Followers

Saturday, August 07, 2021

தனது வீட்டுப் பணியாளரின் பிறந்த நாளை கொண்டாடும் சவுதி குடும்பம்.

 தனது வீட்டுப் பணியாளரின் பிறந்த நாளை கொண்டாடும் சவுதி குடும்பம்.

அந்த வீட்டு இளைஞன் வீட்டு வேலையாளனான இந்தியரை எவ்வளவு பாசத்தோடு நடத்துவதைப் பாருங்கள். அவரது தோற்றத்தில் பார்த்தால் அவர் இஸ்லாமியர் அல்ல என்று அறிகிறோம். இருந்தும் அந்த குடும்பம் இந்த அளவு அன்பு பொழிகிறது என்றால் உலக மக்கள் அனைவரும் ஆதமுடைய மக்கள் என்ற எண்ணம் உருவானதாலேயே இது சாத்தியப்படுகிறது.
அவரது தோற்றத்தை பார்த்தால் தலித் இனத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. நமது இந்தியாவில் ஆதிக்க சாதி இந்து வீட்டில் ஒரு தலித் இவ்வாறு கவுரவிக்கப்படும் நிகழ்வு நடந்து விடுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இத்தகைய புரட்சியை செய்தது இஸ்லாம் என்றால் மிகையில்லை.
இஸ்லாமிய அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிடையாது. ஆனால் அந்த குடும்பம் அந்த இந்தியரை தங்களின் குடும்பத்தின் ஒருவராக பாவித்து கட்டி தழுவும் அந்த சகோதர வாஞ்சையை சுட்டிக் காட்டவே இப்பதிவு.
“நான் பத்தாண்டுகள் நபிகள் நாயகம் அவர்களிடம் பணியாளராக இருந்தேன். அவர்கள் என்னை ஒருபோதும் அடித்ததில்லை.; ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் இதைச் செய்யவில்லை? என்று கேட்டதில்லை. என்னைப் பார்த்து ‘சீ’ என்று கூட சொன்னதில்லை” என்று கூறுகிறார், நபிகளாரிடம் பணியாற்றிய அனஸ் மாலிக் (ரலி).
“ உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 2443



1 comment:

Dr.Anburaj said...

ஆப்கானிஸ்தானத்தில் இசுலாம் செத்து விட்டதா? அங்கு ஏன் 40 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடக்கிறது.யேமனில் உகாண்டாவில் சிரியாவில் இசுலாம் தானே இருக்கிறது.ஏன் அங்கு கலவர உள்நாட்டு போா் சுழல். எல்லா நாடுகளிலும் சில பிறவி உத்தமா்கள் இருப்பார்கள். அவா்கள் எந்த மத புத்தகத்தையும் படிக்கவிட்டாலும் உத்தம குணம் கொண்டவராக இருப்பாா்கள். இதுவும் அப்படி ஒரு நிகழ்வாகததான் நான் பார்க்கினறேன்.
காபீர்களையும் இறைமறுப்பாளா்களையும் கொல்வதுதானே இசுலாமிய பண்பாடு. இதை அந்த அரபி குடும்பம் பின்பற்றவில்லை. ஆகவே இவர்களின் சிறந்த குணத்திற்கு காரணம் குரானை நிராகரித்ததுதான்.