சமூகஆசிரியர்..
சபரிமாலா
ஆஷூரா நோன்பில் என் துஆ உங்கள் சூழலில் உள்ள பெண்களுக்காக..
பெண்களை கண்ணியம் செய்யுங்கள்..பெண்களே..கண்ணியம் கொள்ளுங்கள்...
அரங்கம் நிறைந்திருந்தது...முழுதும் பெண்கள்..நிறைய மாணவிகள்.."நபிகள் காட்டிய பெண்ணியப்பாதை"என்ற பரப்புரை ஒன்னரை மணிநேரம் பேசினேன்..
அழுதோம்..சிரித்தார்கள்...மனம் உருகிச் சத்தியப்பிரமாணம் எடுத்தோம்..வரதட்சணை..அழகியல்..உடை..உணர்வு..மொபைல்..எதிர்பாலின ஈர்ப்பு..நபிகளாரின் தியாகம்...என்று பேசி நபிகளாரின் பரப்புரையை ஒவ்வொருவரும் வாழ்நாள்கடமையாக மேற்கொள்வது என்ற உறுதிப்பாட்டுடன் முடிவு செய்தோம்...மிகவும் மனநிறைவு பெண்பிள்ளைகளைச் சந்தத்ததில்..என் வாழ்நாளை இறைவனின் முன் அர்ப்பணித்து துஆ கேட்கிறேன்..அதில் ஒரு மாணவி செய்தி அனுப்பினாள்..உங்கள் பேச்சு என் இதயத்தை திருத்திவிட்டது..வழிகேட்டில் இருந்து விலகுகிறேன்..எத்தனை தவறு செய்துள்ளேன் என உணருகிறேன்..இனி நபிக்கு மாறு செய்ய மாட்டேன்..என்று அனுப்பியிருந்தாள்..
இதயம் நெகிழ்ந்து போனேன்..இதற்காக இக்குழந்தைகளின் நேர்வழிக்காக என்ன துயரத்தைத் தாங்கிக் கொண்டாவது ஓட வேண்டும் என்று வைரக்கியம் கொண்டேன்..இந்தத் தொண்டினைத் தலைமேல் போட்டுக் கொண்டு ஓடுகிற பயணத்தில் தான் எத்தனை எத்தனை அசிங்கப்படுகிறேன்.
.வார்த்தைகளால் பகிர்ந்துவிட முடியாத ரணம்..இறைவனைத்
தவிர நிம்மதி கொள்ளச் செய்ய யாரால் இயலும்?இரவு தூக்கம் வர மறுக்கிறது..எந்தெந்த இடத்தில் எந்தெந்த பெண் வழிகேட்டில் இருக்கிறாளோ?எந்தெந்த இடத்தில் எந்தெந்த பிள்ளைகள் காதல் என்ற பெயரில் சீர்கேட்டில் உள்ளார்களோ...
எந்தெந்த வீட்டில் எந்தெந்த பெண் கணவனால் கேவலப்படுத்தப்படுகிறாளோ? எப்படி அவர்களைச் சந்திப்பது?எப்படி மடைமாற்றம் செய்வது?என்ற அவர்களின் துயரம் என் துயரமாகிப் போனது..12 மணிக்கு உறங்கி 1மணிக்கு விழிப்பு வருகிறது..கண்முன்னால் பார்க்கக்கூடிய வழிகேடுகளைச் சரிசெய்ய திராணியற்றவளாய் இறைவனிடம் அழுது துஆ கேட்கிறேன்..என் பெண் சமூக்தைக் காப்பாற்று என்று...சீர்திருத்தப் பணிகளைச் செய்யும் போது அத்தனை அசிங்கப்படுகிறேன்...
"எடுத்தோம் கவிழ்த்தோம்" என்று முடிவெடுக்க முடியாது என்கிறது சமூகம்..பொறுமையாகஇருங்கள் என்கிறது விமர்சனங்கள்...
கண்ணில் மாணவிகள் தடம் புரள்வதைப் பார்த்துவிட்டு எனக்கென்ன என்று அமைதியாகக் கடந்து போனால் இறைவன் என்னைக் கேள்விக்கணக்கில் கேட்கும் போது என்ன பதில் உள்ளது என்னிடம்?நபிகளாரின் வாழ்க்கை என்னை மாற்றியது போல் என் துன்பங்களை மாற்றியது போல்..ஒவ்வொரு பெண்ணுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்...வலிக்கிறது என் தோழமைகளே...இப்படி உறங்காமல் இவர்களுக்காக துயர் கொள்கிற அழுகிற மனதைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்..
எழுத்தாளர்கள் ..பேச்சாளர்கள்..படைப்பாளர்கள் என்ற போர்வையில் நடக்கும் ஒன்றுகூடல்களும் விபச்சாரங்களும் எப்போது தடுக்கப்படும்?பணம் கொண்டவர்கள் படுக்கைகளைப் பலவாக்கி பல பெண்களை வழிகேட்டில் அழைத்துச் செல்லும் நரகத்தில் வாழ்கிறோமா?காசுக்காக..சூழ்நிலைக்காக..வறுமைக்காக..என்று பெண்கள் இந்த முடிவெடுத்தால்...நபிகளார் சொன்னது நினைவுக்கு வருகிறது.."நரகத்தில் நிறைய பெண்களைப் பார்த்தேன்"என்று..புர்கா என்ற உடையணிந்து கண்ணியமற்று நடக்கிற சில பெண்களையும் பார்க்கிறேன்..அவர்களை வெறுக்கவில்லை..அவர்களுக்காக அழுகிறேன்..
நரகநெருப்பில் தலைகுப்புறப் போடப்படுவார்களாமே..வன்கொடுமை ஒருபக்கம்..வழிகேடு ஒருபக்கம்...என்ன தீர்வோ?எப்போது தீர்வோ?இவர்களை மீட்பதற்காக நான் நோன்பு வைக்கிறேன்..
என் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் தோழமைகளே..இறைவனிடம் துஆ கேளுங்கள்..
அத்தனை பெண்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் உன் செய்தியைக் கொண்டு சேர்க்க என்னைக் கருவியாய் ஆக்குவாயாக...என்று துஆ கேட்கிறேன்...இந்த ஆஷூரா நோன்பில் பிர்அவ்ன் னிடம் இருந்து மூஸா நபியை இறைவன் காப்பாற்றியது போல பல ஆயிரம் பிர்அவ்ன் களிடம் இருந்து பெண்களை இறைவன் காப்பாற்றட்டும்..
பெண்களே...பெண்குழந்தைகளே..ஒன்றை நினைவில் வையுங்கள்..இறைவன் கொடுக்கிற கடினங்களை வறுமையை இந்த உலகில் மனமார ஏற்றுக் கொண்டால் மறுமையில் நாம் சுவனத்தில் இருப்போம்...தற்காலிகத் தீர்வாக வழிகேட்டில் சென்றால் மறுமையில் நரகத்தில்....
பெண்குழந்தைகளைப் பாதுகாக்க இது போன்ற கூட்ங்களைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பு செய்யுங்கள்..நான் உயிரை அர்ப்பணித்து பயணப்பட எந்நேரமும் தயாராக உள்ளேன்.. அனைவரும் தினமும் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக துஆ கேளுங்கள்...
இறைவன் பாதுகாக்கட்டும்
ஆமீன்..
No comments:
Post a Comment