பூமி உங்களுக்கு தொட்டில்!
'அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான்.'
-குர்ஆன் - 20 :53
'பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் - 78 :6,7
திருக் குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்க ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப் படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்க ராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.
குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும் நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.
பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் இறைவன் குறிப்பிடுகின்றான்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இருப்பதை எல்லாம் மனிதனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
----------------------------------------
'மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் - 78 : 6,7
இது பற்றி வரும் வேறு வசனங்கள்: 15 :19, 16 :15, 21 :31, 27 :61, 41 :10, 50 :7, 78 :7, 79:32.
பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.
ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப் படுவதே முளைகளாகும். இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப் பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.
வேகமாக பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருடகளும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.
இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப் படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.
இதைத் தடுக்க வேண்டுமானபல் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப் பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன.
ஆங்காங்கே நிறுவப் பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும் கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.
பூமி முதலில் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப் பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.
முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக் குர்ஆன் 41:10)
இது போன்ற அறிவியல் உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் தன் சொந்த கற்பனையில் இந்த குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறதல்லவா?
நன்றி : திரு பி.ஜெய்னுல்லாபிதீன்
2 comments:
பூமி உருவாகி, பின் மலைகள் உருவானமை எல்லாம் ரெண்டு நாட்களில் நடந்ததென்றா அறிவியல் கூறுகிறது?
லட்சக்கணக்கான வருடங்களில் நிகழ்ந்து இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் செயற்பாடல்லவா அது?
ரெண்டு நாட்களில் நடந்ததென்றா குர் ஆன் புத்தகத்தில் உள்ளது?
திரு மயூரன்!
//பூமி உருவாக பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் குர்ஆனில் பூமியை படைத்தது இரண்டு நாளில் என்றா வருகிறது?//
'பூமியை இரண்டு நாடகளில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்.'
-குர்ஆன் 41 :9
'இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்'
-குர்ஆன் 41 :12
'அவனே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.'
-குர்ஆன் 25 : 59
பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் படைத்ததாக இறைவன் கூறுகிறான்.இங்கு நாட்கள் என்று பயன் படுத்தப் படும் இடத்தில் 'அய்யாம' என்ற அரபிச் சொல் எடுத்தாளப் பட்டுள்ளது.
'ஹூவல்லதி ஹலகஸ் ஸமாவாத்தி வல் அர்ளி ஃபி சித்ததி அய்யாம்'
'அய்யாம்' என்ற வார்த்தைக்கு அரபியில் இரண்டு பொருள்கள் உண்டு. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளுக்கும் அய்யாம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படும். 100,1000,100000 போன்ற வருடங்களின் கூட்டு என்ற கணக்கிலும் 'அய்யாம்' என்ற வார்த்தை பயன் படுத்தப் படும். அந்த அந்த இடத்திற்கு தக்கவாறு பொருளில் மாறுபடும். இங்கு இறைவன் இதை நாம் பயன் படுத்தும் நாள் கணக்கைக் குறிப்பிடுகிறானா அல்லது ஆறு காலங்கள், ஆறு யுகங்கள் என்ற ரீதியில் குறிப்பிடுகிறானா என்று விளக்கப் படவில்லை.
அறிவியலார் பின்னால் வரக் கூடிய காலங்கள் என்ற பொருள்தான் சரியாக பொருந்தும் என்று கூறுகின்றனர்.பல லட்சக்கணக்கான வருடங்கள் இந்த உலகம் உண்டாக எடுத்துக் கொண்டிருக்கலாம் என்ற அறிவியலின் அனுமானம் இந்த வசனத்திற்கு மாறு படவில்லை. உறுதிதான் செய்கிறது. இறைவனே மிக அறிந்தவன்.
Post a Comment