Followers

Saturday, August 07, 2021

தாகம் தீர்த்த அரபு ஷேக்...

 தாகம் தீர்த்த அரபு ஷேக்...

துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார்...
காரில் பயணிக்கும் போது அந்த கிராமத்தில் பெண்கள் கையிலும், தலையிலும் குடத்தை சுமந்து கொண்டு தண்ணீருக்கு அலைவதும், குழாயடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்த்து விசாரித்த அரபு ஷேக் எடப்பாள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை தெரிந்து கொண்டார்...
எடப்பாள் கிராம மக்களின் தாகம் தணிக்கும் முயற்சியில் உதவும் வகையில் நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்ததோடு தனது குடும்பத்துடன் நேரடியாக வந்து திட்டத்தை துவக்கி வைத்தார்..
கடல் கடந்த மனித நேயம்....
படித்ததில் பிடித்தது.
-----------------------------
ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்”
(நூல்: அஹ்மது நஸயீ-3666)



No comments: