Followers

Wednesday, April 26, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

No comments: