்டு செல்லாத சீதை இருக்கிறாள், வாலியின் மார்பு துளைத்த இராமனின் அம்புகள் இருக்கின்றன ? அவற்றை வாங்க நாம் இருக்கிறோம் ...நமக்கு என்ன குறை?"
----------------------------------------------------------
'காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?
----------------------------------------------------------

காலினின் = காலால் உந்தி

கருங் கடல் = கரிய கடலை

கடந்த = கடந்த, தாண்டி வந்த

காற்றது போல்வன = காற்றைப் போன்ற

குரங்கு உள = குரங்கு (அனுமன்) உள்ளான்

சீதை போகிலள் = சிறை விட்டுப் போகாத சீதை நம்மிடம் இருக்கிறாள்

வாலியை = வாலியை

உரம் கிழித்து = வலிமையை கிழித்து

ஏக வல்லன = போக வல்ல

கோல் உள; = அம்புகள் உள்ளன (இராமனிடம்)

யாம் உளேம்; = அவற்றை மார்பில் வாங்க நாம் இருக்கிறோம்

குறை உண்டாகுமோ? = நமக்கு வேறு குறை என்ன இருக்கிறது ?

Dr.Anburaj said...

திரு மந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும்.

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம்.

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது.

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே

ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்தால், இறப்பே கிடையாது.

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

ஒன்றே குலம் என்பதன் மூலம் உடல் அளவில் எல்லோரும் ஒன்று என்றார்.

ஒருவனே தேவன் என்பதன் மூலம் மனதளவிலும் மனிதர்களுக்கு இடையில் எந்தப் பிரிவும் கூடாது என்றார்

பிரிவுகளை அகற்றி எப்போதும் எல்லோருக்கும் நல்லதையே சிந்தித்து வந்தால் மரணமில்லா பெறு வாழ்வு பெறலாம்