Followers

Wednesday, April 27, 2011

ஜாதிகள் இல்லையடி பாப்பா!

டி.என்.பாளையம்:தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.

குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.

அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.

இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

-நன்றி: தினமலர்

ஜாதிகள் இல்லையடி பாப்பா!

குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!

-பாரதியார்

'மனிதர்களே! உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுவோரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்'

-குர்ஆன் 49:13

மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்ற தாழ்வுகளை மண் கவ்வ வைத்த வசனம் இது. எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுபவனே இறை நெருக்கத்திற்கு பாத்திரமாகிறான். நான் நெற்றியில் பிறந்ததனால் நான் மட்டுமே உயர்ந்தவன். என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் படிக்கக் கூடாது என்று எவராவது சொல்வாறாகில் அவரது இறை பக்தியை அவரது மூஞ்சியிலேயே எறிந்து விடுகிறான் இறைவன்.

ஹஜ்ஜூக்கு செல்பவர்கள் ஒன்பதாம் நாள் அரஃபா என்ற இடத்தில் தங்க வேண்டும். இது ஒரு முக்கிய கடமை. ஆனால் அந்த காலத்தில் உயர்ந்த குலத்தவராக கருதப்பட்ட குரைஷி(நம்மூர் பிராமணர்கள் போல) குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் 'முஜ்தலிபா: என்ற இடத்தில் தங்கினார்கள். 'முஜ்தலிபா' என்பது கஃபா ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், 'அரபாத்' என்ற இடம் கஃபா ஆலயத்தின் எல்லைக்கு வெளியேயும் அமைந்திருந்தது.

உயர்ந்த குலத்தவரான குரைஷிகள் தாங்கள் மட்டும் புனித எல்லையில் தங்கிவிட்டு மற்றவர்களை அங்கே தங்குவதை தடுத்து வந்தனர். 'அரபாத்' என்ற இடம் ஊருக்கு வெளியே நம்மூர் சேரிகளைப் போல் ஒதுக்கப்பட்டவர்களுக்கான இடமாக அன்று அவர்களால் கருதப்பட்டது. முகமது நபி தனது பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன் பல ஆண்டுகளாக இந்த பழக்கமே தொடர்ந்து வந்தது.

இந்த கொடிய வழக்கத்தை மாற்ற நினைத்த இறைவன் உயர் குலத்தைச் சார்ந்த முகமது நபியையும், இஸ்லாத்தை ஏற்றிருந்த மற்ற உயர் குலத்தவர்களையும் 'அரஃபாத்' திடலில் அவசியம் தங்க வேண்டும் என்ற கட்டளையிடுகிறான்.

'அவன் உங்களுக்கு காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள். இதற்கு முன் வழி தவறி இருந்தீர்கள்.'

'பின்னர் மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள். இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையவன்:'

-குர்ஆன் 2:198,199

அன்றைய கால கட்டத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அதாவது தீண்டத்தகாதவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உலக மக்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்ற சட்டம் இந்த வசனம் இறங்கியவுடன் அமுலாக்கப்பட்டது. எத்தனையோ காலம் வீம்பிலே தீண்டாமையை கடைபிடித்த அந்த அரபுகள் இந்த ஒரு வசனத்தின் மூலம் தங்களின் பாரம்பரிய கொள்கைளை விட நேர்ந்தது. அது இன்று வரை தொடர்கிறது.

வன் கொடுமை சட்டங்கள் எத்தனை நாம் போட்டும் என்ன பயன்? அந்த உயர்குலத்து மக்களின் எண்ணத்திலே மாற்றம் ஏற்படாத வரை இந்த சட்டம் 'ஏட்டுச் சுரைக்காய்தான்'. உயர் குலத்து மக்களிடம் அந்த எண்ணம் இனியும் வரப் போவதில்லை. ஏனெனில் இந்து மத சட்டத்திலேயே இது தவறு இல்லை என்று இருக்கும் போது எவர்தான் தங்களை தாழ்த்திக் கொள்ள விரும்புவார்.

தீண்டாமைக்கு எதிர் கருத்து உடையவர்கள் கண்டபடி திட்டி பதிவுகளை போட்டு தங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவர்கள் ரோட்டில் கும்பலாக நின்று 'தீண்டாமை ஒழிக' என்று கோஷம் போடலாம். தீண்டாமை குறித்து வேறு எந்தவொரு மாற்றமும் நம்நாட்டில் வந்து விடப் போவதில்லை.

15 comments:

kannan said...

இந்துக்களில் ஜாதி இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்லாத்தில் ஷியா, சுன்னி என்ற பிரிவினர் இருக்கிறார்கள். அதைப் பரற்றிய உங்களுடைய கருத்து என்ன?

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

கண்ணன்!

//இந்துக்களில் ஜாதி இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்லாத்தில் ஷியா, சுன்னி என்ற பிரிவினர் இருக்கிறார்கள். அதைப் பரற்றிய உங்களுடைய கருத்து என்ன?//

ஷியா, சன்னி இந்த இரண்டு பிரிவும் உண்டானது 'யார் ஆட்சியில் அமர்வது' என்ற போட்டியின் காரணமாக. குர்ஆனோ நபி மொழியோ இப்படி இரண்டு பிரிவாக பிரிக்க சொல்லவில்லை. ஷியாக்கள் பள்ளியில் சன்னி தொழுகலாம். சன்னியின் பள்ளியில் ஷியா தொழுகலாம். நான் உயர்ந்தவன். நீ தாழ்ந்தவன் என்ற பாகுபாடு காட்டப்படுவதில்லை. மக்காவில் ஹஜ் நேரங்களில் இரு பிரிவினரும் ஒரே பள்ளியில் தோளோடு தோள் உரசி நின்று தொழுவதை நீங்கள் நேரலையில் காணலாம்.

ஆனால் இங்கு இந்து மதத்தில் வேதங்களே மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது. இந்துக்கள் கடவுளாக வழிபடும் தெய்வங்கள் கூட வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கிறது. இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்?

kannan said...

குர்ஆனோ நபி மொழியோ இப்படி இரண்டு பிரிவாக பிரிக்க சொல்லவில்லை//

then why muslims are separated as ziya and sunny. even though modern muslims know that we have sepated as 2, then why they are not rying to merge.

//ஷியாக்கள் பள்ளியில் சன்னி தொழுகலாம். சன்னியின் பள்ளியில் ஷியா தொழுகலாம்//

you hae agreed that, have got 2 different Majids,

//மக்காவில் ஹஜ் நேரங்களில் இரு பிரிவினரும் ஒரே பள்ளியில் தோளோடு தோள் உரசி நின்று தொழுவதை நீங்கள் நேரலையில் காணலாம்.//

மக்காவில் சேர்ந்து நின்று தொழலாம், ஆனால் உள்ளூரில் ஷியா உம் சுன்னியும் கல்யாணம் பண்ண முடியாது. அதற்கு ஜமாத் அனுமதிக்காது.

Hindus are sepated by casts, but muslim are separated by இனம்.if you say no. will saudi arabia accept thier sunny muslim women to get marry a sunny indian muslim.


pls answer,


kannan from abu dhabi
http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

கண்ணன்!

//then why muslims are separated as ziya and sunny. even though modern muslims know that we have sepated as 2, then why they are not rying to merge.//

இந்த இரண்டு பிரிவையும் இணைப்பதற்கு இன்றும் பலரும் முயற்ச்சித்த வண்ணமே உள்ளனர். ஷியாக்கள் பகுதியிலிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததே இதற்கு காரணம்.

மேலும் முஹர்ரம் அன்று தங்களைத் தாங்களே கிழித்து கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள். எங்கு பார்த்தாலும் தர்ஹாக்களை கட்டிக் கொண்டு மூடப் பழக்கங்களை வளர்க்கிறார்கள். முகமது நபிக்கு பிறகு வாரிசு அடிப்படையில் அவரது மருமகன் அலிதான் வந்திருக்க வேண்டும். எப்படி அவரை நான்காம் இடத்துக்கு தள்ளப் போயிற்று என்று இன்று வரை ஷியாக்கள் அபுபக்கரையும், அன்னை ஆயிஷாவையும், இன்னும் பல நபித் தோழர்களையும் மதிப்பதில்லை. இவை எல்லாம் சரி செய்யப்பட்டால் இரு கட்சிகளும் ஒன்றாகலாம்.

//you hae agreed that, have got 2 different Majids,//

இது புதிய செய்தி அல்லவே! இது எல்லோருக்கும் தெரிந்த விபரம்தான்.

//மக்காவில் சேர்ந்து நின்று தொழலாம், ஆனால் உள்ளூரில் ஷியா உம் சுன்னியும் கல்யாணம் பண்ண முடியாது. அதற்கு ஜமாத் அனுமதிக்காது.//

திருமணம் என்பது இரண்டு நபர்கள் ஆணும் பெண்ணும் ஒத்த கருத்துடையவர்கள் பிரியத்தில் இணைவது. ஒருவர் தர்ஹா கூடும் என்பார். மற்றவர் எதிர்ப்பார். ஒருவர் அபுபக்கரை உயர்வாக மதிப்பார். மற்றவர் அவரை நிந்திப்பார். இஸ்லாத்தில் இறை வணக்கம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. மார்க்கத்தில் ஒத்த கருத்துடையவர்கள் இணைந்தால்தான் இல்லறம் சிறப்பாக இருக்கும். ஷியாவும், சன்னியும் திருமணம் செய்து கொள்வதை குர்ஆனிலிருந்தும் நபி மொழியின் ஆதாரத்தில் இருந்தும் தடுக்க முடியாது என்பதையும் கவனிக்கவும். உள்ளூர் கட்டுப்பாடு என்பது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.

திருமணம் என்பது இரண்டு நபர்கள் ஆணும் பெண்ணும் ஒத்த கருத்துடையவர்கள் பிரியத்தில் இணைவது. ஒருவர் தர்ஹா கூடும் என்பார். மற்றவர் எதிர்ப்பார். ஒருவர் அபுபக்கரை உயர்வாக மதிப்பார். மற்றவர் அவரை நிந்திப்பார். இஸ்லாத்தில் இறை வணக்கம் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. மார்க்கத்தில் ஒத்த கருத்துடையவர்கள் இணைந்தால்தான் இல்லறம் சிறப்பாக இருக்கும். ஷியாவும், சன்னியும் திருமணம் செய்து கொள்வதை குர்ஆனிலிருந்தும் நபி மொழியின் ஆதாரத்தில் இருந்தும் தடுக்க முடியாது என்பதையும் கவனிக்கவும். உள்ளூர் கட்டுப்பாடு என்பது ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.

ஜமாத் கட்டுப்பாடு என்பதெல்லாம் தற்காலத்துக்கு ஒத்து வராது. சில மூடப் பழக்கங்களை கண்டித்ததற்காக பலரை ஜமாத்திலிருந்து நீக்குவார்கள். பிறகு அவர்களே சேர்த்துக் கொள்வார்கள். இது போன்ற பல தமாஷ்கள் ஜமாத்தில் நடைபெறும்.:-)

//Hindus are sepated by casts, but muslim are separated by இனம்.if you say no. will saudi arabia accept thier sunny muslim women to get marry a sunny indian muslim.//

திருமணம் புரிந்து கொள்ளும் இருவருக்கும் பொது மொழி அவசியம். இந்தியாவிலேயே தமிழ் மட்டும் பேசத் தெரிந்த ஒரு பெண் கன்னட முஸ்லிமை மணக்கிறார். இதனால் எத்தனை சிரமங்களை இரு குடும்பத்தாரும் சுமக்க வேண்டி வரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதே அளவு கோல்தான் அரபி மொழிக்கும். ஆனால் ஆங்கிலம் சரளமாக தெரிந்த அரபுகள் பலர் அமெரிக்க, இங்கிலாந்து பெண்களை இஸ்லாத்தில் இணைத்து சவூதி கொண்ட வந்திருப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஹைதராபாத்தில் பல சவுதிகள் திருமணம் செய்து கொண்டு வருவதை நாம் பத்திரிக்கைகளிலும் படித்திருப்போம்.

சவூதி பெண்களின் பாதுகாப்பு கருதியே அரசு சில சட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் குர்ஆனிலோ நபிமொழியிலோ பெண்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.

எனவே நாடு இனம் மொழி கடந்து யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாம் போடும் ஒரே கண்டிஷன் இருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும்.


'இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள். இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை உங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்காதீர்கள்.இணை கற்ப்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்துக்கு அழைக்கின்றனர். இறைவன் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்புக்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 2:221

Anonymous said...

மதங்கள் அனைத்திலும் பிரிவுகள் இருக்கின்றன - என்ன இந்து மதத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு .. இவற்றை ஒழிப்பது என்றால் கலப்பு மணம் ஒன்றே தீர்வாக இருக்கும்

suvanappiriyan said...

//இவற்றை ஒழிப்பது என்றால் கலப்பு மணம் ஒன்றே தீர்வாக இருக்கும் //

ஏதோ ஒரு வழியில் நமது நாட்டை விட்டு இந்த சாதி மற்றும் தீண்டாமைப் பேய்கள் ஒழிந்தால் சந்தோஷமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால் செல்வன்.

suvanappiriyan said...

இந்த செய்திக்கு தினமலரில் வந்த பின்னூட்டங்கள்.

Johnson Paul - Bangalore,
தினமலர் ஆசிரியரே இந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளிடுங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டாகும்

John - chennai,
குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைப்பதற்கு, அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையேல் அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். தீண்டாமை கொண்டாடும் பெற்றோரே நீங்கள் திருந்துங்கள். இல்லையேல் நீங்கள் தீராத பாவத்திற்கு ஆளாவீர்கள்.

Johnson Paul - Bangalore,
தீண்டாமை, ஜாதி வெறியை ஊக்குவிக்கும் கிராமங்களை அரசு உடனே கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும், குடும்ப அட்டைகளை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் நாட்டை கெடு வழிக்கு கொண்டு சென்று விடும் .

Johnson Paul - Bangalore,
மனிதனை மனிதனாக பார்காத எவரும் மிருகத்திற்கு ஒப்பு ஆவர்கள்


tamilan - Delhi,
மனிதர்களா இவர்கள் .... குழந்தைங்க இவர்கள் நமது வருங்கால தூண்கள் நமது கலாச்சாரத்தை காப்பாற்ற போகுபவர்கள் .... இவர்கள் படிப்பதற்கு எதற்கு தடா .... இவர்கள் படிக்காததற்கு எதற்கு பள்ளி

Gurunathan.J - Bangalore ,
ஜாதி ஓட்டுகளை பார்த்து சீட்டு வழங்கும் இந்த மானம் கெட்ட அரசியல் கட்சிகளிடம் இதை சரி செய்ய சொல்வது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம். மக்கள் போராடினால் ஒழிய இந்த பிரச்சினை தீராது. எல்லோருக்கம் ஆறு அடி நிலம்தான் இதை எப்போது நம் மக்கள் புரிந்து கொள்ள போகிறார்களோ. கலப்பு திருமணம் ஊக்குவிக்க பட வேண்டும்.. கலப்பு திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன்....
Share this comment
Reply

SARAVANA MANI –
சே! இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும்! ஐயோ! இந்த நாடு போற போக்க பார்த்தா என் வயிறு எரியுதையா! ஒரு பெரிய சுனாமி வந்து எங்க எல்லாரையும் தூக்கிட்டு போகாதா?


velmurugan.k - erode,
ஜாதி மதம் இனம் மொழி இவையால் நாம் அடைந்த துன்பங்கள்தான் ஏராளம் , ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பது மாறி கல்வி இல்லாத மனிதன் கால் மனிதன் என்ற நிலை வந்துள்ளது,தீண்டாமையால் நாம் எளியோர்களை தாக்கியது போதும் ,இனிவரும் காலங்களிலாவது அவர்கள் குழந்தைகள் கல்வி கற்று அவரவர் சமுதாயத்தையவது உயர்த்திகொள்ளட்டும் நீங்கள் உதாவமல் விட்டாலும் பரவாயில்லை ,அவர்கள் உரிமையை உங்கள் வலிமையால் தட்டி பறிக்காதீர்கள்,அப்படி நீங்கள் செய்தால் உங்கள் வம்சம் கல்வி கற்றாலும் கூட அறிவில்லாமல் வீணாகும் என்பது உறுதி அன்பில்லாதவனும் அறிவில்லாதவனும் மனதனே இல்லை ........

HARERAM - LAKSHADWEEP,
இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் தலை இட மாட்டார்கள் . ஏனெனில் இங்கே ஜாதி பார்ப்பது பிராமணர்கள் அல்ல. மற்ற ஜாதியினர். எனவே ஒட்டு போய்விடுமே என்று அரசியல் வாதிகள் சும்மாதான் இருப்பார்கள்.

Rajesh Govind - Trichy
எதற்கு இந்த ஜாதி வெறி?...இப்படிப் பட்டவர்கள் இருக்கும் வரை,இந்தியா வல்லரசாவது எப்போ?எப்படி??????

Suresh - Ausint, Tx,
என்னடா கொடுமை இது , இதுக்கு காரணமானவர்களை யார் தண்டிப்பது , தமிழ் இன தலைவருக்கு குடும்பத்தை காப்பாற்றவே நேரம் இல்லை. இந்த சாதி வெறி பிடிச்ச சனியன்கள் என்று தான் செத்து மடிவார்களோ!!!

kannan said...

//சவூதி, பெண்களின் பாதுகாப்பு கருதியே அரசு சில சட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் குர்ஆனிலோ நபிமொழியிலோ பெண்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.//

அப்படியானால் சௌதி ஷரியத் சட்டத்தை பின்பற்ற்வில்லைய?

உங்கள் பதிலிலேயே நிறைய முரண் படுகள் இருக்கின்றன,

kannan from abu dhabi.

suvanappiriyan said...

//அப்படியானால் சௌதி ஷரியத் சட்டத்தை பின்பற்ற்வில்லைய?//

பெண்களின் பாதுகாப்பு கருதி சில சட்டங்களை இயற்றுவது ஷரியத்துக்கு முரணாகாது. ஆண்கள் வெளிநாடுகளில் திருமண பந்தத்தில் அதிகம் ஏமாற்றப்படுவதில்லை. பெண்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். இதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும். பாதிப்படைந்த பல பெண்கள் தங்களின் எதிர்காலத்தை பாழாக்கி இருக்கிறார்கள். மேலும் உள் நாட்டிலிலேயே போதுமான மணமக்கள் இருக்கும் போது வெளி நாட்டு மணமகனை தேர்ந்தெடுக்க அவசியமும் இல்லை.

suvanappiriyan said...

தருமி!

//493-ம் பதிவில் //உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என்று இஸ்லாமிய நண்பரிடம் கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்!//

உலகில் எந்த மனிதனும் தனது குடும்பப் பெண்கள் யோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவான். இது மதம் கடந்த ஒரு எண்ணம். திருமணமான சில பெண்கள் கணவனுக்கு துரோகம் இழைத்து அது கொலை வரை செல்வதை நாம் தினமும் பத்திரிக்கையில் படிக்கிறோம். இது போன்ற சூழலில் தான் இஸ்லாம் சிறந்த ஒரு வழிகாட்டுதலை கொடுக்கிறது.

'கட்டுப்பட்டு நடப்போரும் இறைவனின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று மனைவியர் விஷயத்தில் நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். படுக்கைகளில் விலக்குங்கள். அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'
-குர்ஆன் 4:34

மறைவான வெட்கத் தலங்களை பேணாத தனது கணவனுக்கு துரோகம் செய்யும் சில பெண்களைப் பற்றித்தான் இந்த வசனம் பேசுகிறது. எடுத்தவுடன் அரிவாளை தூக்கி ஒரே போடாக போட்டு விடுவதுதான் நாம் பலமுறை பத்திரிக்கைகளில் படித்தது. ஆனால் இதை இஸ்லாம் தடுக்கிறது.

முதலில் அந்த பெண்ணிடம் சிறந்த முறையில் அறிவுரை கூறி திருத்த முயல வேண்டும். இது சரிவராத போது சில நாட்களுக்கு மனைவியோடு சேர்ந்து படுக்காது தனிமைபடுத்த வேண்டும். கணவன் தன்னை படுக்கையிலும் ஒதுக்குகிறான் என்று தெரிந்து அந்த பெண் திருந்த முற்படுவாள். அதிலும் சரி வராமல் திரும்பவும் அதே தவறை மனைவி செய்தால் அவளை அடித்து திருத்த முயற்ச்சிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. கணவனுக்கு கட்டுப்பட்டு தீய நடவடிக்கைகளை விட்டும் தவிர்ந்து கொண்டால் வேறு வழிகளை தேடாமல் அவளோடு வாழ்க்கை நடத்த வேண்டும்.

இப்படி ஒரு அழகிய வழிமுறை மற்ற மார்க்கங்களில் இல்லாததாலதான் 'நடத்தையில் சந்தேகம் மனைவி கொலை' என்று நாம் பத்திரிக்கையில் அடிக்கடி பார்க்கிறோம்.

மனைவியை அடிப்பதற்கும் சில வழிமுறைகளை இஸ்லாம் வகுக்கிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் முகமது நபி அவர்கள் மிக வன்மையாக தடுத்துள்ளார்கள். ஆதாரம் புகாரி 1294, 1297.

அதாவது தான் தவறாக நடந்தால் நம் கணவன் நம்மை அடிக்கவும் செய்வான் என்ற பயம் இது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

இதனாலும் அந்த பெண் திருந்தவில்லை என்றால் அவளை விவாக விலக்கு செய்த விடுங்கள் என்று இஸ்லாம் பணிக்கிறது. இது போன்ற சட்டங்கள் இஸ்லாத்தில் இருப்பதால்தான் கணவனால் மனைவி கொல்லப்படுவது இஸ்லாத்தில் மற்ற சமூகங்களோடு ஒப்பிடும் போது குறைவாக இருக்கிறது.

'பெண் விடுதலை' என்ற பெயரில் பெண்களை காட்சிப் பொருள்களாக மாற்றியதால் இன்று குடும்ப வாழ்வு சிதைந்திருக்கிறது. பெண்மைக்கு பாதுகாப்பு கொடுக்கும் முன்னேற்றத்தால்தான் அவர்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.

மற்றபடி அடிமைப் பெண்களைப் பற்றி ஏற்கெனவே பல முறை விளக்கியாகி விட்டது.

suvanappiriyan said...

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சமத்துவபுரத்தில் ஜாதியை காரணம் காட்டி நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளியை அபகரித்ததால், 35 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இவர்களது நாடோடி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, 2006 ஜூனில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளி பன்ணைவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. 35 நரிக்குறவர் குழந்தைகள் இங்கு படித்து வந்தனர். இடநெருக்கடி காரணமாக 2010 நவ.,3ல் சமத்துவபுரத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது. இது அங்கு வசித்த பிற பிரிவு மக்களுக்கு பிடிக்கவில்லை. திடீரென அங்கிருந்த ரேஷன் கடையை பள்ளி கட்டத்திற்கு மாற்றினர். இது குறித்து நரிக்குறவர் மக்கள் திருவாடானை தாசில்தாரிடம் புகார் தெரிவித்து, அதன் அடிப்படையில் கட்டடத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியில் ரேஷன் கடை, மறுபகுதியில் பள்ளி இயங்கியது. அதற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்கன்வாடி மையத்தை நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.

பள்ளி அபகரிக்கப்பட்ட நிலையில், 35 குழந்தைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் சுகுமாறனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கொதித்து போன நரிக்குறவர்கள் ராமநாதபுரம் வந்து, கலெக்டர் ஹரிஹரனை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். மல்லிகா கூறியதாவது: எங்கள் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் ஜாதி பார்ப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை, என்றார். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது,"" குழந்தைகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரை திரும்பவும் நியமிக்கும் கோரிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னை எழுவதாக தெரிகிறது. பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்,'' என்றார்.
-Dinamalar 30-4-2011

தருமி said...

தருமிக்கு திடீரென்று இங்கு பதிலளித்துள்ளீர்கள். அவன் இதற்குப் பதில் ஒரு வேளை தந்திருந்தால் அதை இங்குள்ள மற்ற பின்னூட்டக்காரர்கள் எப்படிப் படிப்பார்கள்?

இப்படி எங்கேயாவது ஒருபின்னூட்டத்தை போட்டு வைப்பது சரியானதாகத் தெரியவில்லை. மற்றவரின் பதிலையும் இணைக்காமல் இப்படி ஒரு பின்னூட்டம் மட்டும் இங்கு எதற்கு?

தருமி said...

for follow up

suvanappiriyan said...

திரு தருமி!

//இப்படி எங்கேயாவது ஒருபின்னூட்டத்தை போட்டு வைப்பது சரியானதாகத் தெரியவில்லை. மற்றவரின் பதிலையும் இணைக்காமல் இப்படி ஒரு பின்னூட்டம் மட்டும் இங்கு எதற்கு? //

இணையத்தில் வைக்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் நம் இருவருக்கு மட்டுமே அல்ல. நம் இருவரின் எழுத்துக்களையும் நாம் மட்டும் அல்ல பல ஆயிரம் அல்லது லட்சக்கணக்கான பேர் படிக்கின்றனர். நான் சிரமப்பட்டு அனுப்பும் ஒரு பின்னூட்டததை நீங்கள் மட்டுறுத்தி விட்டால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும். ஆனால் இதுவரை நீங்கள் மட்டுறுத்தவில்லை. சந்தோஷம். என் பதிவில் இட இதுவும் காரணம். அடுத்து இதே கேள்வியை வேறு யாரும் வேறு தளத்தில் கேட்டால் என் தளமாக இருந்தால் ஈஸியாக கண்டெடுத்து விடுவேன். காப்பி பேஸ்ட் செய்ய வசதியாகவும் இருக்கும்.

மற்றவர்களுக்கு குழப்பம் வர வேண்டாம் என்பதற்காகத்தான் உங்கள் கேள்வியையும் போட்டு அதற்குரிய பதிலையும் தருகிறேன்.

lol said...

...................