Followers

Tuesday, April 11, 2006

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2

ஜி. மார்கோலத் கூறுகிறார்:

உலகத்திலுள்ள பெரும் மதக் கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்தாலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத் தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில்அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. அய்ரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்குசமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.

Introduction to J.M.Rodwells The Koran, New York: Every Mans Library 1977, page 711.

மாரீஸ் புகைல் கூறுகிறார்:

முகம்மது நபி குர்ஆனைப் புனைந்தார் என்று சொல்லப் படும் கூற்று அடிப்படை யற்றது.கலிவி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் - இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராக முடியுமா? அது மட்டுமல்ல, அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்து பார்த்திராத- இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித் துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?

Maurice Bucaille – The Bible, The Quran, and Science 1978, page 125


டாக்டர் ஸ்டெயின் காஸ் கூறும்போது:

அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோல்களைக் கொண்டுபார்க்கக் கூடாது.மாறாக முகமது நபியுடன் வாழ்ந்த தோழர்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்த நாட்டு மக்களிடையே எத்தகைய மாற்றங்களை உருவாகக்கியது என்பவற்றைக் கொண்டு அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும். கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்சச்சிகளை மாற்றி ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பதுவரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதைத் தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமூகமாக மாற்றிவரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச் சென்றிருப்பதில் இருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம்.

Dr Steingass – Quoted in Hughes Dictionary Of Islam, Page 528


ஸர். வில்லியம் மூர் கூறுகிறார்:

குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம், சமயம், ஒழுக்கம்,விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் படர்ந்து நிற்கிறது.- குர்ஆன் அனைத்துக்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பன்னிரண்டு நூற்றாண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் தான் அருளப் பட்ட காலத்தில் இருந்தது போலவே இன்றளவும் தூய்மையுடன் விளங்கும் நூல் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை.

Sir William Muir – The Life Of Mohamed, London 1903,Ch. The Coran Page 711

கேனான் டெய்லர்

ஒதுங்கிச் செல்லும் துறவு மனப் பான்மைக்குப் பதிலாக பிரச்னைகளைத் துணிச்சலுடன் சந்திக்கும் மனோ பாவத்தை இஸ்லாம் உருவாக்கியது. அடிமைகளுக்கு நம்பிக்கையும் மனித குலத்திற்கு சகோதரத்துவத்தையும்அளித்து மனித இயல்பின் அடிப்படைத் தன்மையை அங்கீகரித்தது.

Canon Taylor, Paper Read Before The Church Congress at Walver hamlton, Oct 7, 1887, Quoted by Arnod in The Preaching of Islam, Page71-72

டி லேசி ஓலேரி

'' வெற்றி கொள்ளப் பட்ட மக்கள் மீது வாள் முனையில் இஸ்லாத்தை முஸ்லிம் வெறியர்கள் திணித்தனர்' என்பது சில சரித்திர ஆசிரியர்கள் மிகச் சாதுர்யமாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்த செய்தியாகும். ஆனால் இந்த கருத்தோ - கற்பனையே ஆகும். அதுவும் அபத்த கற்பனையே ஆகும்.

De Lacy O’Leary. Islam at the Crossroads, London 1923. page 8

ஹெச்.ஏ.ஆர்.கிப்

இஸ்லாம் மனித குலத்திற்கு இன்னும் ஓர் சேவையினை ஆற்ற வேண்டியுள்ளது. அய்ரோப்பாவை விட கிழக்கு நாடுகளுக்கு மிக அருகில் இஸ்லாம் நிற்கிறது. இனங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இஸ்லாம் ஓர் அழுத்தமான பின்னணியைக் கொண்டுள்ளது. பல் வேறு பட்ட இனங்களைச் சார்ந்த மக்களை ஒன்றினைத்து அவர்களுக்கு சம அந்தஸ்து சம வாய்ப்பு முயற்ச்சிகளுக்கான சம உரிமை வழங்குவதில் இஸ்லாமியச் சமூகம் கண்டுள்ள வெற்றிக்கு இணையான சாதனையை வேறு எந்த சமூகமும் பெற்றிருக்கவில்லை. மரபுகளுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் வலிமை இன்றும் இஸ்லாத்திடம் இருக்கிறது. கிழக்கிலும் மேற்கிலும் இன்று மோதிக் கொள்ளும் பெரும் சமூகங்கள் ஒற்றுமை ஒத்துழைப்புக்கானசூழ் நிலையை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு இஸ்லாம் மிகச் சிறந்த கருவியாக தவிர்க்க முடியாத வழி முறையாக இருப்பதைஅவர்கள் காண்பார்கள். அய்ரோப்பாவுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் இஸ்லாத்தின் கரங்களில் தீர்வுகள் உண்டு. அந்த இரு பெரும் சமூகங்களும் ஒன்று பட்டால் அமைதியான சூழ் நிலை உருவாகும் வாய்ப்புகள் பன் மடங்கு பெருகி விடும். இந்தச் சாதனை புரிய இஸ்லாத்தின் உதவியைப் புறக்கணித்து அதற்கு விரோதமான போக்கினை மேற் கொண்டால் இருவருக்குமே அழிவு தான் நிச்சயம்.

H.A.R.Gibb, Whither Islam, London, 1932, Page 379

2 comments:

╬அதி. அழகு╬ said...

முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டிய, சான்றுகளுடன் கூடிய தகவல்கள்.

நன்றி!

ஆரோக்கியம் kettavan said...

சுவனப்பிரியன்,

நீங்கள் கொடுத்துள்ள தகவல்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ள மறுக்கும் 'மூளை' கரியாகிப் போனவர்கள் சிலர் இஸ்லாத்திற்கு முஸ்லிமலாதவர்களின் மூலம் பரிந்துரை தேடுவதாகத் திரித்து எழுதுவர். எனினும் அவர்களின் சாயம் 'வெளுத்து' தான் வருகிறது

தொடருங்கள் உங்கள் பணியை.