Followers

Friday, April 07, 2006

இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு?

இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு?

நெடு நாட்களாக சிவா சவூதியைப் பற்றி ஒரு பதிவு போடப் போகிறேன். இஸ்லாத்தை தோலுரித்துக் காட்டப் போகிறேன் என்றெல்லாம் எழுதி வந்தார். நானும் ஏதோ இஸ்லாத்தைப் பற்றி விமர்சனங்கள் கடுமையாக வரும் என்று எதிர் பார்த்தேன். தற்போது பார்த்தால் யாரோ ஒரு சவூதி தன் வீட்டு வேலைக்காரியை உபயோகப் படுத்திக் கொள் என்று சொன்னதாவும், தான் மறுத்து விட்டதாகவும் தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளும் சுய புராணத்தைத்தான் பார்க்கிறோம்.

நான் முன்பே 'சிறையில் வாடும் நம்மவர்கள்' என்ற என் பதிவில் சவூதியைப் பற்றி சிவாவுக்கு விளக்கி இருக்கிறேன். சவுதி நாட்டவர் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பாக முடியாது. குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ உங்களுக்கு ஏதும் விமர்சனங்கள் இருந்தால் தெரிவியுங்கள். என்னால் முடிந்த வரை தெளிவிக்கிறேன் என்று சொன்னாலும் இவர் பழைய பல்லவியை விடுவதாக இல்லை. நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்களைப் பொல் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்து உள்ளார். இறைத்துக் கொண்டிருக்கட்டும். அவருக்கும் நேரம் போக வேண்டும் இல்லையா!

இதற்கு மாற்றாக நானும் ஹிந்து மதத்தைச் சார்ந்த பிரேமானந்தா, சதுர்வேதி, சிவா தெய்வமாக போற்றிடும் சங்கராச்சாரியார் மூத்தவர் இளையவர் போன்றோரின் லீலைகளை நக்கீரனில் இருந்தும் விடுதலையில் இருந்தும் எடுத்துப் போட்டால் இவர் எங்கு போய் ஒளிந்து கொள்வார். அப்படி அந்த சாமியார்களை விமர்சிப்பதும் எனக்கு அழகாக இருக்குமா? சிவா செய்து வந்தாலும் அதற்கு மாற்றமாக இது போன்ற தனி நபர் விமர்சனத்தை நான் செய்ய மாட்டேன்.

இது ஒரு புறம் இருக்க நேசகுமார்,ஆரோக்கியம், கால்கர்சிவா, ஸ்ரீநிவாஸ் போன்றோருக்கு இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு? உலகில் உள்ள அறிஞர்கள் பெர்னாட்ஷா முதல் நம் மகாத்மா காந்தி வரை மனித விடுதலைக்கு ஒரே வழி இஸ்லாம் தான் என்று கூறும் போது இவர்கள் மட்டும் ஏன் இவ்வாறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

இந்த இஸ்லாத்தினால் தற்போது அதிக பலன் பெறுவது யார? நம் நாட்டு பூர்வ குடி மக்களான தாழ்த்தப் பட்டவர்கள் மற்ற எந்த மதத்துக்கு போனாலும் பெயரும் மதமும் தான் மாறுமே யொழிய அவன் கலாச்சாரம் மாறாது. அவன் செய்து வரும் தொழிலும் மாறாது. அதே தாழ்த்தப் பட்டவன் முஸ்லிமாக மாறினால் பெயர் கலாச்சாரம் தொழில் அனைத்தும் உடன் மாறிவிடுகிறது. இழி தொழில்கள் எதுவும் செய்ய மாட்டான். சிவா போன்றவர்களும் அவன் முஸ்லிமாக மாறியவுடன் அத்தொழில்களைச் செய்வதற்கு ஏவவும் மாட்டார்கள்.

ஒரு குப்பனோ சுப்பனோ முஸ்லிமாக மாறி ரஹீம் பாயாகவும் ரஹ்மான் பாயாகவும மாறி விட்டால் நேசகுமார், கால்கரி சிவா போன்றோரின் வீட்டில் மலம் அள்ள யார் வருவார்? சுடுகாட்டில் பிணத்தை சுடுவது யார்? கிராமத்துக்குள் நுழைந்தவுடன் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு மேல் ஜாதிக் காரர்களைப் பார்த்து கூழை கும்பிடு போடுவது யார்? அவன் முஸ்லிமாக மாறிவிட்டால் மலம் தின்ன வைத்து அழகு பார்ப்பது யாரை?தேனிர்க் கடையிலசிரட்டையில் யாருக்கு டீ தந்து கந்தோஷப்படுவது? அல்லது இரட்டைக் குவளை முறையை யாருக்கு வைப்பது?இதை எல்லாம் காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வரும் நேசகுமார், ஆரோக்கியம், காலகரிசிவா,ஸ்ரீநிவாஸ் போன்றோருக்கு நொடிப் பொழுதில் இதெல்லாம் கை விட்டுப் போகிறதே என்ற பீதியில் கூப்பாடு போடுகிறார்கள். இதனால்தான் இதெற்கெல்லாம் காரணியான இஸ்லாத்தின் மேல் இவர்களின் கோபம் திரும்புகிறது.எனவே தான் இதை வளர விடக் கூடாது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். குதிக்கட்டும். நன்றாக குதிக்கட்டும். இவர்கள் குதிப்பதால் ஏற்படும் சப்தம் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, கீழ்வெண்மணி இன்னும் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று கேட்கட்டும்.

இதே நேசகுமார்,சிவா போன்றோர் தன் மதத்தில் உள்ள தீண்டாமை கொடுமைக்கு எதிராக ஒரு துரும்பையாவது இதுவரை எடுத்துப் போட்டதுண்டா? தேர்ந்தெடுக்கப் படட பஞ்சாயத்து தலைவர் அவர் தாழ்த்தப் பட்டவர் என்பதற்காகவே வெட்டி கொலை செய்யப் படுகிறார்.வேறொரு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட மறுநாளே ராஜினாமா செய்கிறார். குமுதம் பத்திரிக்கை அந்த கிராமத்துக்கு சென்று பேட்டி எடுத்தது. ஒரு முதியவர் சொல்கிறார் 'காலம் காலமா எங்களுக்கு கீழே இருந்தவன் இன்று தேர்தலில் ஜெயித்து எங்களுக்கு தலைவராக வர முடியுங்களா? அதனால தான் அவனிடம் எடுத்து சொல்லி ராஜினாமா பண்ண வச்சுடுறோம' என்று சர்வ சாதாரணமாக சொல்கிறாராம். இதை எல்லாம் இல்லை என்று மறுக்க முடியுமா? இதற்கு அல்லவா முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும்?

பசுக்கள் இவர்களுக்கு தெய்வமாம். இதை அறுத்து சாப்பிட்டதால் 4 தாழ்த்தப்பட்டவர்களை வட நாட்டில் அடித்தே கொன்றிருக்கிறது ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்.தற்போது ஒரு பெண்ணும் மாட்டை அறுத்ததினால் இதே போல் 15 வருட சிறைத் தண்டனையை விதித்து இருக்கிறார்களாம். சிவா! உங்கள் பார்வையில் மனிதனை விட மாடு உயர்ந்ததா?புராணங்களில் யாகத்துக்கு பசுவைப் பயன் னடுத்தி இருக்கிறார்களே! உங்கள் கடவுள்களும் அதை ருசித்து சாப்பிட்டு இருக்கிறார்களே! மறுக்க முடியுமா? புராணம் இப்படி இருக்க அப்பாவிகளான தாழ்த்தப் பட்டவர்களை எப்படி கொலை செய்யலாம்? என்று ஒரு பதிவை இதுவரை சிவாவும் நேசகுமாரும் ஆரோக்கியமும் போட்டிருக்க வேண்டாமோ? போட்டார்களா? இல்லையே!

. பல்வான்சிங், ஐ.ஏ. எஸ்1959ல ஐ.ஏ.எஸ்ல தேறி வேலையில சேர்ந்தார். அந்தக் கால கட்டத்துல எல்லாரையும் போல சமுதாயத்தை மாத்தனும்கற மனநிலையில இருந்தவர். 1964ல பதவி விலகினார். நடந்தது என்ன? யாரோ ஒரு தலித். முடி வெட்டிக்கப் போயிருக்காரு. கடைக்காரர் வெட்ட முடியாதுன்னார். இல்ல வெட்டணும்னு தலித் கேட்க. அப்பன்னா இத்தன ரூவா குடுன்னு கூலிய உயர்த்திக் கேட்க. சரின்னு தலித் ஒத்துக்கிட்டாலும், கடைக்கு வெளியில ஒக்கார வச்சு முடி வெட்டிவிட்ட கேஸ் ஒன்னு. இத விசாரிச்சாரு பல்வான் சிங். இந்த வன்முறையைக் கண்டிச்சு எழுதியிருக்கார். வந்தது அரசச் செயலர் ஓலை. விசாரணை. அதுவரைக்கும் நல்லா வேலை செய்றன்னு சொன்ன உயரதிகாரியெல்லாம் உன் வேலை மோசம், இது தப்பு, அது தப்பு, சாதாரண விஷயத்தையெல்லாம் பெருசாக்குற, நீ ரொம்ப உணர்ச்சி வசப் படுற, ஒத்துப் போமாட்டங்கிற அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. வேலை மாத்தல் வருது. கேள்வி கேக்குறார். கடைசியில ஒன்னும் முடியாம பதவி விலகுறார். அப்புறமா ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - Balwan Singh’s autobiography: an untouchable in the IAS.
படித்த ஒரு கலெக்டருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண படிப்றிவில்லாத தாழ்த்தப் பட்டவனின் நிலைமையை அவன் நிலைமையில் இருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.

இன்று தமிழகத்தில் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரபு நாட்டு இறக்குமதியா? இல்லையே! உங்களைப் போன்றோரும் உங்களின் மூதாதையரும் செய்த தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு பொறுக்காமல் இஸ்லாத்துக்கு ஓடியவர்கள் தானே தமிழகத்தில் வாழும் பரம்பரை முஸ்லிம்கள்.! மறுக்க முடியுமா? அவர்கள் யாரிடமாவது சென்று நீங்கள் முன்பு எந்த சாதி என்று கேளுங்கள். அவர்களுக்கே தெரியாது. அந்த அளவு அவர்களின் வாழ்க்கையே இஸ்லாமாக மாறியிருக்கிறதே! இதைத்தான் மறுக்க முடியுமா? அம்பேத்கார்,அண்ணல் காந்தி, பெரியார் போன்றோர் சாதி ஒழிப்பிற்கு எத்தனை பிரச்சாரங்களைச் செய்தனர்! ஒழிக்க முடிந்ததா? இல்லையே!

மனு கொல்கிறது 'மனிதன் நான்கு வருணமாக பிரிக்கப் பட்டவன்' என்று. 'நான் ஹிந்துவாக இருந்து மனுவையும் பின்பற்றுவேன்.ஆனால் தீண்டாமையும் ஒழிக்கப் பட வேண்டும்' என்றால் 'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சொல்வது போல் இல்லையா? இதற்காக வெல்லாம் இதுவரை நீங்கள் குரல் கொடுத்தது உண்டா? முதலில் உங்கள் வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டு பிறகு அடுத்த வீட்டுக்கு வாருங்கள். அதுதான் நியாயமும் கூட.

இந்த பதிவு காழ்ப்புணர்வோடு இஸ்லாத்தை தூற்றிக் கொண்டிருக்கும் சிவா, ஆரோக்கியம், நேச குமார், போன்றவர்களுக்கான சிறிய பதிலே! மற்றபடி ஹிந்து மதத்தை விமர்சித்து யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. தங்கமணி, சிறில் அலெக்ஸ் ரோசா வசந்த், டோணடு சார், மோகன்தாஸ், மதி கந்தசாமி, ஜெயஸ்ரீ போன்ற நல்ல உள்ளங்களை நான் என்றுமே மதிப்பவன். அவர்களின் பதிவுகளையும் இனனும்பலரின் ஆக்கபூர்வமான பதிவுகளையும் தொடர்ந்தும் படித்து வருபவன் என்றும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.












14 comments:

suvanappiriyan said...

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.

Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8

வஜ்ரா said...

//
உலகில் உள்ள அறிஞர்கள் பெர்னாட்ஷா முதல் நம் மகாத்மா காந்தி வரை மனித விடுதலைக்கு ஒரே வழி இஸ்லாம் தான் என்று கூறும் போது இவர்கள் மட்டும் ஏன் இவ்வாறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்?
//
சும்மா கதை அடிக்கக்கூடாது. இஸ்லாம் தான் ஒரே வழி என்று காந்தி எப்போது சொன்னார்?

//
இந்த பதிவு காழ்ப்புணர்வோடு இஸ்லாத்தை தூற்றிக் கொண்டிருக்கும் சிவா, ஆரோக்கியம், நேச குமார், போன்றவர்களுக்கான சிறிய பதிலே! மற்றபடி ஹிந்து மதத்தை விமர்சித்து யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல.
//

யாருக்கு காழ்ப்புணர்வு? இதே வாதத்தை நீங்கள் கூறும் நேசகுமார், கால்கரி சிவா போன்றோர் மாற்றியும் கூறமுடியும்...இப்படி,

"இந்த பதிவு, இந்து மதத்தைத் தூற்றிக் கொண்டிருக்கும் x,y,z போன்றவர்களுக்கான சிறிய கேள்வியே. மற்றபடி இஸ்லாத்தை விமர்சித்து யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. "

இஸ்லாத்தைப் பற்றி கேள்வி கேட்டால் சேற்றை வாரி இறைத்தல் ஆகிவிடும், ஆனால், இந்து மதத்தின் மீது, உண்மையாகவே சேற்றை வாரி இறைத்து விட்டு, நான் கேள்வி தான் கேட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

தீண்டாமை பற்றியும், போலி மத குருக்கள் பற்றியும் நீங்கள் கவலைப் பட வேண்டியது இல்லை. உங்கள் மதத்தில் கல்லால் அடித்துக் கொல்வது, கை, கால்களை வெட்டுவது, கண்ணை நோண்டுவது போன்ற ஏழாம் நூற்றாண்டு தண்டனைகள் பற்றி விமர்சியுங்கள், பிறகு உங்கள் மதத்தவர் உங்களை எப்படி பார்கிறார்கள், நடத்துகிறார்கள் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

என்ன தான் தலித் விடுதலை என்று சொல்லிக் கொள்ளும் தலைவர்கள் இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைத்தாலும், அவர்களையும் சேர்துக் கொண்டு தான் இந்து மதம் இது நாள் வரை வாழ்ந்து வந்துள்ளது. இனிமேலும் வாழும்.

இஸ்லாத்தின் மீது, யாருக்கும் வெறுப்பு இல்லை. வெறுப்பு, இஸ்லாம் தான் உண்மை, மற்றவை யெல்லம் பொய், முகம்மது(ஸ்ல்) சொன்னது தான் "perfect" மற்றவை அனைத்தும் "imperfect" என்ற அடிப்படை கண்ணோட்டம் மீது தான்.

//

இந்த இஸ்லாத்தினால் தற்போது அதிக பலன் பெறுவது யார? நம் நாட்டு பூர்வ குடி மக்களான தாழ்த்தப் பட்டவர்கள் மற்ற எந்த மதத்துக்கு போனாலும் பெயரும் மதமும் தான் மாறுமே யொழிய அவன் கலாச்சாரம் மாறாது. அவன் செய்து வரும் தொழிலும் மாறாது. அதே தாழ்த்தப் பட்டவன் முஸ்லிமாக மாறினால் பெயர் கலாச்சாரம் தொழில் அனைத்தும் உடன் மாறிவிடுகிறது. இழி தொழில்கள் எதுவும் செய்ய மாட்டான். சிவா போன்றவர்களும் அவன் முஸ்லிமாக மாறியவுடன் அத்தொழில்களைச் செய்வதற்கு ஏவவும் மாட்டார்கள்.
//

பூணே யில், விபச்சார விடுதிகள் நடத்துவது கீழ் ஜாதியில் இருந்து மதம் மாறி இஸ்லாத்தைத் தழுவியவர்கள்.

எத்தனையோ கரீம் பாய்களும், நவாஸ், கலீல் களும், செறுப்பு தான் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். மதம் மாறிய பின், வாழ்கைத்தரமோ, சமூகத்தில் மரியாதையோ மாறியதாகத் தெரியவில்லை.

பாகிஸ்தானில், உயர் ஜாதி, மற்றும் கீழ் ஜாதி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். வேண்டுமானால் உங்கள் பாகிஸ்தானிய நண்பர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

//
இதை எல்லாம் காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வரும் நேசகுமார், ஆரோக்கியம், காலகரிசிவா,ஸ்ரீநிவாஸ் போன்றோருக்கு நொடிப் பொழுதில் இதெல்லாம் கை விட்டுப் போகிறதே என்ற பீதியில் கூப்பாடு போடுகிறார்கள். இதனால்தான் இதெற்கெல்லாம் காரணியான இஸ்லாத்தின் மேல் இவர்களின் கோபம் திரும்புகிறது.
//

இதையெல்லாம் பார்த்து சிறிப்பு தான் வருகிறது. பீதி யாருக்கு? இஸ்லாத்தில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டினால், உண்மை தெரிந்து, பலர் மதம் மாறிவிடுவார்களோ என்று உங்களுக்கு தான் பீதி!! அந்த பீதியினால் ஏற்படும் வெறுப்பு, கோபம்.

ஷங்கர்.

suvanappiriyan said...

'காந்தியார் சுடப் பட்டு இறந்ததை நான் ஏன் திராவிட நாட்டுக்கு, திராவிட மக்களுக்கு எல்லையற்ற நட்டம் என்று சொல்லுகிறேன்?இப்படிச் சொல்லுவதன் மூலம் ஏதாவது இலாபம், நலம் அடையலாம் என்கிற சமயோசித புத்தியாலா?இல்லவே இல்லை! ஒருக்காலும் இல்லை! இப்போது இப்படிச் சொல்லுவதால் எனக்கோ நம் கழகத்துக்கோ எவ்வித நன்மையும் ஏற்படாது. நம்மவர்களிலேயே சிலர் என்னை வெறுக்கக் கூடும். மற்றும் ஒரு செல்வாக்குள்ள ஒரு கூட்டத்தாரின் வெறுப்புக்குத் தான் ஆளாக நேரிடும். பின்னே ஏன் சொல்லுகிறேன் என்றால், என்னைப் போலவே காந்தியாரும் தாம் ஒரு 'சூத்திரன்' என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டார்.இந்து மதம் திருந்த முடியாதது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியா, இந்தியர், இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்றும்: சிந்து நதியால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்றும்: இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குக் கேடாக இருப்பது மத வெறியே என்றும்: தீண்டாமை,அரிஜனன் என்பது இந்து மத உணர்ச்சி உள்ளவரை மாற்றமடைய முடியாதது என்றும் கூறி வந்தார்.

ஒரே கடவுள்தான் உண்டு - அது தான் அல்லா, காட் என்றும்: குரான் இந்துக்கள் படிப்பதற்குரியது என்றும்: இந்துக்கள் முஸ்லிம்களுக்கு மிக்க தீங்கு இழைத்து விட்டார்கள் என்றும்: அவற்றைப் பரிகரிக்காமல் மேலால் ஒரு காரியம் செய்யத் தன்னால் அனுமதிக்க முடியாதென்றும் பச்சையாக கூற ஆரம்பித்து விட்டார்.

காந்தியார் விக்கிரக ஆராதனையை குறை சொன்னதோடு அல்லாமல் 'இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள்' என்றதிலிருந்தும், தானும் குரான் படித்துக் கொண்டு பஜனை செய்ததிலிருந்தும், மற்றவர்களையும் செய்யச் செய்ததிலிருந்தும் - சாதி மத சம்பந்தமாக அவர் அடைந்த மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா? என்று கேட்கிறேன்.

ஆகவே, நமக்கு மாத்திரம் அல்லாமல் 'இந்திய நாடு' முழுவதுமே சமய, சமுதாயத் துறையில் ஏற்பட இருந்த புரட்சிகரமான அனேக மாறுதல்கள் தான் காந்தியார் கொலை செய்யப் பட நேர்ந்ததற்குக் காரணம். அப்படிப்பட்ட மாறு தலை விரும்பும் நாம் அவரின் கொலைக்காக மிகமிகத் துன்பமும் துயரமும் அடைகிறோம்.

-தூத்துக்குடியில், 8,9 -5-1948 -ல் நடந்த 18-ஆவது மாகாண தி.க. மாநாட்டில் பெரியாரின் உரை - 'குடி அரசு' 15-5-1948

கால்கரி சிவா said...

சுவனப்பிரியன்,

இஸ்லாமை நான் தூற்றினேனா. நான் அரேபியர்களை தூற்றினேன், அது இஸ்லாமிம் மேல் உள்ள காழ்புணர்ச்சியா. சவூதியில் மதத்தின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல் களை சுட்டிக் காட்டுகிறேன் என்று சொன்னேன். சொல்வேன். இஸ்லாமை தழுவிய அரேபியர்கள் அவர்களின் பிறப்பால் எப்படி ஏற்றதாழ்வுகளைப் பார்த்து சக அரேபிய இஸ்லாமியரை இகழ்கிறார்கள் என்று சொல்வேன்.

இஸ்லாமை விமர்சரிக்கும் அளவிற்கு எனக்கு ஞானமில்லை. நான் குரானையோ மற்ற வேதங்களையோ படித்தவனில்லை. வேதங்களைப் படித்து அறிந்து கொள்ள தனி தகுதிவேண்டும், பக்தி வேண்டும் அந்த வேதங்களை அருளிய பெரியவர்கள் இயங்கும் தளங்களுக்கு நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும். பிறகுதான் அதைப் பற்றி பேச வேண்டும். அந்த அளவிற்கு எனக்கு அறிவில்லை.

மேலும் விமர்சனங்களை தாங்கும் அளவிற்கு இஸ்லாமியர்கள் திறந்த மன உடையவர்கள் என எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை.

அதைவிட எனக்கு என் உயிரின்மேல் அதிக அன்பு. நீங்கள் இறந்தபிறகு சுவனம் போவதாக நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நானோ இப்போதே சுவனத்தில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். நாம் நம் நம்பிக்கைகளுக்கு பரஸ்பர மரியாதை அளிப்போம்.

நான் அரேபியாவில் பார்த்த நெகடிவ்களை ஹைலைட் செய்கிறேன். என் வாததிற்கு எதிர் வாதமிடவேண்டுமென்றால் நீங்கள் பாஸிடிவ்களை ஹைலைட் செய்யுங்கள். அதுதான் முறை


இணையத்தில் அதிக பட்சமாக அலி சினா என்பவர் இஸ்லாமை விமர்சிக்கிறார். வாதாட அழைக்கிறார். சவால் விடுகிறார். அந்த இணையம் நீங்கள் இருக்கும் நாட்டில் நிச்சயமாக முடுக்கப் பட்டிருக்கும். இந்த இணைய முகவரியை இங்கே அளித்தால் உங்களின் ப்ளாக்கும் உங்கள் நாட்டில் தடை செய்யப் படும் என்பதை அறிக. அவருடைய பெயரை சொன்னதிற்காக என மேல் எத்தனை பேர் பாயப்போகிறார்களோ?

அன்புடன் சுவன வாசி

கால்கரி சிவா

கால்கரி சிவா said...

Dear Neruppu Siva,

I do not want to advertise what I did for our fellow Indians?

If you want to know send a comment in my blog and I will let you know what I did.

Regards,

Calgary Siva

suvanappiriyan said...

திரு ஆரோக்கியம்!

போர்க் களங்களில் எதிரிகளைப் பார்த்து சொல்லப் பட்ட வசனத்தை மற்ற மதத்தவர்களுக்காக என்று எடுத்துக் கொள்வது உங்களுக்கே ஆரோக்கியமாகப் படுகிறதா! கோவில்களில் குண்டு வைப்பது இஸ்லாத்தை களங்கப் படுத்துவதற்காக ஒரு சில இந்து அமைப்புகள் செய்யும் சூழ்ச்சிகளே!கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கோர்ட் மூலம் அதற்கு காரணம் முஸ்லிம்கள் அல்ல என்று நிரூபணம் ஆகி உள்ளதே!

ஷியா மசூதியில் குண்டு வைப்பதன் பிண்ணனியைப் பார்ப்போமா! பிரிட்டிஷாரும், அமெரிக்கரும் ஈராக்கில் நீண்ட காலம் இருந்து பெட்ரோல் வளத்தை சுரண்ட வேண்டும் என்றால், உள் நாட்டு கலகத்தை உண்டு பண்ண வேண்டும். முன்பு எப்படி பிரிட்டிஷார் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தார்களோ அதே சிந்தனையில் ஈராக்கிலும் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்பு ஈராக் ராணுவ கேம்புக்குள் ஈராக்கிய ராணுவ சீருடை அணிந்த இருவர் ஈராக் ராணுவத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். சாமர்திதியமாக அநடத இருவரையும் பிடித்து விசாரித்தால் அவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் சிறை பிடித்தது ஈராக் ராணுவம். ஆனால் அன்று இரவே சிறைறை உடைத்து அவர்களை கொண்டு சென்று விட்டனர் பிரிட்டிஷiர். இது பிபிசி யில் கூட இரண்டு நாள் தொடர்ந்து காண்பித்ததை நாம் அறிவோம். இது போன்று வெளியில் வராத செய்திகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இது போன்ற காரியங்களைச் செய்து விட்டு பழியை ஷியா சன்னி என்ற இரு பிரிவினர் மேலும் போட்டு விட்டு அவர்கள் அடித்துக் கொள்வதை வேடிக்கைப் பார்ப்பதே இவர்கள் வேலை.

இது போக ஒரு சில முஸ்லிம்களிலும் ஆயுதங்களை கையிலெடுத்து அப்பாவிகள் இறப்பதற்கு காரணமாகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப் பட வேண்டியவர்களே! தவறாக வழி காட்டப் பட்ட அவர்களை இனம் கண்டு அவர்களை நேர் வழியின் பால் கொண்டு வர நாங்கள் அதீத முயற்சி எடுத்து வருகிறோம். இதில் ஓரளவு குறிப்பிட்ட வெற்றியும் பெற்றுள்ளோம்.

arunagiri said...

கால்கரி சிவா எழுதியது அராபியர்கள் நம் மக்களை நடத்தும்முறை பற்றிய பதிவு. நம் நாட்டு சக தமிழன் அவமதிக்கப்படுகிறான் என்ற ஆதங்கம் இல்லாமல், அராபியர்களுக்கு ஆதரவாப் பேசுவது, உங்களது pan-islamist அணுகுமுறையையே காட்டுகிறது. இந்த குற்றச்சாட்டத்தான் முஸ்லீம்கள் மீது Rss போன்ற இயக்கங்கள் சுமத்துகின்றன. அராபியருக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் எழுத்து அக்குற்றச்சாட்டினை உறுதிப்படுத்துவதுபோல் அமைவது துரதிர்ஷ்டம்தான். உங்களின் அரேபியருக்கான வக்காலத்து இந்தியப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட அனைத்து முஸ்லீம் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி . மற்றபடி இஸ்லாத்துக்கு மாறினால் சாதி இல்லை என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்களே. ராவுத்தர் தெருவில் இருந்த எனக்குத்தெரியும்.

suvanappiriyan said...

திரு கால்கரி சிவா!

சுவனத்தை நான் இறப்புக்கு பிறகு இறைவன் நாட்டம் இருப்பின் பெற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு இந்த உலகத்திலேயே அதாவது கனடாவிலேயே அப்படிப் பட்ட வாழ்க்கையை வாழ்வதாக கூறுகிறீர்கள். இது சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'நாம் அழகிய வாக்குறுதி அளித்து அதை மறுமையில் அடைய விருப்பவன் இவ்வுலகின் வாழ்க்கையின் வசதிகளை நாம் யாருக்கு வழங்கினோமோ அவனைப் போன்றவரா? அவன் யுக முடிவு நாளில் இறைவன் முன் நிறுத்தப் படக் கூடியவன்.' குர்ஆன் 28:62

'அவர்கள் தமது சுமைகளையும் தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள். இட்டுக் கட்டியது பற்றி யுக முடிவு நாளில் அவர்கள் விசாரிக்கப் படுவார்கள். குர்ஆன் 29:20

//'இவ்வுலகின் வாழ்க்கையின் வசதிகளை நாம் யாருக்கு வழங்கினோமோ'//

இந்த உலகத்திலேயே நான் சுவனத்தில் வாழ்கிறேன் என்று மமதையில் கூறும் கால்கரி சிவாவைப் பார்த்து பேசுவது போல் இருக்கிறதல்லவா இந்த வசனம்.!இந்த உலகில் சிரமத்தை சுமக்கும்(சிவா பார்வையில்) என்னைப் போனறவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை வாழ்ந்தால் இறப்புக்குப் பின் நிரந்தர சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்போம். எனவே தான் உங்களுக்கு அத்தகைய கட்டுப் பாடற்ற வாழ்க்கையை இறைவன் இவ்வுலகத்திலேயே கொடுத்து விடுகின்றான். நன்றாக அனுபவியுங்கள்.

suvanappiriyan said...

திரு சங்கர் நாராயணன்!

காந்தியடிகள் சொன்னவற்றை மேலே கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள்.இஸ்லாத்தைப் பற்றி தாராளமாக விமர்சியுங்கள்.குர்ஆனிலும், முகமது நபி வாழ்க்கையிலும் ஏதும் தவறுகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்.எங்களால் முடிந்த வரை விளக்கம் அளிக்கிறோம். அதை விடுத்து தனி நபர்கள் செய்யும் அபத்தங்களை இஸ்லாத்தின் மேல் ஏன் ஏற்றுகிறீர்கள்! என்று தான் நான் கேட்கிறேன்.

மேலும் செருப்பு தைப்பதோ மலம் அள்ளுவதோ இழிவு என்று இஸ்லாம் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. உங்கள் மதம் இழிவு என்று ஒதுக்கி அவர்களை கோவில்களில் கூட ஏற்றாத தீண்டாமைக் கொடுமையைத் தான் சுட்டிக் காட்டினேன். பாகிஸ்தானில் இந்த தொழிலை முஸ்லிம்கள் செய்தாலும் பள்ளிவாசல் உள்ளே வந்து தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்தத் தொழில் செய்பவர்கள் பள்ளிவாசலுக்கு முதலில் வந்தால் முதல் வரிசையில் அவர்தான் நிற்பார். ஆட்சியாளரான முசரப் கடைசியில் வந்தால் கடைசி வரிசையில் தான் நிற்க வேண்டும். இதை நம் நாட்டிலேயே டெல்லி ஜூம்ஆ மசூதியில் கடைசி வரிசையில் நின்ற நம் ஜனாதிபதிகளையும் பார்த்தோமே.

புனே விபசார விடுதியை நடத்துவது மதம் மாறிய முஸ்லிம்கள் என்பது விந்தையாக இருக்கிறது. இது பற்றி பாம்பேயில் உள்ள என் நண்பனிடம் விசாரிக்கிறேன். உங்களின் செய்தி உண்மையாக இருந்தால் அவர்களின் பெயர்தான் மாறியுள்ளது. இன்னும் அவர்கள் இஸ்லாத்துக்குள் வரவில்லை என்பது தான் என் பதில்.

suvanappiriyan said...

என் கம்பெனியின் சேல்ஸ் மேனாக இருந்த மலையாளி அய்ம்பது ஆயிரம் (தோராயமாக ஏழு லட்சம் ரூபாய்) ரியாலை எடுத்துக் கொண்டு இந்தியா சென்று விட்டான். பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டு, சாமர்த்தியமாக ரீ என்ட்ரி விஷா அடித்து வியாழக் கிழமை இரவு விமானம் ஏறி விட்டான். எங்களுக்கும் ,முதலாளிக்கும் சனிக் கிழமை தான் தெரிய வந்தது. இப்படி நம்பிக்கை துரோகம் செய்ததை எண்ணி என்னிடம் சொல்லி ரொம்பவும் வருத்தப் பட்டார். நானும் அவரிடம், 'ஒரு இந்தியன் இப்படி செய்ததை எண்ணி நான் வெட்கப் படுகிறேன்.' என்று சொன்னேன்.அதற்கு அவர்,'இந்த உலகம் அனைத்தும் மண்ணால் படைக்கப் பட்டது. முடிவில் மக்கி மண்ணாகவே ஆகி விடும்.இந்த பணத்தை வைத்துக் கொண்டுஎத்தனை நாள் வாழ்ந்து விடுவான்? தவறான வழியில் வந்த அந்த பணம் செலவும் தவறான வழியிலேயே செலவு செய்யப் படும். அவன் எடுத்து சென்ற பணத்தை பத்தே நாட்களில் என்னால் சம்பாதித்து விட முடியும். இறப்புக்கு பின்னால் மறுமை நாளில் என் கணக்கில் அவன் புறத்திலிருந்து நன்மைகள் எழுதப் படும். எனவே எனக்கு எந்த ஒரு நஷ்டமும் கிடையாது' என்று கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்ன அவரைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்.ஒரு சிலர் 'அவன் ஊருக்கு பாம்பேயில் இருந்து ஆட்களை அனுப்பி அவன் கை, கால்களை எடுத்து விடலாம் ' என்று ஆலோசனை சொன்னபோது, 'வேண்டாம்! இதனால் அவன் குடும்பம் சிரமப் படும்' என்று அதற்கும் உடன் பட மறுத்து விட்டார். இப்படிப் பட்ட நல்லவர்களும் சவூதியில் இருக்கத் தான் செய்கிறார்கள். எந்த ஒரு நாட்டிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் கலந்தே இருப்பார்கள் என்பதை சிவா எப்போது விளங்கிக் கொள்வார் என்று தெரியவில்லை.

suvanappiriyan said...

இறைவனின் தூதர் முகமது நபி அவர்கள் அறிவிப்பதாவது

'விபசாரி, விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரிவதில்லை. மேலும் ஒருவன் மது அருந்தும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது இறை நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு திருடுவதில்லை'

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா நூல்: புகாரி

மேற் கண்ட நபி மொழியில் இருந்து இது போன்ற பாவங்களை தொடர்ந்து செய்து வருபவன் அரபியில் பெயர் வைத்திருப்பதாலேயே அவன் முஸ்லிமாகிவிட முடியாது. இஸ்லாம் என்பது மதமல்ல. அது ஒரு மார்க்கம். குர்ஆனும், முகமது நபியின் கட்டளைகளையும் தன் வாழ்க்கையில் முடிந்தவரை தொடர்ந்து கடை பிடித்து வருபவனே முஸ்லிம். எனவே புனேயில் விபசார விடுதி நடத்துபவர்கள் மதம் மாறிய முஸ்லிம்கள் என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அவர்கள் இன்னும் முஸ்லிம்களாக மாறவில்லை என்பது தான் மேற் கண்ட நபி மொழியில் இருந்து விளங்குகிறது.

suvanappiriyan said...

'தேனி மாவட்டத்தில் ஒரு பெரிய சாதிக் கலவரம் நடந்தது. இதில் தலித்துகள் கடுமையாக பாதிக்கப் பட்டார்கள். அங்குள்ள துரை ராஜபுரம் என்ற கிராமத்தில் இருக்கக் கூடிய மக்கள் எல்லாம் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிடுகிறார்கள். 'எங்க ஊர்ல ஒட்டு மொத்தமாக நாங்க எல்லோரும் முஸ்லிமாக மாறப் போகிறோம்' என்று அதில் பிரகடனப் படுத்தி இருந்தார்கள். இந்தச் செய்தி தமிழ் நாட்டின் பிரபலப் பத்திரிக்கைகளில் வெளி வந்தது. அப்போது நாங்கள் அம்மக்களுடன் இணைந்து களப் பணிகளைச் செய்து வந்தோம்.இந்த செய்தி வந்ததும் நாங்கள் அந்த இடத்திற்கு வி ரைந்தோம்.அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.பத்திரிக்கைகள் மத மாற்றம் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு வயசான அம்மா பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

'அய்யா! எங்க காலத்தில நாங்க இந்த அழுக்குத் துணியை கட்டிக் கிட்டு எப்படியோ காலத்தைக் கழிச்சிட்டோம்.
ஆனால் எங்கள் பிள்ளைகள் காலேஜூக்குப் போகுதுங்க.பள்ளிக் கூடத்துக்குப் போகுதுங்க. அதுக்கெல்லாம் வெள்ளைத் துணி கட்டனும். பேண்ட் போடனும். செருப்புப் போடனும்னு நினைக்கிறாங்க. ஆனால் இந்த ஊர்ல அதெல்லாம் போடக் கூடாதுன்னு சொல்றாங்க. இந்தத் துணிமணிகள் நாங்க யாருக்கிட்டேயும் போய கேக்கல: வாங்கல.நாங்க உழைக்கிறோம். உடுத்தணும்னு ஆசைப் படுறோம்.குழந்தைங்க நல்ல துணி உடுத்தணும்னு ஆசைப் படறாங்க. ஆனால் குழந்தைங்க இப்படி நல்ல துணி போடக் கூடாதுன்னு சொல்றாங்கய்யா'

'சரி, இதெல்லாம் நீங்கள் முஸ்லிமாக மாறினால் கிடைச்சிருமா?' - பத்திரிக்கையாளர்கள்.

'எங்க சொந்த பந்தங்கள் இதுக்கு முன்னால சில ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிமுக்குப் பொயிருக்காங்க. அப்படி மாறினவங்க எல்லாம் முட்டுக்கு கீழே வேட்டி கட்டுறது, செருப்புப் பொடுறது என்றெல்லாம் மாறியிருக்காங்க. நாங்க எதெல்லாம் எதிர் பார்க்குறோமோ அதெல்லாம் அங்கு கிடைக்கிறது.'
'எங்க ஊர்ல ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்ற பிறகு தான் அதை யொட்டி கலவரம் நடந்திச்சு. முஸ்லிமா மாறினா இதெல்லாம் நடக்காதான்னு நீங்க கேட்கிறீங்க. நீங்க இந்த ஊருக்கு வந்து மொதல்ல என்ன செஞ்சீங்க? நாங்க எல்லாம் கவனிச்சிக்கிட்டுத்தான் இருந்தோம். முதல்ல எங்க போனீங்க?'

'நாங்கள் அந்த டீக் கடையில் டீ குடிக்கப் போனோம்' -நிருபர்கள்

'அந்த டீக் கடை யார் டீக் கடை தெரியுமா?'

'அது ஒரு முஸ்லிம் கடை' - நிருபர்கள்.

'அவரு பேரு உங்களுக்குத் தெரியுமா?'

'தெரியலயே'

'அந்த டீக் கடை பாய்க்குப் பேரு அல்லா பிச்சை. அவர் முன்று வருஷத்திற்கு முன்னால எங்க சமூகத்தில, எங்க பக்கத்து வீட்டுல இருந்த ஆளு. அவரும் அவருடைய குடும்பமும் இப்ப முஸ்லிமா மாறிட்டாங்க. அவரு கடையில எல்லாரும் டீ குடிப்பாங்க. அவருடைய கூடப் பிறந்த தம்பிதான் இன்னொரு கடை வச்சிருக்காரு. அவர் பேரு துரைப் பாண்டி. அவர் கடையில் நாங்களும் எங்க சமூகத்தைச் சேர்ந்தவங்களும் டீ குடிக்கலாம்.ஆனால் வேற யாரும் டீ குடிக்க மாட்டாங்க.ஒரே தாய் தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள் தான் ஆனால் எவ்வளவு பெரிய வேறு பாடு பார்த்தீர்களா? இத நீங்க பார்த்து கேட்டு தெரிஞ்சி உண்மைன்னு உங்களுக்குப் பட்டா நீங்க உங்க பேப்பர்ல எழுதலாம். எழுதுவீர்களா?' என்று அந்த அம்மா ரொம்பவும் இயல்பாகக் கேட்டார்கள்.

- கொடிக்கால் செல்லப்பா

suvanappiriyan said...

'இஸ்லாமிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் கீழ் வாழ்ந்து வரும் அந்நிய மதத்தவரை கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதன் நறு மணமோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.'

இதை அப்துல்லா இப்ன் அம்ர் என்ற நபித் தோழர் நபிகள் நாயகம் சொல்லக் கேட்டதாக புகாரியில் பதிவாகியுள்ளது.

அப்பாவிகளை கொலை செய்பவர்களை முகமது நபி எந்த அளவு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. சிறு பான்மையினருக்கு இஸ்லாமிய ஆட்சியில் எந்த அளவு உரிமை இருக்கிறது என்பதும் தெளிவாகிறது.

Unknown said...

//ரஹீம் பாயாகவும் ரஹ்மான் பாயாகவும மாறி விட்டால் நேசகுமார், கால்கரி சிவா போன்றோரின் வீட்டில் மலம் அள்ள யார் வருவார்? சுடுகாட்டில் பிணத்தை சுடுவது யார்?//

என்ன கொடுமை!! ஏன் ரஹீம் பாய், ரஹ்மான் பாய் மலம் அள்ள கூடாத? சுடுகாட்டில் பிணத்தை சுடக்கூடாதா? பிறகு யார்தான் இதை செய்வார்? நீங்களா ?
இல்லையென்றால் இஸ்லாத்தில் மலம் அள்ள கூடாது என்று கட்டளைய? அப்படியென்றால் அது மதமா?.....

இந்து மதத்தில் செருப்பு தெய்ப்பவன் கோவில் செல்லக்கூடாது என்று கூறவில்லை.....

பிழையாகவே இருந்தாலும் நீங்கள் சுட்டிகாட்டிய விதம் பிழை.
ஒருவனின் தொழிலை இழிவுப்படுத்திதான் இஸ்லாத்தை பெருமைப்படுத்த வேண்டுமா?

எல்லோரையும் உங்களைப்போல் பாருங்கள்.
அணைத்து தொழில்களுக்கும் மதிப்பளியுங்கள் நண்பரே.