மத்திய பிரதேசம் - உஜ்ஜயினி
'ஹிந்துக்கள் அதிகம் உள்ள இந்த ஏரியாவில் நீ எப்படி கடை போட்டு சம்பாதிக்கலாம்.... இடத்தை காலி செய்'
'ஜெய் ஸ்ரீராம் சொல்'
அந்த முஸ்லிம் சொல்ல மறுக்கிறார்....
'ஜெய் ஸ்ரீராம் சொல்லியே ஆக வேண்டும்'
மீண்டும் மறுக்கிறார். ஒரு சாதாரண தெரு வியாபாரியின் நம்பிக்கையை பாருங்கள். எந்த முஸ்லிமும் ராமனை கடவுளாக நினைக்க மாட்டான். ஒரு ஹிந்து ராமனை தெய்வமாக மதித்தால் அதற்கு குறுக்கேயும் வர மாட்டான்.
'உங்கள் மார்க்கம் உங்களுக்கு: எங்கள் மார்க்கம் எங்களுக்கு' - குர்ஆன்.
எங்கள் சொந்த கிராமத்தில் 90 சதவீதம் முஸ்லிம்கள். ஆனால் கொத்தனார், பைப் பிட்டர், ப்ளம்பர், எலக்ட்ரீஷியன், ஆசாரி என்று அனைத்து வேலைகளையும் நல்ல சம்பளத்தில் செய்து வருவது 90 சதவீதம் இந்துக்களே! எந்த முஸ்லிமும் இதனால் பொறாமை கொள்ளவில்லை. தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை. ஒருவரையொருவர் சார்ந்து தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். இதனை அந்த இந்துத்வ மன நோயாளிகளுக்கு யார் புரிய வைப்பது?
No comments:
Post a Comment