முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
-குறள்: 388
நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.
அவ்வளவு ஏன் 'நான் பகுத்தறிவாதி' என்று கூறிக் கொள்ளும் கலைஞரே கூட 'அய்யன் திருவள்ளுவர்' என்று புகழ்ந்து இந்த கவிஞரையும் தெய்வசக்தி கொடுத்ததை நம் காலத்திலேயே பார்த்தோம். திருவள்ளுவரைப் பற்றிய முறையான வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடம் இல்லை. 1959 ஆம் ஆண்டு கே.ஆர். வேணுகோபால் சர்மா என்ற ஓவியர் கற்பனையில் வரைந்த ஒரு உருவத்தைத்தான் இன்று வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் என்ற பெயரே கற்பனையாக சூட்டப்பட்ட ஒன்று. இதற்கு எந்த ஒரு ஆதார நூல்களும் இல்லை. இனி மு.க.ஸ்டாலினின் மகன் முதல்வராகும் போது தாத்தாவின் புண்ணியத்தில் வள்ளுவரும் தமிழ்நாட்டில் தெய்வமாக்கப்படலாம். தமிழ் சமூகம் அதையும் அங்கீகரித்துக் கொள்ளும். :-)
இது ஒரு புறம் இருக்க இந்து மத வேதங்களின் தொகுதிகளில், விளக்கங்களில் ஒன்றாக ஸ்மிருதிகள் விளங்குகின்றன. இந்த வேதங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்படாமல் காதால் கேட்டு மனனம் செய்தே பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவேதான் சங்க இலக்கியங்களில் இந்த வகை நூல்களுக்கு 'எழுதாக் கிளவி' என்று பெயரிடுகின்றனர். எழுதி வைத்ததையே நமக்கு தோதாக மாற்றி விடும் மனித மனம் செவி வழிச் செய்தியாகவே பல நூற்றாண்டுகள் இருந்த ஒரு வேதத்தை எந்த அளவு பாதுகாத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ஸ்மிருதிகள் என்றால் என்ன?
“இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”.
‘அபிதான சிந்தாமணி’ (பக்கம் 702)
“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்
“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்
அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.
“மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு
நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ! தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் கலைஞர் அமர்ந்திருக்கிறாரே! தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ!
“நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).
ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.
மனுவாறு விளங்க
மனுநெறி சிறக்க
மனுநெறி தழைக்க
உழைத்த நம் மன்னர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவே மக்களிடம் காண்பித்து வந்தனர். உயிருடன் இருக்கும் போதே கடவுள் தன்மை வழங்கப்பட்ட மன்னர்கள் இறப்புக்கு பின்னால் வாரிசுகளின் சக்திக்கேற்ப சகதி வாய்ந்த கடவுளாக்கப்படுகின்றனர். வேத ஸ்மிருதிகளே மன்ன்தான் கடவுள் என்று சொல்வதால் மக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மன்னனை கடவுளாக்கும் வழக்கம் நம்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. அது உலகம் முழுவதும் அனைவரும் கடைபிக்கப்படும் பழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
'நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு முகமது நபியே அதிக தகுதியுடையவர்ள்' என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். ம்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்கள்' என்று கூறினேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'எனது மரணததிற்கு பின் எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபி அவர்கள் 'ஆம்: அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்.' என்று கூறினார்கள்.
-அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் நூல்: அபுதாவுத் 1828
அன்று மட்டும் முகமது நபி இப்படி ஒரு அறிவுரையை சொல்லாமல் இருந்திருந்தால் முகமது நபியும் கடவுளின் அவதாரமாக்கப்பட்டிருப்பார். உலகம் முழுவதும் இதுபோன்ற ஒரு வழக்கம் இருந்ததாலேயே அந்த நபித் தோழரும் முகமது நபியிடம் அனுமதி கேட்கிறார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் கடவுள் கொள்கைகளில் எப்படி வேறுபடுகிறார்கள் என்று பார்ப்போம். இந்துக்கள் படைக்கப்பட்ட சூரியன் சந்திரன் காற்று போன்ற அனைத்து வஸ்துக்களையும் கடவுள் என்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ இவை அனைத்தும் இறைவனுக்குரியவை. இவை வணங்குவதற்கு தகுதியுடையவை அல்ல என்கிறார்கள்.
இனி இந்து மத வேதங்கள் ஸ்மிருதிகளுக்கு மாற்றமான கருத்தை கொண்டிருப்பதை பார்ப்போம்.
'அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமத்தை கைக்கொண்டு தம்முடைய இயல்புகளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்'
-பகவத் கீதை 7:20
'ஏகம் ஏவம் அத்விதயம்' - 'அவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை' - சந்த்க்யோ உபநிஷத் 6:2:1.
'அவன் வடிவத்தை காண முடியாது. எவர் கண்ணுக்கும் புலப்படாதவன்.எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கிறார்களோ அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன்.'
-ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20
'எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள்' -யஜூர் வேதம் 40:9
'நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்'- ரிக் வேதம் 8:1:1-10
இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் மக்களின் மனதிலே பல தெய்வ வணக்கங்கள் ஆழ வேரூன்றி விட்டது மிகவும் விந்தையாக இருக்கிறதல்லவா!
'நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? இறைவனுடன் வேறு கடவுளா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்' என்று முஹம்மதே கேட்பீராக!
-குர்ஆன் 27:64
37 comments:
என்ன திடீர்ன்னு இந்து மதம் பற்றி விளக்கம் கொடுக்கப் போய்ட்டீங்க. இந்து மதமும் அதன் கொள்கைகளும் முரண் பாடுகள் நிறைந்ததுன்னு கிருபானந்த வாரியரே சொல்லி இருக்கிரார். அதைப் பற்றி பேசி ஏன் நேரத்தை வீண் ஆக்க வேண்டும்.
kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/
ஸலாம் உண்டாகட்டும் சகோ.சுவனப்பிரியன்,
அம்பேத்கர், கருணாநிதி, சோ, ஜெயலலிதா... ம்ம்ம்... ...இதற்குப்பின்னால் இப்படியெல்லாம் சூட்சுமம் இருக்கிறதா..!?
நல்ல ஆய்வுதான் சகோ. இவை புதிய தகவல் எனக்கு.
கண்ணன்!
//என்ன திடீர்ன்னு இந்து மதம் பற்றி விளக்கம் கொடுக்கப் போய்ட்டீங்க. இந்து மதமும் அதன் கொள்கைகளும் முரண் பாடுகள் நிறைந்ததுன்னு கிருபானந்த வாரியரே சொல்லி இருக்கிரார். அதைப் பற்றி பேசி ஏன் நேரத்தை வீண் ஆக்க வேண்டும்.//
இந்தியாவை தாயகமாக கொண்ட எவருக்கும் இந்து மதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. படிக்கும் பள்ளியில் இருந்து, பணி செய்யும் இடம், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என்று எங்கும் நீக்க மற நிறைந்திருப்பது ஹிந்து மதத்தின் அடையாளங்கள். எனது முன்னோர்களும் நாலைந்து தலைமுறைக்கு முன்னால் இந்துவாகத்தானே இருந்திருப்பார்கள். எனவே இந்த பூர்வீக மதத்தின் ஆதி கொள்கைகள் என்ன, எதனால் எனது முன்னோர்கள் பூர்வீக மதத்தை விட்டார்கள்? இத்தனை கடவுள்கள் தோன்ற காரணம் என்ன? என்ற சிந்தனையின் வெளிப்பாடே இதுபோன்ற ஒன்றிரண்டு பதிவுகள்.இது சம்பந்தமாக உங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் கூறுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ. ஆஷிக்!
//...இதற்குப்பின்னால் இப்படியெல்லாம் சூட்சுமம் இருக்கிறதா..!?//
சோ. ராமசாமி இன்றும் ஸ்மிருதிகளில் கூறப்படும் அத்தனையும் நடைமுறைக்கு சாத்தியமே என்று வாதிட்டு வருபவர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பர் சுவனப்ரியன்,
திரு தருமி அவர்களின் வலைதளத்திலிருந்து உங்கள் தளத்துக்கு வந்தேன். சிறிது நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். இப்போது முதல் தடவையாக எனது கருத்தை பதியலாம் என்று தோன்றியது. ஏற்று கொண்டு மறு பதில் அளிப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். நெடிய பின்னூட்டமாய் இருப்பதால் பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. இரு பகுதியாய் இடுகிறேன்.
//இது போன்ற எண்ணற்ற வசனங்கள் இந்து மத வேதங்களில் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் மக்களின் மனதிலே பல தெய்வ வணக்கங்கள் ஆழ வேரூன்றி விட்டது மிகவும் விந்தையாக இருக்கிறதல்லவா!//
உங்களது மேற்படி கருத்து தவறானது. நான் ஒரு இறை மறுப்பாளன். இந்து மதத்தை பற்றிய விளக்கத்தை நான் உங்களக்கு அளிப்பது எனக்கே சரியாக படவில்லை, திருச்சிக்காரன் போன்ற இந்து மத ஆதரவாளர்கள் உங்களக்கு தங்களின் இந்த பதிவுக்கு பதில் அளிப்பார்கள் என்று காத்திருந்தேன், நடக்கவில்லை. சரி இறைமறுப்பாளனாய் இருந்தால் என்ன, நமக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.
உங்கள் மேற்படி கருத்துக்கு ஆதரவாக நீங்கள் சில இந்து மத நூல்களை கூறி இருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் படித்ததில்லை என்று உணர்கிறேன். உதாரணத்திற்கு நீங்கள் சுட்டியுள்ள ரிக் வேதம் 8:1:1-10. ரிக் வேதம் என்பது பழைய நூல், வேதாந்தம் என்னும் உபநிஷதுக்களுக்கு முற்பட்டது, அதில் பிரமம் என்று அழைக்கப்படும் ஓர்-இறை போன்ற விஷயம் எல்லாம் இருக்காது (வேதாந்த பிரமத்தை ஓர்-இறை என்று சொல்லலாம் என்றாலும் செமிடிக் மதங்களில் உள்ள ஏக இறைவன் போன்றது இல்லை அது. இதன் தன்மைகள் வேறு. இதை பற்றி தனியே பின்பு பார்க்கலாம்). ரிக், யஜ்ஜூர் வேதங்களில் இருப்பதெல்லாம் இந்திரன்,வருணன், அஷ்வினி சகோ, அக்னி முதலான தேவர்களின் சாதனைகளும்,பெருமைகளும், வழிபாடுகளும். நீங்கள் சுட்டியுள்ள 8:1:1-10.எடுத்து பார்த்தீர்களானால் அது இந்திரனை வழிபடுவதை பற்றியது. குறிப்பாக 8:1:1-1 சொல்வதை பாருங்கள்
GLORIFY naught besides, O friends; so shall no sorrow trouble you. Praise only mighty Indra when the juice is shed, and say your lauds repeatedly:
இந்த இந்திரன் தான் நீங்கள் வழிபடும் ஏக இறைவன் யாஹ்வே என்றா நினைக்கிறீர்கள் :) ? இதில் சொல்லப்படும் ஜூஸ் என்ன என்று உங்களக்கு தெரியுமா? சரி இன்னுமே கூட இதில் இந்திரனை மட்டும் தானே வழிபட சொல்லி உள்ளார்கள் என்று வாதிடுவதனால் 8:1:5 வழி பட சொல்லும் அஸ்வினி தேவர்களை என்னவாக வழிபடுவது. ஹ்ம்ம் ஒரு வேலை கப்ரியல் என்று வைத்துக்கொள்ளலாமா :)?
பகுதி இரண்டு:
நீங்கள் உபநிஷத்தில் இருந்து சில வரிகளை சுட்டியதால், உபநிஷத்து சொல்லும் பிரமத்துக்கு வருவோம். இந்த பிரமம் ஒரு வித்தியாசமான ஒன்று. உங்கள் யாஹ்வே போன்று பொறாமை, கோபம் போன்ற குணமெல்லாம் அதற்கு கிடையாது. சொல்லப்போனால் வேதாந்திகளின் நம்பிக்கை படி எனக்கு, உமக்கு, மரம், விலங்கு எல்லாவற்றின் உள்ளும் இந்த பிரமம் உள்ளது. வேதாந்ததுள்ளே மூன்று பிரிவுகள் உண்டு. அத்வைதம் என்பது அதில் ஒன்று (ஆதி சங்கரர் இவ்வகை தான், சங்கர மடம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஐயர்-பலர் இவ்வகை தான்.) இப்பிரிவின் படி நம் உள்ளே உள்ள பிரமதிற்கும் வெளியே உள்ள பிரமதிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஆக நானும் கடவுள், நீங்களும் கடவுள், குரங்கு முதலான விலங்கும் கடவுள் தான். அஹம் பிரம்மாஸ்மி என்பது இது. ஆக யானையை வணங்கலாம், குரங்கை வணங்கலாம், பூனையை வணங்கலாம், சிலையை வணங்கலாம் தவறே இல்லை. இன்னும் உங்களை கதி கலங்க அடிக்கிற சமாச்சாரமெல்லாம் உபநிஷத்தில் உண்டு. நானும் கடவுள், மற்ற மனிதரும் கடவுள் என்பதால், நான் வேறு ஒருவரை கொலை செய்தாலும் ஏதும் பிரச்சினை இல்லை. மனித சட்டத்துக்கு தான் பயப்பட வேண்டும், பிரம்மத்திற்கு அல்ல. அத்வைதத்தின் படி பிரமதிற்கு குணம் உட்பட எதுவுமே கிடையாது (சரி அப்ப என்ன எழவுக்கு தான் அது இருக்கு என்ற இருக்கு என்ற கேள்வி எழுமானால் அதற்கு நான் பொறுப்பல்ல, அதை பற்றி தனியே வேறொரு நாள் பேசலாம்). ஆகவே அது நம்மை தண்டித்து விடும் என்பதெல்லாம் கிடையாது. எப்படி இருக்கு :) ? இந்த சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் வேதாந்திகளின் விஷயமே அல்ல, அவை வேறு பிரிவை சேர்ந்தவை.
சரி இந்த வேதாந்தம் தான் இந்து மதத்தின் முக்கிய தத்துவமா என்று கேட்டால், அதுவும் இல்லை. சைவர் என்று சிவனை வழிபடுவோர் வேறு. அவர் தம் தத்துவம் வேறு, பதி, பசு, பாசம் என்று வேதாந்ததிற்கு நேர் எதிர் பாதை அது. சாங்கியம் என்று ஒன்று உண்டு. அதில் கடவுளே கிடையாது. இந்த யோகா சாஸ்திரம் எல்லாம் சாங்கியத்தில் தோன்றி பிரிந்தவையே. அதிகமாய் நான் ரிக், யஜ்ஜூர் வேதத்தை பற்றியும், பின்பு உபநிஷத்தை பற்றியும் இங்கு சொல்ல காரணம் நீங்கள் அவற்றை மேற்கோள் காட்டியதாலேயே.
ஆக நண்பரே, சுருங்க சொல்வதனால், நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து இந்த ரிக் வேதம் 8:1:1-10. போன்ற விஷயத்தை, அது உங்கள் ஏக இறைவனை பற்றியது என்றெல்லாம் எடுத்தீர்களோ எனக்கு தெரியாது, ஆனால் நீங்கள் சுட்டியவை எல்லாம் உடான்சு என்று சொல்ல முடியும். நீங்களும் வேண்டுமானால் ரிக் மற்றும் உபநிஷதுகளை படித்து பார்த்துவிட்டு யாஹ்வே மற்றும் அவரின் நெருப்பு எல்லாம் அவற்றில் வருதான்னு பாருங்களேன் :)
சகோ. கணேசன்!
//இந்த இந்திரன் தான் நீங்கள் வழிபடும் ஏக இறைவன் யாஹ்வே என்றா நினைக்கிறீர்கள் :) ? இதில் சொல்லப்படும் ஜூஸ் என்ன என்று உங்களக்கு தெரியுமா? சரி இன்னுமே கூட இதில் இந்திரனை மட்டும் தானே வழிபட சொல்லி உள்ளார்கள் என்று வாதிடுவதனால் 8:1:5 வழி பட சொல்லும் அஸ்வினி தேவர்களை என்னவாக வழிபடுவது. ஹ்ம்ம் ஒரு வேலை கப்ரியல் என்று வைத்துக்கொள்ளலாமா :)?//
நான் முன்பே சொன்னது போல் இறைவனின் படைப்புகளை இறைவனாக்கியது தான் நம் முன்னொர்கள் செய்த தவறு.
ரப்-அதிபதி, பாரி-உருவாக்குபவன், பதீவு-முன்மாதிரியின்றி படைத்தவன், பஸீர்-பார்ப்பவன், ஜாமிஉ-திரட்டுபவன், ஜப்பார்-அடக்கி ஆள்பவன், ஹஸீப்-கணக்கெடுப்பவன், ஹமீத்-புகழுக்குரியவன், ஹய்யு-உயிருள்ளவன், ஃகாலிக்-படைத்தவன், ரஹ்மான்-அருளாளன், ரஹீம்-அன்புடையோன், ரஸ்ஸாக்-உணவளிப்பவன், ஸமீஉ-செவியுறுபவன், ஷஹீத்- நேரிடையாக கண்காணிப்பவன், ஃபத்தாஹ்-தீர்ப்பளிப்பவன்
இவை எல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
'அல்லாஹ்' என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'
-குர்ஆன் 17:110
'இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்: அவர்கள் செய்து வந்ததற்க்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.'
-குர்ஆன் 7:180
இறைவனுக்கு இது போல் பல பெயர்கள் அவனது வல்லமையை காட்டும் விதமாக உள்ளது. அந்த ஒவ்வொரு வல்லமைக்கும் ஒரு உருவத்தைக் கொடுத்து அதை இறைவனாக மாற்றியது நம் முன்னோர்கள் செய்த தவறுதானே! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் மந்திரத்தையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.
அடுத்து இறைவனும் பார்க்கிறான், நானும் பார்க்கிறேன். இறைவனும் செவியுறுகிறான், நானும் செவியுறுகிறேன். நான் ஒரு குறிப்பிட்ட தூரம்தான் பார்க்க முடியும். ஆனால் இறைவனோ இந்த அகில உலகத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவனாக இருக்கிறான். இந்த வித்தியாசங்களை புரியாமல் போனதால்தான் இத்தனை கடவுள்கள் நம் நாட்டில் உருவானது.
'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம் 1:164:46
இந்திரன் என்ற பெயரும் முன்பு கடவுளுக்குரிய பெயராக இருந்திருக்கலாம். அதற்கு உருவம் கொடுத்து இவர்தான் அவர் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எனவே அல்லாஹ், கர்த்தர், பிதா, தேவன், பிரம்மா, கடவுள், இறைவன், என்று எப்படி அழைத்தாலும் அது ஏக இறைவனையே குறிக்கும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நண்பர் சுவனப்பிரியன்,
தங்கள் பதிலுக்கு நன்றி.
// இந்திரன் என்ற பெயரும் முன்பு கடவுளுக்குரிய பெயராக இருந்திருக்கலாம். //
ரிக் வேதம் இந்திரன் ஒரு தேவன் என்று தெளிவாக கூறுகிறது. நீங்களோ அதை ஏக இறைவனின் ஒரு பெயர் என்று வாதிடுகிறீர்கள். அதுமட்டும் இன்றி இந்திரன், அஸ்வினி சகோ, அக்னி எல்லாம் ஓர்-இறையின் வெவ்வேறு பெயர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் கூற்று தவறு. உங்களுடைய குரானை போன்றதே மற்ற மத நூல்களும் என்று நிலைபாட்டை உருவாக்க இப்படி மெனகெடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. சரி ஒரு பேச்சுக்கு உங்கள் வாதத்தை உண்மை என்று வைத்து கொள்வோம். அப்படி எனில் ரிக்கில் உள்ள ஒரு தேவனான சூரியனும் ஓர்-இறையின் ஒரு பெயர் என்று ஆகிறது. சந்திரனும் ஓர்-இறையின் மற்றொரு பெயர் என்று ஆகிறது. வாயு இன்னுமொரு பெயர் என்று ஆகிறது. அதாவது சூரியன் சந்திரன் காற்று போன்ற பொருள்கள் எல்லாம் இறைவனுக்கு உரியது அல்ல, அவையே இறைவன் தான் என்று ஆகிறது. ரிக்கின் படி இந்திரன் மின்னலுக்கான தேவன். அக்னி என்பவன் நெருப்பு. மின்னலும், நெருப்பும் இறைவன் என்று தானே ஆகிறது. பின்பு இந்துக்கள் நெருப்பையும், சூரியனையும், கடலையும், காற்றையும், கல்லையும் வழிபடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும்?
ரிக் 1:164:46: உங்கள் மொழி பெயர்ப்பு சரி இல்லை. அதன் படி இறைவனை அடைய பல வழி என்று தான் பொருள் வரும். சொல்ல போனால் 1:164:46 வை வைத்து தான் இந்துக்கள் பலர் இஸ்லாம், கிறிஸ்தவம் எல்லாம் இந்து மதத்தின் கூறுகள் என்று எண்ணுகிறார்கள். அதாவது குரான் சொல்லும் ஒரு வழியில் மட்டும் தான் இறைவனை அடைய முடியும் என்னும் கூற்றுக்கு நேரெதிர் இது.
நீங்கள் ரிக்கில் இருந்து பல உதாரணங்களை தருவது என் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. ரிக் இந்திரனை (உங்கள் கருத்து படி அல்லா/யாஹ்வே) தொழ மட்டும் சொல்லவில்லை. எப்படி தொழ வேண்டும் என்றும் சொல்கிறது. வேள்வி தீ எழுப்பி நெய்யை வார்த்து, குறிப்பிட்ட மந்திரங்களை கூறி என்று இவ்வாறாக வழிபட சொல்கிறது. இவற்றில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? ரிக் வேதத்தில் சொல்லியபடி ஒரு யாகம் நடக்கிறது என்றால் நீங்கள் அதில் பங்கேற்று அதில் அல்லாவை வழிபட தயாரா? எனக்கு என்னவோ நீங்கள் ரிக்கில் சில வரிகள் மட்டும் தான் சரி மற்றவை மனித கரம் என்று சொல்லும் வழக்கமான சமாளிப்புக்கு போக போகிறீர்கள் என்றே படிகிறது. சரி தானே :)
சுவனப்ரியன் "கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பவர் போல் தெரிகிறது. ஆபிரஹாமிய மதங்களுக்கும் , இந்திய மதங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இது மதவாதிகளுக்கும் தெரியும்,ஆனால் அதனை வெளிகாட்டி கொள்ளாமல் எல்லாம் ஒன்றே என்று விளிப்பது ,மாற்று மதக்காரர்களிடம் தங்கள் மதம் நல்ல மதம் என்று சர்டிபிகேட் வாங்கி கொள்ள, பிறகு தங்கள் மதத்தை பரப்ப. இதையே தான் இந்து மத வாதிகளும் செய்வர்.திரிச்சிக்காரன் தளத்தை பார்த்தால் புரியும்.
திரு கணேசன்!
//எனக்கு என்னவோ நீங்கள் ரிக்கில் சில வரிகள் மட்டும் தான் சரி மற்றவை மனித கரம் என்று சொல்லும் வழக்கமான சமாளிப்புக்கு போக போகிறீர்கள் என்றே படிகிறது. சரி தானே :)//
இது என்னுடைய சமாளிப்பு அல்ல. யஜூர் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
'அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே'
'எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ(காற்று, நீர், நெருப்பு)அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள்.'
-யஜூர் வேதம் 40:9-7
'சம்பூதி' மனிதனால் படைக்கப்பட்டவைகள் உதாரணம்: மேசை, நாற்காலி, சிலைகள் போன்றவை.
ஒரு வேதத்தில் ஒருவரின் கருத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. ஒரு இடத்தில் ஒரு இறைவன்தான், வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று கூறும் வேதம், அடுத்த பாகத்தில் அக்னி, காற்று போன்ற இயற்கை பொருட்களை வணங்க சொல்கிறது. யஜூர் வேதத்தில் இயற்கை பொருட்களையும், மனிதனால் செய்யப்பட்ட சிலைகளையும் வணங்குபவர்கள் இருளில் நுழைந்து விட்டனர் என்று கூறுகிறது. ஒன்றுக் கொன்று எவ்வளவு முரண்பட்ட வசனம் என்பதை பாருங்கள். இதில் ஏதோ ஒன்று தான் இறைவனின் கூற்றாக இருக்க முடியும். இந்த வேதங்கள் செவி வழியாகவே அதிக நாட்கள் உலவி வந்ததால் பல தெய்வ கோட்பாடு இடைச் செருகல் என்பதை நம்மால் யூகிக்க முடியும். 'ஒன்றே குலம் ஓருவனே தேவன்', 'நட்ட கல்லும் பேசுமோ: நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர் பாடல்களும், திருக்குறளும் இது போன்ற எண்ணற்ற நூல்கள் நம் மூதாதையர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மதம் தனது மூல கொள்கையை இழந்ததால்தான் நாத்திகர்களை அதிகம் கொண்டதாக இந்து மதம் இருக்கிறது. நீங்களும் நாத்திகத்தை தேர்ந்தெடுத்தது மேற் சொன்ன காரணங்களுக்காகத்தான்.
//பின்பு இந்துக்கள் நெருப்பையும், சூரியனையும், கடலையும், காற்றையும், கல்லையும் வழிபடுவது தவறு என்று எப்படி சொல்ல முடியும்?//
மேலே நான் எடுத்துக் காட்டிய யஜூர் வேதக் கருத்துக்கள் இவற்றை எல்லாம் முற்றாக தடை செய்கிறது. ஏதாவது ஒரு கருத்துதான் உண்மையாக இருக்க முடியும்.
அடுத்து நீங்கள் நாத்திகர். எதையுமே அறிவியல் நிரூபித்தால்தான் ஒத்துக் கொள்வீர்கள். அறிவியல் ஆராய்ச்சியில் இறைவன் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்களா? 'பெரு வெடிப்புக்கு' முன்னால் இந்த உலகின் நிலை என்ன? இத்தனை கோள்களும் ஒன்றோடொன்று மோதாமல் கணகச்சிதமாக செல்வதற்கு அவைகளே தீர்மானித்துக் கொண்டதா? அப்படி என்றால் அவற்றிற்கு பகுத்தறியும் ஆற்றல் உண்டா? அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் எனக்கு விளக்குங்களேன்.
இந்து எனும் சொல் நமது பழைமையான இலக்கியங் களில் காணப்பெறவேயில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது; ஒழுங்கான உருவமைப்புப் பெறாதது;
பல்வகைத் தோற்றக் கூறுகள் உடையது; எல்லா மக்களுக்கும் எல்லாச் செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது - வழக்கிலுள்ள கருத்தின் படி - ஒரு மதமா, இல்லையா என மெய்யாகவே உறுதிமொழிவதோ இயலும் செயலன்று.
“what is Hinduism? The word Hindu does not occur in all our ancient literature...Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. It is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word” (Discovery of India : page 108).
-----------------------------------
இந்து மதம் என்பது வேதமதம்; வேதம் என்பது கடவுளால் சொல்லப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள். கடவுளால் சொல்லப்பட்டது வேதமானால் எல்லோருக்கும் ஒரே விதமாய் இருக்கக் கூடுமே தவிர, ஒருவர் ஒப்புக் கொள்ளவும், மற்றொருவர் மறுக்கவும், மற்றொருவருக்கு தென்படக் கூடியதாகவும் ஒரு எல்லைக்குள்ளே அடங்கக் கூடியதாகவும் இருக்க முடியுமா?
-பெரியார், குடிஅரசு 11.9.1927
-----------------------------------
ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல; ஆனால் வழக்கங்கள், சடங்குகள், அனுஷ்டானங்கள், கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகிய வைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன. படுபயங் கரமான சிக்க லாகச் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத் தை பிணைத்து வைத்திருப்பது - அத்துடன் இந்து சமுதாயத் தின் தார்மீக, பொருளாதார முன்னேற் றத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதும் இதுவே ஆகும்.
மகாயான புத்தமதத்தின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் ஆழம்குறைந்தவர்கள் அல்லர் என்றாலும், புத்தருக்கும் உபநிஷதங் களுக்குப் பின்னால் இந்தியாவில் உருவாகிய தத்துவ ஞானிகளில் சங்கரர்தான் மிகவும் ஆழமானவர் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளுவோம்.
ஆனால் இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பரந்துபட்டுக் கிடக்கும் எண் ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின்றன? பச்சையான சுரண்டல் களங்களாகவும் அல்லவா இருக்கின்றன?
சங்கராச்சாரியின் அவமானச் செயல் இந்து மதத்தின் உச்சகட்ட உறை விடங் களான சங் கர பீடங்களையே எடுத்துக் கொள் ளுங்கள். இன்று அங்கே பதவி வகித் துக் கொண்டிருப் பவர்களில் குறைந் தபட்சம் ஒரு சங் கராச்சாரியாரா வது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன்மாதிரியாக விளங்கவில்லையா?
இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டு களுக்கு முன் அவமானத்துக்குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்கு பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.
திரைமறையில் நாம் செய்வது என்ன?
நமது முன்னோர்களில் சிறப்பானவர்கள் சிலர் நிர்மாணித்த பிரம்மாண்டமான சிந்தனைக் கோட்டைகளின் பின்னால் மறைந்து கொள்ள இந்துக்களாகிய நாம் விரும்பு பவர்கள், அந்த திரையின் பின்னாலிருந்தபடியே உபநிஷத ரிஷிகளின் ஆன்மீக உள்ளாளியி லிருந்து லட்சோப லட்சம் மைல்களுக்கு அப்பாலுள்ள அனுஷ்டானங்களையும் சமய வடிவங்களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறவர்கள்.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் பழக்கம், நம் முதுகிலேயே நாம் தட்டி சபாஷ் போட்டுக் கொள்ளும் இந்தப் பழக்கம்தான் இன்றைய இந்து சமூகத்துக்கும், அறிவொளிக்கும், முன்னேற்றத்துக்கும் இடையில் நிற்கிறது.
- ஜெயப்பிரகாஷ் நாராயண் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 20.9.1972)
பிரதீப்!
//ஆபிரஹாமிய மதங்களுக்கும் , இந்திய மதங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.//
உங்கள் கருத்துதானே எனது கருத்தும். இரண்டும் ஒன்று என்று எப்பொழுது சொன்னேன்?
இந்து மத வேதங்கள் மட்டுமல்ல ,ஆபிரகாமிய வேதங்கள் அனைத்துமே பலரால் உளறப்பட்டவையே. அதனால் தான் இத்தனை முரண்பாடுகள்.இந்திய மதத்தவரிடம் சகிப்புத்தன்மை அதிகமாக இருப்பதே நாத்திகர்கள் அதிகமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி கொள்ள காரணம்.இஸ்லாமியரிலும் அதிகமாக இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களை வெளிப்படுத்தி கொள்வதில்லை.சானியா மிர்சாவுக்கெல்லாம் பத்துவா அறிவிக்கும் அளவுக்கு மூடர்கள் நிறைந்த மதமாக இருப்பதால் யாரும் வெளிவருவதில்லை.
நண்பர் சுவனப்பிரியன், விவாதம் நன்றாய் போகிறது. ஆனால், உங்கள் கடைசி பதிவில் விவாதம் பல்வேறு திசைகளில் இழுக்கபடுவதாய் உணர்கிறேன். என்னால் வகைபடுத்த முடிந்த வரையில் நீங்கள் நான்கு விஷயங்களை பற்றி பேசியுள்ளிர்கள் என்று சொல்லமுடிகிறது.
1 . ரிக் வேதம் 8:1:1-10 மற்றும் ரிக்வேதம் 1:164:46 பற்றி முதலில் அவை இஸ்லாமின் ஏக இறையை ஒற்றியே உள்ளதாய் சொன்னீர்கள். அவை இரண்டை பற்றிய உங்களது புரிதல் மற்றும் மொழி பெயர்ப்பு தவறு என்று சுட்டிய பின், யஜ்ஜூர் 40:9-7 ஐ பற்றி கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.
2 . திருமூலரின் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்", சிவவாக்கிய சித்தரின் "நட்ட கல்லும் பேசுமோ", மற்றும் உபநிஷத குறிப்புகளையும் கொண்டு உங்கள் ஏக இறைவனை இந்து மத நூல்களில் தேடியுள்ளீர்கள்.
3 . இறைமறுப்பாளன் ஆகிய நான் இறைவனை பற்றிய விஞ்ஞான விளக்கம் எதாவது வைத்துள்ளேனா மற்றும் பெரு வெடிப்புக்கு முன் என்ன நடந்தது என்று விளக்கவும் கேட்டுள்ளீர்கள்.
4 . பெரியார் மற்றும் ஜெய பிரகாஷ் நாராயண் அவர்களின் இந்து மதத்தை பற்றிய குறிப்பை அளித்துள்ளீர்கள்.
சரியா?
3 மற்றும் 4 நமது தற்போதய விவாதத்திற்கு நேரடியாய் சம்பந்தம் இல்லாதவை. நமது விவாதத்தை ஒரு கட்டுக்குள் வைக்க விரும்பிகிறேன். ஆதலால் அவற்றிக்கு பிறகு வருகிறேன். தற்போதைக்கு 1 மற்றும் 2 ஐ பார்ப்போம்.
பிளாக்கர் ஏற்க மறுப்பதால் பதிலை துண்டு துண்டை இடுகிறேன்.
யஜூர் வேதம் 40:9-7 சொல்வது "Deep into shade of blinding gloom fall Asambhûti's worshippers. They sink to darkness deeper yet who on Sambhûti are intent."
இங்கே அசம்பூதி என்பதை மனிதனால் படைக்க பட்ட பொருள் என்று கொண்டால் தான் நீங்கள் சொல்லும் அர்த்தம் வரும். நீங்கள் தவறுதலாய் சம்பூதி என்று சொல்லி உள்ளீர்கள். போகட்டும். முதலில் அசம்பூதி என்பது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்று எப்படி சொல்கிறீர்கள்? யஜூர் 40:11 ஐ பாருங்கள் (sambhUtim ca vinASam ...)"Through Vinasha – changing from one form to another, overcome death, and through Sambhuti – the gift of a human body – they gain a chance for immortality". சம்பூதி என்பதற்கு உடல் என்ற பொருள் தானே வருகிறது? தன்னை விரும்புவோர் அழிவர், தன் உடல் மேலே கவனமாய் இருப்போர் பேர்-அழிவை சந்திப்பர் என்ற வகையில் தான் நீங்கள் சுட்டும் யஜூர் 40:9 வருகிறது. இந்து வேதங்களில் முரண்பாடுகள் பல உண்டு, ஆனால் நீங்கள் விரும்பும் முரண்பாடான ஓர்-இறை வணக்கத்தை ரொம்ப மெனக்கெட்டு நீங்களே தயாரிக்க முயல்கிறீர்கள் என்றே படுகிறது.
இப்போது திருமூலர், சிவவாக்கியர் மற்றும் உபநிஷத்துக்கு வருவோம். நீங்கள் சுட்டியுள்ள நாதன் உள்ளிருக்கையில் பாடல் சொல்வது என்ன? நமக்கு உள்ளே உள்ள இறைவனை அதாவது நமது ஆத்மாவை பற்றிய பாடல் அது. அதாவது நமது ஆத்மாவே தான் பிரமம் எனும் கடவுள் என்ற சித்தாந்தம். திருமூலரும் இதையே சொல்பவர் தாம். இதுவா உங்களின் இஸ்லாமிய இறை? உங்கள் ஏக இறைவனும், உங்களக்கு உள்ளே உறையும் ஆத்மாவும் ஒன்றா? குரான் ஏற்று கொள்ளுமா? ஒன்றுதான் என்று நீங்கள் ஏற்று கொள்வதானால் உபநிஷத்தும், திருமூலரும் உங்கள் ஓர்-இறையை தான் பாடினர் என்று கொள்ள முடியும்.
அடுத்ததாக ஏன் திருமூலர், மற்றும் உபநிஷத் சொல்லும் ஓர்-இறையை மட்டும் வணங்காமல் சூரியன், சந்திரன் போன்ற பலவற்றை வழிபடவேண்டும் என்ற கேள்வி. வேதத்திற்கும் உபநிஷதிர்க்கும் கிட்ட தட்ட ஆயிரம் கால இடைவெளி. வேத காலத்தில் வெளியே இறையை தேடிய மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சி அவனுக்குள்ளே இறை தேட முயல அதன் வெளிபாடே உபநிஷத்துக்கள். இதை நான் சொல்லவில்லை இந்திய தத்துவங்களை ஆய்ந்து அவற்றை பற்றிய ஒரு நூலை எழுதிய திரு சர்வேப்பள்ளி இராதாக்ரிஷ்ணன் சொல்வது இது. ஆக இரண்டுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.
பிரதீப்!
//இஸ்லாமியரிலும் அதிகமாக இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களை வெளிப்படுத்தி கொள்வதில்லை.//
யாரும் ஒன்றும் செய்து விட மாட்டார்கள். முகம் காட்டாமல் எழுதப்படும் இணைய தளங்களிலேயே நாத்திக முஸ்லிம் பதிவர்களை காண்பது அரிது. சீரா, யாசிர், என்ற போலி இஸ்லாமிய பெரில் எழுதும் அன்பர்கள் கூட இந்து மதத்தைச் சார்ந்தவர்களே! இஸ்லாமிய கொள்கைகள் மிகத் தெளிவுடன் இருப்பதால் நாத்திகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
//சானியா மிர்சாவுக்கெல்லாம் பத்துவா அறிவிக்கும்//
டென்னிஸில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட சானியா மிர்ஸா விளையாடினால் தொலைக்காட்சியில் ஆவலுடன் பார்ப்பது எதற்கு? அவர் அணியும் தேவையற்ற இருக்கமான உடைகளும், முழங்காலுக்கு மேல் பகுதி தெரியும் படி ஆடை அணிவதும் தான். அதை சரி செய்யச் சொல்லி நெருக்குதல் வந்தது. இதை அவர் சட்டை செய்யவில்லை. இதனால் இஸ்லாத்துக்கு எந்த நட்டமும் இல்லை. நட்டம் அவருக்குத்தான்.
திரு கணேசன்!
//முதலில் அசம்பூதி என்பது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்று எப்படி சொல்கிறீர்கள்? சம்பூதி என்பதற்கு உடல் என்ற பொருள் தானே வருகிறது?//
Sambhuti (Sanskrit) Combination, conjunction, co-union; one of the daughters of Daksha, and consort of Marichi (light, light-monad), the father of the agnishvattas.
Dictionary source: Rakefet
Isa Upanishad [was Re: Praying other deities. . .]
> It is stated in the Sri Isopanisad:
>
> andham tamah pravisanti
> ye 'sambhutim upasate
> tato bhuya iva te tamo
> ya u sambhutyam ratah
>
> "Those who are engaged in the worship of demigods enter into the darkest
> region of ignorance, and still more do the worshippers of the impersonal
> Absolute."
Sambhuti means `Fitness`. Sambhuti is a daughter of Daksha and wife of Marichi.
நான் தேடிய வகையில் உடல் என்ற பொருள் வரவில்லை. உப கடவுள்கள் என்றும், தக்ஷனின் மகளுடைய பெயர் என்றும் வருகிறது. இறைவன் அல்லாது வேறு எவரையும் மனிதனாகவும், உபகடவுளாகவும், மரிச்சியின் மனைவி என்று பல பொருட்களை கொண்டாலும் அதனை வணங்குபவர்கள் அனைவரும் இருளில் நுழைவதாகத்தானே பொருள் வருகிறது!
//இந்து வேதங்களில் முரண்பாடுகள் பல உண்டு,//
அதையே தான் நானும் சொல்கிறேன். ஓரிறைக்கு மாற்றமாக புகுந்துள்ள ஒரு சில வசனங்கள் இடைச் செறுகலாக இருக்கலாம் என்பதுதான் எனது வாதம். அதுதான் பகுத்தறிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
//வேதத்திற்கும் உபநிஷதிர்க்கும் கிட்ட தட்ட ஆயிரம் கால இடைவெளி. வேத காலத்தில் வெளியே இறையை தேடிய மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சி அவனுக்குள்ளே இறை தேட முயல அதன் வெளிபாடே உபநிஷத்துக்கள். இந்திய தத்துவங்களை ஆய்ந்து அவற்றை பற்றிய ஒரு நூலை எழுதிய திரு சர்வேப்பள்ளி இராதாக்ரிஷ்ணன் சொல்வது இது. ஆக இரண்டுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.//
முரண்பாடுகளை வைத்துக் கொண்டிருக்காமல் பல வேத விற்பன்னர்களை வைத்து முரண்பாடுகளை களைய முயற்ச்சிக்கலாம் இல்லையா? இதனால் சாதிகள் ஒழியவும் வாய்ப்பிருக்கிறது. மூடப்பழக்கங்களும் ஒழியும். இந்து மதத்தில் நாத்திகமும் குறையும்.
//யாரும் ஒன்றும் செய்து விட மாட்டார்கள்.//
இது உங்க கருத்து. ஆனா உண்மை வேறொரு மாதிரி அல்லவா இருக்கிறது உலகம் முழுவதும்.
//இஸ்லாமிய கொள்கைகள் மிகத் தெளிவுடன் இருப்பதால் நாத்திகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.//
நீங்களா சொல்லிகிட்டா எப்படி.இணையத்திலேயே பலர் இருக்கிறார்களே - செங்கொடி,கும்மி ....
//அவர் அணியும் தேவையற்ற இருக்கமான உடைகளும், முழங்காலுக்கு மேல் பகுதி தெரியும் படி ஆடை அணிவதும் தான். அதை சரி செய்யச் சொல்லி நெருக்குதல் வந்தது. இதை அவர் சட்டை செய்யவில்லை. இதனால் இஸ்லாத்துக்கு எந்த நட்டமும் இல்லை. நட்டம் அவருக்குத்தான்//
சரி செய்யச் சொல்லி நெருக்குதல் யாரிடம் இருந்து வந்தது.?அதை முடிவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.?
உபநிஷத்துக்கள்,சித்தர் மார்க்கம்(திருமந்திரம்) அத்துவைத வகை சார்ந்தது.கடவுள்(பிரம்மம்) என்பது தனியே வெளியில் இல்லை.நீக்கமற எங்கும் நிறைந்திருகிறது. ஆபிரஹாமிய மதங்களின் கடவுள்(அல்லாஹ்) அப்படியல்ல(இவை துவைத வகையை சார்ந்த மதங்கள்).
நண்பர் சுவனப்பிரியன்,
//நான் தேடிய வகையில் உடல் என்ற பொருள் வரவில்லை. உப கடவுள்கள் என்றும், தக்ஷனின் மகளுடைய பெயர் என்றும் வருகிறது//
உப கடவுள்கள் என்று எங்கு வருகிறது என்று ஆதாரம் தர முடியுமா? நீங்கள் சுட்டியுள்ள dictionary யில் combination, conjuction, Dhaksha's daughter என்று தானே இருக்கிறது. தக்ஷனின் மகள் , மரிசியின் மனைவி சம்பூதி ஒரு உப கடவுள் என்றா சொல்கிறீர்கள்? ஆதாரம் தர முடியுமா?
//அதையே தான் நானும் சொல்கிறேன். ஓரிறைக்கு மாற்றமாக புகுந்துள்ள ஒரு சில வசனங்கள் இடைச் செறுகலாக இருக்கலாம் என்பதுதான் எனது வாதம். அதுதான் பகுத்தறிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது.//
நாசமாய் போச்சு! விடிய விடிய இராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு இராமன் சித்தப்பாவான்னு கேக்குறீங்களே சார். நான் இந்து மதத்தில் முரண்பாடுகள் இருப்பதை சொன்னது அது பல விதமான நம்பிக்கைகளின் சங்கமம் என்பதால். பழைய நூலான ரிக்கில் இந்திரன், அக்கினி, வாயு போன்ற இயற்கை குறியீடுகளே முக்கிய தெய்வங்கள், அதற்கு பின்பு எழுதிய உபநிஷதாலர்களின் எண்ணம் வேறு, அவர்களுக்கு பிரமம் என்னும் ஒன்றே முக்கிய தெய்வம். சிவனை வழிபடும் சைவர்களுக்கோ தத்துவம் வேறு என்றும் இவற்றையே முரண்பாடு என்று சொன்னேன். கூடவே குரானின் ஓர்-இறை இந்த பல நம்பிக்கைகளில் ஒன்றில் கூட இல்லை என்று அல்லவா சொன்னேன். நீங்கள் நான் சொன்னதில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி "ஓர்-இறைக்கு மாற்றாக புகுந்துள்ள சில வசனங்கள்" என்று ஒரு உங்கள் கருத்துக்கு நான் ஒத்து வந்தார் போன்று பேசுகிறீர்கள். இது நியாயமான விவாதம் இல்லையே! என்னை ஏமாற்ற பார்த்து உங்களையும் அல்லவா ஏமாற்றி கொள்கிறீர்கள்?.
"ஓர்-இறைக்கு மாற்றாக புகுந்துள்ள சில வசனங்கள்" என்பதை எங்கேயாவது உங்களால் நிறுவ முடிந்ததா? உங்கள் ஓர்-இறைக்கு இந்து மதத்தில் ஆதாரமாக நீங்கள் இதுவரை சொன்னது என்ன?
அ. ரிக் 8:1:1-10 வை சுட்டினீர்கள். அது இந்திரனை வழிபட சொல்கிறது என்றவுடன், இந்திரன் ஏக இறைவனின் ஒரு பெயர் என்றீர்கள். அப்போ இயற்கை வஸ்துவான மின்னல் கடவுளா? என்று கேட்டால் பதில் இல்லை.
ஆ. உபநிஷத்துக்களை சுட்டினீர்கள். உபநிஷத்து சொல்லும் கடவுள் உங்களக்குள்ளே உள்ள ஆன்மாவே தான், அதை வழிபட சொல்கிறீர்களா என்று கேட்டாலும் பதில் இல்லை.
இ. ரிக் 1:164:46 வை சுட்டினீர்கள். அது இறைவனுக்கு பல வழி என்று சொல்கிறதே அதை ஒத்து கொள்கிறீர்களா என்று கேட்டாலும் பதில் இல்லை.
ஈ. திருமூலர், சிவவாக்கியர் போன்றோரின் பாடல் வரிகளை சொன்னீர்கள். நீங்கள் சொன்ன வரிகளே தெய்வம் உள்ளிருக்கையில் என்று வருகிறதே என்று கேட்டாலும் பதில் இல்லை.
உ. யஜூர் 40:9 வை சுட்டி உள்ளீர்கள். அதற்கு நான் உடல் என்று சொன்ன அர்த்தத்தை ஏற்க மறுத்து உள்ளீர்கள், சரி. நீங்கள் சொல்லும் உப கடவுள் என்ற அர்த்தத்தை நான் ஏற்கனவே சுட்டியுள்ள யஜூர் 40:11 வில் சம்பூதி எனும் இடத்தில் பொருத்தி பாருங்களேன் ஏதாவது விளங்கி வருகிறது என்று?
ரிக், உபநிஷிது,திருமூலர், மற்றும் சிவவாக்கியரின் பல் ஆயிர கணக்கான வரிகளிலே உங்களால் நான்கோ ஐந்தோ இடங்களில் மட்டும் உங்களுக்கு ஏற்றார் போல கேள்வி எழுப்ப முடிந்தது. அதிலும் யஜூர் 40:9 ஒன்றில் மட்டும் தான் மேலே பேசும் நிலைமையில் நீங்கள் உள்ளீர்கள். இந்நிலையில் எப்படி நீங்கள் "ஓர்-இறைக்கு மாற்றாக சில வசனங்கள்" என்று சொல்கிறீர்கள்?
பிரதீப்!
//நீங்களா சொல்லிகிட்டா எப்படி.இணையத்திலேயே பலர் இருக்கிறார்களே - செங்கொடி,கும்மி ....//
அவ்வளவுதான் உங்களால் காட்ட முடியும். அதே நேரம் இந்து மத பதிவர்களில் 90 சதமானவர்கள் நாத்திகர்களே. அதற்காக பெருமையும்படக் கூடியவர்கள். காரணம் இந்து மதத்தின் கொள்கைகள்.
அடுத்து செங்கொடி, கும்மியை தவிர்த்து அவர்கள் குடும்பத்தவர்களே அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவே இருப்பர்.
//சரி செய்யச் சொல்லி நெருக்குதல் யாரிடம் இருந்து வந்தது.?அதை முடிவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.?//
'அவர்களின் பாவமான கூற்றை விட்டும் விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும் வணக்கசாலிகளும் மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா?'
-குர்ஆன் 5;63
உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவன் நன்மையை ஏவும்படியும், தீமையை தடுக்கும் படியும் நல்லோர்களுக்கு கட்டளையிடுகிறான்.
திரு கணேசன்!
//உப கடவுள்கள் என்று எங்கு வருகிறது என்று ஆதாரம் தர முடியுமா? நீங்கள் சுட்டியுள்ள dictionary யில் combination, conjuction, Dhaksha's daughter என்று தானே இருக்கிறது. தக்ஷனின் மகள் , மரிசியின் மனைவி சம்பூதி ஒரு உப கடவுள் என்றா சொல்கிறீர்கள்? ஆதாரம் தர முடியுமா?//
முந்தய பின்னூட்டத்தில் சம்பூதி என்பதற்கு உடல் என்ற பொருள் கொடுத்தது தவறுதானே!
அடுத்து உங்கள் வாதப்படி மரம், செடி, கொடி, இயற்கை வஸ்துகள், முருகன், முருகனின் மனைவி வள்ளி, தெய்வானை, இன்னும் சிலருக்கு திருவள்ளுவர், சிலருக்கு பெரியார், அண்ணா, ஜெயலலிதா, இன்னும் சிலருக்கு எல்லைக் கல், மேலும் சிலருக்கு குஷ்பு என்று இறைவனுக்கு நிகராக யாரை நாம் விட்டு வைத்தோம். இது போன்று கண்டவர்களையும் கடவுளாக்குவதற்கு நான் அல்லவா வேதங்களிலிருந்து ஆதாரம் கேட்கிறேன்!
மற்ற கேள்விகளுக்கு வேலை முடிந்து வந்து பதில் சொல்கிறேன்.
திரு கணேசன்!
//ரிக் வேதம் இந்திரன் ஒரு தேவன் என்று தெளிவாக கூறுகிறது. நீங்களோ அதை ஏக இறைவனின் ஒரு பெயர் என்று வாதிடுகிறீர்கள். அதுமட்டும் இன்றி இந்திரன், அஸ்வினி சகோ, அக்னி எல்லாம் ஓர்-இறையின் வெவ்வேறு பெயர்கள் என்று கூறுகிறீர்கள். உங்கள் கூற்று தவறு.//
//அ. ரிக் 8:1:1-10 வை சுட்டினீர்கள். அது இந்திரனை வழிபட சொல்கிறது என்றவுடன், இந்திரன் ஏக இறைவனின் ஒரு பெயர் என்றீர்கள். அப்போ இயற்கை வஸ்துவான மின்னல் கடவுளா? என்று கேட்டால் பதில் இல்லை.//
இந்திரனை தேவர்களாக அல்லாமல் கடவுளாகவே அன்றைய இந்துக்கள் வழிபட்டு வந்திருப்பதை கீழே உள்ள விக்கி பீடியாவின் விளக்கத்தைப் பாருங்கள்.
The white elephant is considered to belong to the god Indra. The name of the elephant is Airavata and it is a flying elephant. Airavata is made the King of all elephants by Lord Indra.
The name of Indra (Indara) is also mentioned among the gods of the Mitanni, a Hurrian speaking people who ruled northern Syria from ca.1500BC-1300BC.[2]
Janda (1998:221) suggests that the Proto-Indo-European (or Graeco-Aryan) predecessor of Indra had the epithet *trigw-welumos "smasher of the enclosure" (of Vritra, Vala) and diye-snūtyos "impeller of streams" (the liberated rivers, corresponding to Vedic apam ajas "agitator of the waters"), which resulted in the Greek gods Triptolemos and Dionysos.
in the Rig Veda, Indra is the king of the gods and ruler of the heavens. Indra is the god of thunder and rain and a great warrior, a symbol of courage and strength. He leads the Deva (the gods who form and maintain Heaven) and the elements, such as Agni (Fire), Varuna (Water) and Surya (Sun), and constantly wages war against the opponents of the gods, the demon-like Asuras. As the god of war, he is also regarded as one of the Guardians of the directions, representing the east. As the favourite 'national' god of the Vedic Indians, Indra has about 250 hymns dedicated to him in the Rigveda.
Shri Indra was the favourite national god of the Vedic Indians, with about 250 hymns dedicated to him in the Rigveda, more than those devoted to any other god and almost one fourth of the total number of hymns of the Rigveda.
Shri Indra is the god of thunder, being similar in many ways to the Teutonic Thor (Old Norse Þorr; Old English Þunor; German Donner), or Greek Zeus/Roman Jupiter. Like Thor, he is described in the Rigveda as red- or tawny-beared (RV 10.23,4), though the extant sculpture and carvings seem to invariably show him as beardless. His characteristic weapon is the cudgel vajra ('thunder-bolt'), just as Thor's is the famous hammer Mjöllnir. Shri Indra is the pre-eminent drinker of the divine soma (the madhu or 'mead' of the gods), the imbibing of which exhilerates him and aids him in his heroic actions.
திரு கணேசன்!
//இ. ரிக் 1:164:46 வை சுட்டினீர்கள். அது இறைவனுக்கு பல வழி என்று சொல்கிறதே அதை ஒத்து கொள்கிறீர்களா என்று கேட்டாலும் பதில் இல்லை.//
'அல்லாஹ் என்று அழையுங்கள்: ரஹ்மான் என்று அழையுங்கள்: நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
-குர்ஆன் 17:110
கடவுள், இறைவன்,தேவன், பிரம்மன் என்று எப்படி அழைத்தாலும் அந்த ஏக இறைவனைத்தான் அனைவரும் அழைக்கிறோம். வணக்க முறைகளில் நம்மிடம் மாற்றம் வந்து விட்டது.
//ஈ. திருமூலர், சிவவாக்கியர் போன்றோரின் பாடல் வரிகளை சொன்னீர்கள். நீங்கள் சொன்ன வரிகளே தெய்வம் உள்ளிருக்கையில் என்று வருகிறதே என்று கேட்டாலும் பதில் இல்லை.//
'மனிதனைப் படைத்தோம்: அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம்.நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.'
-குர்ஆன் 50:16
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர் தேவையில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அருகிலும் இறைவன் இருக்கிறான். நமது வேண்டுதலுக்கு பதிலளிப்பான் என்று இந்த வசனம் மூலம் நாம் விளங்கிக் கொள்வோம். அதை விடுத்து அந்த மனிதனை வெட்டி பிடரிக்குள் இறைவன் இருக்கிறானா என்று தேட மாட்டோம்.
//முந்தய பின்னூட்டத்தில் சம்பூதி என்பதற்கு உடல் என்ற பொருள் கொடுத்தது தவறுதானே!//
சம்பூதிக்கு பொருளை நான் யஜூர் 40:11 ஐ கொண்டு தேடிய போது,
http://am-bhagavatadharma.com/wp-content/uploads/2009/06/Sambhuti-Mahasambhuti-corrected2.pdf
என்ற தலத்தில் இருந்து எடுத்தேன். அந்த கட்டுரையின் முகப்பிலேயே யஜூர் 40:11 க்கு மொழி பெயர்ப்பை கீழ்கண்டவாறு கொடுத்துள்ளார்கள்
"Through Vinasha – changing from one form to another – they overcome death, and through Sambhuti – the gift of a human body – they gain a chance for immortality"
இதையே நான் உங்களக்கு பின்னுட்டமாய் தந்திருந்தேன். இந்த உடல் என்ற பொருளை யஜூர் 40:9 பொருத்தி பார்த்தாலும் அது அர்த்தம் தருவதாய் எழுதி இருந்தேன். இதில் தவறு என்ன?
ஒருவேளை இதை எழுதிய ஸ்ரீ அனந்த மூர்த்தி என்பவரின் மொழி பெயர்ப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஆதி சங்கரர் யஜூர் 40:9 ஐ எப்படி மொழி பெயர்கிறார் என்றால்
"All who worship what is not real knowledge (good works), enter into blind darkness: those who delight in real knowledge, enter, as it were, into greater darkness."
ஆதி சங்கரர் இவ்வாறு இதை மொழி பெயர்ப்பதாக Max Mueller ஆதாரங்களுடன் கூறுகிறார். ஆதி சங்கரர் மட்டுமல்ல மகிதாரா, உத்தவா போன்றோரும் இவ்வாறே மொழி பெயர்ப்பதையும் அவர் சுட்டுகிறார். பார்க்க "The Upanishads Part I" by Max Mueller pages 310,311.
இப்போதாவது நீங்கள் சொல்லிய மேசை, சேர் போன்ற மொழிப்பெயர்ப்பும், மற்றும் உபதெய்வம் என்று சொல்லியதும் தவறு என்று ஒத்துகொள்வீர்களா? அப்படி ஒப்பு கொள்ள முடியாதென்றால் நான் தந்துள்ளது போல வட மொழிவல்லுனர்களின் மொழிப்பெயர்புகளை ஆதாரத்துடன் தாருங்கள் பார்போம்.
//அவ்வளவுதான் உங்களால் காட்ட முடியும். அதே நேரம் இந்து மத பதிவர்களில் 90 சதமானவர்கள் நாத்திகர்களே. அதற்காக பெருமையும்படக் கூடியவர்கள். காரணம் இந்து மதத்தின் கொள்கைகள்.//
நல்ல விஷயம் தான. சொல்லபோனால் ஆபிரஹாமிய மதங்களை விட இந்து மதம் எவ்வளவோ மேல்.
//அடுத்து செங்கொடி, கும்மியை தவிர்த்து அவர்கள் குடும்பத்தவர்களே அவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவே இருப்பர்.//
சோ வாட் ...
//'அவர்களின் பாவமான கூற்றை விட்டும் விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும் வணக்கசாலிகளும் மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா?'
-குர்ஆன் 5;63
உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவன் நன்மையை ஏவும்படியும், தீமையை தடுக்கும் படியும் நல்லோர்களுக்கு கட்டளையிடுகிறான்.//
இங்கதான் பிரச்சனையே வருது. உங்க நம்பிக்கையை உங்களோட வைத்து கொள்ளும் வரை பிரச்சனை இல்லை. என்றோ அரேபியாவில் எழுதப்பட்ட புத்தகத்தை கொண்டு வந்து இதுல சொல்லிருக்கு அதனால கேப்போம் என்றால் எல்லோரும் ஒன்னொன்னு சொல்லி மத்தவங்க வாழ்க்கையில் சுதந்திரத்தில் தலையிடுவார்கள்.
//இது போன்று கண்டவர்களையும் கடவுளாக்குவதற்கு நான் அல்லவா வேதங்களிலிருந்து ஆதாரம் கேட்கிறேன்!//
ரொம்ப சுலபம். இதுவரை நான் உபநிஷதுகளையும், திருமூலர் மற்றும் சிவவாக்கியரை பற்றியும் சொன்னது என்னவென்று நினைத்தீர்கள்? இவர்களின் தத்துவபடி கடவுளுக்கும் நம் ஆத்மாவுக்கும் வேறு பாடே இல்லை. ஆத்மா என்று சொல்லுவதை தான் "நான்" என்று நாம் சொல்லிகொள்கிறோம் என்பது இவர்களின் கருத்து. அதாவது நானே கடவுள். ஆதாரம் வேண்டுமா?
அஹம் பிரம்மாஸ்மி -- நானே பிரமம் -- நான் கடவுள் ( பிருஹதாரண்யக உபநிஷத் 1.4.10 யஜூர் வேதம்)
தத் வம் அசி -- நீயே கடவுள் (சந்தோக்ய உபநிஷத் 6.8.7)
இஸ்லாமியர் இதை சொல்ல முடியுமா? நான் கடவுள் என்றால் சொன்னால் பொறாமை, ஆத்திரம் எல்லாம் உள்ள யாஹ்வே என்னும் அல்லா சும்மா விடுவாரா :).
இந்த நானே கடவுள், நீயே கடவுள் போன்ற இந்து தத்துவங்களை பற்றி மேலும் அறிய
http://en.wikipedia.org/wiki/Mah%C4%81v%C4%81kyas
பார்க்கவும். நான் கடவுள், நீங்கள் கடவுள், அந்த விலங்கு கடவுள். இப்படி இருக்கையில் ஏன் இந்துக்கள் கண்டதையும் வணங்க கூடாது? அவர்களை பொறுத்த வரை எல்லாமே கடவுள் தான்.
//ஒவ்வொரு மனிதனுக்கும் அருகிலும் இறைவன் இருக்கிறான். நமது வேண்டுதலுக்கு பதிலளிப்பான் என்று இந்த வசனம் மூலம் நாம் விளங்கிக் கொள்வோம்//
நீங்கள் குடுத்த வசனம் ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று சொல்லவில்லையே. ஏதோ இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்றல்லவா உள்ளது. நானே கடவுள் என்பதற்கும், கடவுள் எனக்கு மிக மிக அருகில் உள்ளான் என்பதற்கும் மிக பெரிய வித்தியாசம் உண்டு.
குரானை கொண்டு நீங்கள் கடவுள் என்று முதலில் நிருபவியுங்கள். பிறகு தான் இந்து மத வேதங்கள் இஸ்லாமிய கடவுளை பற்றி சொல்வதாய் பேசலாம் அதுவரை நீங்கள் அப்படி சொல்ல முடியாது.
//இந்திரனை தேவர்களாக அல்லாமல் கடவுளாகவே அன்றைய இந்துக்கள் வழிபட்டு வந்திருப்பதை கீழே உள்ள விக்கி பீடியாவின் விளக்கத்தைப் பாருங்கள்.//
சுவனப்பிரியன் நீங்கள் எதற்காக இந்த நெடிய விக்கி பீடியா விளக்கத்தை தந்தீர்கள் என்று விளங்கவில்லை. இந்துகளுக்கு தேவர்களும் கடவுளர் (பன்மையை கவனிக்கவும்) தாம். நான் சொல்லிய விவரம் இந்திரன் தேவன்/கடவுள் கூடவே அவன் ஒரு இயற்கை வஸ்து என்பது. இந்திரன் மட்டும் அல்ல வாயு, வருணன், சூரியன், சந்திரன், சனி, குரு, சுக்கிரன், ராகு எல்லாமே தேவர்/கடவுள் மற்றும் இயற்கை வஸ்துக்கள். இயற்கை வஸ்துவை தான் ரிக் வணங்க சொல்கிறது. இயற்கை வஸ்துவான ஒன்றை எப்படி "உங்கள்" ஓர்-இறை என்கிறீர்கள் என்பதல்லவா என் கேள்வி?
திரு கணேசன்!
//குரானை கொண்டு நீங்கள் கடவுள் என்று முதலில் நிருபவியுங்கள். பிறகு தான் இந்து மத வேதங்கள் இஸ்லாமிய கடவுளை பற்றி சொல்வதாய் பேசலாம் அதுவரை நீங்கள் அப்படி சொல்ல முடியாது.//
//இயற்கை வஸ்துவான ஒன்றை எப்படி "உங்கள்" ஓர்-இறை என்கிறீர்கள் என்பதல்லவா என் கேள்வி?//
'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார்.'-குர்ஆன் 10:47
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'- குர்ஆன் 14:4
மேற்கண்ட வசனங்களின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் இறைத் தூதர்களும், இறை வேதமும் வந்துள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேயுடைய வேதங்களிலும் உள்ளது'- குர்ஆன் 87:18,19
ஆப்ரஹாம், மோசே காலத்துக்கும் முன்பு உள்ள வேதங்கள் பழமையான இந்து மத வேதங்கள். அந்த வேதங்களிலும் குர்ஆனை ஒத்த வசனங்கள் உள்ளதை குர்ஆனே சுட்டிக் காட்டுகிறது.
'அவர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகிறீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்' -குர்ஆன் 2:75
மேலே உள்ள அனைத்து கருத்துக்களையும் நாம் ஆராய்ந்தால் நாம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும். இந்து மத வேதங்களில் உள்ள கருத்துக்களை இரண்டு விதமாக பல இடங்களில் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் விரிவுரையாளர்கள் இரண்டு விதமாகவும் பொருள் கொள்கிறார்கள்.
முன்பு இருந்த இறை வேதங்கள் சிலரின் சுய நலத்துக்காக அறிந்து கொண்டே மத அறிஞர்கள் மாற்றி விட்டனர் என்று இறைவன் கூறுகிறான். இதற்கு ஆதாரமாக முன்பு பைபிளில் இருந்தும் சில வசனங்களை முந்தய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். ரிக் வேதமும், யஜூர் வேதமும், சில உபநிஷத்துகளும் பல இடங்களில் முரண்படுவதும் இது போன்ற இடைச் செருகல்தான். குர்ஆனிலும் சில சுய நலமிகள் இடைச் செருகலை கொண்டு வர முயற்ச்சித்தனர். ஆனால் முகமது நபி காலத்திலேயே குர்ஆன் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டு உஸ்மானுடைய காலத்தில் அது பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. அவற்றின் இரண்டு பிரதிகளில் ஒன்று இஸ்தான்புல்லிலும், மற்றொன்று தாஷ்கண்டிலும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் குர்ஆனில் சொந்த கருத்துக்களை திணிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இவை அனைத்தையும் ஒன்றாக்கிப் பார்க்கும் போது உலகில் உள்ள அனைத்து இறை வேதங்களின் மூல கர்த்தா ஒருவரே என்பது நமக்கு நன்றாக விளங்கும். மேற்கண்ட குர்ஆன் வசனங்களே இந்து மத வேதங்களில் கூறப்படும் இறைக் கோட்பாடு ஏக இறைவனையே குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாகும்.
இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும்இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும்.
[தொகு]இந்து சமயத்தின் கடவுட் கொள்கை
இந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்தசமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.
[தொகு]வேதகாலக் கடவுள்கள்
வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.
-------------------------------
பழைய ஏற்பாட்டு நூல்கள் வேறு வேறு காலங்களில் எழுதப்பட்டவை. காலத்திற்கேற்பவும், கருத்தின் அடிப்படையிலும் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம் “ஏல்” (El) என்பதாகும். இதன் கருத்து “வல்லமையுள்ளவர்” என்பதாகும். இதிலிருந்து “எல்கானா”, “சாமுவேல்”, “இஸ்ரவேல்”, “பெத்தேல்” என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரவேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பலமுறை இந்த ஏல் பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, “ஏல் ஷாடை” (El Shaddai) "சர்வ வல்லமையுள்ள கடவுள்” (எண் 24-4), “ஏல் எலியோன்” (El Elyon) "உன்னதமான கடவுள்” (ஆதி 14:18). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம் “ஏலோஹிம்” (Elohim) ஆகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் யாவும் கடவுளின் காரணப் பெயர்களாகும்.
இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் அல்லது இடுகுறிப் பெயர். எபிரேய மொழியில் “யாவே” (Yahweh), அதாவது “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (யாத்தி 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப் பட்டிருக்கிறது.
எலியா தீர்க்கதரிசியின் பலியை வானத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்த போது, ஜனங்கள் எல்லாரும் “யாவேஹூ ஏலோஹீம்” எனச் சத்தமிட்டார்கள். “யாவேயே கடவுள்” என்பது அதன் பொருள். இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது அபச்சாரம், பாவம் என்று யூதர்கள் கருதிய வழக்கத்தின் காரணமாக, அவர்கள் “யாவே” என்று வருகின்ற இடங்களிலெல்லாம் “அதோனை” என்ற சொல்லை உச்சரிப்பர். எனவே “யாவே” என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பதே இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில் அச்சொல்லே “யெகோவா” என்றும் உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலபாஷையில் இல்லை.
நன்றி: விக்கி பீடியா
சுருதி ஸூக்தி மாலை
சுலோகம் 1
யஸ்மை நமோ பவதி யஸ்ய குணா: ஸமக்ரா:
நாராயணோபநிஷதா யதுபாஸனோக்தா |
யோ ந: ப்ரசோதயதி புத்தி மதிக்ரதெள ய:
தம் த்வாமனன்யகதிரீச்வர! ஸம்ச்ரயாமி ||
பதவுரை
யஸ்மை – எவருக்கு, நம:: - நமஸ்காரங்கள், பவதி – செல்கின்றனவோ; யஸ்ய – எவருக்கு, ஸமக்ரா – பரிபூர்ணமான, குணா: (ஆறு) குணங்கள் பவந்தி – இருக்கின்றனவோ, நாராயணோபநிஷதா – தைத்ரீயா ரண்யகம் பத்தாவது நாராயணோபநிஷத்தால், யதுபாஸனா – எவருடைய உபாஸனை, உக்தா – சொல்லப்பட்டதாக, பவதி – இருக்கிறதோ, ய: - எவர், ந: - நம்முடைய, புத்திம் – அந்தக் கரணத்தை, ப்ரசோதயதி – (அந்தர்யாமியாகவிருந்து) தூண்டிவிடுகிறாரோ, ய : - எவர், க்ரதென – யாகங்களுக்கு, அதி – தலைவரோ, (பல ப்ரதாவோ), தம் – அப்பேர்ப்பட்ட, த்வாம் – உம்மை, ஈச்வர – ஹே பரமேச்வரனே! அனன்யகதி – வேறு கதியில்லாத நான், (மற்ற தேவதைகளை ஆச்ரயிக்காமல்) ஸம்ச்ரயாமி – நன்கு சரணமடைகிறேன். பிரபக்தி ரூபமாகச் சரணமடைகிறேன்.
கருத்துரை
நமஸ்காரங்கள் எவரை அடைகின்றனவோ, எவர் நமச்சேஷியோ, எவர் பகவத் பத வாச்யரோ, பூர்ணமான ஆறு குணங்களும் நிரம்பப் பெற்றவரோ, (32 உபாஸனைகளுக்குள் சிறந்ததான) எவருடைய உபாஸனை நாராயணோபநிஷத் கூறுகிறதோ, எவர் காயத்ரீ மந்த்ர ப்ரதி பாத்யராக, எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து, புத்தியைச் செலுத்திச் செயல்களில் ஈடுபடுத்துகிறாரோ, எவர் ஸர்வ யாகங்களுக்கும் சேஷியாகச் கர்மடர்களால் அவலம்பிக்கப் படுகிறாரோ, இவ்விதம் விசேஷமான ஐந்து சிறப்பு லக்ஷணங்கள் பொருந்திய, கடவுளாகிய உம்மை ஹே, பரமேச்வரா! வேறு கதியில்லாத நான், மற்ற தெய்வங்களை உபாசிக்காமல் உம்மையே முழுமுதற் கடவுளாகவும், பரமென்றும், ஏகாந்தமாக உபாஸிக்கிறேன்.
என்று இந்த க்ரந்தத்தின் விஷயத்தைச் சொல்வது மூலம் ஸ்ரீ ஹரதத்தாசார்யவர்யர் முதல் சுலோகத்தில் மங்களத்தையும் ஈச்வர வணக்கத்தையும் சொல்லுகிறார்.
அல்லோப நிஸத்
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அதாவது தனக்கு உவமை இல்லாத ஏக இறைவனை வணங்கினால்தான் மனக்கவலை இல்லாதிருக்க முடியும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்..
அசலன், அனாதி, ஆதி, ஏகன்
இதோ இந்து மதத்தின் மூலத்தில் கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்..
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
(- சிவ வாக்கிய சுவாமிகள்)
ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.
அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை ஏகத்துவப் பெயர்களால் அழைத்தாலும் எங்குமே அனேக மக்கள் சிலை வைத்து இறைவனுக்கு இணை கற்பித்து விடுகின்றனர். ஆளுக்கொரு தெய்வம் ஏற்படுத்தி கல்லையெல்லாம் கடவுளாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து சிதறி விட்டனர்.
பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..
அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். சிவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
நண்பர் சுவனப்பிரியன்,
வேலை பளுவினால் சில நாட்கள் எழுத முடியவில்லை. மேலும் சில நாட்களுக்கு அதிகம் எழுதவும் முடியாது.
நான் கடைசியாய் உங்களிடம் கேட்டிருந்தது
//குரானை கொண்டு நீங்கள் கடவுள் என்று முதலில் நிருபவியுங்கள்.பிறகு தான் இந்து மத வேதங்கள் இஸ்லாமிய கடவுளை பற்றி சொல்வதாய் பேசலாம்//
அதாவது குரானை கொண்டு சுவனப்பிரியன் கடவுள் என்று நிருபுவியுங்கள் என்று. நீங்கள் இதை செய்யவில்லை. ஆனால் சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ பற்றி எழுதி உள்ளீர்கள். மீண்டும் கேட்கிறேன் குரானை கொண்டு கணேசன், சுவனப்பிரியன் ஆகியோர் கடவுளே என்று நிருபுவிக்க முடியுமா?
சிவவாக்கியரை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர் என்று படுகிறது. சிவவாக்கியர் கீழ் கண்டதையும் சொல்லி உள்ளார்.
// அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.//
//நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? //
அதாவது நானே கடவுள். நீங்களும் கடவுளே. எதுவும் உருவாக்கப்படவில்லை, அழிக்கவும் படுவதில்லை. நடுவில் வருவது மாயை மட்டுமே. இதை நீங்கள் ஒப்பு கொள்வீரா :)?
அடுத்ததாய் சைவ ஆகம சித்தாந்தத்தை பற்றிய ஒரு கட்டுரையை பதிப்பித்து சிவன் ஏக இறைவன் என்று நிறுவ முயற்சி செய்துள்ளீர். சைவ சிதாந்ததுள்ளும் மேற் கூறிய நானே கடவுள் உண்டு அறிவீரா? மேலே சொல்லியுள்ள சிவவாக்கியமும் சைவ நெறியே தெரியுமா?
நடுவில் வள்ளுவரை வேறு இழுத்துள்ளீர்கள். வள்ளுவர் இறைவனை பற்றி சொல்லும் பொது கீழ் கண்டதையும் சொல்கிறார்
// பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். //
இந்த பிறவி பெருங்கடலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அல்லது வள்ளுவர் சொல்லும் கடவுள் விஷயங்கள் குரானுக்கு உதவுவதாய் இருந்தால் மட்டுமே ஏற்போம் மற்ற குறள்கள் தவறு என்று சொல்ல போகிறீர்களா?
திரு கணேசன்!
//இந்த பிறவி பெருங்கடலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அல்லது வள்ளுவர் சொல்லும் கடவுள் விஷயங்கள் குரானுக்கு உதவுவதாய் இருந்தால் மட்டுமே ஏற்போம் மற்ற குறள்கள் தவறு என்று சொல்ல போகிறீர்களா?//
//மேலே சொல்லியுள்ள சிவவாக்கியமும் சைவ நெறியே தெரியுமா?//
ஏக இறைவனைப் பற்றி இந்து மத வேதங்களில் எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற உங்களின் கேள்விக்குத்தான் திருமந்திரம், திருக்குறன், ரிக் வேதக் கருத்துக்களை கொடுத்துள்ளேன். இதற்கு மாற்றமாகவும் அத்வைதக் கொள்கைகள் இந்த வேதங்களில் இருந்தால் ஒரே இறைவனிடமிருந்து இரு கருத்துகள் எப்படி வர முடியும்? திரு மந்திரத்தின் பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் நமக்கு கிடைக்கவில்லை. அனைத்து வேதங்களும் செவி வழியாகவே வந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் அச்சிலேயே ஏற்றப்பட்டது. இடைப்பட்ட காலங்களில் பல தெய்வ கருத்துக்களும், அத்வைத கருத்துக்களும் இடைச் செருகலாக இருக்க வாய்ப்புண்டு. இதை இறுதி வேதமான குர்ஆனின் வசனத்தைக் கொண்டு நிரூபித்தும் இருக்கிறேன்.
“ஹே, பரமேச்வரா! வேறு கதியில்லாத நான், மற்ற தெய்வங்களை உபாசிக்காமல் உம்மையே முழுமுதற் கடவுளாகவும், பரமென்றும், ஏகாந்தமாக உபாஸிக்கிறேன்.”
ஏக தெய்வ வணக்கத்துக்கு இந்து மத வேதங்கள் சொல்லும் ஆதாரத்துக்கு உங்கள் பதில் என்ன?
//மீண்டும் கேட்கிறேன் குரானை கொண்டு கணேசன், சுவனப்பிரியன் ஆகியோர் கடவுளே என்று நிருபுவிக்க முடியுமா?//
'நானே கடவுள்' எனும் கொள்கை குர்ஆனுக்கு மாற்றமான கருத்து என்று முன்பே விளக்கியிருக்கிறேன். இந்து மதத்திலும் இந்த கொள்கை தவறாக விளங்கப்பட்டிருக்கிறது. நான் முன்பே கேட்டது போல் ஒரே வேதத்தில் ஏக தெய்வ வணக்கமும், பல தெய்வ வணக்கமும், நானே கடவுள் என்ற தத்துவமும் எப்படி வரும்? இதில் எங்கோ மனிதனின் கை புகுந்திருக்கிறது என்பதுதான் என் வாதம். இந்து மதத்தின் வேதங்களின் மூலம் காப்பற்றப்படவில்லையாதலால் எது கடவுள் வார்த்தை, எது மனிதர்களின் வார்த்தை என்பதை நம்மால் இன்று பிரிக்க முடியவில்லை. ஒரே வழி இன்றைய காலத்தில் இறை வேதமாக காப்பாற்றப்பட்டிருக்கும் குர்ஆனைக் கொண்டு மற்ற வேதங்களை ஒப்பிட்டு இடைச் செருகல்களைக் கண்டு பிடிக்கலாம். நம்மிடம் தற்போது உள்ள ஒரே வழி இதுதான்.
நண்பர் சுவனப்பிரியன்,
நீண்ட நாட்களாக வேலை பளுவினால் எழுத முடியவில்லை. உங்கள் மன்னிப்பை கோருகிறேன். இன்னமும் வேலை பளு குறைந்தபாடில்லை. முடிந்த வரையில் எழுதுகிறேன்.
//ஏக இறைவனைப் பற்றி இந்து மத வேதங்களில் எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற உங்களின் கேள்விக்குத்தான் திருமந்திரம், திருக்குறன், ரிக் வேதக் கருத்துக்களை கொடுத்துள்ளேன்.//
நான் எங்கே அப்படி கேட்டேன்? எனது முதல் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படிக்கவும். அதில் நான் தெளிவாக "வேதாந்த பிரமத்தை ஓர்-இறை என்று அழைக்கலாம் என்றாலும் அதன் தன்மை வேறு என்றல்லவா சொல்லி இருந்தேன். இது வரை நான் வாதாடி வந்ததெல்லாம் இந்து மதத்தில் "உங்கள்" ஓர்-இறை இருக்காது என்றல்லவா?
இதுவரை உங்களால் ரிக்கில் இருந்து "ஓர்-இறைக்கு" எந்த உருப்படியான ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை என்பதை கவனிக்கவும். உங்கள் ரிக் மொழி பெயர்ப்பில் பல குளறுபடி என்று சுட்டியதும் ரிக்கை விட்டு உபநிஷதுகளில் இருந்து சில உதாரணங்களை சுட்டி இருந்தீர்கள், அவை அத்வைத கருத்துகள் என்று நான் விளக்கம் சொல்லவும், உபநிஷதையும் விட்டு ஒரு வழியாய் திருமந்திரம் சொல்லும் சைவ சித்தாந்தம் போன்ற த்வைதத்துக்கு வந்திருக்கிறீர்கள். அதுவும் "உங்கள்" ஓர்-இறை இல்லை, அறிவீரா? இந்து மத த்வைத வழிகள் சில விஷ்ணுவை ஓர்-இறை மற்றவை சிறு தெய்வம் என்னும். வேறு த்வைத வழிகள் சிவனே ஓர்-இறை மற்றவை சிறு-தெய்வம் என்று சொல்லும். ஆனால் இவை எல்லாமே பொதுவாய் கர்மா, பல பிறவி போன்ற கருத்துகளை உள் அடக்கிவரும். குரானின் ஓர்-இறை போன்று நரகில் இட்டு தண்டிக்கும் கதை கிடையாது, மறு பிறவி கதை தான் உண்டு.
//நான் முன்பே கேட்டது போல் ஒரே வேதத்தில் ஏக தெய்வ வணக்கமும், பல தெய்வ வணக்கமும், நானே கடவுள் என்ற தத்துவமும் எப்படி வரும்?//
இவை ஒரே வேதம் இல்லையே சுவனப்பிரியன். அதை ஏன் புரிந்து கொள்ள சிரமபடுகிறீர்கள்?. ரிக் தோன்றியது சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன். உபநிஷத்துக்கள் தோன்றியது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன். முன்பு இயற்கை பொருட்களில் இறைவனை தேடிய மனிதன் உபநிஷத காலங்களில் தனக்கு உள்ளே இறைவனை தேட தலைப்பட்டான் என்றும் மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சி இது என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். ரிக், உபநிஷத்துக்கள், சைவ சித்தாந்தம், வைஷ்ணவ த்வைதம் எல்லாமே வெவ்வேறு காலங்களில் எழுந்த சிந்தனைகள். பாவம் நீங்கள் இவற்றில் உங்கள் அல்லா/யாஹ்வே யை தேடி கஷ்டபடுகிரீர்கள்.
// ஒரே வழி இன்றைய காலத்தில் இறை வேதமாக காப்பாற்றப்பட்டிருக்கும் குர்ஆனைக் கொண்டு மற்ற வேதங்களை ஒப்பிட்டு இடைச் செருகல்களைக் கண்டு பிடிக்கலாம்//
ஹா ஹா!!! வேடிக்கை வாதம் இது. நீங்களாகவே குரானை காப்பாற்றப்பட்ட இறை வேதம் என்று ஏற்று கொண்டு, இதை கொண்டு இந்து மத நூல்களில் 99 சகவீதம் சங்கதிகளை கழற்றி விட்டு விட்டு ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓர் இரு வரிகளை மட்டும் கொண்டு குரானும் இந்து மத நூல்களும் ஒன்று என்று சொல்லுகிறீர்களே. நல்ல நகைச்சுவை போங்கள். உங்கள் வாதத்தை "circular logic" என்பார்கள்.
எதை கொண்டு குரான் "மட்டுமே" காப்பாற்ற பட்ட விஷயம் என்று சொல்கிறீர்கள். இயற்கை பொருட்களை வழிபடும் ரிக் வேதமும் ஒரு காப்பாற்றபட்ட ஒன்று என்பது தெரியுமா? வேதிக் மீட்டர் என்று சொல்வார்கள். அதாவது உச்சரிப்பும், அதனால் பொருள் மாறி விட கூடாது என்று இந்த வேதிக் மீட்டரை வேதவிற்பன்னர்கள் ரிக் வேதம் உருவான காலம் முதல் பயன்படுத்தி வருகிறார்கள். இதை பரிசோதிக்க மாக்ஸ் முல்லர் என்ற வேதத்தை ஆய்வு செய்த அறிஞர் இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கில் பிறந்த பிராமணரை கொண்டு ரிக்கை ஓத செய்து அவற்றில் வேறு பாடு இல்லை என்று அறிந்து வியந்தார் என்று சொல்வர். மத நம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கும் நம்பிக்கையாளர் எல்லோருமே அவரவர் நூல்களில் மாற்றம் வராமல் பாதுகாக்கவே காலம் காலமாய் முயற்சி செய்து வந்துள்ளனர். குரான் மட்டுமே மாறாத ஒன்று என்பதே வேடிக்கையான ஒரு நம்பிக்கை தான் போங்கள்.
//இவை ஒரே வேதம் இல்லையே சுவனப்பிரியன். அதை ஏன் புரிந்து கொள்ள சிரமபடுகிறீர்கள்?. ரிக் தோன்றியது சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன். உபநிஷத்துக்கள் தோன்றியது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன். முன்பு இயற்கை பொருட்களில் இறைவனை தேடிய மனிதன் உபநிஷத காலங்களில் தனக்கு உள்ளே இறைவனை தேட தலைப்பட்டான் என்றும் மனித சிந்தனையின் பரிணாம வளர்ச்சி இது என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.//
அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே! மூலத்திலிருந்து பல அறிஞர்கள் தங்களின் அறிவைக் கொண்டு புதிய விளக்கங்களையும் கொடுத்தனர். அனைத்தும் வேதங்களை மையப்படுத்தியேதானே வருகிறது. மூன்றையும் ஒன்றாக்கி நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.
//இயற்கை பொருட்களை வழிபடும் ரிக் வேதமும் ஒரு காப்பாற்றபட்ட ஒன்று என்பது தெரியுமா? வேதிக் மீட்டர் என்று சொல்வார்கள். அதாவது உச்சரிப்பும், அதனால் பொருள் மாறி விட கூடாது என்று இந்த வேதிக் மீட்டரை வேதவிற்பன்னர்கள் ரிக் வேதம் உருவான காலம் முதல் பயன்படுத்தி வருகிறார்கள்.//
மொழி சிதைவடையாமல் இருக்கலாம். அந்த மொழியில் செவி வழிச் செய்தியாகவே இந்து மத வேதங்கள் பல நூற்றாண்டுகள் வழக்கில் இருந்துள்ளது. ஏடுகளிலோ, புத்தக வடிவிலோ வந்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். இடையில் மனிதர்கள் மாற்றிவிடுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? இதை சரிபார்க்க நம்மிடம் ரிக்வேத மூல பதிப்பு இல்லை. ஆனால் குர்ஆனை ஒத்துப் பார்க்க முகமது நபி காலத்தில் தொகுக்கப்பட்டு மனனம் செய்த நபர்களை வைத்து சரிபார்க்கப்பட்ட இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளது.
Post a Comment