Followers

Friday, February 20, 2026

டெல்லியில் நேற்று இஸ்லாமிய சிறுவன் இந்துத்வ தேச விரோதிகளால் அடித்து மண்டை உடைப்பு..




 தலைநகர் டெல்லியில் நேற்று இஸ்லாமிய சிறுவன் இந்துத்வ தேச விரோதிகளால் அடித்து மண்டை உடைப்பு..


தடுக்கப்போன தந்தை உமர்தீன் (வயது 35) இந்துத்வ தேச விரோதிகளால் கொலை செய்ய பட்டுள்ளார்.


தாய் கதறி அழுகிறார். தனது மகன் தஹ்ஜீமின் மண்டையை உடைத்துள்ளனர். தடுக்கப்போன எனது கணவரையும் கொன்றுள்ளனர்...' என்று கூறி மயங்கி விழுகிறார்.


அமைதியாக இருந்த இந்த நாட்டை கேவலம் வாக்குகளுக்காக இந்து முஸ்லிம் பிரிவினையை தூண்டி குளிர் காய்கின்றனர் பிஜேபியினர்.


இந்த வன்முறை அவர்களையும் ஒருநாள் பதம் பார்க்கும். 


-----------------------------------


ஹாஜி அக்தர் கான்


பழை சாமானகள் வாங்கி விற்கும் ஒரு வியாபாரி. அவ்வாறு வாங்கிய பொழுது ஒரு பீரொவை மற்றொருவருக்கு விற்க சுத்தம் செய்கிறார். அப்போது அந்த பீரொவில் ஒரு சுருக்கு பை கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்க்கிறார் அத்தனையும் தங்க நகைகள். அனைத்தும் 100 கிராம்கள். கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் பெறுமானமுள்ளது. இவருக்கு அந்த நகை உரிமையாளரான இந்துவின் வீடு தெரியும். எனவே அவரிடம் சென்று அத்தனை நகையையும் ஒப்படைத்துள்ளார் ஹாஜி அக்தர் கான்.


மனிதாபிமானம் மற்றும் மறு உலகில் நாளை இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணமும்தான் இவரை உரியவரிடம் நகையை ஒப்படைக்க வைத்துள்ளது. 


இவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.















Thursday, February 19, 2026

இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பிரபலமாகியுள்ளார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்

 



இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பிரபலமாகியுள்ளார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

நமது முதல்வர் நபிகள் நாயகத்தைப் பற்றிய பாடங்களை தமிழக பாடநூல் நிறுவனத்தில் இடம் பெறச்செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 

அதனை பாராட்டி ஒரு பாகிஸ்தானிய இளைஞர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நம் முதல்வர் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பாராட்டைப் பெற்று வருகிறார்.

 

அந்த பாகிஸ்தானிய இளைஞனின் செய்தியை பார்போம்.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முகமது நபியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்த பாடங்கள் மாநில கல்விப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கருணை, நியாயம் மற்றும் அமைதியான சகவாழ்வில் வேரூன்றிய மதிப்புகளைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

 

கருணை, நேர்மை மற்றும் மனிதநேயம் போன்ற உலகளாவிய கொள்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், பல்வேறு சமூகங்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் கலாச்சார புரிதலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The Chief Minister of Tamil Nadu, M. K. Stalin, has announced that lessons on the life and teachings of Muhammad will be introduced into the state’s educational curriculum. The initiative is aimed at helping students understand values rooted in compassion, fairness, and peaceful coexistence.

 

According to the announcement, the focus will be on universal principles such as kindness, integrity, and humanity. The move is intended to encourage mutual respect and cultural understanding among diverse communities while strengthening social harmony in classrooms.


பசுவின் சாணத்திலிருந்து எண்ணெய் விளக்குகள்(தியாக்கள்), பானைகள் மற்றும் பிற பொருட்கள்


 



பசுவின் சாணத்திலிருந்து எண்ணெய் விளக்குகள்(தியாக்கள்), பானைகள் மற்றும் பிற பொருட்கள்

 

பீகாருக்குப் பிறகு, உ.பி.யிலும் பெண்கள் பாஜகவை "ஒருதலைப்பட்சமாக ஆதரிக்க" தொடங்கியுள்ளார்கள்.

 

ஜான்பூரில், ஒரு "சுய உதவிக்குழு" பசுவின் சாணத்திலிருந்து எண்ணெய் விளக்குகள்(தியாக்கள்), பானைகள் மற்றும் பிற பொருட்களைத் தயாரிக்கிறது, மேலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் அவர்களின் தயாரிப்புகளை வாங்கும்!

 

 150–300 பெண்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளது.

 

உ.பி.யில் உள்ள ஒவ்வொரு கிராமத்தின் கதையும் கிட்டத்தட்ட இதுதான்.

 

மாட்டின் சாணம் அந்த அளவுக்கு சுகாதாரமில்லை என்று ஆய்வுகள் வந்த பிறகும் அதிலிருந்து பானைகள் செய்தால் அதனை குடிப்பவர்களின் உடல் நலம் பாதிப்படையாதா?

 

ஏற்கெனவே ரோபோ விவகாரத்தில் சீன தயாரிப்பை காட்டி உலகில் தலை குனிந்துள்ளோம். அதில் தற்போது மாட்டு சாணமும் சேர்ந்துள்ளது,

 

பெண்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்க இவர்கள் ஏன் மாட்டு சாணத்தை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.

 

குருட்டு பக்தி என்பது இதுதான்.

Wednesday, February 18, 2026

ஜக்கி வாசுதேவின் பல தில்லுமுல்லுகளை துகிலுரிக்கிறார் ஆன்மீகவாதியான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


 



ஜக்கி வாசுதேவின் பல தில்லுமுல்லுகளை துகிலுரிக்கிறார் ஆன்மீகவாதியான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் உள்ள பேராசிரியரின் 2 மகள்களுக்கு “மன நல சோதனை” நடத்தி அறிக்கை தர தமிழ்நாடு அரசு மன நல இயக்குனரகம் உத்தரவு.

கோயமுத்தூரைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜர். இவர் வேளாண் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது இரண்டு மகள்களை ஜக்கி வாசுதேவ் கட்டாயமாகத் தமது சீடர்களாக்கி அவர்களை மன வசியம் செய்து பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் புகார், வழக்குகள் எனத் தொடர்ந்து போராடி வருகிறார் காமராஜ்.

இந்திலையில் இவரது மகள்கள் மன வசியம் – ஹிப்நாடிசம் – செய்யப்பட்டு சுய தன்மை இழந்து ஜக்கியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உள்ளதாகவும் அதை அறிவியல் மருத்துவப் பரிசோதனை நடத்தி உறுதி செய்து அவர்களை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் மன நல இயக்குநரகத்தில் The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA), அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய இருவரையும் கோயமுத்தூர் மையத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA) பணித்துள்ளது.

இதுகுறித்து கோயமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. காமராஜ், கருவூரார் அறக்கட்டளை நிறுவனர் சத்தியபாமா, புதிய தலைமுறை கட்சி நிறுவனர் கோபால கிருஷ்ணன், தமிழர் முன்னணி நிறுவனர் இமயம் சரவணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய திரு.காமராஜ், ஜக்கி வாசுதேவ் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அமெரிக்காவைச் சேர்ந்த நீதா எனும் பெண் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர் மீது ஜக்கி தொடுத்த அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.எனவே அந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அதே போல இங்கும் பல வழக்குகளில் ஜக்கி சிக்குவார். அதன் ஒரு படியாக தம் இரண்டு மகள்களைப் போலவே பல இளையோர்களை சட்டவிரோத ஹிப்நாடிசம் அல்லது போதை உள்ளிட்ட வசியம் செய்து மயக்கி வைத்த குற்றத்திலும் அவர் உறுதியாகப் பிடிபடுவார் என்றார்.

அடுத்துப் பேசிய சத்தியபாமா, சட்டவிரோதமாகவும், ஆன்மீகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாதும் வணிக ரீதியாக மதவாதத்தை பயன்படுத்தி வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையம் அரசுடைமையாக்கப்பட வேண்டும், அங்கு மனவசியம் செய்து மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சன்னியாசி இளையோர்களை மீட்க வேண்டும். அவர்களுக்கு முறையாக மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய தமிழர் முன்னணி இமயம் சரவணன், அமெரிக்காவில் எப்ஸ்டீன் என்பவர் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியது போல ஜக்கி வாசுதேவன் செய்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்தக் குழந்தைகளை – இளையவர்களை எல்லாம் மீட்டு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும், ஜக்கி வாசுதேவ் நடத்தும் தகன எரி மேடைகளை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார். தனி ஒரு மனிதர் இயற்கையாக இறந்தாலே தகனம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் தேவைப்படும் நிலையில் யாருடைய அனுமதியின் பேரில் ஈஷா யோக மையத்திற்குள் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இமயம் சரவணன் கேட்டுக் கொண்டார். தமது மகளை சொகுசாக வாழவிட்டு ஊரார் மகன் – மகள்களை மொட்டையடித்து சன்னியாசிகளாக்கி தமிழர் இனவழிப்பு செய்து உலகத்தை ஏமாற்றி வருகிறார் ஜக்கி என்றும் சரவணன் குற்றம் சாட்டினார்.

 

என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!




 என்ன ஒரு சுய மரியாதையை கற்றுத் தருகிறது இஸ்லாம்!

மார்க்க அறிஞரோடு கை குலுக்கும் போது ஒருவர் தனது தலையை மரியாதை நிமித்தம் சாய்க்கிறார்.
உடனே கோபமடைந்த அந்த அறிஞர் "ஏன் தலையை சாய்க்கிறாய்? இறைவனுக்கு மட்டுமே உனது தலை சாய வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்...
சுய மரியாதை
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா . அவர் வெளியே வந்த போது அவரைக் கண்டஅப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா அவர்கள் "அமருங்கள்" என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா சொன்னார்கள்.
நூல்: அபூதாவூத் 4552
ஒரு சக்கரவர்த்திக்கே கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழவேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றுள்ளதை இந்த சரித்திரத்தில் இருந்து நாம் தெரிகிறோம்.

Tuesday, February 17, 2026

கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி


 


கொமைனியை நேரில் சந்திக்க ட்ரம்ப் ஆர்வம் - ஆக மொத்தம் ஈரானுக்கே வெற்றி

இஸ்ரேலில் தினந்தோறும் அரங்கேறும் வன்முறை காட்சிகள்
யூதர்களின் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு.
ராணுவத்தில் குறிப்பிட்ட சாதியினரான நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று ஒரு பக்கம் போராட்டம்.
நெதன்யாஹூ ஊழல் வழக்கில் சிக்கி தினமும் வாய்தா வாங்கிக் கொண்டுள்ளான்.
நீ சுகமாக இருக்க நாங்கள் செத்து மடிய வேண்டுமா? என்று இஸ்ரேலிய மக்ள் போர்க் கொடி.
இத்தனை பிரச்னைகளையும் சமாளிக்கத்தான் ஈரான் போரை கையிலெடுத்துள்ளான் நெதன்யாஹூ
எப்ஸ்டின் பைல்களை காட்டி ட்ரம்பை மிரட்டி எப்படியாவது ஈரானோடு போர் புரிய நிர்பந்தப்படுத்துகிறான்.
ஆனாலும் ஈரானுக்கு பக்க பலமாக சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் அணி வகுப்பதால் தோல்வி நிச்சயம் என்பது ட்ரம்புக்கு நன்றாகவே தெரியும்.
எனவே தற்போது சமாதானத்துக்கு இறங்கி வந்துள்ளார் ட்ரம்ப். கொமெய்னியை நேரிடையாக சந்தித்து பேச ஆர்வமாக உள்ளதாக அறிக்கை விடுகிறான்.
ஆக மொத்தத்தில் தற்போது ஈரானுக்கே வெற்றி....

ரமலான் நல் வாழ்த்துக்கள்... ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர்


 


உலக மக்கள் அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்...


ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவு இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.


கருப்பன், வெள்ளையன், அரபியன் ஆசியன், ஐரோப்பியன், என்று உலகின் எந்த மூலையிலும் இன்று ஒலிக்கும் ஒரே குரல் 'அல்லாஹூ அக்பர்'  'இறைவன் பெரியவன்'. ஆம் நம்மை படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் கொடுத்த பல கட்டளைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை நோற்க இஸ்லாமியர்கள் தயாராகிவிட்டனர்.


கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே பாலஸ்தீன காஸா மக்களும் ரமலானை வரவேற்க தயாராகி விட்டனர். இந்த வருடமாவது அவர்களின் துயர் நிரந்தரமாக நீங்கி அமைதியான வாழ்வை எதிர்கொள்வார்களாக....






இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.


 


ஸாஹர் யூனுஸ் ஷேக்...


மஹாராஷ்ட்ரா மும்ப்ராவில் உவைஸி கட்சி சார்பில் போட்டியிட்டு எதிர்த்து நின்ற சங்கி வேட்பாளரை தோற்கடித்தார்..


'கைஸா ஹராயா?'  'எப்படி தோற்கடித்தேன் பார்த்தீர்களா? என்று அவர் நக்கலாக பேசியது பெரும் பேசு பொருளாகியது.


நெடுநாள் குப்பை கூளமாக கிடந்த ஒரு கால்வாயை ஜேஸிபி எந்திரம் கொண்டு வந்து இவரே மேற்பார்வையிட்டு தற்போது அங்கு தண்ணீர் வழித் தடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


இஸ்லாமிய பெண்கள் குடும்பத்தையும் காப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாட்டையும் காப்பார்கள்.

Monday, February 16, 2026

'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்




 'நாங்கள் இந்திய நாட்டின் பூர்வகுடிகள் அல்ல' - ஒரு பிராமணரின் வாக்கு மூலம்


வட மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. நமது ஊடகங்கள் அதனை மறைக்கின்றன. அந்த போராட்டத்தில் கலந்து கொண்டஒரு பிராமணர் சொல்கிறார்.


'பிராமணர்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. ஐரோப்பாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு குடியேறியவர்கள்'


'அப்போ நீங்கள் இந்தியர் இல்லையா?'


'தற்போது இந்திய சட்டப்படி நாங்கள் இந்தியர்கள்தான். அதை மறுக்கவில்லை. ஆனால் எங்களை விட இந்நாட்டில் பழங்குடி மக்கள், ஆதி திராவிடர்கள், மற்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களை விட காலா காலமாக இந்த மண்ணில் வசிப்பவர்கள். அவர்களின் பாதுகாப்பு, கல்வி, வேலை வாய்ப்பு என்பது அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். அதுதான் சமூக நீதி'


இவர்தான் மிகச்சிறந்த பிராமணர். இவரைப் போன்று அனைத்து பிராமணர்களும் மாறி விட்டால் நமது நாடு கூடிய விரைவிலேயே வல்லரசாக மாறி விடும். 














#இந்துமதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை #வரலாற்றில் எங்கும் காணமுடியாது.

 



#இந்துமதம் போன்ற ஒரு கொடூர தன்மையுள்ள மதத்தை #வரலாற்றில் எங்கும் காணமுடியாது.


#இந்துமதம்_வர்ணாசிரம_முறையில் வாழவேண்டும் என்கிறது - #பௌத்த_சமணம் மனிதன் எந்தவொரு பாகுபாடின்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்றது.

#இந்துமதம் கல்வி பிரமினர்களுக்கே. மற்றவர் கேட்டால் காதில் இயத்தை காச்சி ஊற்றியது - அறிவு மார்க்கம் பௌத்த, சமண பள்ளிகள் அமைத்து அதில் அனைவருக்கும் கல்வி கொடுத்தது. இல்லையென்றால் இவ்வளவு சிறந்த இலக்கண, இலக்கணங்கள் படைக்கமுடியுமா? #நாலந்தாவும்_காஞ்சி_பல்கலைக்கழகம் பற்றி வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

மக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட #சைவ_இந்து_மதத்தால் பல லட்ச பௌத்த, சமண அறிவு தமிழர்களை #கழுவேற்றும் நிகழ்வு மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் #கொல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்து மதத்தை தழுவாத காரணத்தினால் இந்த கழுவேற்ற தண்டனை, இதர கொடுமைகள் அரங்கேற்றியது. இதற்கு அஞ்சி பல #தமிழர்கள்_இந்து_மதம்_மாறினார்கள்.

இந்த #கழுவேற்ற_தண்டனைகள் தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் #பார்ப்பான_வெறி கொண்ட #சைவ_இந்து_மதத்தால் அறிவு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான #திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) #சமணர்களைக்_கழுவேற்றிய செய்தியை #பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை #ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.

இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.
காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது. அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் இந்து மதம் பௌத்தம் மீது எந்தளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு #சாக்கியர்கள் என்று வருவது #பௌத்தர்களைக் குறிக்கும்.

பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 1925, page 18

அரசர் குலச்சிறையாரை நோக்கி, சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று கட்டளைக்கு சைவ பார்ப்பன அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் கழுவேற்றினர். - ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி, 1948, Page 18

மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை, 1983, Page 28

கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.

விபூதி, கோமியம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற்புராணம்,சென்னை,
1925, Page 494.

கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர். --பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை, 1937, Page 1195.

திருப்பரங்குன்றம், திருமங்கலம், சிவகங்கை, திருச்செந்தூர், காஞ்சிபுரம், கழுகுமலை போன்ற பகுதிகளில் பல்லாயிரம் #கழுதூண்கள் நட்டு வைத்து கழுவேற்றுயதுடன் பௌத்த விகாரைகளும், #சமண_பள்ளிகளும் #சைவ_இந்து_கோவில்களாக மாற்றப்பட்டன.