Followers

Tuesday, April 11, 2006

எகிப்தில் முதலைகளை வணங்குகிறார்களா?

எகிப்தில் முதலைகளை வணங்குகிறார்களா?

கேள்வி : இறந்தாலும் நல்லதானாலும் கெட்டதானாலும் குழந்தைக்கும் நோயாளிக்கும் பாலை உபயோகிக்க காரணம் என்ன?- ஆர்.சுந்தரலிங்கம், முக்கட்டி சோலாடி, பிதர் நாடு.

பதில : பால், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பச்சரிசி போன்றவை தமிழக கலாச்சாரத்துடன் நெடு நாளைய தொடர்பு கொண்டிருப்பவை. ஒவ்வொரு நாட்டு கலாச்சாரங்களில் இந்த மாதிரியான பொருட்கள் மாறுபடும்.

நாம் பாம்பை நாகராஜவாக வணங்குகிறோம். எகிப்தியர்களுக்கு நைல் நதியில் வாழும் முதலைகள் தெய்வங்கள். சிலருக்கு ஆமை ஓரிடத்தில் புனிதமாகக் கருதப் படுபவை வேறு இடத்தில் அபசகுணமாகவும் இருக்கலாம்.

மனிதர்கள் வேளாண்மையைக் கடை பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். அதனால் பால் தயிர் நெய் ஆகியவை நமது சடங்குகளில் ஒரு அங்கமாக மாறி விட்டது.

தினமலர் - அறிவியல் ஆயிரம் - 17-01-2006

//எகிப்தில் வாழ்பவர்கள் முதலையை தெய்வமாக கொண்டுள்ளனர்//

இந்த செய்தியை எதிலிருந்து எடுத்தார்கள்? என்னுடன் ஒன்றாக அலுவலகத்தில் வேலை செய்யும் எகிப்தியரிடத்தில் 'முதலையை தெய்வமாக வணங்கும் பழக்கம் உண்டா?' என்று கேட்டேன். மிகவும் கோபப் பட்டார். என்பது சதவிதம் முஸ்லிம்களும் இருபது சதவீதம் கிறிஸ்தவர்களும் உள்ள நாட்டில் எப்படி முதலைகளை தெய்வமாக்குவோம்? என்று திருப்பிக் கேட்டார். இஸ்லாம் எகிப்துக்கு வருவதற்கு முன்பு ஹிந்துக்களைப் போல் சிலைகளையும் காளைக் கன்றுகளையும் வணங்கி வந்ததாக சரித்திரம் சொல்கிறது. தற்போது அந்த பழக்கங்கள் எல்லாம் முற்றிலும் ஒழிந்து விட்டது என்கிறார். எகிப்திலிருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்ததனால் தினமலர்க் காரருக்கு பழைய ஞாபகம் இன்னும் இருக்கிறதோ என்னவோ!

//நாம் பாம்பை நாகராஜவாக வணங்குகிறோம்//

வணங்கி விட்டுப் போங்கள். உங்களுக்கு நாகராஜாவை மட்டும் தானா வணங்கத் தெரியும்!பசு கழுகு மூஞ்சுறு பன்றி யானை என்று எதை விட்டு வைத்தீர்கள்.எல்லாமே வணங்கப் பட வேண்டியவை உங்கள் அகராதியில். ஆனால் மதிக்கப்பட வேண்டிய மனிதன் மட்டும், அதுவும் தாழ்த்தப் பட்டவன் மட்டும் தொட்டால் தீட்டு. கடவுளைக் கூட அந்த பாவப் பட்டவன் தூரத்திலிருந்து தான் தரிசிக்க வேண்டும். என்ன அழகிய மார்க்கம் அய்யா தினமலர்க் காரரே! புல்லரிக்கிறது போங்கள்.

இது போன்ற அபத்தங்களை இனி அறிவியல் பகுதியில் வெளியிடாமல் உங்களின் ஆன்மீகப் பகுதியில் வெளியிடுமாறு நெடு நாளைய வாசகனான நான் கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

Bala said...

Don't read dinamalar. They will publish only this kind of junk news only.

Bala said...
This comment has been removed by a blog administrator.