மற்றவர் பணத்துக்கு ஆசைப்படாத நூர் கான்!
துபாயில் பயணிகள் பேருந்துக்கு ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த நூர் கான். இவர் தனது பணி முடிந்து செல்லும் போது பேரூந்தில் 250000 திர்ஹம் பணப் பை ஒன்றை கண்டெடுக்கிறார். அதனை உடனே தனது மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு நேர்மையுடன் ஒப்படைக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட மேலதிகாரி உரிய விலாசத்தை தொடர்பு கொண்டு பணத்தின் சொந்தக்காரரிடம் பணப் பை ஒப்படைக்கப்படுகிறது.
இவரது நேர்மையை பாராட்டி அல் தய்யார் குரூப் அவரை கவுரவித்துள்ளது. நமது நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை விரும்பியிருந்தால் நூர் கானே தனதாக்கிக் கொண்டிருக்கலாம். இறைவனுக்கு பயந்து நாளை மறுமையில் இதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற பயத்தினாலேயே உரியவரிடம் பணத்தை சேர்ப்பித்துள்ளார் நூர் கான்.
1 comment:
மேலும் வலுவாக்கப்படுமா தேசிய அறக்கட்டளை?
அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தேசிய அறக்கட்டளை (National Trust) செய்திருக்கும் காரியங்கள் அளப்பரியவை. முதன்மையாக, இந்த அறக்கட்டளையானது அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கானது. இதில் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிச நிலையாளர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையோர் போன்றவர்கள் இந்தக் குடைக்குள் வருவார்கள். அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் அனைவருக்கும் பொதுவான சிக்கல்கள் சில உண்டு: தகவல் தொடர்பின்மை - சிலரால் அறவே பேசவே முடியாது, பேசும் சிலராலும் நினைப்பதையெல்லாம் அடுத்தவருக்குச் சரியாகப் புரிய வைக்கும் அளவு தெளிவாகப் பேசிவிட முடியாது, சமூகத்தில் கலந்து பழகும் தன்மைக் குறைவு, நடத்தைச் சிக்கல்கள், நரம்பியல் சிக்கல்கள் எனப் பட்டியல் நீளும். இதனால், இவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்களை நாம் ஓரளவு பேசியிருக்கிறோம். ஆனால், சட்டபூர்வமான சிக்கல்கள்?
எந்தவொரு சட்டபூர்வமான ஒப்பந்தம் அல்லது பத்திரம் என்றாலும் அதில் ‘இன்னாராகிய நான் என் சுயநினைவுடன் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுகிறேன்’ என்று முடியுமல்லவா, அப்படிச் சுயநினைவுடன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கும் இடத்தில் இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் இருப்பதில்லை. வங்கிக் கணக்கு தொடங்குவதிலிருந்து சொத்துப் பிரச்சினைகள், பல்வேறு முடிவுகள் எடுப்பதில் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் எனப் பிரச்சினைகளின் பட்டியல் பெரியது.
அறக்கட்டளையின் பங்களிப்புகள்
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இயல்பாகவே அவர்களின் பெற்றோர்தான் காப்பாளரும். எனவே, பிள்ளைகள் நலன் சார்ந்த முடிவுகளைப் பெற்றோர் தாமாகவே எடுக்க முடியும். ஒரு சராசரியான, நரம்பியல் சிக்கல்கள் ஏதுமில்லாத குழந்தை 18 வயது நிறைவடைந்ததுமே வளர்ச்சியடைந்த நபராக (Adult) அறியப்படுவார். தனக்கான முடிவுகளைத் தாமே எடுக்கும் சட்டபூர்வமான உரிமை அவருக்கு வந்துவிடுகிறது. அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடையவர்கள் ஆயுள் முழுமைக்கும் பெற்றோரோ அல்லது வேறு யாரேனும் காப்பாளராக இருந்தே ஆக வேண்டிய தேவை உள்ளது. இதைச் சட்டபூர்வமாகவும் பதிவுசெய்தாக வேண்டும். இப்படி சட்டபூர்வக் காப்பாளரை நியமிப்பதில் தேசிய அறக்கட்டளையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மாவட்டம்தோறும் உள்ளூர் குழு (Local Level Committee - LLC) ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் காப்பாளர் நியமனத்துக்கான விண்ணப்பங்களைப் பெறுவது, அவற்றைப் பற்றி விசாரித்து முடிவெடுத்து காப்பாளரை நியமிப்பது, காப்பாளரின் செயல்பாடுகளில் சந்தேகம் தோன்றினால் உடனடியாக அந்நியமனத்தை ரத்துசெய்வது போன்றவற்றை இந்த அறக்கட்டளை செய்துவருகிறது. இந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் இருப்பார். மாவட்ட அளவில் இந்தச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரும், மாற்றுத்திறனாளி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலதிகமாக மருத்துவர், வழக்கறிஞர், உளவியலாளர், மாவட்ட நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுவதுண்டு.
Post a Comment