Followers

Thursday, February 12, 2026

அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்




 அன்று காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஃபைல்ஸ், பெங்கால் ஃபைல் இன்றோ எப்ஸ்டீன் ஃபைல்ஸ்

இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நமது நாட்டின் 140 கோடி மக்களின் வாழ்வாதாரம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாயிகளே இதில் பாதிக்கப்படுவர். உண்மையான தேசபக்தன் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டான். ஆனால் சங்கிகளிடம் தேச பக்தியை எதிர்பார்க்க முடியுமோ? அமெரிக்காவில் ஒரு சாதாரண பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன். பின்னாளில் ஆள்கடத்தலில் ஈடுபட்டு மிகப் பெரிய பாலியல் இடைத்தரகரானார். கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு தான் எப்ஸ்டீனை சிறையில் தள்ளியது. அப்போதே பல பிரபலங்களின் பெயரும் அடிபட்டது.  @suvanappiriyan 

No comments: