Followers

Saturday, February 07, 2026

ஒரு தாய் & மகன் உரையாடல்..

 




ஒரு தாய் & மகன் உரையாடல்..

 

மகன்: அம்மா, தாஜ்மஹால் மிகவும் அழகாக இருக்கிறது நாமதானே அதை கட்டினோம்?

அம்மா: இல்லை, அதைக் கட்டியவர் பேரரசர் ஷாஜகான் அவர் ஒரு முஸ்லிம்

மகன்: ஓ... அப்படியானால் நிச்சயமாக குதுப்மினாரைக் கட்டினோம்??

அம்மா: இல்லை, அதுவும் ஒரு முஸ்லிம் கட்டினார் அவர் பெயர் குத்புதீன் ஐபக்

மகன்: அப்படியானால் செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது.??

அம்மா: அதுவும் முஸ்லிம் ஆட்சியாளர்களால்தான் கட்டப்பட்டது

மகன்: பழைய கோட்டை (புராண கிலா) கட்டியது?

அம்மா: பழைய கோட்டையும் முஸ்லிம்களால் கட்டப்பட்டது

மகன்: சார்மினார் யாரால் கட்டப்பட்டது?

அம்மா: அதுவும் தான் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது

மகன்: அம்மா, இந்தியா முதல் ஏவுகணையை உருவாக்கியதாக கேள்விப்பட்டேன், அது இந்துக்களால் உருவாக்கப்பட்டதா?

அம்மா: இல்லை.. இந்தியாவில் முதல் ஏவுகணை திப்பு சுல்தானால் உருவாக்கப்பட்டது அவரும் ஒரு முஸ்லிம்

மகன்: அம்மா, கிராண்ட் டிரங்க் சாலை இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் நீளமான சாலை,அது கிட்டத்தட்ட 3000 கிமீ நீளம் கொண்டது என கேள்விப்பட்டேன் அதை கட்டமைத்தது யார்?

அம்மா: அதுவும் ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஷெர்ஷா சூரியால் உருவாக்கப்பட்டது..

மகன்: ஒரு காலத்தில் கொடூர தாக்குதல் நடத்தும் மங்கோலியர்களுக்கு எதிராகப் நாம் போராடியிருக்கோம் இல்லையா?

அம்மா: மங்கோலியர்களுக்கு எதிராகப் போராடியவர் அலாவுதீன் கில்ஜி, அவர் தோற்றிருந்தால், இந்தியா எப்போதோ அழிக்கப்பட்டிருக்கும்..

மகன்: சரி, முகலாயப் பேரரசு பற்றி சொல்லுங்க..

அம்மா: முகலாயப் பேரரசு இஸ்லாமிய பேரரசு..

மகன்: "ஜெய் ஹிந்த்" எப்படி இருக்கு? இந்துக்கள் தான் முதல்ல சொன்னோம், சரியா?

அம்மா: இல்லை.. அது ஒரு முஸ்லிம் தான் முதலில் சொன்னது..

மகன்: "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" முதலில் சொன்னது யார் ?

அம்மா: அது அல்லாம இக்பால் என்ற முஸ்லிம் கவிஞரால் எழுதப்பட்டது

மகன்: இந்திய தேசியக் கொடியை உருவாக்கியது யார்?

அம்மா: பிங்கலி வெங்கய்யா அதை வடிவமைத்திருந்தாலும், இறுதி அங்கீகரிக்கப்பட்டது ஹைதராபாத்தை சேர்ந்த சுரையா தியாப்ஜி என்ற முஸ்லிம் பெண் வடிவமைத்தது..

மகன்: முதல் செயற்கைக்கோள் ஏவுதல் இந்துக்கள் தானே செஞ்சிருக்காங்க ?

அம்மா: இல்லை, செயற்கைக் கோள்களை ஏவுவதில் இந்தியா பல முறை தோல்வியடைந்தது, இதை வெற்றிகரமாக ஏவியவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற முஸ்லிம், அவர் இல்லையென்றால், இந்தியா விண்வெளியை அடைந்திருக்காது..

மகன்: அணு ஆயுதங்களை உருவாக்கியது யார்?

அம்மா: இந்தியாவில் அணு ஆயுதங்களை உருவாக்கியதும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற இஸ்லாமியர் தான் அவர் அவற்றை உருவாக்கவில்லை என்றால், சீனாவும் பாகிஸ்தானும் நம்மை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கும்..

மகன்: ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தையாவது இந்துக்கள் தானே தொடங்கினார்கள்?

அம்மா: இல்லை, முதல் கிளர்ச்சியை திப்பு சுல்தான் என்ற இஸ்லாமியர் தான் தொடங்கினார்..

மகன்: அப்படியானால் முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வெறுப்பும் கேள்விகளும் எழுப்பப்படுகின்றன?

அம்மா: அது பிரிவினைவாத அமைப்பான RSS விதைத்த விஷம்

பொய் சொல்லி நம்மை ஏமாற்றி மனித பிறவியில் பார்ப்பனன் உயர்ந்தவன் நாமெல்லாம் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை அடித்தளம் அமைக்க முஸ்லிம்கள் தடையாக உள்ளார்கள். எல்லோரும் சமம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் பின் பற்றுகிறார்களே என்கிற எரிச்சல்.

எல்லாரையும் சமமாக பார் மதநல்லிணக்கதோடு வாழ் அது போதும்..

 

No comments: