Followers

Tuesday, October 20, 2020

"இறைநேச செல்வர் ஔரங்கசீப்..."

 #கொள்கையில் பெரியாரின் பேரன் #சகோதரர் மணிகண்டன் அவர்களின் பதிவு:

"இறைநேச செல்வர் ஔரங்கசீப்..."
இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் அவர்களின் உயிலில்...
நான் என் கையால் செய்து விற்ற தொப்பிகளுக்கான பணம்...
நான்கு ரூபாய்களும் இரண்டு அனாக்களும் "ஆய்பேகா " என்னும் நபரின் வசம் உள்ளன!

அதைக்கொண்டு... என்னுடல் மீது போர்த்தவேண்டிய கஃபன் துணியை வாங்கிக்கொள்ளுங்கள்!

என் கையால் திருக்குர்ஆனை எழுத்துப்பிரதி எடுத்து விற்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற‌ முன்னூற்று ஐந்து ரூபாய்கள்...
என் வசமுள்ளன!

நான் இறக்கும் அன்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்து விடுங்கள்!

என் தலையை எதைக்கொண்டும் மூடாமல் திறந்து வைத்துவிடுங்கள்! இறைவன் எனக்கு கருணை காட்ட அது உதவும்!

என் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் ஆடம்பரங்கள் ஏதுமின்றி அடக்கம் செய்யுங்கள்!

*அல்லாஹு அக்பர்...!!!!
- கொடிநகரான் (செய்தி)

டெல்லியை 48 ஆண்டுகள் ஆண்ட பேரரசன்...
எனக்கு பிடித்த சிறந்த அரசியல் தலைமை வழிகாட்டி!

இப்படி ஒருவன் நேர்மையாக வாழ்ந்திருக்கிறான்...

மக்கள் பணத்தை நெருப்பாக நினைத்து, அவற்றை
தனக்காக பயன்படுத்தாது , அவற்றைத் தொடாமலேயே வாழ்ந்திருக்கிறான்... என்று நினைக்கும்போது‌..‌‌.

இவர் வாழ்ந்த நாட்டில் நாளும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போதே... எவ்வளவு கர்வமாக இருக்கிறது தெரியுமா?!?

என் கர்வம்...
என் திமிர்...
இது போன்ற சிறந்த ஆளுமைகளை பின்பற்றுவதே!

வாழ்க என் வழிகாட்டிகள்!

அன்புடன்,
மணிகண்டன்
நன்றி: Manikandan ayyappan

7 comments:

Dr.Anburaj said...

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார் ஜீவித் குமார் ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

ஜீவித் குமார் இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஜீவித் குமாருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீவித் குமாரின் தந்தை ஒரு ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார். தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்பவர்.

வெற்றியின் ரகசியம் குறித்து என்ன சொல்கிறார் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஸ்ரீஜன்?

ஸ்ரீஜன்
நீட் நுழைவுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர், இரண்டாவது முயற்சியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீஜன், "எனது ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயில். எனது தந்தை சொந்தமாக ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார். எனது அம்மாவிற்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. ஆனால், அவரால் மருத்துவம் படிக்க முடியவில்லை. என்னை மருத்துவராக்க வேண்டும் என எனது பெற்றோர் ஆசைப்பட்டனர். எனக்கும் உயிரியல் பாடங்களில் தான் ஆர்வம் அதிகம். 2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் நீட் தேர்வுக்கு தயார் செய்தேன்."

"சென்ற ஆண்டு 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மனம்தளராமல் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்தேன். எனக்காக என் அம்மா சொந்த ஊரிலிருந்து நாமக்கல் வந்து என்னை பார்த்துக்கொண்டார்."

"இந்த ஆண்டு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்காக எனக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கையளித்த எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த பாடத்தையும் வெறுப்பாகவோ, சுமையாகவோ நினைத்து படிக்கக்கூடாது. ஆர்வத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பயிற்சிக்கும், மனம்தளராத எனது முயற்சிக்கும் பலன் கிடைத்ததாக இப்போது உணர்கிறேன்" என கூறினார்.

தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினர் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹனபிரபா 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தேசிய அளிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவிகள் பட்டியலில் இவர் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். தேசிய அளவிலான மொத்த பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

ஆம், அரேபிய மதத்தால் இப்படிப்பட்ட இறைநேசர்களைத்தான் உருவாக்க முடியும்.

தனது மகளை மத்தியஸ்தராக நியமித்த ஷாஜகான், முகலாய பேரரசை ஐந்தாக பிரித்து நான்கு மகன்களுக்கும் தலா ஒரு பகுதியையும், எஞ்சிய ஐந்தாவது பாகத்தை ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் கொடுக்கவேண்டும் என்று சமாதானம் பேசினார். ஆனால் ஒளரங்கசீப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தாரா ஷிகோஹ்வின் நம்பிக்கைக்கு உரிய மாலிக் ஜீவன் என்பவரைக் கொண்டே 1659ஆம் ஆண்டில் அண்ணனைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தார் ஒளரங்கசீப். தாரா ஷிகோஹ் மற்றும் அவரது 14 வயது மகன் சிஃபிர் ஷுகோஹை சங்கிலியில் பிணைத்து அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட யானையில் அமரவைத்து டில்லியின் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்தார்.

தந்தையின் சிறையில்...

தப்பித்து ஓட முயன்றால், அவரது தலையை வெட்டி விடுவதற்காக கையில் வாளுடன் அவர்களை ஒரு சிப்பாய் பின் தொடர்ந்தார். அந்த சமயத்தில் இந்திய பயணம் வந்திருந்த இத்தாலிய வரலாற்றாசிரியர் நிகோலாய் மானுசி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். "தாராவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தினத்தன்று ஒளரங்கசீப் அவரிடம், 'நம் இருவரின் நிலையும் மாறி, நீ இப்போது அரசனாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு கேலியாக பதிலளித்த தாரா, உன்னைக் கொன்று உடலை நான்கு துண்டாக வெட்டி, டெல்லியின் நான்கு பிரதான வாயில்களின் கதவுகளில் தொங்கவிடுவேன்" என்று பதிலளித்தார்".

Dr.Anburaj said...

ஹுமாயூன் கல்லறைக்கு அருகில் அண்ணன் தாராவின் உடலை அடக்கம் செய்தார் ஒளரங்கசீப். அண்ணனுடன் பகைமை பாராட்டினாலும், பிறகு தனது மகள் ஜப்தாதுன்னிசாவை தாராவின் மகன் சிஃபிர் ஷுகோஹ்க்கு திருமணம் செய்து வைத்தார் ஔரங்கசீப்.

ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜகானின் இறுதி காலத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் ஆக்ரா கோட்டையில் சிறையில் வைத்திருந்த சமயத்தில் அவருடைய மூத்த மகள் ஜஹானாரா தினமும் அங்கு விளக்கு ஏற்றும் பணியை செய்யுமாறு பணித்திருந்தார்.

தந்தையை சிறையில் வைத்திருந்த ஒளரங்கசீப்பை, இந்தியாவின் நேர்மையான ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா மசூதியின் ஷரீஃப், இந்திய அரசர் என்ற முறையில் அவர் அனுப்பிய பொருட்களை ஏற்றுக் கொள்ள பல ஆண்டுகள்வரை நிராகரித்துவிட்டார். இது ஒளரங்கசீப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

Dr.Anburaj said...

மற்றொரு ஓவியம் முகலாய பேரரசர் எந்தளவுக்கு இந்து நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அந்த ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீர் மேல்சட்டை அணியாமல், வெறும் கோவணம் போல் ஒன்றைக் கட்டிக் கொண்டு பத்மாசனத்தில் ஒரு இந்து துறவியைப் போல் அமர்ந்துள்ளார். இதைப் பற்றி சொல்லும் போது வரலாற்றாசிரியர் எப்பா கோச், “ஒரு இசுலாமிய மன்னனைக் குறித்த கற்பனை எந்தளவுக்கு இந்தியத்தன்மையோடு (தீவிரமானதும் கூட) இருக்க முடியும் என்பதற்கு இந்த ஓவியமே உச்சபட்ச அடையாளம்” என்கிறார்.

Dr.Anburaj said...

குடும்பம்:

மனைவிகள்/ முன்னாள் மனைவிகள்: ஒளரங்காபாடி மஹால், தில்ராஸ் பானு பேகம், ஹிரா பாய் ஜைனாபாதி மஹால், நவாப் ராஜ் பாய் பேகம், உதய்புரி மஹால்
தந்தை: ஷாஜகான்
தாய்: மும்தாஸ் மஹால்
உடன் பிறந்தவர்கள்: தாரா ஷிகோ, முராத் பக்ஷ், ரோஷனாரா பேகம், ஷா சுஜா.
குழந்தைகள்: பதர் உன் நிசா, பகதூர் ஷா நான், மெஹர் உன் நிசா, முஹம்மது அசாம் ஷா, முஹம்மது காம் பக்ஷ், சுல்தான் முஹம்மது அக்பர், ஜபாத் உன் நிசா, ஜெப் உன் நிசா, ஜினாத் உன் நிசா, ஜுபாத் அன் நிசா.
பேரரசர் ஷாஜகான் 1657 இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதனால் தனது மூத்த சகோதரர் தாரோ சிகோ பேரரசை கைபற்றக்கூடும் என ஒளரங்கசீப் பயந்தார்.

இதனால் இந்த சகோதர்களிடையே கடுமையான போர் தொடங்கியது. ஆனால் இறுதியில் ஒளரங்கசீப்பே அந்த போரில் வென்றார். அவர் ஷாஜகானை ஆக்ராவில் சிறை வைத்தார். மேலும் ஆட்சியை பற்றும் வெறியில் தனது சகோதரர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் தன் சொந்த பிள்ளையையும் கூட ஒளரங்கசீப் கொன்றார்.

இப்படியாக அனைத்து போட்டிகளையும் கொன்றப்பின் அவர் ஒருவரே மொத்த முகலாய பேரரசின் பேரரசர் ஆனார். டெல்லி செங்கோட்டையில் 1659 ஜூன் 13 அன்று அவருக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டது.

மதப்பிரிவினை

மரபு வழி சன்னி முஸ்லீமான ஒளரங்கசீப் தனது முன்னோர்களின் மதத்தை வளர்க்க எண்ணினார். இதனால் தேசத்தை மொத்தமாக இஸ்லாமிய பேரரசாக மாற்ற எண்ணினார். இதனால் இந்து பண்டிகைகளுக்கு தடை விதித்தார்.

ஒரு ஐரோப்பிய தொழிற்சாலைக்கு அருகே அப்போது கிருஸ்துவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒளரங்கசீப் அந்த குடியேற்றங்களை இடித்து தரைமட்டமாக்கினார்.

சீக்கிய தலைவரான குரு தேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால் அவரை தூக்கில் ஏற்றி கொன்றார்.

வரிக் கொடுமை

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அதிகமான வரிகளை அமல்படுத்தினார். அரசாங்க வேலைகளில் இருந்து இந்துக்களை நீக்கம் செய்தார். இவர் காலத்தில் பலர் இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாதவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது.

தனது பேரரசை விரிவுப்படுத்துவதில் அவர் உறுதியாக இருந்தார். ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் முகலாய அரசு தொடர்ந்து போர்களில் ஈடுப்பட்டது. அஹ்மத் நகர், சுல்தானேட்டை தனது நாட்டோடு இணைத்தார் அது மட்டுமின்றி பிஜாபூரில் உள்ள ஷாஜிஸ் என்னும் பகுதியையும், கோல் கொண்டாவில் உள்ள குத்பாஹிஸையும் கைப்பற்றினார்.

vara vijay said...

I dont feel,any thing like that. If he is a true muslim then he should have demolished Taj mahal. Because prophet and Allah had told that none of the resting place should not be rised Above the ground level. Even for himself he told to do same . But pseudomuslims like suvanapriyan will never do this . He will always beat arround the bush. He will never follow islam properly but he will acquse oghers as a kaffir.